வேண்டாம் சோகங்களெல்லாம் சொல்லாமலே போகட்டும்
பூக்களே, உதிர்ந்து போகாதீர்கள்.
மரங்களே, மடிந்து போகாதீர்கள்.
வானம்பாடிகளே, சோக கீதம் பாடாதீர்கள்.
மேகங்களே, கலைந்து போகாதீர்கள்.
என் சோகங்களே, என்னை தொல்லை செய்யாதீர்கள்.
நண்பர்களே, பிரிந்து செல்லாதீர்கள்.
தெய்வங்களே, என்னை தனித்துவிடாதீர்கள்.
பூகம்பமே, வேடித்து சிதறாதீர்கள்.
அலைகளே, கரையைக் கடக்காதீர்கள்.
மலைகளே, காற்றைத் தடுக்காதீர்கள்.
நட்சத்திரங்களே, சுட்டு எரிக்காதீர்கள்.
வீரர்களே, கொலைகளைச் செய்யாதீர்கள்.
கோழைகளே, பயந்து ஓடாதீர்கள்.
அகிம்சையே, அழிந்து போகாதே.
சட்டமே, வளைந்து கொடுக்காதே.
சுயநலமே, உள்ளம் நுழையாதே.
மனமே, அலை பாயாதே.
உள்ளமே, உள்ளம் தேடித் தொலையாதே.
குணமே, மங்கிப் போகாதே.
அன்பே, அகிலம் ஆளப் புறப்படு...
சோகக் கதைகளெல்லாம் மறைந்தே போகட்டும்...
ஆனந்தப் பூந்தோட்டம் எங்கும் பூக்கட்டும்...
பழிக்குப் பழியென்ற வஞ்சம் ஒழியட்டும்...
யாவரும் நம்மவர் என்ற சித்தாந்தம் மெய்க்கட்டும்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro