29
என்னங்க இது... ஒரு மாமக்கு தர மரியாதையா இது...இந்த ரெக்கார்ட அவுங்க கேட்டுட்டு எப்படி வருத்த படுறாங்கனு தெரியுமா?? "அவனுவோ அப்படி தான் இருப்பானுவோ"னா என்ன அர்த்தம்ல சொல்லுறாங்க என சீதா கைப்பேசியில் கேட்க...
இல்லை...அப்படிலாம் இல்லை...அவன் நார்மலா அப்படி தான் பேசுவான்...அதான் அவனோட பழக்கம் என அமுதா கூறவும் எரிச்சலுற்று இதுக்கு மேலே என்னத்தை பேசுறது என நாளு வார்த்தை நார்மலாக பேசி விட்டு கைப்பேசியை அனைத்தார் சீதா...
சிறிது நேரத்தில் அக்ஸர்...ராம்க்கு கால் செய்து வாழ்த்து சொல்லியவன்... சீதாவிர்க்கும் வாழ்த்து சொல்லி தாமதமாக வாழ்த்து கூறியதர்க்கு மன்னிப்பும் கேட்டான்...
எல்லோரும் ஒரு அளவு நிம்மதி அடைய மாலை பொழுது வந்தது... அப்பா..நான் ஃப்ரெண்ட்ஸ் கூட பீச்க்கு போறேன் என கூறி அபி தயாராகி வர சரியாக அக்ஸரிடமிருந்து அழைப்பு வந்தது...
அம்மா... அப்பாவும் அருகில் இருக்கும் நேரம் என்றும் இல்லாமல் இன்று அக்ஸரிடமிருந்து அழைப்பு வர கைப்பேசியையும் பெத்தவங்களையும் பார்த்து பேந்த பேந்த விழித்தாள்...
என்னாச்சி மா...ஃபோன் அடிச்சிட்டு இருக்கு...எடுக்க மாட்டியா என ராம் கேட்க... அது...அ..து...ப்பா என தட்டுதடுமாரி பேச... அக்ஸர் கால் பன்னும் போது எப்படி நம்ம முன்னாடி பேசுவா என சீதா... ராமிடம் கூற திருட்டு முழி முழித்த சீதாவை பார்த்து சிரித்தவர் எழுந்து சென்றார்...
நான் எதையும் கவனிக்க மாட்டேன் என சீதா கண்டும் காணாமல் இருக்க... அக்ஸரின் அழைப்பை ஏற்றவள் மிகவும் மெதுவாக பேச ஆரம்பித்தால்..
அக்ஸர்: ஹலோ
அபி: ஹாய்..
அக்ஸர்: தீபாவளி வாழ்த்துக்கள்
அபி: சேம் டூ யூ..
அக்ஸர்: என்ன...ரொம்ப அமைதியா பேசுறீங்க...
அபி: அப்படிலாம் இல்லை...
அக்ஸர்: இல்லையே....பக்கத்துல மாமா, அத்தை இருக்காங்களோ...
அபி: ஹூ...ஆமா...
ஏன் இவ்வளவு லேட் கால்..
அக்ஸர்: அது காலைல ஒருத்தன் பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டான்...ரூம்ல யாரும் இல்லை...நான் தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனேன்...வர 11 ஆச்சி... வந்த டையர்ட்ல தூங்கிட்டேன்.. அதான் லேட்.
அபி: ஹ்ம்ம்...சரி...விடுங்க...
அக்ஸர்: ஒரு தடவை டா போட்டு பேசு மா...
ரொம்ப நாள் ஆச்சி...ஆசையா இருக்கு...
அபி: (😠😠😠...பக்கி...இன்னைக்கு என்ன...ஓவரா பேசுது)
அக்ஸர்: பொண்டாட்டி...
அபி: ஹ்ம்ம்...
அக்ஸர்: நான் சொன்னது கேட்டிச்சா??
அபி: ஹ்ம்ம்..
(பேந்த பேந்த முழிக்கிறா)
அக்ஸர்: ஹாஹா...சோ சேட்...
இப்ப அந்த முன்டக்கண்ண வச்சி முழிக்கிற முழிய பார்க்கனுமே...
அபி: 😯😯😯
அக்ஸர்: அப்புறம்..
அபி: சொல்லுங்க...
நான் பீச்க்கு போறேன்...
அக்ஸர்: சரி...பார்த்து பத்தரமா போயிட்டு வா... டாடா..
அபி: ஹ்ம்ம்...
.
.
ஹப்பா....என்னா பேச்சு பேசுறான்...ஹுஹு என சிறிது ரிலாக்ஸ் ஆனவல் நிமிர்ந்து அமர... என்ன மா பேசிட்டியா என சீதா கேட்க... உன் மானம் போது ஹனா என மனதில் நினைத்து இழித்தவள்... எப்படி அபி...நீ பேசுறது அக்ஸர்க்கு விழங்கும்...என் அடங்காபிடாரி...காலேஜ் ரவ்டி...இவ்வளவு அமைதியாலாம் பேசுவாளா என சீதா வம்பு இழுக்க...போதும்...என் பிள்ளைய ஓட்டாதே...நீ போயிட்டு வா மா என ராம் அனுப்பி வைத்தார்...
நாட்கள் அமைதியாக அதே நேரம் சந்தோஷமாக போனாலும் அபிக்கு அக்ஸரிடம் பேச தோனவில்லை...
அவனா பேசினால் பதில் அனுப்புவாளே தவிர...இவளாய் போய் பேசவில்லை...
வாரத்திற்கு ஒரு முறை மெஸேஜ் அனுப்புவான்...ஹாய் னா ஹாய்...
அதர்க்கு பிறகு அக்ஸர் ஏதாவுது கேட்டால் தான் பதில் அனுப்புவாள்...
இதில் எரிச்சலுற்ற அக்ஸர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மெஸேஜ் பன்ன ஆரம்பித்தான்...
அப்பொழுதும் இதே நிலைமை தான்...
எவ்வளவு கோவம் வந்தாலும் அதை அடக்கியவன்... அபிக்கு மெசேஜ் அனுப்புறான்...
அக்ஸர்: ஹாய்..
அபி: ஹாய்...
அக்ஸர்: என்ன பன்னுறே??
அபி: ரீடிங் ஸ்டோரி...
அக்ஸர்: ஹ்ம்ம்...பொன்னியின் செல்வனா??
அபி: இல்லை...அது முடிச்சிட்டேன்...
அக்ஸர்: பின்னே...
அபி: "சிவகாமியின் சபதம்"...இதுவும் கல்கி எழுதுனது தான்...
அக்ஸர்: ஓ...எப்படி இருக்குது...எந்த மாதிரி ஸ்டோரி??
அபி: சூப்பரா இருக்கு...போர் சம்பந்த பட்டது....இதுல சிவகாமியின் காதல அழகா எடுத்து காமிச்சிக்குறாங்க...
(My fvrt story😍😍... இதோட continuation "பார்த்திபன் கனவு"...ரீட் பன்னி பாருங்க...சூப்பர் ஸ்டோரி)
அக்ஸர்: ஹ்ம்ம்...நீ இப்படி ஸ்டோரி ரீட் பன்னி தான் கெட்டு போயிட்டே??
அபி: என்ன சொல்லுறீங்க??
அக்ஸர்: ஹ்ம்ம்...காதல் மட்டும் தான் வாழ்க்கைனு சொல்லுறீலே....ஒரே ஸ்டோரி படிக்கிறது...இதுல அந்த RC ஸ்டோரி...முழு காதல் கதைனு...எப்படி தான் நீ இதைலாம் மெனக்கெட்டு உட்கார்ந்து படிக்கிறியோ...
அபி: 😠😠😠😠
அக்ஸர்: இதுனால எல்லாமே வேஸ்ட்...டைமா வேஸ்ட்...கண்ணுக்கு வலி...மூளையும் மலுங்குது...காதல் தான் வாழ்க்கைனு நினைப்பு வந்துருச்சி...
அபி:😠😠😠
அக்ஸர்: முறைக்காதே அபி...
காதல் கதைல மட்டும் தான் இருக்கு...
உண்மைல காதல் அப்புடினு ஒன்னு கிடையாது...மேரேஜ்க்கு அப்புறம் ஒரு பிள்ளை பிறந்ததோட சரி...இதுல என்ன காதல் இருக்கு...ஜெனெரேஷன கொண்டு வர...காதல்னு ஒரு பேர யூஸ் பன்னிக்கிறாங்க...
அபி: நீங்க சொல்லுறது ஏத்துக்க முடியாத விஷயம்...அப்படினா...நீ சொல்றது காதல் இல்லை...காமம் தான் வாழ்க்கை... அதோட முடிஞ்சிறுச்சினு சொல்ல வர்ரீங்க...
அக்ஸர்: ஹ்ம்ம்...கரேக்ட்டா சொல்ரா...அத தான் டேரக்ட்டா எப்படி சொல்லனு தெரியாம சொல்லுறேன்...
அபி: ஹாஹா...காமம் தான் வாழ்க்கைனு எல்லோரும் இருந்தா...பொண்டாட்டிய பார்க்கும் போது மட்டும் சேர்ந்துக்கலாமே...
எதுக்காக காதல் இல்லாத காமத்துக்காக எவன் காலடியிலேயோ விழுந்து கஷ்டப்படனும்...எதுக்காக பொண்டாட்டிய பிரிஞ்சு...கஷ்டப்பட்டு சம்பாதிருக்கனும்??...
அக்ஸர்: ஹ்ம்ம்...அப்படி சம்பாதிக்குறதுலே அவனுக்கும் யூஸ் தானே...
அபி: சரி...அதைலாம் விடுங்க...நீங்க எதுக்கு என் கூட பேசுறீங்க...காதலுக்காகவா இல்லை கா.........??
அக்ஸர்: என்ன அபி... நீ இப்படி கேக்குறே...நான் மத்தவங்கள தான் சொன்னேன்... ஆனா, நான் உன்னை லவ் பன்றேன் டி...
அபி: ப்ளீஸ் அக்ஸர்...
உன்னை நம்புறதுக்கு நான் ஒன்னும் பைத்தியம் இல்லை...
உன்னை நம்புனவ செத்துட்டா...
உணர்ச்சிய உள்ளடக்கிட்டு வாழுறேன்...
காதல்னு ஒரு வார்த்தை நீ சொல்லாதே..
இந்த உலகத்துல எத்தனையோ பேரு அதை மனசார உணர்ந்து வாழுறாங்க...ஆனா, நீ அப்படி இல்லை...உன் கூட இத்தனை மாசமா பேசுன எனக்கு தெரியும்...நீ எப்படினு...
அக்ஸர்: நீ என்ன சொல்ல வர...நான் உன்னை லவ் பன்னலேனு சொல்லுறியா??
அபி: அஃப்கோர்ஸ்...
அக்ஸர்: எதைவச்சு நீ அப்படி சொல்லுறே அபி??
அபி: நீ காதலே எப்படி இல்லைனு சொன்னியோ அதை வைச்சி....நீ எப்ப காதல் இல்லை...காமம் மட்டும் தான் சொன்னியோ...அதை வைச்சி...
உண்மையா காதலிச்சிரிந்தா...காதல்னா உண்மை... காதல் இந்த உலகத்தில வாழுதுனு உனக்கு புரிஞ்சிருக்கும்...
அக்ஸர்: 😕😕😕...
அபி: விடு..உனக்கு என்னால புரிய வைக்க முடியாது..நான் தூங்க போறேன்...
அக்ஸர்: ஹ்ம்ம்...குட் நைட்...
அபி: ஹ்ம்ம்...
.
.
ச்சே...நம்ம லைஃப்ல எப்படிலாம் இருக்கனும்னு ஆசைப்பட்டோம்...எல்லாம் இப்டி கணவா போகும்னு கொஞ்சம் கூட நினைச்சி பார்க்கலே என அபி மனதில் நினைத்துக் கொண்டாள்...
ஏன் அக்ஸர்...தானாக முன் வந்து பேசுகிறான் என்பதை பற்றி யோசிக்கவும் தவறினாள்...
.
.
.
ஏன்...இவன் சம்மதம் இல்லாம கால் பன்றானே என யோசித்த படி அழைப்பை ஏற்றவள்...
அபி: ஹாய்..
எப்படி இருக்குறே...
விஷ்வா: ஹாய்..
நல்லா இருக்கேன் டி...
அபி: சொல்லு டா...என்ன...
என் பக்கம் காத்தடிச்சிருக்கு...
சுபா கூட சண்டை பிடிச்சிட்டியா...
விஷ்வா: சரியான...குன்டு பல்பு மச்சி நீ...
அபி: சொல்லி தொலை டா...
விஷ்வா: நான் வாட்ஸ் ஆப் ல புது நம்பர் ல இருந்து மெஸேஜ் பன்னிருப்பேன்...அதான்...என் நம்பர்...
அவ கேட்ட குடுக்காதே...இந்த சிம்ம ஒடைச்சி போட்டுருவேன்...
அபி: எவ டா..
விஷ்வா : சுபா டி...
அபி: ஏன் டா...அவ உன் லவ்வர் தானே...ஏன் குடுக்காதேனு சொல்லுறா??
விஷ்வா: ஆமா..ஆமா😕😕
நாங்க பிரிஞ்சிட்டோம்...
அபி: ஈஈஈஈஈ...
கங்ராஞ்லேஷன் டா...
விஷ்வா: போ டி நாயே...
குரங்கே...
சனியனே...
நான் எப்ப நாசமா போவேனு காத்துட்டு இருக்குறவளே...
அபி: ஹாஹாஹா😂😂😂😂😂😂
விஷ்வா: நாயே சிரிக்காதே டி...
க்ளாஸ்க்கு டைம் ஆச்சு...வந்து பேசுறேன்...
அபி: டேய்...எப்படி பிரிஞ்சீங்க...ரீசன்ன சொல்லிட்டு போ டா....இல்லாட்டி என் தலையே வெடிச்சிரும்...
விஷ்வா: சந்தோஷமா சாவு டி...
வந்து சொல்லுறேன்...
வைக்கிறேன் டி..
அபி: ஹாஹா...
சரி...சரி... டாடா
விஷ்வா: ஓகே டி...டேக் கேர்... பாய்..
அபி: ஏன் டா நாயே...பாய் சொல்லுறா...
விஷ்வா: ஹு...பாய் சொல்லுறது உனக்கு பிடிக்காதுலே....டா டா...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro