30
அன்றே சுபாவிடமிருந்து அபிக்கு மெஸேஜ் வந்தது...
சுபா: ஹாய்
அபி: ஹாய்..
எப்படி இருக்குறே மா??
சுபா: நல்லா இருக்கேன்..
அபி: என் மச்சான் எப்படி இருக்குறான்??
சுபா: அதை நீங்க தான் சொல்லனும்..
அபி: ஹேய்...அவன் என் கிட்ட பேசி எத்தனை நாள் ஆச்சி தெரியுமா??
உன் கிட்ட தானே டெய்லி கடலை போடுவான்(😝😝)
சுபி: ஹ்ம்ம்...நாங்க பிரிஞ்சிட்டோம்...
அபி: ஓஹ்.. .எப்ப பிரிஞ்சீங்க...
எப்படி பிரிஞ்சீங்க..
(ஆர்வமா இருக்கே)
சுபா: அது ஒன் மன்த் கிட்ட ஆச்சி...
அவன் என்னை எதுக்கெடுத்தாலும் சந்தேகம் படுறானு பிரிஞ்சிட்டேன்..
இப்ப அவன் கிட்ட பேசனும் போல இருக்கு..பட் என் நம்பர ப்ளாக் பன்னி வச்சிக்கிறான் போலே...
நீங்க தான் எங்களை சேர்த்து வைக்கனும்...
ப்ளீஸ்...அவன் இல்லாமல் இருக்க முடியாது...
😭😭😭😭
அபி: சரி...ஃபீல் பன்னாதே...நான் பேசி பார்க்குறேன்..
சுபா: ஹ்ம்ம்...ஓகே மா...
அட போங்கயா...என் வாழ்க்கையே அந்தரத்தில தொங்குது...என்னை எப்படி காப்பத்தனும்னே எனக்கு தெரியல...என்னையும் சில ஜீவன்கள் நம்பி பஞ்சாயத்துக்கு கூப்பிடுதுங்க...சரி...போய் தான் பார்ப்போமே என அபி மனதில் நினைத்துக் கொண்டாள்...
இப்பொழுதுலாம் சுத்தமாக அக்ஸர்க்கு பதில் அனுப்ப அபிக்கு விருப்பம் இல்லாமல் போனது...
என்ன செய்யலாம்...எப்படி மெஸேஜ் பன்னாம தப்பிக்கிறது என யோசித்தவள்..
வாட்ஸ் ஆப் இல் ப்ளு டிக் காட்டாத படி செட் செய்து... லாஸ்ட் சீனை ஹைட் செய்து விட்டு... நோடிஃபிகேஷனையும் ஆஃப் செய்து விட்டாள்...
அவன் பார்க்கும் போது சீக்கிரம் தூங்கிட்டானு நினைச்சிக்கட்டும் என விட்டு விட்டாள்...
இதற்கிடையில் ஒரு சில பதில் மட்டும் அனுப்பினாள்...
இவன் எதுக்கு மறுபடியும் கால் பன்றான் என அழைப்பை ஏற்றவள்...
அபி: என்ன பக்கி...என்ன ஏழரையே கூட்டிட்டு வந்தா...இன்னைக்கு..
விஷ்வா: உன் அக்ஸர் வந்திருக்காங்க டி ஊருக்கு...
அபி:(அப்ப அது ஏழரை தான்😉😉😉)
விஷ்வா: என்ன டி...அக்ஸர்னு சொன்னதும் கனவு காண ஆரம்பிச்சிட்டியா...
அபி: டேஸு....போடா டேய்...
(நிஜத்துலயே என் பாடு திண்டாட்டம்😕)
விஷ்வா: சரி டி...நான் கடைக்கு வந்தேன்...அங்கே தான் பார்த்தேன்...
அபி: டேய்...பொய் சொல்லாதே...அக்ஸர் பெங்களூர்ல இருக்காங்க...
விஷ்வா: அப்படியா...வெய்ட்...பிக் எடுத்து அனுப்புறேன்...
அபி: (அதை பார்த்ததும்)
ஆமா டா...அக்ஸர் தான்...
விஷ்வா: ஹ்ம்ம்...உன் கிட்ட சொல்லலயா...
அபி: இல்லை டா...
(என் கிட்ட எதை சொல்லிக்கிறான்😕)
விஷ்வா: சரி டி...அப்புறம் பேசுறேன்...
அபி: ஹ்ம்ம்..
இவன்லாம் என்ன கேரக்டரோ...இவனை பத்தி யோசிச்சா நம்ம தலையே வெடிச்சிரும் போல... ச்சை...
இப்படி ஒரு குழி குள்ள போய் விழுந்துட்டோமே என தனக்குள்ளே புலம்பியவளுக்கு அமுதாவிடமிருந்து ஃபோன் வந்தது...
அடுத்த ஏழரை என நினைத்த படி ஃபோனை எடுத்தாள்...
அபி: ஹலோ.. எப்படி இருக்கீங்க மா??
அமுதா: நல்லா இருக்கேன் மா... நீ எப்படி இருக்கிறா??
அபி: நலலா இருக்கேனு..
என்ன மா குரல்ல குதூகலம் தெரியுது...
என்ன விஷயம்..
அமுதா: உன் ஆத்துக்காரர் வந்திருக்கார்...
அபி:( mummy😭😭😭😭)
ஹாஹா...அப்படியா??
அமுதா: ஆத்துக்காரர்னு சொன்னதும் சிரிப்ப பாரு...
அபி: (நம்மள கொலைகாரியா ஆக்காமா இந்த குடும்பம் ஓயாது...போலயே)
ஹிஹி...அப்படிலாம் இல்லை மா...
என்ன திடீர்னு...சொல்லவே இல்லை..
அமுதா: அட எங்களுக்கே தெரியாது மா..
காலைல வந்து இறங்கினான்...அவன் ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு மேரேஜாம்.. அதான் மா..
அபி: ஹ்ம்ம்..சரி மா..
இவங்களை பத்தி யோசிச்சாலே நம்மளுக்கு மண்டை காய்ஜிடும் என அபி நினைத்துக்கொண்டிருக்க..
அபி மா...ஈவ்னிங் துனிக்கடைக்கு போகனும்... பொங்கல்க்கு ட்ரெஸ் எடுக்கனும்...
அக்ஸர் க்கு எடுத்து குடுக்கனும்லே...மொத்தமா எடுத்துட்டு வந்துரு மா என ராம் சொல்ல சரி ப்பா என்றாள்..
(மறுபடியும் சர்ட்டா😲😲😲...அதுக்குள்ள பொங்கள் வஞ்சுருச்சா😢😢.. நாம்ம செலக்ட் பன்ன கூடாது என முடிவுடன் இருந்தாள்)
மாலை வர...
அபி தோழிகளின் வர்புறுத்தலால் அக்ஸர்க்கு ஒரு சர்ட் செலக்ட் செய்தாள்..
அபி...உங்களுக்கு பேர்த் டே வருதுலே... அக்ஸர்க்கு சர்ட் எடுக்க மாட்டியா என ஜரா கேட்க...இல்லை டி.
. மேரேஜ்க்கு அப்புறம் பார்த்துகலாம் என அபி கூறவும் சரியென விட்டுவிட்டார்...
அடுத்த நாளே ராம் திருநெல்வேலியில் இருக்கும் வேல் வீட்டிர்க்கு சென்றார்...
வாங்க என அனைவரும் வரவேற்க...இந்தாங்க மா...என் பொண்ணு செலக்ஷன்... பொங்கள் துணி என கூற அனைவரும் சந்தோஷமாக வாங்கினர்...
எதுக்கு எல்லோருக்கும் எடுத்து இவ்வளவு செலவு பன்னிருக்கீங்க என கேட்க...இதுல என்ன மா இருக்கு...இருக்கட்டும் என ராம் கூறினர்...
அப்புறம்.. வீட்டுக்கு அஸ்திவாரம் போடலாம்னு இருக்கேன்...உங்களுக்கு கடை வைக்கிற ஐடியா இருந்தா சொல்லுங்க...என் கைல இப்ப அஞ்சு லட்சம் இருக்கு...மேற்கொண்டு அரேன்ஜ் பன்னலாம் என ராம் அக்ஸரிடம் கேட்க...
இல்லை மாமா...நீங்க அஸ்திவாரம் போடுங்க...நான் வேலை செய்யுர கடைலயே நின்னுக்குறேன் என கூறவும்..
சரி பா... அப்படியே செய்ஞ்சிரலாம் என அஸ்திவாரம் போட முடிவு செய்தனர்...
சிறிது நேரத்தில் அக்ஸர் அபியிடம் இனிமே பேசியே ஆக வேண்டும் என முடிவெடுத்தான்...
வீட்டிர்க்கு அஸ்திவாரம் போட எல்லோரிடமும் ராம் சொல்லிட அந்த நாளும் வந்தது...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro