பிறந்தநாள் வாழ்த்து
என் கவியே வெள்ளைக் காகிதம் காத்திருக்க விரலிடை சினேகிதி
கொண்டு வாழ்த்து மடல் எழுதத் தொடங்கினேன்.
வார்த்தைகள் அத்தனையும் என் இதயத்திலிருந்து மதி போல் முகப் பொழிவு கொண்டதால் உன் பெயரின் முடிவில் மதியோ...!
அன்பினால் என்னை ஆட்டிப்படைத்தவளே...!
உன் விழியினால் என்னை வழிநடத்துபவளே...!
என் தாய் தமிழானவளே...!
கவி நடையில் காதல் கொண்டவளே...!
இசையானவளே...!
என் மொழியானவளே...!
இமையெழில் வென்றவளே...!
கணிச்சோலையில் வாழ்பவளே ...!
என் வாழ்வில் இளநங்கையே...!
என் கவிதையின் கருபொருளே...!
நீ என்னருகில் அமர்ந்த நேரம் என் உயிரிடையில் கவிதையாய். என்னுடன் நடைப் பயணம் மேற்கொள்ளும் நேரம் என்னை நிலைகுலைந்த நேரமது...!
உன்னுடன் நிகழ்ந்த அத்தனையும் காவியமாய்...!
என் கண்களில் உன் விழிநீர் துடைக்கும் துணைவனாக உன் வாசம் முகர்ந்தே என்னுயிர் பிரிய வேண்டும். உன்னுடன் வாழப் போகும்
ஒவ்வெரு நெடியும் என் இதயத்தில் முன்பதிவாக. என் இதய ஓரத்தில்
நாம் வாழும் தருணத்திற்காக காத்திருக்கிறேன்...!
என் கவிபேரழகிக்கு, என் இனிவளுக்கு, என் கலைமாமகளுக்கு, என் காவிய தோழிக்கு, என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro