35
வெகுநேரமாக தூக்கம் இல்லாமல் அந்த பக்கம் இந்த பக்கம் என திரும்பி திரும்பி படுத்தவள் ஒரு கட்டத்தில் தூங்கியும் போனாள்..
ஹேய்...அபி... எந்திரி மா...டைம் ஆச்சி என அவளை போட்டு உலுக்கினான் அர்ஷா...
தூக்க கலக்கத்தில் கண்ணை கசக்கி கொண்டு இந்த நேரத்தில நம்மல யாரு எழுப்புறா.... இப்ப தானே தூங்குனோம் என அபி யோசித்து கொண்டிருக்க...அர்ஷா அபியின் முடியை களைத்து கொண்டிருந்தான்...
திடீரென பயத்தில் ஆஆஆஆஆ வென கத்த வர...வேகமாக வாயை பொற்றியவன்...ஏன் டி கத்துறே...வெளியே கேட்றாம என அர்ஷா கூற... அப்பொழுது தான் தங்களுக்கு திருமணம் ஆனது நியாபகம் வந்து சுற்றி முற்றி பார்த்தவள்... அர்ஷாவை முறைத்தாள்...
ஏன் இப்படி பன்னி வச்சிக்கிறா என அபி கேட்க...எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் என அர்ஷா கூறவும்...முறைத்து கொண்டிருந்தாள்...
ஹேய்...சும்மா சும்மா முறைக்காதேடி...உன் பாட்டி இருக்குறதுலேயே ரொம்ப அறிவாளி...நாம்ம வெளியே போனதும் வேகமா நம்ம ரூம்க்கு வந்து பார்க்கும்...இப்படி நீட்டா இருந்தா உண்டு இல்லைனு பன்னிரும்...அது தான் இந்த கட்டிக்குற பூவைலாம் பிச்சி போட்டு...பெட்ஷீட்ட கசக்கி போட்டுட்டு...ஒரு பிள்ளோவ தூக்கி கீழே போட்டேன்...எப்படி?? என புருவத்தை தூக்கி காட்டி அர்ஷா கேட்கவும்...உன் மூஞ்சி மாதிரி இருக்கு என அபி கூற...அவ்வளவு கசங்கியா இருக்கு என் மூஞ்சி என சீரியஸாக அர்ஷா கேட்கவும்... அபி சிரித்து விட்டாள்...
ஹப்பா...என் டார்லிங் ஒரு வழியா சிரிச்சிட்டா என கூறியவனிடம்...சரி...எதுக்கு என் முடியை களைச்சா என கேட்க...திருதிருவென விழித்தவன்...நீயும் நீட்டா இருக்க கூடாது பேபி என முகத்தை மூடி கொண்டான் அர்ஷா...
சீச்சீ என முறைத்தவளை அசடு வழிந்த படி பார்த்தவன்...அவள் சுதாரிக்கும் முன் கண்ணத்தில் முத்தம் பதித்து தள்ளி போய் நின்று...சாரி அபி...சாரி...இன்னைக்கு ஃப்ரெண்ட்ஸ்லாம் அப்படி இப்படினு கேள்வி கேட்பாங்க...நிறைய பொய் சொல்ல வேண்டி வரும்...அது தான் நடந்துச்சினு ஒரு வார்த்தை மட்டும் சொன்னாலும் உண்மையான வார்த்தையா இருக்கும்லே என அர்ஷா கூறவும்...அருகில் இருந்த எல்லாத்தையும் எடுத்து அர்ஷாவின் மேல் அபி வீச...பாத் ரூமில் புகுந்து கொண்டான்...
குரங்கு...குரங்கு...என்னை பார்த்து பயப்பிடுறவன்...என்னையே கிஸ் பன்றான்...அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும் அபி...நீ பழைய அபியா மாறி அவனை அடிச்சி கடிச்சி விட்ரு...அப்ப தான் வாளை சுருட்டிட்டு அமைதியா இருப்பான் என மனதில் நினைத்தபடி இருந்தவளுக்கு அழைப்பு வர...ஃபோனை எடுத்தாள் அபி...
அவளுக்கு அழைப்பு வரும் சத்தம் கேட்டு.. அபி... நான் குளிக்க போரேன் என கூறி தப்பித்தால் போதும் என ஓடி விட்டான் அர்ஷா..
கைப்பேசியில்...மச்சி...சீக்கிரம் குளிச்சிட்டு வா...உன் பாட்டி புலம்ப ஆரம்பிச்சிருச்சி என ஸ்வேதா கூற...வரேன் டி..வை என கூறி அழைப்பை அணைத்தவள்...வாட்ஸ் ஆப்பை ஓப்பன் செய்தவள்...வந்த வாழ்த்துக்கெல்லாம் நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள்..
அதில் ஒரு புதிய நம்பரிலிருந்து மெஸேஜ் வந்தது...நேரத்தை பார்க்க... இரவு இரண்டு மணி என காண்பித்தது...
#######: விஷ் யூ ஹேப்பி மேரீட் லைஃப்..
அபி: ஹூ ஆர் யூ...
#######: டேக் கேர் சோல்மேட்...
அபி: ஹலோ நீங்க யாரு...என்னை பத்திலாம் உங்களுக்கு எப்படி தெரியுது...ஏதாவது கேட்டா டேக் கேர்னு சொல்லுறீங்க...நீங்க யாரு😠😠😠
#######: ஹாஹா...சோல்மேட்...
.
.
ஆஃப்லைன் போயிட்டாப்லயே...அப்படி யாரு நம்மளயே கலாய்க்கிறது என யோசித்த படி இருக்க...மச்சி என்றபடி ஒரு கூட்டம் வந்தது...
மச்சி...நேத்து மச்சான், அண்ணன் லாம் சேர்ந்து எவ்வளவு அழகா கஷ்டப்பட்டு ரூம்ம அலங்காரம் பன்னாங்க...ஏன் டி இப்படி அலங்கோலம் பன்னி வச்சிக்கிறே என ஸ்வேதா கேட்க...ஹேய் வச்சிக்கிறே...இல்ல டி...வச்சிக்கிறீங்கனு கேளு என கயல் கூற...ஹம்ம்...இரி...நான் விஷ்வாவ கூட்டிட்டு வரேன்...அவுங்க கஷ்டப்பட்டு பன்ன அலங்காரைத்தைலாம் கலைச்சி வச்சிக்கிறீங்களே என கண்ணடித்து செல்வி எழ...மற்றவர்கள் சத்தமாக சிரித்தனர்...
ச்சீ...எருமைகளா...போங்க டி...எதாவது சொல்லிற போரேன் என அபி கூற...கேட்க ஆவலா இருக்கும் மச்சி என கோரஸ் பாடினார்கள் மற்றவர்கள்...
அதே நேரம்.. ஸ்வேதா என வீடே அதிரும் படி ஒரு குரல் கேட்க...பதறியடித்து அறையில் கதைத்த படி இருந்தவர்கள் வெளியே வந்தார்கள்...
வெளியே வந்த ஸ்வேதாவினு முகத்தில் சில காகிதங்களை வீசியவர்... இது எத்தனை நாளா நடக்குது என ஆக்ரோஷமாக கத்தினர்...
அப்பா என அழுதபடி ஸ்வேதா கூற...சொல்லு...உன்னை கொன்று போட்றுவேன்...எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பன்னிருப்பா?? உனக்கு யாரு இவ்வளவு தைரியம் குடுத்தா என ஸ்வேதாவின் தந்தை ராஜ் கத்த...குனிந்தபடி அழுது கொண்டிருந்தாள்...
அதே நேரம் சத்தம் கேட்டு அங்கே வந்த விஷ்வாவின் சட்டையை பிடித்து முகத்தில் குத்திய ராஜை... வேண்டாம்... ப்பா...ப்ளீஸ் விடுங்க... விஷ்வாவா அடிக்காதீங்க என அழுதபடி ராஜை அடிக்க விடாமல் தடுத்தாள் ஸ்வேதா...
ராஜை தடுத்ததில் அவளின் துப்பட்டா தலையில் இருந்த இறங்க...அவளின் தலையில் வைத்திருந்த மல்லிகை பூவை தூக்கி விஷ்வாவின் முகத்தில் வீசீனார்...
அங்கே வந்த ராம்...ஏன் அண்ணா... ஏன் இப்டிலாம் பன்றீங்க... கல்யாண வீட்ல வச்சி...இது சரியில்லை என கூற...எது சரியில்லை...கல்யாண வீட்டுல..எல்லோரும் அவுங்க அவுங்க வேலையை பார்த்தா...இவங்க ரெண்டு பேரும் என்ன பன்னிக்கிறாங்க தெரியுமா??... என் பிள்ளைக்கு பூ வாங்கி இவன் வச்சி விட்டிக்கிறான்... இதை பார்த்துட்டு என்ன சும்மா இருக்க சொல்லுறியா என ராஜ் கத்தினர்...
இல்லை ப்பா...அப்படிலாம் இல்லை என ஸ்வேதா அழ...பொய் சொல்லாதே...எவ்வளவு தைரியம் இருந்தா என் கிட்டயே பொய் சொல்லுவா என கத்தியவர்... ஓஓஓஓஓஓ...அப்படிலாம் இல்லையோ...நான் நிரூபிக்கட்டுமா என கத்தியவர்... அர்ஜுன் இங்கே வா என ஏழு வயது சிறுவனை கூப்பிட்டார்...
(அர்ஜுன் நியாபகம் இருக்கா...அர்ஷா கொட்டிட்டு ஓடுவானே...சின்ன பையன..அவன் தான்)
ராஜ் கோவத்தை பார்த்தவன்...பயந்த படி தன் தாயின் பின்னால் ஒளிந்து கொள்ள...
அர்ஜு தங்கம்...இங்க வாங்க...அப்பா நல்ல அப்பா தானே என கூறியபடி அழைக்க...ஆமா என வந்தான் அந்த சிறுவன்...
நீ அப்பா கிட்ட ஏதோ சொன்னியே... ஸ்வேதா அத்தைக்கு யாரு பூ வாங்கி குடுத்தா மா என ராஜ் கேட்க...
ஸ்வேதாக்கு விஷ்வா தான் முடில பூ வைச்சான்...யாரு கிட்டையும் சொல்லாதேனு ச்சாக்கி தந்தான் என அழகாக மாட்டி விட... ராஜ் ஆக்ரோஷமானார்...
இப்ப என்ன சொல்ல போறே..சொல்லு ஸ்வேதா என ஆக்ரோஷமாக கத்த...குனிந்த படி அழுது கொண்டிருந்தாள்...
அண்ணா ...நீங்க அமைதியா இருங்க...ஸவேதா மா...நீ சொல்லு மா...நீ இப்படிலாம் நடந்துக்குற பொண்ணு இல்லையே மா...என்ன நடக்குது இங்கே...எப்படி இவ்வளவு தைரியம் வந்திச்சி...இந்த விஷ்யம் யாருக்குலாம் தெரியும்...உனக்கு சப்போர்ட் யாரு என அடுக்கடுக்காக ராம் கேள்வி கேட்க... ஸ்வேதா எதுவும் சொல்லாமல் குனிந்த படி அழுதாள்..
பார்த்தியா??? இவள கொஞ்சி கெஞ்சிலாம் எந்த ப்ரோஜனமும் இல்லை என கத்தியவர் ஸ்வேதாவின் கண்ணத்தில் ஓங்கி அறைய... அபியின் மேல் சென்று விழுந்தாள் ஸ்வேதா...
இதெல்லாம் பார்த்து கொண்டிருந்தவள்...எனக்கு மட்டும் தான் தெரியும் என கீழே குனிந்த படி அபெ கூற மொத்த குடும்பமும் அதிர்ச்சியானது...
ஏன் அபி...ஏன் எங்க கிட்ட இருந்து மறைச்சே...உன்னால தான் என் பொண்ணு கெட்டு போயிட்டா என ராஜ் அடிக்க வர...
"என் பொண்டாட்டிய அடிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு" என்றபடி இடையில் புகுந்தான் அர்ஷா...
என்ன சொன்னீங்க...என் அபி னாள உங்க பொண்ணு கெட்டு போயிட்டாளே...என் அபி சொல்லியா உங்க பொண்ணு லவ் பன்னுனா?? என் அபி சொல்லியா உங்க பொண்ணு ரியாஜ்க்கு முடிய காமிச்சா?? என் அபி சொல்லியா இந்த கடிதம்லாம் எழுதிக்கிறா...எல்லாம் அவளா செய்ஞ்சது...
ஆனா, என் அபி மேலே நீங்க பழிய போடுறீங்க என வார்த்தைக்கு வார்த்தை "என் அபி" "என் அபி" என கூறியவன்...உங்களுக்கு புத்திமதி சொல்லுற அளவு எனக்கு வயசு இல்லை..
....பட் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்...என்ன தான் உங்க பொண்ணு தப்பு செய்ஞ்சிருந்தாலும் தனியா கூப்பிட்டு அட்வைஸ் பன்னுங்க...அத விட்டுட்டு இப்படி நாளு பேரு வந்த போற இடத்தில உங்க பொண்ணு மானத்தை நீங்களே வாங்கிடாதீங்க என பொறுமையாகவும் அதே நேரம் அழுத்தமாகவும் கூறியவன்... அபியின் கையை இழுத்த படி அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டான்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro