31
அக்ஸரின் மெஸேஜ் வந்தபடி இருக்கவும் அதை கண்டுகொள்ளாமல்,. தன் வேலையை தோடர்ந்தாள் அபி..
(அதாங்க!! கதை படிக்கிறது)
பின்னர் வாட்ஸ் ஆப் இல் அக்ஸரிடமிருந்து அழைப்பு வரவும்...அந்த அழைப்பை அணைத்தவள்...மெஸேஜ் செய்ய முடிவெடுத்தாள்...
அப: சொல்லுங்க...எதுக்கு கால் பன்றீங்க??
அக்ஸர்: ஏன் ...நான் கால் பன்ன கூடாதா??
அபி:😯😯😯
அக்ஸர்: சாரி ...நான் செய்ஞ்சது தப்பு தான்...எனக்கு உன் மேல தானே உரிமை இருக்கு...ஏதாச்சும் கஷ்டம்னா உன் கிட்ட தானே காண்பிக்க முடியும்...அதான் டா..
அபி: அதுக்காக ரீசனே தெரியாம நான் கஷ்ட படனுமே...நீங்க செய்ஞ்ச தவறுக்கு, தவறே செய்யாத நான் பலியாகனுமா??
இது எந்த ஊரு நியாயம்ங்க..
சும்மா மறுபடியும் முதலிருந்து ஆரம்பிக்காதீங்க..
அக்ஸர்: என் குற்றவுணர்ச்சி டி...
அபி: ஹூ...நீங்க என்ன தப்பு செய்ஞ்சீங்கனு கூட எனக்கு தெரியலே..
அத கூட இன்னும் என் கிட்ட சொல்லலயே..
அக்ஸர்: அத என்னால சொல்ல முடியல மா😕😕😕
அபி: ஹ்ம்ம்...
அக்ஸர்: என் கிட்ட முன்னே மாதிரி பேசுவியா??
அபி: கேரண்டி குடுக்க முடியாது..
தூக்கம் வருது...தூங்க போறேன்..
அக்ஸர்: எல்லாம் என் தவறு தான்...
உனக்கு எவ்வளவு தூக்கம் வந்தாலும்,. நானா போறேனு சொல்லுற வரை நீ போக மாட்டா...இப்ப நீயா போறிலே...வலிக்குது மா...
அபி: (நீ இப்ப கூட பொய்யா பேசுற மாதிரி இருக்கு😢😢)
குட் நைட்
அக்ஸர்: டாடா சொல்ல மாட்டியா??
அபி: (சொல்ல தோனலை)
வீடு கட்டுவதர்க்காக கையில் இருந்த மொத்த பணத்தையும் இன்ஜினியரிடம் குடுத்தார் ராம்..
திருநெல்வேலியில் ராம் குடும்பத்தினர் சென்று நல்ல படியாக அஸ்திவாரம் போட்டனர்..
மச்சி என்றபடி வந்த விஷ்வாவிடம்...வா டா..வா...சீக்கிரம் சொல்லு என அபி கூற..என்ன டி,. என விஷ்வா முழிக்கவும்...
ஈஈஈஈஈ, உன் காதல் தோழ்வியை தான் என அபி கூறவும்...அடிங்ங்ங்...நாயே...வந்தவன்கிட்ட எப்படி இருக்கிறானு விசாரிப்பு இல்லை..
இப்ப இது உனக்கு ரொம்ப முக்கியம் தான் டி என விஷ்வா கூறினான்...
ஹிஹி...சாரி மச்சான்...எதுக்கு டா சுபாவ பிரிஞ்சா சொல்லு டா என அபி கூற...
ஈஈஈஈஈ...மேலே பாரு என விஷ்வா கூறவும்..
ஃப்ளேஸ் பேக்கு..காரி துப்பிருவேன்...ஒழுங்கா சொல்லு டா என அபிகூற...
அது இல்லை டி...அவ நிறைய பசங்க கூட பேசுறா..பேசாதேனு சொன்னா..சந்தேகம் படுறியானு கேக்குறா...என்னதான் அது நார்மலா இருந்தாலும் எனக்கு அது பிடிக்கலே டி..
ரொம்ப ஜாலியா மத்த பசங்கள தொட்டு பேசுறா டி..எனக்கு பிடிக்கலே...ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை...இப்ப பிரிஞ்சிட்டோம் என்று கூறியவனை உற்று பார்த்தவள்...அழுகுறியா டா என அபி கேட்க...ச்சீ போ பக்கி என விஷ்வா கூறினான்..
தன்னுடைய சொந்த ஊரில் (திருநெல்வேலியில்) ஒரு வாரம் சந்தோஷமாக இருந்து விட்டு மூவரும் கிளம்பினார்கள்..
அக்ஸருடைய பிடிவாதமும் அபியுடைய பிடிவாதமும் நேர் எதிர்க்க வீம்புக்கு இருந்தது...
இதற்கிடையில் வேல்,அமுதாவின் பாசமும் நெருக்கமும் அபி குடும்பத்தாரிடம் அதிகரித்தது..
இப்படியே நாட்கள் நகர...இவர்களின் பிறந்த நாள் வந்தது..
சரியாக 12 மணிக்கு தோழிகள் போட்டி போட்டு வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தார்கள்... இவளும் எங்கே அழைப்பை துண்டித்தால் அக்ஸரிடமிருந்து கால் வந்துவிடுமோ என்ற பயத்தில்(எரிச்சலில்) தோழிகளுடன் கதைத்து விட்டு வைத்தாள்..
வைத்த மறுநொடி அக்ஸரிடமிருந்து அழைப்பு வர... அதனை ஏற்றவளுக்கு வாழ்த்து கூறினான்...அதர்க்கு "தேங்க் யூ" என அபி கூற..இன்னைக்கு எனக்கும் பேர்த் டே என கூறியவனிடம்...ஓ..சரி...நான் வைக்கிறேன் என அபி பதில் கூற..விஷ் பன்ன மாட்டியா என அக்ஸர் கேட்க..அழைப்பை துண்டித்தால் அபி..
அதே நேரம் புது நம்பரிலிருந்து அபிக்கு வாழ்த்து வர...
"ஹூ ஆர் யூ" என அபி கேட்கவும்...
"உங்கள் நலம் விரும்பி" என வந்தது..
யாரா இருக்கும் என யோசித்தவள்...
"யுவர் நேம்??" என கேட்க...
"குட் நைட் ஸோல்மேட்" என வந்தது...
என்னது ஸோல்மேட்டா😯😯..
யாரா இருக்கும் என யோசித்த படி இருக்க...அந்த நம்பர் ஆஃப்லைன் என காண்பித்தது...அடுத்து விஷ்வாவிடமிருந்து வாழ்த்து வர...
அபி: தேங்க் யூ மச்சான்...என்ன மச்சான் உன் நெக்ஸ்ட் லவ் யாரு??
விஷ்வா: அடி போ டி...லவ்வே வேண்டாம்...
ஆள விடு..
அபி : ஹாஹா...நீ நல்லவன் டா..
விஷ்வா:😠😠😠
அபி: உண்மையா டா...நீ மட்டும் என்னை விட பெரிய பையனா இருந்தா...நான் உன்னை தான் மேரேஜ் பன்னிப்பேன்...இப்ப நீ சின்ன பையனா போய்ட்டியே...டூ லேட்..
விஷ்வா : ஹாஹா...அப்படியா...மிஸ் பன்னிட்டேனே மச்சி..
அபி: சரி...நீ ஏன் டா...ஊர் ஊரா லவ் பன்றா...பேசாம நம்ம ஃபேமிலிலயே ஒரு பொண்ண லவ் பன்னு..
விஷ்வா: நல்ல ஐடியா தான்...
பட் அப்படி யாரும் இல்லையே டி..
அபி: ஈஈஈஈஈ...என் கஸின் ஸ்வேதா இருக்காலே..அழகா இருப்பா.. நல்ல பொண்ணு..
விஷ்வா : நீ என்ன வேலை டி பார்க்குறா??
அபி : இத்தனை நாளா அத தானே செய்யுறேன்😝😝😝..
விஷ்வா : ஈஈஈஈஈ...சரி டி...தூக்கம் வருது...
அபி: ஓகே டா...டேக் கேர்...
டாடா
"நான் இல்லைனா இந்த கல்யாணமே நடக்காது மா" என்ற சிரிப்புடன் கூறிய குரலை கேட்டு பதறியடித்து எழுந்தாள் அபி...
வேர்த்து விறுவிறுக்க மணியை பார்த்தாள்...
மணி ஐந்து என காண்பித்தது...
அது முருகன் சித்தூ... ஆமா.. முருகன் சித்தூ தான்...நம்ம கிட்ட கடைசியா ஃபோன்ல பேசும் போது சொன்னாங்களே... நான் இல்லாட்டி இந்த கல்யாணம் நடக்காதுனு... அப்ப அது உண்மையா...ஏன் சித்தூ... இந்த கல்யாணம் நிக்கனும்னு என்னை விட்டு போய்ட்டியா...எங்களுக்கு இந்த கல்யாணம் நடக்காதா...நீங்க சொன்னது கூட இத்தனை நாள் எனக்கு நியாபகத்துக்கு வரலையே சித்தூ மா...உன் வாயால அந்த கடவுள் எனக்கு தெரிய படுத்திக்கிறானே... இதை கூட நான் புரிஞ்சிக்கலயே... அதனால தான் கணவுல வந்து நியாபகம் படுத்துனியா சித்தூ...
பட் நாங்க பேசுறதுக்கு முன்னாடி இதை தடங்கள காண்பிச்சிருந்தா... நான் அவன் கூட பேசிருக்கவே மாட்டேனே... என் லைஃப் நல்லா இருந்துருக்குமே என அழது துடித்தாள் அபி...
.
.
காலையிலேயே தொடர்ந்து அக்ஸரிடமிருந்து அழைப்பு வர வேற வழியில்லாமல் எடுத்தவளிடம்..
ஏன் அபி... என்னை அவாய்ட் பன்றே... நான் செய்ஞ்சது தப்பு தான்... என்னை மன்னிச்சிரு... நான் இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன்... நான் உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி இருப்பேன்... ப்ளீஸ் அபி என அக்ஸர் கெஞ்ச..
ஹாஹாஹா என விரக்தியாக சிரித்தாள் அபி..
ஏன் அபி சிரிக்கிறே...என்னை நம்பு மா...உனக்காக நான் என் அம்மா மேலே ப்ராமிஸ் பன்றேன்.. இனிமே சத்தியமா கஷ்டப்படுத்த மாட்டேன்... இது எங்க அம்மா மேலே சத்தியம் என அக்ஸர் கூறவும்..
நிஜமாவா சொல்லுறே😢😢 என நம்பாமல் கேட்டவளை... நான் உன் புருஷன் டி... என்னை நம்பு.. என் பொண்டாட்டிய நான் எப்பையும் கஷ்டப்படுத்த மாட்டேன் என அக்ஸர் கூற...நான் நம்புறேன் அக்ஸர் என அழுகையுடனே கூறினாள் அபி..
(பாவம்...பெண் புத்தி...எவ்வளவு அடிப்பட்டாலும் அசராமல் நம்புது...பெண்களின் மனது)
இவர்கள் பேசிக்கொண்டிருக்க...அழைப்பு கட் ஆனதும்.. அபி வாட்ஸ் ஆப்பிர்க்கு அக்ஸர்க்கு மெஸேஜ் அனுப்ப...அக்ஸரிடமிருந்து பதில் இல்லை...என்ன ஆச்சி என பதறியவளுக்கு ஒரு நாள் முழுதும்...மெஸேஜ் வராமல் இருக்குனவும்... அபியே அக்ஸர்க்கு அழைத்தாள்...
தன்னுடைய மற்றொரு நம்பரிலிருந்து அக்ஸர்க்கு அபி அழைப்பு விடுக்க...அதை ஏற்று...யாரு என அக்ஸர் கேட்க...ஹலோ என அபி கூறவும்...
"ஹேய் பொண்டாட்டி" என கத்தியவன்..என் கூட பேசாம இருக்க முடியலயா?? என்னை தேடி கால் பன்னிட்டியா?? என்னை உனக்கு தேடுதா?? என அக்ஸர் கேட்க...அப்படிலாம் இல்லையே...சும்மா பேசனும்னு தோனிச்சி..அவ்வளவு தான் என அபி சமாளிக்க... என் பொண்டாட்டி பொய் சொல்ல மாட்டாளே... அவளுக்கு பொய் சொல்றது பிடிக்காதே என அக்ஸர் கூறவும் அபி சிரித்து விட்டாள்..
இப்படியே முன்னே போல இருவரும் நன்றாக பேச ஆரம்பதித்தனர்...பழையதை எல்லாம் மறந்து முழுதாக நம்பிக்கை வைத்த ஹனாவிர்க்கு...பாவம்!! அவங்க சித்தப்பா சொன்னது நியாபகம் இல்லாமல் போனது..
முழுதாக அபியின் மனது அக்ஸரிடம் ஒன்றியது...
இரண்டு மாதம் கழித்து:
அபி...அக்ஸர் புதுசா ஏதோ பிஸ்னெஸ் பன்ன போறாங்களாம்.. இருக்குற பணத்தைலாம் வீட்டுக்கு போட்டேன் மா..இப்ப என்ன செய்யனு தெரியலே மா என ராம் வருத்தப்பட...
எவ்வளவு ப்பா வேணுமாம் என அபி கேட்க...ரொம்பலாம் இல்லை...ஃபைவ் லேக்ஸ் இருந்தா போதும்..கைல கொஞ்சம் அமௌன்ட் இருக்காம் என ராம் கூற..
அப்ப நகையலாம் வித்து குடுக்கலாமா என தன்னுடைய கழுத்தில் போட்டிருந்த சங்கிலியை தொட்டு காண்பித்து அபி கேட்க... ராம் வாயடைத்து போனார்..
என்ன ப்பா...அப்படி பார்க்குறீங்க என அபி கேட்க.. இல்ல மா... ஓவ்வொரு நகையும் நீ ஆசைப்பட்டு வாங்குனது... இத போய் விற்கலாம்னு சொல்லுறியே மா என ராம் கேட்க..
பரவாயில்லை ப்பா...பின்னாடி செய்ஞ்சிக்கலாம் என அபி கூற...எல்லாம் காதல் படுத்துற பாடு என சீதா கூறவும்...போங்க மா என வெட்க்கப்பட்டு ஓடினாள் அபி ...
எப்பையும் என் பிள்ளை இப்படியே சிரிச்சிட்டு இருக்கனும் என நினைத்த ராம்... அபிக்காக வைத்திருந்த நகையை விற்று அக்ஸர்க்கு ஐந்து லட்சம் குடுத்தார்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro