38
ஏதோ ஒன்று மனதில் பாரமாக இருக்க...எல்லாம் நன்மைக்கே என்று மனதில் எண்ணியபடி,..அக்ஸர் வேலை செய்யும் கடைக்குள் ராம் நுழைய...அவரை பார்த்ததும் "மாமா வாங்க" என அழைப்பவன்...ஏதோ விரோதியை பார்ப்பது போல் முகத்தை வைத்து கொண்டு பேருக்கு தலையசைத்தான்..
அக்ஸரின் முதலாலி., "உங்களை வேல் பார்க்கனும்னு கூறினார்...வீட்டுக்கு போய் பேசிக்களாம்" என கூறியவர்...வீட்டிர்க்கு அழைத்து சென்றார்..
வழக்கமான வரவேற்பு இல்லையென்றாலும்...எதிரியே இருந்தாலும் வீட்டுக்கு வந்தவர்களை உபசரிக்க வேண்டியது நற்பண்பு...
அவர்களை பார்த்ததுமே திரும்பி போக நினைத்தவர் அபியை மனதில் வைத்து கொண்டு உள்ளே நுழைந்தார்..
நுழைந்ததுமே,.."பத்து லட்சம் அக்ஸர் கேட்டானே...கிடைச்சிருச்சா" என அமுதா கேட்க..."அது இல்லை...நான் ஃபோன்லயே சொன்னேனே...இவ்வளவு சீக்கிரம் ஏற்பாடு பன்ன முடியலே" என கூறவும்..."அப்ப பையன் ஒரு நிலைல இருக்காம எப்படி கல்யாணத்த வைக்க முடியும்" என வேல் கேட்டவர்..."ஐந்து வருஷம் கழிச்சு திருமணம் வச்சிக்கலாம்" என கூறினார்...
"பொண்ணுக்கு வயசு போகுமே" என ராம் கண்களை கசக்காது கேட்க..."அப்டினா ஜூன் முப்பது வச்சிக்களாம்...ஆனா, பொண்ணு எங்க வீட்டுக்கு வந்துரனும்... பேங்களூர்ல தான் இருக்கனும்.. வருஷத்துக்கு ரெண்டு நாள் ஊர்க்கு வருவோம்.. நீங்க வந்து பார்த்துக்கோங்க" என கூறியவர்கள் திரும்பி கொண்டனர்..
"நான் வீட்டுல பேசிட்டு சொல்லுறேன்...போயிட்டு வரேன்" என கூறி ராம் சென்ற பின்..."என்ன டா... அபிய நம்ம கூட இருக்க சம்பதிப்பாங்க தானே" என அக்ஸரிடம் அமுதா கேட்க..."அவுங்க அபி சந்தோஷத்துக்காக என்ன வேணாலும் செய்வாங்க மா...அவ கண்டிப்பா என் கூட தான் இருப்பா...அவ மனச அப்படி மாத்தி வச்சிக்கிறேன்...அது மட்டுமில்லாம அவ என் கூட ஃபோன்ல பேசிட்டேன்...ஒரு பையனோட பேசிட்டேனு தப்புனு சொல்லி ஒப்பாரி வைப்பா...வேற எவனையும் மேரேஜ் பன்னிக்க அவளுக்கு மனசு வராது... அபி எனக்கு தான் மா...நம்ம வீட்டு மருமக தான்...நீங்க கவலை படாதீங்க" என கூறி சென்றான்...
என்ன பன்னலாம் னு இருக்கீங்க என அக்ஸரின் முதலாளி கேட்க,.."எனனங்க பன்ன சொல்லுறீங்க...மார்புலயும் தோள்லயும் போட்டு வளர்த்த ஒத்த பிள்ளைங்க அபி...அவளுக்கும் எங்களுக்கும் சம்மதமே இல்லங்குற மாதிரி சொல்லுறாங்களே...என் உயிர கேட்ட கூட குடுத்திருப்பேன்ங்க...அவள இங்க மொழி பேச தெரியாத இடத்துல விட்டுட்டு எப்படிங்க...அவ கஷ்ட படுறாலா...சந்தோஷமா இருக்காலானு தெரியாம நானும் என் மனைவியும் செத்துருவோம்ங்க...ஒரு நாள் அவ ஃப்ரெண்டஸ் கூட டூர்க்கு போனாலே எங்க உயிர் எங்க கிட்ட இருக்காது...வாழ்க்கை ஃபுல்லா பிரிஞ்சி இருக்கனும்னா எப்படிங்க முடியும்??" என ராம் கூறவும்..."இவன் ஒரு சைகோ அண்ணா...இவனுக்கு இது தான் வேலை...எப்ப எப்படி இருப்பானு யாராலும் சொல்ல முடியாது...இவன் கிட்ட இருக்குற ஒன்னே ஒன்னுனா அது அழகு மட்டும் தான்...சோவ்கேஸ் பொம்மை மாதிரி..அந்த பொம்மைனாள யாருக்கும் எந்த ப்ரோஜனமும் இல்லை" என அவர் கூற..."இதெல்லாம் நீங்க முன்னாடியே சொல்லிருக்கலாமே...நான் என் பொண்ணுக்கு இவன பேசாம இருந்திருப்பேனே" என ராம் பாவமாக கேட்க..."நீங்க நிச்சயம் பன்ற அன்னைக்கு தானே எங்களுக்கு தெரியும்...சரி விடுங்க..எல்லாம் நன்மைக்கே...வீட்ல பேசிட்டு ஒரு முடிவு எடுங்க" என கூறினார்...
வீட்டிர்க்கு கைப்பேசி மூலம் தகவல் கூறவும்,.. சீதா அபியை கட்டி கொண்டு அழ ஆரம்பிக்க..."அவன் எனக்கு வேணாம் பா...இது தான் ஃபைனல்...தூக்கி வீசிருங்க ப்பா" என அபி அழ ஆரம்பிக்க..."நீ அழுகுறியேமா...நீ அழுது நான் பார்த்ததே இல்லையே மா...அவன எனக்கு வர கோவத்துக்கு வெட்டி சாய்க்கனும் போல இருக்கு மா...என் பொண்ண அழ வைச்சிட்டானமா" என ராம் கலங்க..."அட... அப்பா...உங்க பொண்ணு அந்த சைகோ கிட்ட இருந்து தப்பிச்சிட்டா ப்பா...விட்டு தள்ளுங்க.. நாம்ம குடுத்த ஃபைவ் லேக்ஸ்ஸ வாங்கிருங்க" என ராமிடம் தைரியமாக கூறியவள் தனியே சென்று அழ ஆரம்பித்தாள்...
நிச்சயம் முறிந்தது வெளியே வர...
அபியின் பெரியப்பா: "நல்லதா போச்சி தம்பி...கொஞ்ச நாள் முன்னாடி தான் எனக்கு தெரிய வந்துச்சு...அவன் போதைக்கு அடிமைனு...எப்படி சொல்லனு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன்... கடவுளா கெடுத்து விட்டுட்டான்...அவ பிடிச்ச விரதம் அவளுக்கு நன்மையா அமைஞ்சிருச்சி"..
ராமினு தோழர்: "என் கண் முன்னாடி வளர்ந்தவ பா அபிர...அவ எவ்வளவு ஒழுக்கமா வளர்ந்தானு எனக்கு தெரியும்..ஆனா, அக்ஸர் பொம்பள பொருக்கி...அங்கே ஒரு பொண்ணுங்க கூட சுத்துவான் பா...எனக்கு தெரிஞ்சி ஒரு பொண்ணு கூட அவனுக்கு தொடர்பு இருக்கு...சத்தியம் பன்னி சொல்லுவேன்"..
அக்ஸர்க்கு கீழ் வேலை செய்தவர்கள்: "அவனை பொருத்த வரை அவன் கிட்ட இருக்குற அழக வச்சி...எத்தனை பொண்ணுங்கள வேணாலும் சாய்க்கலாம்னு நினைப்பு...அவன் முழு நம்பிக்கைல இருந்தான்... அபி அவனுக்கு தானு... அந்த சாமி உங்க பொண்ண கை விடல"..
ராமின் ஊர்க்காரர்கள்: "அவன் குடும்பமே கடன்க்கு பயந்து ஊரை விட்டு போய்டுச்சே...அப்படி பட்ட கடன் கார குடும்பதுக்கு உங்க பொண்ண குடுக்க இருந்தீங்க... கடவுள் காப்பாத்திடான்"..
ஜரா: "மச்சி...என்னை மன்னிச்சிறு டி..நீ அவ்வளவு சொல்லியும் நான் அவன் பக்கம் சாதகமா பேசுனேன்..அதுக்கு காரணம் இருக்கு டி...நான் உனக்கு சப்போர்ட் பன்னிருந்தா,. நீ நாம்ம செய்றது கரெக்ட்னு நினைச்சிருப்பா...நான் அக்ஸர்க்கு சப்போர்ட் பன்னது எதுக்குனா..நம்ம ஃப்ரெண்டே அவளுக்கு சப்போர்ட் பன்றானா நம்ம கிட்ட தான் தப்பு...நாம்ம திருத்திக்கலாம்னு நினைப்பானு தான் அவனுக்கு சப்போர்ட் பன்னேன்...பட் அவன் ஒன்னாம் நம்பர் பொருக்கினு தெரியாது டி...நம்ம ஊரே அசிங்கமா பேசுர ஒரு குடும்பம் டி😢...நீ தப்பிச்சிட்டா டி"
ரம்யா: "உன் பொறுமை க்கு உனக்கு நல்லத மட்டும் தான் டி அவன் நாடுவான்...அதைலாம் கெட்ட கனவா நினைச்சி மறந்துரு"
இப்படியே ஆளுக்கு ஒன்றாய் சொல்ல...அடுத்தவர்களின் முன்னாள் தைரியமாக பேசி சாமி முன் அமர்ந்து கதறி அழுதாள்... அவனை மறக்க முடியாமல் அல்ல... அவன் கூட பேசின பாவத்திர்க்கு மன்னிக்கும் படி வேண்டினாள்...
அடுத்து வந்த நாட்களில் மாப்பிள்ளை பார்ப்பதை பற்றி பேச ஆரம்பிக்க... அபி பேயாட்டம் ஆட ஆரம்பித்தாள்..
அதர்க்கு..."அபி மா..நான் ஒன்னு கேப்பேன்..சரியா பதில் சொல்வியா??" என ராம் கேட்க..."ஹ்ம்ம்..சொல்லுங்க ப்பா" என அழுதபடி கூறினாள்..
"நீ செருப்பு வாங்க ஒரு கடைக்கு போற...உனக்கு ஒரு செருப்பு பிடிச்சிருக்கு..ஆனா, சின்னதா இருக்கு...அப்ப நீ என்ன செய்வா?? சின்ன செருப்பா இருந்தாலும் பரவாயில்லை...போட்ருக்கேனு சொல்லுவியா" என ராம் கேட்க..."அது எப்படி ப்பா...என் சைஸ் க்குள்ள செருப்ப வாங்கிப்பேன்" என கூறினாள்...
"அதே மாதிரி தான் மா...அவன் காலுக்கு ஆகாத செருப்பு மா...அத வேணாம்னு வீசிறனும்...அதையும் மீறி அந்த சின்ன செருப்ப தான் போடுவேனு நின்னா கால்லு புண்ணா போயிரும் மா" என ராம் கூற..."ப்பா...உங்களுக்கு ஒன்னு புரியலே...எனக்கு அவன் வேணும்னு சொல்லலே...இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு தான் சொல்றேன்...என் வலி உங்களுக்கு தெரியலயே...நீங்களும் லவ் மேரேஜ் தானே பா...அவன் நல்லவன் மாதிரி ஏமத்திட்டான்...பட் நான் உண்மையா தானே பா இருந்தேன்" என கூறி அழ ஆரம்பிக்க...அவளை சமாதானம் படுத்த வழி அறியாமல் இருக்க...ஜரா மற்றும் பாஸி வந்தனர்..
அறையில் பாடல் ஒளிக்க..."எந்த பாட்டு போட்டாலும் அவன் கூட பேசுன நியாபகம் தான் எனக்கு வருது...தலைய பிச்சிகனும் போல இருக்கு...எவ்வளவு கேடுகெட்டவன்" என திட்ட..."விடு அபி... இந்த பாட்ட பாரு" என ஜரா கூறவும்...மூவரும் அமைதியாக பாடலை கேட்டனர்..
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உழி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம்முயின்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சை போல சுவாசிப்போம்
லச்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோட போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா.
துக்கம் இல்லை என்ன தோழா
ஒரு முடிவிரிந்தால்.. அதில் தெளிவிரிந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்களமே
ஒவ்வொரு விடியலுமே.. சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும்... நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஒ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
"ஆமா ஜரா...இந்த பாட்டுல உள்ள மீனிங்லாம் எவ்வளவு தைரியத்த குடுக்குது பார்த்தியா...நானும் தைரியமா இருப்பேன்...இந்த பழைய நினைப்ப விட்டுட்டு வெளியே வரனும்...அதுக்கு என்ன செய்யனும்"என அபி கேட்கவும்...
"ஹ்ம்ம்...வா..சரக்கு அடிப்போம்" என ரம்யா கூற..."சரக்கு அடிக்குறதுலாம் பசங்க வேலை டி...கேர்ள்ஸ்க்கு வேற மருந்து இருக்கு" என ஜரா கூறினாள்..
"என்ன மருந்து டி..எனக்கு புரியலயே" என இருவரும் ஒரே போல் கேட்க..."வாட்டி" என்றாள் ஜரா..."அது என்ன...வாட்டி..வேட்டினு" அபி கேட்க..."wattpad டி...அது ஒரு ஸ்டோரி ஆப்...அதுவே ஒரு மருந்து மாதிரி தான்...அதுக்குள்ள போ...செம்மயா இருக்கும்" என ஜரா கூற..."அப்டினா கேர்ள்ஸ் மட்டும் இருப்பாங்களா??" என்றவளிடம்..."பாய்ஸ்ம் இருப்பாங்க" என கூறி வாட்பேடை பற்றி சொல்லி குடுத்தாள்...
திறந்ததுமே... kaRthika05 "ஏன் இந்த மௌனம்" வர..."ஐஐஐஐ...நந்தினி சீரியல் அருன் கங்கா டி" என அபி கூற..."ஹாஹா...அது கேரக்டர்ஸ் டி...ரீட் பன்னி பாரு...சூப்பரா இருக்கும் கதை" என்று கூறி..."சரி மச்சி..டைம் ஆச்சி...போய்ட்டு வரோம்" என கூறி கிளம்பினார்கள்...
அதை முடித்தவள்...அடுத்ததாகashikmo ன்"என் உயிரினில் நீ" படித்து முடிக்க விடியற்காலை 6 மணி ஆகியது...அடுத்தடுத்து tharakannan ன் "கல்யாணம் பன்னிக்கலாமா??" zeeraf ன்"நெருங்கி வா நெஞ்சமே" im_dhanuu ன்"நினைத்தேன் வந்தாயடா" SaranyaS067ன் "முள்ளும் மலரும்" sandhiya_ishu ன் "கண்களின் மொழி" hashasri ன் "மனதை மாற்றிவிட்டாய்"shivali ன்"அரக்கனோ அழகனோ"@sandhiyadev ன்"என் கனவு பாதை" Vaishu1986 ன்"உன் வார்த்தை ஓர் வரம்"priyadharshini12"தாலாட்டும் சங்கீதம்"KaviaManickam ன்"கடவுள் தந்த வரம்" என கதையே கதி என இருந்தாள்..
"இங்கே பாரு அபி... அவனுக்கு மேரேஜ் ஆச்சு..அவன் செஞ்ச பாவத்துக்கு அந்த கடவுளே தண்டனை குடுத்துட்டான்...அந்த பொண்ணு எவன் கூடயோ ஓடி போனவ...ஊர்ல பொண்ணே கிடைக்காம வேற வழி இல்லாம நகை பணம்னு எதுவும் வாங்காமே முடிச்சிட்டான்" என ராம் கூற...அவளை அறியாமலே அவள் முகத்தில் புன்முறுவல் பூத்தது..
நாட்கள் செல்ல,..யாருடைய ஏற்பாடும் இல்லாமலே...எதார்த்தமாக கத்தாரிலிருந்து அர்ஷா மைசூரில் இருந்த ஒரு கம்பெனியில் வேலையில் சேர..."அர்ஷாவுக்கு அபிய கல்யாணம் பன்னி வச்சா...எப்படி இருக்கும்??" என அபியின் பாட்டி கேட்கவும்..."சரியான யோசனை தான்...அர்ஷா...நம்ம வீட்டு பையன்...சீக்கிரமே பேசலாம்" என வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசி ஜுன் முப்பதில் திருமணம் வைக்க முடிவெடுத்தனர்...
அபி,..தனியாக அர்ஷாவிடம்.."இங்க பாரு அர்ஷா...எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்ல...நீயே வேணாம்னு சொல்லிடு" என கூற..."ஹாஹா..கைக்கு எட்டுனது வாய்க்கு எட்ட முன்னாடியே பறிக்க பார்க்குறியே மா...நான் ஆசைப்பட்டது...தானா அமையுது...அதை நானே தடுத்து என் தலைல மண்ண அள்ளி போட்டுக்க மாட்டேன்...ஓகே வா பேபி" என கண்ணடித்து செல்ல... அபி தலையிலடித்து கொண்டாள்..
பெரியவர்கள் முடிவு செய்த படியே திருமணம் முடிந்தது...
"அபி எந்திரி,..மைசூர் வந்திருச்சி" என அர்ஷா எழுப்பினான்...
Stories select pannadhu namma frndz im_dhanuu Bharathipavi 😍😍
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro