மகளிர் தின வாழ்த்துக்கள்
பெண்கள் மனது சற்று ஆழம்தான்!
நிரம்பிக் கிடக்கிறது
இரக்கம் தியாகம் காதல் அன்பு!
கலப்பட குணமில்லா நல் இதயங்கள்!
மணம் திறக்க இதழ் திறக்க
மல்லிகைகள் மறப்பதில்லை
அன்பு காட்ட மறப்பதில்லை
அன்னை மன பெண் இதயங்கள்!
இதயம் சில நேரம் பேச
இதழ்கள் அமைதி கொள்ளும்
இதழ்கள் அனபை நிராகரித்தால்
இதயம் பெரிதாய் எழுச்சி கொள்ளும்!
விழிகள் இரக்கத்தை பார்வையாகவும்
இதழ்கள் அன்பை சொற்களாகவும்
இதயம் தியாகத்தை துடிப்பாகவும்
உயிரோடு ஒட்டிக் கொண்டவள்!
மகளாய் பிறப்பெடுத்து
குல தெய்வமாய் உருமாறுபவள்
நதிகள் எல்லாம் பெண் பெயர் சூட
பூமியும் சூட்டிக் கொண்டது பூமா தேவியென்று!
உறவு முறை ஆராய்ந்து பார்த்தால்
உறவு படைத்த பிரம்மா ஆவாள்!
அன்னையாய் காதலியாய்
இன்னும் பல உறவுகள்!
கலியுக அறிவியல் ஆண் மகனையும்
தாய்மை அடையச் செய்யும்
இயல்பாய் பெண் சுரக்கும் அன்பை
இதயத்தோடு ஒட்டுவதில் தோல்வி கொள்ளும்!
பெண்கள் மனது சற்று ஆழம்தான்!
நிரம்பிக் கிடக்கிறது
இரக்கம் தியாகம் காதல் அன்பு!
கலப்பட குணமில்லா நல் இதயங்கள்!
மகளிர் தின வாழ்த்துக்கள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro