2
தன் கண் முன்னால் தன்னவன் இன்னொருத்தியை கொஞ்ச...
ஏன் டா...என்னை ஏமாத்துறே...
நான் உனக்கு என்ன பாவம் செய்ஞ்சேன்..
எதுக்கு டா என்னை கஷ்ட படுத்துரே என கேட்டவளை அலட்சியமாக பார்த்தவன் ஏன் டி...எனக்கு உன்னை பிடிக்களை...ஏன் இப்படி என்னை டார்ச்சர் பன்றே...
இவள தான் நான் லவ் பன்றேன் என்று சென்றவனை நம்பமுடியாமல் பார்த்தவள் அவன் கையை பிடித்து இழுக்க...அவளை தள்ளி விட்டு மற்றவளிடம் செல்பவனை பார்த்த அதிர்ச்சியில் அக்ஸர் என கத்த..
ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் பதறியவள்...
ஹு..கணவு...கடவுளே என்னை காப்பாத்து என்று மூச்சை இழுத்து விட்டவள் வேகமாக தன் கைபேசியை எடுத்து பார்க்க..
அதில் அக்ஸரிடம் இருந்து சரியாக 1:50 க்கு பதில் ஹாய் வந்து...1:50 லாஸ்ட் ஸீன் என காட்டியது..
இவ்ளோ நேரம் முளிச்சிட்டு இருந்திக்றான்..
எனக்கு மெஸேஜ் அனுப்புனதுமே ஃபோன வச்சிட்டான்..
எதுக்கு என்ன இவன் இப்படி அவாய்ட் பன்றான் என நினைத்து தூங்காமல் புரண்டு புறண்டு படுத்தாள்...
அப்படியும் தூக்கம் இல்லாமல் போக மூட் ஆஃப் என ஸ்டேடஸ் போட்டு தூங்கினாள்
.
.
.
வாட்ஸ் அப் இல்:
விஷ்வா: ஹேய்...ஏன் டி..நடு சாமத்துல மூட் ஆஃப் னு போட்ருக்கே??
அபி: ஒன்னும் இல்லை டா...விடு
விஷ்வா: ஏன் டி...அவன் என்ன சொன்னான்??
எதா இருந்தாலும் சொல்லு??
அபி: ஒன்னும் இல்லை டா..எனக்கு வொர்க் இருக்கு... சேட் யூ லேட்டர்..
.
.
சாரி டா...என்னால எதையும் உன் கிட்ட சேர் பன்ன முடியலே என நினைத்து கொண்டு வீட்டில் யாரும் இல்லாமல் இருக்க கண் மூடி சாய்ந்து அழுதாள்..
.
.
.
(அவள் அழுவட்டும்...நாம அப்படியே அபிதா வ பத்தி பார்த்துட்டு வருவோம்)
ராம்,சீதா வின் காதலில் பிறந்தவள் தான் அபி..
காதலுக்காக தன் குடும்பத்தை உதறிய நிலையில்...
தன் சொந்தங்கள் இல்லாமல் பெற்றோரின் அன்பிலும் பாசத்திலும் மட்டுமே வளர்ந்தவள் தான் அபி..
தாங்கள் அறியாமல் செய்த தவறை தப்பி தவறி கூட தன் பிள்ளை செய்து விட கூடாது என உறுதியுடன் வளர்த்தனர் அபியின் பெற்றோர்...
அபியும் அவ்வாறே வளர்ந்தாள்..
தன் ஒழுக்கத்தை மட்டுமே மனதில் உறுதியாக வைத்து கொண்டாள்..
பெற்றோர்க்கு அடுத்து அபியை அன்பாக பார்த்தவர் சீதாவின் தாய் வள்ளி...
அபிக்காக மட்டுமே தன் மகளையும் மருமகனையும் சேர்த்து கொண்டாள் வள்ளி..
அபி பெரிய மனுஷியாகும் போது சில பல அறிவுரைகளை கூறியே வளர்த்தார் ..
...
அபி பெரிய மனுஷியாகும் பொழுது தலையில் பூ வைத்து விட்ட வள்ளி..
அபி மா.. இனிமே நீ பார்த்து நடந்துக்கனும்.. பசங்க கூட பேச கூடாது.. முன்னே மாதிரி விளையாட கூடாது என சில பல அறிவுரைகளை வழங்கினார்..
பள்ளியில் செல்லும் போது கூட எந்த பையனிடமும் பேச மாட்டாள்..
அமைதியான பெண்ணாக வளர்ந்தாலும் தைரியமாகவும் வளர்ந்தாள்..
.
.
தன் பின்னாடி வந்தவர்களை அப்படியே வந்து சீதாவிடம் போட்டு குடுத்து விடுவாள்..
அதர்க்கு பயந்தே அவளை பார்த்தாளே தலைதெறிக்க ஓடி விடுவார்கள்..
இவளுக்கும் இது தான் என்டெர்டைன்மென்ட் என தன் தோழிகளிடம் சொல்லி சிரிப்பாள்..
இவள் செய்யும் சேட்டையெல்லாம் தெரிந்துமே ரசனையுடன் இவளை ஒருத்தன் விரும்பினான்..
தன் வீட்டில் ஒருவனாய் பழகியதால் அவன் எண்ணம் தெரியாமல் இவளும் சகஜமாக பேசுவாள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro