இப்படியும் ஓர் யாசகம்
அரசாங்க ஊதியம் போதவில்லையாம் மாத கடைசியில்
யாசகத்தையும் பகுதிநேர பணியாக மேற்கொள்ளும்
அரசாங்க ஊழியர்கள்.
அரசாங்க உடையணிந்து சாலையெங்கும் மாலைபொழுது
இருசர்க்கரவாகனங்களை சோதனை என்ற பெயரில்
இவர்கள் வாங்கும் யாசகம்.
பத்து ரூபாய் தாள் மூன்றாக இருந்தாலும் சிறிதும் தயங்கமின்றி
கை நீட்டுகின்றனர்.
இளவட்டமான இளசுகளே இவர்களுக்கு யாசகம்
போடுகின்றனர் பெரும்பாலும். அனைவரிடமும் யாசகத்தை
உரிமையுடன் வாங்கும் யாசகர்கள் இவர்களே.
வாங்கும் யாசக வருமானத்தை வைத்து தான் உண்ணும்
நிலைமையோ அந்த யாசகர்களுக்கு?
ஒவ்வொரு துறையுமே அரசாங்கத்தில் யாசகம் பெற்றே
பிழைக்கும் நிலை நம் நாட்டில் மட்டுமே அதிகம் உண்டு.
மாறும் நிலை வரபோவதும் இல்லை.
மாற்றம் காண மக்கள் விடுவதுமில்லை இனி.
இந்தியாவே என்றும் உன் நிலை இது தானோ ?
ஊழல் , இலட்சம், ஏமாற்றுவது , ஏமாறுவது ,கொள்ளை, கொலை ,
கற்பழிப்பு ,இவையே நம் நாட்டின் முதுகெலும்பு.
தொடரட்டும்...!
(இவ்வரிகள் யாசகம் பெறும் ஊழியர்களுக்கு மட்டுமே சமர்ப்பணம் )
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro