22
ராம் கடையை விட்டு வந்ததும் அபியை சமையல் கட்டுக்கு விட மாட்டார்..
பாத்திரம் கழுவ சென்ற அபியை...
மா...நீ ஏன் இங்கே இருந்து வேலை செய்ஞ்சிட்டு இருக்கிறா...போய் ரெஸ்ட் எடு மா என ராம் அனுப்ப... இது உங்களுக்கு ஓவரா தெரியலே...அவள ஒரு வேளையையும் செய்ய விடாமயே... ரெஸ்ட் எடுக்க சொல்லுறீங்க...
ரெஸ்ட் உங்களுக்கு தான் வேண்டும்... நீங்க தான் இப்ப கடைல இருந்து வந்திருக்கீங்க என சீதா கோவமாக கூற...
அதானே...என் பிள்ளைய வேலை ஏவாட்டா உனக்கு நேரம் போகாதே... இது எனக்கும் என் பிள்ளைக்கும் உள்ளது... வேலை செய்ய ஒன்னும் என் பிள்ளைய நான் பெத்து வைக்கல என ராம் ஒரு பக்கம் பொரிய...இரண்டு பேருக்கும் நடுவில் அபி திண்டாடி போனாள்...
இப்ப ரெண்டு பேரும் வாய மூடல நான் கடுப்பாகிறுவேன் என கத்தி கொண்டிருக்க... அவள் பேச்சு அங்கு எடுப்படாமல்.. இருவரும் எதிர் வாதம் பன்னிக்கொண்டிருந்தனர்...
ஆஆஆஆஆஆ.... பசிக்கிது என வயிற்றில் கை வைத்து அபி கத்த...
அடி போ டி...என் பிள்ளை பசில துடிக்கிறா...
இரு மா ரெண்டு நிமிஷத்துல சப்பாத்தி
போட்டு தந்துருரேன் என சமையல் கட்டுக்கு சென்றார் ராம்...
நல்ல அப்பா...நல்ல மகள் என முனங்கிய படி அறைக்குள் சென்றார் சீதா...
இருவரும் செல்ல.. அக்ஸரிடம் மெஸேஜில் பேசிக் கொண்டிருந்தாள் அபி...
அபி... அப்பா ஃபோன் அடிக்கிது... எடுத்து அப்பா கிட்டு குடு மா என சீதா கூறவும் அபி ஃபோனை ஆண் செய்து.. ப்பா உங்களுக்கு ஃபோன் என கூறி... ராம் வேலையில் இருப்பதால் அவர் காதில் ஃபோனை வைத்த படி நின்றாள் அபி...
ஹலோ யாரு என ராம் கேட்க... மறுமுனையில் என்ன பதில் சொன்னார்களோ தெரியவில்லை...
ராமின் முகத்தில் கலவரம் குடிகொண்டது...
என்னாச்சு ப்பா என பயந்த படி அபி கேட்க... தன்னை சுதாரித்தவர்... இப்ப ஒன்னும் பெரிசா இல்லையே என கேட்டு... சரி என ஃபோனை ஆஃப் செய்தவர்... அடுப்பை அணைத்து விட்டு இதே ஊரிலே மற்றொரு ஏரியாவில் இருக்கும் அக்கா பையனான வசந்த் க்கு அழைப்பு விடுத்து ஏதோ கூறினார் ராம்...
ராமின் படப்படப்பு வீட்டில் கலவரத்தை ஏற்படுத்த தொடர்ந்து வந்த நோடிஃபிக்கேஷன் சவுண்டில் ஃபோனை எடுத்து பார்த்த அபி... அக்ஸரிடம் இருந்து மெஸேஜ் வரவும், ஒரு ப்ராப்ளம்...அப்புறம் பேசுறேன் என ஃபோனை ஆஃப் பன்னாமல் வைத்து விட்டாள்...
தான் மெஸேஜ் அனுப்பி அபி ஆண்லைனில் இருந்தும் ரிப்ளே பன்னவில்லை என கோபம் கொண்டான் அக்ஸர்...
(பல பேர் இப்படி தான்...சூழ்நிலை அறியாமல் தன்னை விட வேறுயாரோ முக்கியம் போல என நினைத்து கொண்டு கோபம் கொள்வார்கள்)...
என்னாச்சி மாமா என கேட்ட வசந்திடம் முருகன்க்கு ஆக்ஸிடெண்ட்... பெரிசா அடி இல்லையாம்... கொச்சின்க்கு நேத்து தான் வந்தானாம்.... அண்ணா ஃபோன் போட்டு சொன்னாங்க... பைக் ஆக்ஸிடெண்ட் தான்... பயப்பிடுற மாதிரி ஒன்னும் இல்லையாம்... நாம பார்த்துட்டு வந்துருவோம் என இரவோட இரவாக வசந்தை கூப்பிட்டு கிளம்ப ஏற்பாடு பன்னிக் கொண்டிருந்த நேரம்... வசந்த்க்கு ஃபோன் வந்தது...
என்ன சொல்றீங்க என அதிர்ச்சியுடன் கேட்டு... இதோ நாங்க வந்துட்டு இருக்கிறோம் என கூறிய வசந்த்க்கு தன்னை மீறி கண்ணீர் வடிந்தது...
(பின்னே...தாய் மாமன்...ஒரே இரத்தம் ஆச்சே...சும்மாவா)
அத்தை... 99% டாக்டர்ஸ் கைய விரிச்சிட்டாங்களாம் என முருகன் கூற... என்ன டா... சின்ன அடினு தானே சொன்னாங்க என கேட்ட ராமிடம்... ஆமா மாமா... ஃபர்ஸ்ட் அப்படி தான் சொல்லுவாங்க... டக்குனு அதிர்ச்சியா சொல்ல மாட்டாங்க என கூறிய வசந்த் அடிப்பட்ட இடத்தை சொன்னான்...
.
.
நேற்று... ம்மா... ரோஜா... நீ சமத்தா இருக்கனும்... அம்மா சொல்லுற பேச்சே கேக்கனும்... தம்பிய பத்தரமா பார்த்துக்கனும்... யாரு கிட்டயும் கெட்ட பேரு வாங்க கூடாது என என்றும் இல்லாமல் இன்று அறிவுரை கூறும் தந்தையை விதியாசமாக பார்த்தவள்...புரிந்தும் புரியாமலும் தலையை தலையை அசைத்தாள்... பத்து வயதை கூட முழுமையாக அடையாத ரோஜா...
(ரோஜா..நம்ம அபியை உரிச்சு வைத்ததுபோல் பிறந்த குட்டி தேவதை...
பேரு தான் ரோஜா...எல்லோரும் கூப்பிடுவது குட்டி அபி தான்..
நீ அபி மேலே வைத்த அளவு இல்லாத பாசத்துக்கு உனக்கு அபி சாயல்லயே பிள்ளை பிறந்திருக்கு என முருகனிடம் கூறுவார்கள்..)
ஏனோ எல்லா சொந்தங்களிடமும் சொல்லி விட்டு சென்ற முருகன் வேலை நிமித்தமாக கொச்சின்க்கு சென்றார்...
இன்று... கடையிலிருந்து பைக்கில் தன் வீட்டை நோக்கி போய் கொண்டிருக்க.. போகும் வழியில் ப்ரேக் வேலை செய்யாமல் போனது தெரிய வந்தது...
ஏதாச்சும் ஒரு சரியான இடத்தில நிப்பாடிரலாம் என நினைத்த முருகன் மெதுவாக பைக்கை ஓட்ட... அவருக்கு சவால் இடும் படியாக முன்னால் அதி வேகமாக பஸ் வந்தது...
(நாம சரியா போனாலும்...வர்ரவன் சரியா வரனுமே...)..
தமக்கு முன்னால் வந்த பஸ்ஸிடம் இருந்து தப்பிக்க பைக்கை வலது பக்கம் திருப்ப... இவன் வலப்பக்கம் திருப்புவான் என்பதை அறியாமல் பஸ் ஓட்டுனரும் அதே பக்கம் வேகத்துடன் திருப்ப... பைக் வீசப்பட்டு... திசை குறிப்பிடும் கல்லில் முருகனின் தலை மோதியது...
பதறிய பஸ் ட்ரைவர் போஸ்ட் கம்பியில் பேருந்தை மோத... அருகில் இருந்த பாறை கல்லில் ஏறி பக்கத்தில் இருந்த பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது...
சத்தம் கேட்டு ஏதோ அசம்பாவிதம் நடந்ததாக நினைத்து சுற்றி வசிப்பவர்கள் வந்தாலும் அவர்களை யாரும் நெருங்கவில்லை...
காவல் நிலையத்திர்க்கு தகவல் குடுத்து விட்டு அவர் அவர்கள் வேலையை பார்க்க தொடங்கினர்...
அதாங்க, வேகமாக வாட்ஸ் ஆப்பை ஓபன் செய்து பல போஸ்களில் எவ்வளவு எடுக்க முடியுமோ...அவ்வளவு ஃபோட்டோஸ் எடுத்து..வாட்ஸ் ஆப், எஃப் பீ யில் போஸ்ட் போட்டு லைக் வாங்குறதுக்காக காத்திருந்தனர்...
இன்னொரு பக்கம்...டேய்...மச்சான்...ஆமா டா...இன்னைக்கு தான் ஆக்ஸிடெண்ட் ஆகுறத நேரே பார்க்குறேன்...பாவம் டா...யாருமே பொலைச்சிக்கிற மாதிரி இல்லை...பஸ் அப்படி பாறை கல் மேலே ஏறி கவிழ்ந்துருச்சி டா...உள்ளே அலறல் சத்தம் கேக்குது டா... உனக்கு கேக்குதா என்று கேட்டுக் கொண்டிருந்தான்...
மற்றொரு பக்கம்...பைக்ல வந்தவருக்கு முகமே தெரியலே டா...அவ்வளவு இரத்தம் டா... பாவம் ஏதோ முனங்கிட்டு இருக்காறு.. ஆனால், யாருமே உதவி செய்ய மாட்டிக்கிறாங்க டா... கேட்டா போலீஸ் கேஷ்... அது இதுனு பயப்பிடுறாங்க...
கொஞ்சம் கூட ஈவிரக்கமே இல்லை டா..
(உனக்கு எங்கடா போச்சி..எத்தனை நாளா மத்தவங்க மேலே பழி போடுவீங்க😕😕)
இதர்க்கிடையில் ஆம்புலன்ஸ் வந்து எல்லோரையும் ஏத்தி விட்டு சென்றது...
ஒருவருக்கு கால் இல்லை, ஒருத்திக்கு சிறு சதை மட்டுமே இனைந்து தலை பிரிந்து தொங்கியது, பேருந்து ஜன்னலில் கை வைத்து படுத்தவனுக்கு அவன் கை மேலே பேருந்து இருந்தது...இப்படி அந்த இடமே இரத்த களரியாக இருந்தது...
.
.
.
.
இருவரும் கிளம்பியதும் ஃபோனை எடுத்து அக்ஸரிடமிருந்து வந்த மெஸேஜை பார்த்த அபி... சித்தூக்கு ஆக்ஸிடெண்ட் என அழுகையுடனே கூற...எந்த சித்தப்பா என அக்ஸர் கேட்கவும்... முருகன் சித்தூ என்றதும் அவரா, அவரு குடிச்சிட்டு எங்கையாச்சிம் பைக்க விட்ருப்பாரு என கூறிய அக்ஸரிடம் பேச முதல் முதலாக எரிச்சல் வந்து...ஃபோனை வைத்து விட்டாள்..
போனவர்கள்..சிறிது நேரத்திலே திரும்பி வர...என்னாச்சி ப்பா என பயத்துடனே கேட்ட அபியை அழுகையுடனே ராம் கட்டியனைக்க...புரிந்து கொண்டவள் ஒரு நப்பாசையில் சொல்லுங்க ப்பா...ஏன் சித்தூவ பார்க்க போகலே என கேட்க...
மாமா இறந்துட்டாங்க மா என அழுகையுடனே வசந்த் கூற...இல்லை ப்பா என்றபடி அமர்ந்த நிலையில் அழுதாள் அபி...
.
.
.
.
.
.
.
.
.......
Hi frndz...how r u dearz??
Unga maela niraya complaint vardhu dearz...
Adhu yennana vote nd cmnt panna maatikreengalaam..
Niraya author ud poda virupam illaama irukaanga...
Bcz, neenga avungaluku support panradhu illa but read panreenga...
Idhula namma im_dhanuu sis um ud poda interest illaama irukaanga..
Naanga inga story poduradhu ungalukaaha than...
Neenga cmnt pannaataalum vote aachum pannalaamlae..
Idhula ungaluku oru loss um varaadhulae..
V2la yevlo work irundhaalum...ungalukaaha time odhuki ud podraanga...ungalukae thaeriyum tamil typing yevlo kastamnu..
2 days yenaku fever...some readers kaetukutadhaala naan ud podraen...
Prms ah yevlo mudiyalaenaalum unga aasaikaaha podromlae...
Neenga yengalukaaha...authors kaaha support pannunaa...yengaluku oru chinna happy avlo than...
Idhuku maela solla onnum illa...
Bye frndz...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro