கவிட்டுரை
கைகால் உதறியழும் தொட்டில் குழந்தையென குப்புற விழுந்த வண்டு கிடந்தது - "தயவு செய்து நேர்த்திருப் பென்னை" கெஞ்சியது என்னை;
புரட்ட, ரீங்காரம் நன்றி சொல்லும் முகமாய்..!
அம்மா கண்டால் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொல்வாள். அமைதியாய்ப் போவென மண்வாசலுக்குத் தள்ளினேன்;
காலையில் கருங்கல்லுக்குக் கால்முளைத்தது போலதுஊர்ந்தது மாலையில் இறந்துவிட்டது கைகால் உதறியழத் தோன்றுகிறது
எனக்கிப்போது.
எலும்பிலா உயிர்களை மரித்திடச்செய்யும் வெய்யில்போலும் அன்பிலா உயிர்கள் மரித்திடநேரின், மனிதமென்ற
பரிணாமம் வசித்திடக் கிடைப்பது மரணக்காடுதானோ.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro