Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

28

ஏனோ விடியல் சீக்கிரமே வர...மனதில் மொத்த பாரமாகவும்...உடம்பு சூட்டு அதிகமாவும் இருக்க...என்ன இன்னைக்கு இப்படி ஒரு கனவு என யோசித்தவள்...
உடம்பு இப்படி சுடுது...ஆனால், ஃபீவர் இல்லையே...முன்னாடி இப்படி தானே இருக்கும் என யோசித்து பார்த்தாள்...

ஆமாம்... அபி கல்லூரியில் படிக்கும் போது எல்லோரிடமும் கலகலப்பாக இருப்பாள்...அவளுக்கு ஸ்ருதி என ஒரு தோழியுடன் பழக்கம் ஏற்படும் போது... இருவரும் நல்ல தோழியாகினர்...
நாட்கள் நகர நகர உயிர் தோழியாகினர்...

அபிக்கு ஸ்ருதின் மீது அதிக பொஷஷிவ்... ஸ்ருதி யாரு மேலாவது அதிகமாக கேர் எடுத்துக் கொண்டாளும்...அதிகமாக மற்றவர்களின் புராணம் பாடுனலும் அபிக்கு கோவம் அதிகமாக வரும்..

இந்த கோவம் நாட்கள் நகர நகர உடல் சூட்டை கிளப்பியது... இந்த நேரத்தில் என்ன வார்த்தை வாயிலிருந்து வரும்னு கூட அபிக்கு தெரியாது... கல்லூரி காலத்தில் கோவம் வந்தால் இப்படி தான் உடல் சூட்டை கிளப்பும்...

கல்லூரி முடிந்ததும்... இது எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போனது...

ரொம்ப நாள் கழித்து இன்று தான் இவ்வளவு சூடு... மனதிலும் பாரம் அதிகமாக இருக்க... ஒரு நிமிடம் கண் மூடி படுத்தவள்....வேகமாக கண்ணை திறந்து... ஃபோனை எடுத்து பார்க்க... அதில் அக்ஸருடன் பேசிய கான்வர்ஷேசன் கண்ணில் பட்டது... மறுபடியும் மறுபடியும் அதையே படித்து கொண்டிருந்தவள்...
இப்ப என்ன செய்ய என யோசித்த படி தலையில்  கையில் வைத்திருந்தாள் அபி...

சிறிது நேரத்தில் அக்ஸரிடமிருந்து "சாரி" என குறுஞ்செய்தி வந்தது...

அதை பார்த்தவள் எதுவும் பதில் கூறாமல் கைப்பேசியை வைத்து விட்டு ஃப்ரெஷ் ஆக சென்று விட்டாள்...

இப்படியே அக்ஸரிடமிருந்து குறுஞ்செய்தி வர... அதர்க்கு பதில் அனுப்பாமலும் வரும் காலை அட்டன்ட் பன்னாமலும் இரண்டு நாள் ஓடியது..

அங்கு... அக்ஸர்க்கோ மிகவும் கோபம்...எவ்வளவு தைரியம் இருந்தா... என் கிட்டயே கெத்த மெய்ன்டைன் பன்னுவா... நான் யாருனு உனக்கு காமிக்கிரேன் அபி என மனதில் கருவி கொண்டான்..

அதே நேரத்தில் ராம் வர... அவரை பேருக்கு அழைத்தவன்.. வழமை போல கண்டு கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்றும் தான் தான் உலகத்திலயே மிகவும் பிஸியானவன் என்பது போல இல்லாத வேலையையும் இழுத்து போட்டு செய்து கொண்டு அலட்சியமாக இருந்தான்...

நாளுக்கு நாள் அக்ஸரின் அலட்சியமும்...அவன் வீட்டிர்க்கு அழைப்பு விடுப்பதும் அறவே இல்லாமல் போனது...

இதில் அமுதா கவலையுற்று அபியிடம் சொல்லி புலம்ப ஆரம்பித்தார்...
இன்னொரு பக்கம் ராமும் இதையே செய்தார்...

அபிக்கோ இவன் ஏன் இப்படி இருக்கான் என தலையே வெடித்து விடும் போல இருந்தது...

முகத்தில் உள்ள பொலிவு நீங்கி...உடல் மெலிந்து....முதல் முறையாக அவனை யோசித்து யோசித்து முடியும் கொட்ட ஆரம்பித்தது...

வீட்டுக்கு வந்திருந்த ப்ரியாவிடம் நடந்ததை எல்லாம் அழுத படியே சொல்ல ஆரம்பித்தாள் அபி... உங்க அண்ணன் ஏன் மா இப்படி இருக்காங்க என கேட்க...
அவன் அப்ப அப்ப நல்லா பேசுவான்... அப்ப அப்ப இப்படி இருப்பான்... உங்களுக்கு போக போக பழகிடும்... அவன் ஏதாச்சும் பேசுனா அவனுக்கு ஏத்த மாதிரி பேசுங்க... அவன் நார்மல் ஆகிருவான் என கூற இன்னும் தலை வெடித்து விடும் போலாகிவிட்டது அபெக்கு...

நாட்கள் நகர நகர... ராமின் பேச்சும் கோவமும் அதிகமானது...
அபி... நீ பேசலேனு தான் இப்படி இருக்கான் போல... ஃபர்ஸ்ட் நீ பேசு... அவன் ஏன் இப்படி இருக்கானு கேளு என ராம் கூறி... இப்படியே அவன் ஃபோன் கூட பன்ன மாட்டிக்கிறான்... நாளைக்கு தீபாவளி...
அதுக்கும் வாழ்த்து சொல்லலனா நான் வேற மாதிரி முடிவு எடுக்க வேண்டியது வரும் என்க... என்ன முடிவு ப்பா என்று கேட்ட ஹனாவிடம்...

"ஒரு சைகோவ கட்டிக்கிட்டு...காலம் ஃபுல்லா என் பிள்ளை கஷ்டப்பட கூடாது"....என கூறி ஃபோனை வைத்து விட்டார் ராம்...
.
.
.
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்...
அக்ஸர்க்கு அழைப்பு விடுக்க...
முதல் ரிங்கிலே அட்டன்ட் செய்தவன் அமைதியாக இருந்தான்...
இவளும் அமைதியாக இருக்க... அவனோ எதுவும் பேசுவது போல் தெரியவில்லை...

அபி: ஹலோ..

அக்ஸர்: ஹலோ...

அபி: எப்படி இருக்கீங்க??

அக்ஸர்: ஹ்ம்ம்...நீங்க எப்படி இருக்கீங்க??

அபி: ஹ்ம்ம்...நல்லா இருக்கேன்..

(சிறிது நேரம் அமைதி)

அபி: ஹேப்பி தீபாவளி

அக்ஸர்: தேங்ஸ்... ஹேப்பி தீபாவளி

அபி: வீட்டுக்குலாம் ஃபோன் பேசுறீங்களா??

அக்ஸர்: இல்லை..

அபி: இனிமே பேசுங்க....2 வீட்டுக்கும்..

அக்ஸர்: ஹ்ம்ம்...சரி..

அபி: தீபாவளி  வாழ்த்து சொல்லுங்க...

அக்ஸர்: ஹ்ம்ம்...சொல்லுறேன்...

அபி: ஹ்ம்ம்

(மறுபடியும் அமைதி)

அக்ஸர்: நீ அப்ப அப்பமாச்சிம் இப்படி எனக்கு ஃபோன் பன்னுவியா??

அபி: ஏன்??😢😢😢

அக்ஸர்: இல்லை... நீ இப்படி பேசும் போது சந்தோஷமா இருக்கு...

அபி: ஹ்ம்ம்...இதை யாரு கெடுத்துக்குட்டது...

அக்ஸர்: 😯😯😯😯

அபி: சரி...நான் வைக்கிறேன்...

(டாடா சொல்ல கூட அபிக்கு மனதில்லை.. அதை சொல்லவில்லை என்பதை அக்ஸரும் குறித்து கொண்டான்)...

அடுத்த நாள் தீபாவளி  என்பதால் அதிகாலையிலேயே ராம் வந்து இறங்கினர்...
வீட்டில் எல்லோருக்குமே ஒரு படப்படப்பு சூழ்ந்து இருந்தது...காரணம் அக்ஸர் வாழ்த்து சொல்லுவானா என்பது தான்...

அபிக்கு முழு நம்பிக்கை இருந்தாலும்...மனதின் ஓரத்தில் ஒரு பயம் இருந்தது...

ராமின் முகத்திலோ என்றும் இல்லாத கோபம் வருத்தம் எல்லாம் அப்பட்டமாக இருக்க... நேரமும் நான் உங்களுக்காக காத்திருக்க மாட்டேன் என போய்க் கொண்டே இருந்தது...

குடும்பத்துடன் கோவிலுக்கும் போய் வந்தனர்..

வருடா வருடம் இருக்கும் சந்தோஷம் பறந்து போனது... தோழிகளுடன் கழியும் தீபாவளி... கவலையுடன் வீட்டிலயே அடைந்து கிடந்தாள்... இவ்வளவு சொல்லியும் அக்ஸர்  கால் பன்னலேனு...

நேரமும் செல்ல...பதினொரு மணி ஆகவும் ராம் கோவத்துடன் வேல்க்கு அழைப்பு விடுத்தார்...

ராம்: ஹலோ
உங்க மகன் கால் பன்னாப்லயா??

வேல்: இல்லை...நானும் அவனுக்கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்...அட்டென்ட் பன்ன  மாட்டிருக்கான்..

ராம்: இப்படி இருந்தா என்னங்க அர்த்தம்...என் பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி சந்தோஷமாக இருப்பா??

வேல்: அதுலாம் சரியாகிடுவான்..
கல்யாணம் ஆகுனா என் பையன் பார்த்துகுவான்..
நான் அவன் கிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பன்றேன்...

ராம்: ஹம்ம்...

என்ன நினைச்சிட்டு இருக்காங்க...இப்படி பொறுப்பிள்ளாம பேசுறாங்க... அது என்ன மேரேஜ்க்கு அப்புறம் மறுவானாம்... என் பொண்ணு அவனை திருத்துவாளா...
அவனை திருத்தி வழிக்கு கொண்டு வர தான் என் பிள்ளையை நான் பெத்து வழர்த்து வச்சிக்கிறேனா.... இதுலாம் கொஞ்சம் கூட எனக்கு சரியா படலை..

உன் முகம் வாட கூடாதுனு தான் பார்க்குறேன் அபி.. இல்லாட்டி தூக்கி வீசிட்டு போய்கிட்டே இருப்பேன் என கத்திவிட்டு சென்றார் ராம்...

மதியம் போல் அபி விர்க்கு ரெகார்ட் வந்தது....கூடவே அமுதாவிடமிருந்து அழைப்பும் வந்தது...

மா...உங்க வீட்டுல அக்ஸர பேசுனாங்களே...அவன் எந்த நிலமைல ஃபோன் பன்னாமா இருந்திக்கிறான் பாரு...
நான் ரெக்கார்ட் அனுப்பிக்கிறேன் என கூறி அமுதா ஃபோனை அணைத்து விட்டார்...

அமுதா: ஹலோ...

அக்ஸர்: ஹலோ.. தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா..

அமுதா: தீபாவளி வாழ்த்துக்கள் பா..
ஏன் ...அவுங்களுக்கு நீ ஃபோன் பன்னலையாம்...அவுங்க கோவம் படுறாங்க..

அக்ஸர்: அவனுவோ அப்படி தான் இருப்பானுவோ...
நான் எந்த நிலமைல இருந்தேன் தெரியுமா??
இங்க ரூம்ல ஒருத்தன் வழுக்கி விழுத்தான்...கால் ஃப்ரேக்ட்ஷர் ஆச்சு...
ஹாஸ்பிடல் போயிட்டு இப்ப தான் வந்தேன்... டைம்மே இல்லை

அமுதா: அச்சோ...சரி.. நான் அப்புறம் கால் பன்றேன்...
.
.
இந்த ரெகார்டை கேட்ட ராம்க்கு இருந்த கோபம் இரட்டிப்பாய் ஆகியது...
"அவ்வனுவோ அப்படி தான் இருப்பானுவோ"னா யார சொல்லுறான்...இப்படி...இவ்வளவு மரியாதையா😠😠😠😠...

அபியின் குடும்பமே நொந்து போனது

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro