36
திருமணம் முடிந்து இரண்டாவது நாள்
அன்று மாலை:
"ஹ்ம்ம், கல்யாணமும் முடிஞ்சிருச்சி...இன்னும் ஒரு புடவை கட்ட தெரியலே" என அபியின் சித்தி புலம்பி கொண்டே அபியிடம் ஜாக்கெட் மற்றும் பாவடையை குடுத்து "சீக்கிரம் போட்டுட்டு வா,. எனக்கு வேலை இருக்கு" என பாத் ரூமிர்க்கு அனுப்பி வைத்தார்..
"ஹு ஹும்ம்...உனக்கு ஏன் இந்த கஷ்டம்...பேசாம சுடி போட்டுக்குறேன்.. படுத்தாதே" என அபி கூற..."ஆமா டி...மனசுல இன்னும் சின்ன பொண்ணுனு நினைப்பு..சுடி போடனுமாம்..ஏன் ஸ்கர்ட் போட மாட்டியா??" என கத்த..."இதுவும் நல்ல ஐடியா தான்" என வேகமாக அபி வெளியே வந்தாள்...
"உனக்கு வாய் அதிகம் டி...இதை அடக்க தானே அர்ஷா வந்திக்கிறான்" என அபியின் சித்தி கூற..."உன் வாய அடக்க சித்தூ வெய்ட்டிங்" என கண்ணடித்து விட்டு பாத் ரூமிர்க்குள் புகுந்து கொண்டாள் அபி..
ஹாலில் அமர்ந்து அர்ஷா கைப்பேசியை பார்த்து கொண்டிருக்க... அபியின் தோழிகள் அநேகம் பேர் வந்தனர்..
அபியின் தோழிகள் வந்ததால் அறைக்கு சென்று அறை கதவை தட்டினான்..
"என்ன அர்ஷா...எதுவும் வேணுமா" என அபியின் சித்தி கேட்க..."அபி ஃபரெண்ட்ஸ் வந்திருக்காங்க...அதான் உள்ளே வந்தேன்" என அர்ஷா கூறவும்..."சரி வந்து உட்காருங்க" என கூறினார்..
"ப்ச்ச், என்ன சித்தி இது...கழுத்து பக்கம் லூஸா இருக்கு"...என ஜாக்கெட்டை சரி செய்த படி... சித்தி மட்டும் தானே இருக்கிறார் என துப்பட்டா அணியாமல் அபி வந்து நிற்க...இத்தனை நேரமாய் கைப்பேசியை பார்த்தவன்... அபியின் குரலை கேட்டதும் தலை நிமிர்ந்து பார்த்த அர்ஷா வாயடைத்து போனான்...
அர்ஷா அறையில் இருப்பதை கவனிக்காதவள்..."என்ன சித்தி...முழிச்சிட்டு இருக்கிறே" என கேட்டுக்கொண்டு நிற்க.. அவளின் சித்தியோ தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக விழித்து கொண்டிருக்க..."என்ன ஆச்சி உனக்கு" என கேட்டுக்கொண்டிருந்தவள் அர்ஷாவை பார்த்து விட தன் நிலையை உணர்ந்து வேகமாக பாத்ரூமிர்க்குள் புகுந்து கொண்டாள் அபி...
"ஹேய்...வெளியே வா டி...டைம் ஆகுது" என அபியின் சித்தி கத்த..."முடியாது...முடியாது" என கூறி கொண்டிருந்தவளை...அதட்டி உருட்டி ஒரு துப்பட்டாவை குடுத்து "உன் மாப்பிள்ளை தானே இருக்குறான்...அதுக்கு எதுக்கு இப்படி நெளியுறே" என அபிக்கு மட்டும் கேட்கும் படி கூறியவள்...அவளை வெளியே இழுத்து புடவை உடுத்தி விட ஆரம்பித்தாள்...
உள்ளுக்குள் படப்படப்புடன் அர்ஷாவை பார்க்காமல் கண்களை அலைபாய விட...
குறு குறு பார்வையால் கொஞ்சம் கடத்துறியே
குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே
வேறு என்ன வேணும் மேகம் மழை வேணும்
சத்தம் இல்லா முத்தம் தர வேணும்....
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
என அபியை பார்த்த படி அர்ஷா பாட...
அவளோ முறைத்து கொண்டே நிற்க...இதை எதையும் கண்டும் காணாமலும் சிறு புண்ணகையுடன் அபிக்கு புடவையை உடுத்தி கொண்டிருந்தார் அபியின் சித்தி ..
கண்களில் குறும்புடன் கண்ணடித்து விட்டு பாட ஆரம்பிக்க..
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடா
கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால் மழைசாரல் வீசுதடா...
"இதுக்கு தான் உன் கண்ணை பார்க்குறதே இல்லை" என்பது போல திரும்பி கொண்டாள் அபி...
"மாமா...ரெண்டு நாள்ள மைசூர்க்கு போகனும்...திடீர்னு கல்யாணம் முடிவு பன்னதால..லீவ் கிடைகலே...ஆஃபிஸ்ல எல்லா வேலையும் பென்டிங்ல இருக்கு...லீவ் எடுக்க முடியாது மாமா" என அர்ஷா கூறவும்..."சரி பா, போயிட்டு வாங்க" என ராம் கூறினார்...
சிறிது நேரம் அர்ஷா அமைதியாக இருக்க...
"என்ன பா, ஏதாச்சும் சொல்லனுமா" என ராம் கேட்கவும்...திருதிருவென விழித்தவன்..."இல்லை மாமா...அது...அபியையும் ஒரு ஒன் மன்த் கூட்டிட்டு போயிட்டு வரவா" என மென்று முழுங்கி கேட்டான்..
.....
"ரெண்டுல ஒன்னு முடிவு பன்னுங்க... அபி என் கூட தான் இருக்கனும்... நான் ஊருக்கு வந்தா கூட்டிட்டு வரேன்... ஒன் யேர்ல டூ டேஸ் க்கு தான் வருவேன்"..."அப்படி இல்லைனா...வேற முடிவ நான் எடுக்க வேண்டி வரும்" என அக்ஸர் கூறியது ஒரு நிமிடம் ராம்க்கு நியாபகம் வர...அர்ஷாவை அமைதியாக பார்த்தார்...
"என்ன மாமா..ஏன் ஒரு மாதிரி பார்க்குறீங்க" என அர்ஷா ஒரு தவிப்புடன் கேட்க..."ஹாஹா...அப்படிலாம் இல்லை...நீங்க உங்க பொண்டாட்டிய தாரளமா கூட்டிட்டு போகலாம்" என ராம் சிரித்தபடி கூறவும்...சந்தோஷமாக தலையசைத்தான்...
அபி மறுத்து பேச வர..."பரவாயில்லை மா, போயிட்டு வா" என ராம் கூற...மானசீகமாக தலையிலடித்துக் கொண்டாள் அபி...
"அபி பேபி...நீ தேவையானதுலாம் பேக் பன்னிடு...ஆள் வந்து போயிட்டு இருக்குறதால டைம் கிடையாது...சோ டைம் கிடைக்கும் போது பேக் பன்னி வச்சிறு" என அர்ஷா படபடவென கூறவும்... அபி முறைத்து பார்க்க..."டேய்..ஃசொல்லு டா...இரி..வரேன்" என வராத அழைப்பை ஏற்றபடி சென்றான்...
"மச்சி" என்று அழுதபடி வந்த ஸ்வேதாவை சமாதானம் செய்ய வழி தெரியாமல் தடுமாறிய அபி.."சொல்லு டி...வீட்டுக்கு எப்படி தெரியும்...என்னலாம் இன்னும் பன்னி தொலைச்சிக்கிறே... அப்பா என்ன சொல்லுறாங்க" என கேட்டாள்..
"இல்லை டி...அது வந்து" என்று இழுத்தவள்...நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்...
(இருக்குற வேலையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு...கதை கேக்க வாங்க ஃப்ரெண்ட்ஸ்😉)
"எவ்வளவு தைரியம் இருந்தா என் பிள்ளை மேலே நீ கைய வச்சிருப்பே" என விஷ்வாவின் தாய் ரேகா... ஸ்வேதாவின் வீட்டிர்க்கு வந்து கத்த ஆரம்பித்தார்...தன் குடும்பம் என்பதையும் மறந்து...
"உன் பையன் செய்ஞ்ச கூத்துக்கு...அடிக்காம என்ன செய்ய சொல்லுறா...என் பொண்ணு மனச கெடுத்து வச்சிக்கிறானே" என ராஜ் தன் பங்கிற்க்கு கத்தவும்...
"பொம்பள பிள்ளைய வளர்க்க தெரியல...ஃபோன் வாங்கி குடுத்து கெடுத்து வச்சிக்கிறா.. சிட்டில வளர்ந்தவனு நினைப்பு சுடிதார போட்டு மினுக்கிட்டு என் பையன வளைச்சி போடுறா... ஏன் டி.. உனக்கு ஆம்பளை வேணும்னா ஊர்ல எத்தனை பேர் இருக்கானுவோ...அவனுங்க கிட்ட போக வேண்டியது தானே" என ஸ்வேதாவை பார்த்து...பேச கூடாத வார்த்தையெல்லாம் பேச ஆரம்பிக்க... தன் மகளின் மானத்தை வாங்கியவரின் கண்ணத்தில் அறைந்தார் ராஜ்...
"ச்சீ...நீயும் ஒரு பொண்ண தானே பெத்து வச்சிக்கிறே...அதை மறந்துட்டு இவ்வளவு அசிங்கமா பேசுறே...உன் அண்ணன் பொண்ணுனு கூட பார்க்காம.. இப்படி வாய் கூசாம பேசுறியே டி" என கோவமாக கூறினார்..
"கஷ்டத்துல இருந்தாலும் உன் திமிருக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை"..."இவ்வளவு திமிரு இருக்குற நீ...இவ்வளவு ரோஷம் இருக்குற நீ உன் பொண்ணை கண்டிச்சு வை... இனி அவ என் பையன் பின்னாடி சுத்த கூடாது " என ரேகா கத்தி கொண்டிருக்க...
"போதும்...என் விஷ்யத்துல தலையிட நீ யாரு...இதே நேரம் மாமா கிட்ட சொத்து இருந்திருந்தா...ஜாதிலாம் உன் கண்ணுக்கு தெரியாம நீ சரினு சொல்லிருப்பிலே" "அவுங்க கஷ்டத்துல இருக்குறாங்கனு தானே நீ ஸ்வேதாவ இவ்வளவு அசிங்கமா பேசுறே" என கூறிய விஷ்வா...
"என்னால மாமாக்கு துரோகம் பன்ன முடியாது" என அமைதியானான்..
விஷ்வா கூறிய வார்த்தையின் அர்த்தம் புரிந்தும் புரியாமல் அவர் அவர்கள் குழப்பத்துடன் பார்க்க...முதலில் சுதாரித்த ரேகா...
"டேய்...நீ என்ன டா சொல்லுறே...துரோகம் பன்ன மாட்டேனா என்ன அர்த்தத்துல சொல்லுறே" என பதற்றத்துடன் ரேகா கேட்க... விஷ்வா அமைதியாக இருந்தான்...
"சொல்லு டா...ஏன் டா..அப்படி சொன்னே...நெஞ்சு படப்படனு அடிக்குதே...ஏதும் தப்பு பன்னி தொலைச்சீங்களா டா" என ரேகா கேட்க..
"ச்சீ...தப்பா பேசாதே மா...அப்படிலாம் இல்லை" என விஷ்வா கூற...நம்பாமல் பார்த்தவள்"அப்புறம் ஏன் டா துரோகம் பன்ன மாட்டேனு சொன்னே" என ரேகா கேட்க.. மொத்த குடும்பமும் அவன் பதிலுக்காக காத்திருந்தது...
"சொல்லு டா..என்ன பன்னி தொலைச்சே" என வசந்த் கத்த..."டேய்...சொல்லு..என் மக வாழ்க்கை" என ராஜ் ஒரு பக்கம் பரிதவிப்புடன் கூற...
ஆளாளுக்கு ஒர பக்கமாக கத்த ஆரம்பிக்கவும் ...
"ஆமா...நாங்க தப்பு பன்னிட்டோம்...எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சி" என விஷ்வா கத்துன அடுத்த நிமிடம்.. வசந்த் அவனை அடிக்க ஆரம்பித்தான்...
"டேய்...என் பையன அடிக்குறத நிறுத்திட்டு...இடம் குடுத்தவள அடி...அவ இடம் குடுக்காம இவன் இதை செய்யலே" என ரேகா கூறி..."இவனும் தப்பு பன்னான்...அவளும் தப்பு பன்னினா..தப்புக்கு தப்பு சரியா போச்சி"..
"இதை இதோட விட்ருங்க"..."கதம்,கதம்" என ரேகா கூறிய அடுத்த நிமிடம்...அவள் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விழுந்தது..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro