33
இப்படி பட்டவனை எப்படி அபி மறுபடியும் நம்புறே என விஷ்வா கேட்டான்..
இல்லை டா...நான் ஸ்டார்டிங் அக்ஸர் கூட பேசும் போது அவனை எத்தனை பொண்ணுங்க லவ் பன்றாங்கனு சொல்லிக்கிறான்... அப்ப கூட நான் நம்பலே..ஆனா, வாலன்டியரா அவனே ஒரு பொண்ணோட செல்ஃபி எடுத்ததா சொல்லி எனக்கு ஒரு பிக் அனுப்புனான்..
அந்த ஃபோட்டோஸ பார்த்ததும் எனக்கு கோவம் வந்திச்சி... நான் அவன் கிட்ட சண்டை பிடிச்சேன்.. அதுக்கு அவன்,.
"ஏன் அபி, இப்படி இருக்குறே..நான் ஒரு செல்ஃபி எடுத்தத அனுப்புனேனே..அது என் மச்சி தான்...அவளுக்கு என் மேல லவ் இருந்திச்சி...நான் அப்படி நினைக்கலே...அவ சின்ன பொண்ணு ஆன்ட் நான் நினைச்சா இந்த ஃபோட்டோவ உனக்கு தெரியாம மறைச்சிக்கலாம்.. பட் நான் அப்படி செய்யலையே.. ஏன்னா நம்மக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாதுனு நினைச்சேன்" என அவன் சொல்லவும் நான் அவனை புரிஞ்சிக்கிட்டு சாரி கேட்டேன் என அபி கூறினாள்...
ஹ்ம்ம்...இந்த ஒன்ன வைச்சி தான் அக்ஸர நீ நம்புறியா என விஷ்வா கேட்டேன்...
ஹ்ம்ம் ஒன்ஸ் அவன் ஃப்ரெண்ட் மேரஜ்னு திருநெல்வேலிக்கு போனான்... அப்ப எனக்கு ச்சேட் பன்னான்... ஏன் ஃப்ரெண்ட்ஸோட ஹேப்பியா இருக்குறத விட்டுட்டு என் கூட பேசுறீங்க.. ஃப்ரெண்ட்ஸோட என்ஜாய் பன்னுங்கனு சொன்னேன்.. அதர்க்கு அவன்,..
"இல்லை அபி...இங்க பேச்லர் பார்ட்டி...பசங்க சரக்கு அடிக்கிறாங்கனு சொன்னான்... நீங்களும் ட்ரின்க்ஸ் பன்னுங்கனு சொன்னேன்... இல்லை... எனக்கு பிடிக்காது.. அதுலாம் அடிக்க மாட்டேனு சொன்னான்... அவன் ட்ரின்க்ஸ் அடிக்கிறவனா இருந்தா பேச்சிலர் பார்ட்டில வச்சி என் கூட சேட் பன்னிக்கவே தேவையில்லைலே" என அபி கூறினாள்...
எனக்கு என்னமோ நீ யோசிக்கிற விதம் தப்பா இருக்கோனு தோனுது அபி என விஷ்வா கூறவும் இல்லை டா...இப்ப கூட அவன் கார் வாங்க போறதுக்கு என் கிட்ட வாங்கவாகனு கேட்டுட்டு தான் வாங்குனான்... இந்த விஷ்யம் வேற யாருக்குமே தெரியாது.. ஏன் அவங்க பேரண்ட்ஸ்க்கு கூட தெரியாது.. கார் வாங்குறது,. அவனோட ரொம்ப நாள் ஆசை.. ஆனால், அதையே என் கிட்ட தான் கேட்க்குறான்... அப்ப எனக்கு தானே ஃபர்ஸ்ட் இம்பார்ட்டன்ட் குடுத்திக்குறான் என அபி கூற... விஷ்வா தெளிவு பெறாமலே இருந்தேன்..
சரி விஷ்வா...இந்த சர்ட் எப்படி இருக்கு என அபி கேட்க...சூப்பரா இருக்கு டி...செம்ம பிராண்ட் என விஷ்வா கூறவும்...சரி..நீ போகும் பேது இதை கொரியர் பன்னிடு...நான் பார்சல் பன்னி தரேன் என அபி கூறினாள்...
அக்ஸர்க்கா?? இப்ப எதுக்கு இது ?? என விஷ்வா கேட்க...ஈஈஈஈஈ..ஃபிப்ரவரி 14 வருது டா...அதுக்கு தான் என அபி கூறினாள்...
அவனுக்கு தான் உன் செலக்ஷனே பிடிக்காதே என விஷ்வா கேட்க...ஹ்ம்ம்..அப்படி தான் சொல்லுவான்..பேர்த் டே அப்ப நான் அவனுக்கு விஷ் கூட பன்னலே... மாப்பிள்ளைக்கு ஒரு சர்ட்டாச்சிம் எடுத்து தந்தியானு கேட்டுட்டு இருந்தான்... அதான், இந்த சர்ப்ரைஸ் என அபி கூற...நீ திருந்தவே மாட்டா என வாய்க்குள் முனுமுனுத்தான் விஷ்வா...
நாட்கள் அதன் போக்கில் நகர...
வரும் ஜூன் முப்பது திருமணம் என இரு வீட்டாராலும் நிச்சயிக்கப்பட்டது..
அபிக்கோ திருமணம் என்றதும் பயம் வர அக்ஸரிடமிருந்து கால் வந்தது...
அக்ஸர்: ஹாய்
அபி: ஹாய்
அக்ஸர்: என்ன மேடம் செய்யுறீங்க...பெட்டி படுக்கைலாம் ரெடி பன்னுங்க..இனி பேங்களூர் தான்..
அபி: ஹலோ ஹலோ...நான் என் பேரண்ட்ஸ்ஸ விட்டு வர மாட்டேன்..
அக்ஸர்:😕😕
அப்புறம் எதுக்கு மேடம் என்ன மேரேஜ் பன்னிக்க போறீங்க
அபி: ஈஈஈஈஈ, சும்மா டைம் பாஸ்க்கு..
அக்ஸர்: அடிங்க்..
அபி: க்யூட்டீ
(நல்ல மூட்ல இருந்த இப்படி தான் கூப்பிடுவா)
அக்ஸர்: ஹ்ம்ம்ம்ம்...
அபி: எனக்கு பயமா இருக்குங்க..
அக்ஸர்: ஏன் டி..
அபி: தெரியலேங்க...நம்ம மேரேஜ் நல்ல படியா நடக்கும்லே...
அக்ஸர்: ஆமா டா...கண்டிப்பா..
அபி: ஹ்ம்ம்..
அக்ஸர்: பயப்பிடாதே பொண்டாட்டி...எல்லாம் நல்ல படியா நடக்கும்..
அபி:😯😯😯
அக்ஸர்: ஹேய்...சர்ட் வந்திருக்கு...நீ என் கிட்ட சொல்லாம அனுப்பிக்கிறா..
அபி: ஹ்ம்ம்..எப்படி இருக்கு??
அக்ஸர்: சூப்பரா இருக்கு டி..
அபி: ஹ்ம்ம்..
காதலர் தினம் அன்று,..
அபி குடுத்த சர்ட்டை அணிந்து அக்ஸர் ஃபோட்டோ அனுப்பியிருந்தான்...ஹேய் சூப்பரா இருக்கு என அபி கூற இருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்...
ஃபோனை வைத்த சிறிது நேரத்தில் அபிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது...
#####: ஹேப்பி லவ்வர்ஸ் டே பேபி..
அபி: ஹூ ஆர் யூ??
#####: டேக் கேர் ஸோல்மேட்..
என்னது ஸோல்மேட்டா?? யாரோ சொன்ன மாதிரி இருக்கே...இது யாரு நம்பர்...ப்ச்ச்...தெரியலே என அதை அப்படியே விட்டுவிட்டாள் அபி..
இரண்டு நாட்கள் சென்ற நிலையில் அக்ஸரிடமிருந்து அழைப்பு வந்தது..
அக்ஸர்: அபி...
அபி: ஹ்ம்ம்..சொல்லுங்க..
அக்ஸர்: பிஸ்னெஸ் லாஸ் ஆகிடுச்சி 😭😭😭
அபி: அச்சோ...என்னங்க சொல்லுறீங்க?? எப்படி ஆச்சி??😭😭
மொத்த நகையையும் அப்பா வித்து தந்தாங்களே😭😭😭 அப்பாக்கு தெரிஞ்சா என்ன செய்வாங்களோனு தெரியலே😭😭😭
அக்ஸர்: எனக்கு பயமா இருக்கு அபி...என்ன செய்யனு தெரியலே...என் பேங் அக்கவுண்ட்ல தேர்டி தௌஸன்ட் தான் இருக்கு😭😭
அபி: இப்ப என்னங்க பன்றது😭😭😭
அக்ஸர்: எனக்கு டென் லேக்ஸ் இருந்தா கடைய சரியா கொண்டுட்டு வந்துருவேன்..
அபி: அவ்வளவு பணத்துக்கு எங்கேங்க போறது...இருக்குற பணத்தை வீடு கட்ட குடுத்தாச்சி...நகையையும் வித்தாச்சி..
வேற என்ன இருக்கு..
அக்ஸர்: ....
அபி: கவலை படாதீங்க... கடவுள் வழி விடுவான்..
அக்ஸர்: நாம்ம தான் முயற்சி பன்னனும் அபி...எப்படி கடவுள் வழி விடுவான்??
அபி: என்னங்க சொல்லுறீங்க... விதி படி தான் நடக்கும்..இப்படிலாம் பேசாதீங்க..
அக்ஸர்: இங்கே பாரு அபி...
நான் ஃபர்ஸ்ட் என்ன தான் நம்புவேன்..அப்புறம் தான் அந்த சாமிய....
அபி: ச்சீ... கடவுள் மேலே நம்பிக்கை இல்லாதவனா நீ..நீலாம் என்ன மனுஷன்..
அக்ஸர்: ஓவரா பேசுறே அபி..
அபி: நான் சரியா தான் பேசுறேன்...
நீ எப்பேற்ப்பட்ட பொறுக்கியா இருந்தாலும் நான் ஏத்துப்பேன்...ஆனா, நீ...ச்சீ... கடவுள் மேல நம்பிக்கை இல்லைனு சொல்லுறே..
ஃபர்ஸ்ட் ஃபோன வை..
அக்ஸர்: ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....
அக்ஸரின் அழைப்பை துண்டித்த அபி அழுது கொண்டிருப்பதை... சீதா பார்த்தார்..
ஏன் அபி அழுவுறே என கேட்ட சீதாவிடம் ஒன்னும் இல்லை மா என கூறி அறையினுள் சென்றாள்..
அபி..
அபி என கத்திக்கொண்டே வந்த ராம் என்ன ஆச்சி அபி. ..ஏன் அழுவுனே என கேட்க ஒன்னும் இல்லை ப்பா என்றாள்...
என்ன அபி நடந்துச்சி...அக்ஸர் கிட்ட பேசுனதா உன் அம்மா சொன்னா... அவன் தான் நீ அழுவுறதுக்கு காரணமா?? கல்யாணத்துக்கு முன்னாடியே என் பிள்ளைய அழுவ வைக்கிறானா அவன்?? இப்படிப்பட்டவன நம்பி எப்படி என் பிள்ளையை குடுக்குறது என ராம் கேட்க... அப்பா என அபி கத்தினாள்...
சொல்லு அபி..என்ன நடந்துச்சி என ராம் கேட்க...அபிஅமைதியா இருக்கவும்...நான் இப்படி கேட்டுட்டு இருக்கேன்...நீ அமைதியா இருக்குறா.
என்ன நினைச்சிட்டு இருக்குறா என கத்தி அபியை அடிக்க சென்றவர்...சுயநினைவு வந்து கையை இறக்கினார் ராம்..
இங்கே பாரு அபி...உன் கண்ல இருந்து கண்ணீர் வரும்னு தெரிஞ்சாலே இந்த கல்யாணத்தை நிறுத்திருவேன் என கூறி சென்றார் ராம்...
குழப்பத்துக்கு மேல் குழப்பமாக இருக்க...மனதில் தெளிவு வேணும் என எண்ணிய அபி அன்று இரவு முழுவதும் என் வாழ்க்கைல நல்லது மட்டும் நடக்கனும் என பூஜை அறையில் அமர்ந்து சாமியிடம் வேண்ட ஆரம்பித்தாள் அபி...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro