paguthi30
சம்யுக்தா மடிந்ததும் அவளால் சிலையாக பட்டிருந்த அரச குடும்பத்தவர்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெற்றனர் .அவர்களிடம் வந்த அர்ஜுன் பிரியா மற்றும் மித்ரா கார்திக் அந்த பதக்கத்தை சிவபெருமானிடமே சேர்த்துவிட்டனர்.
பின் அந்த இடத்தை பற்றிய அனைத்தையும் ஆதாரத்தோடு அரசாங்கத்திற்கு சமர்ப்பித்தனர்.நம்பமுடியாத உண்மைகள் அனைத்தும் வெளி வந்தது அந்த பதக்கத்தை தவிர்த்து.அரசாங்கம் அந்த ராஜ்யத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் விவசாயம் செய்யவும் அங்கே பள்ளிகள் வரவும் ஏற்பாடுகள் செய்தது .
அங்கே உள்ளவர்களுக்கு இவை அனைத்தும் புதிதாக இருந்தாலும் அதை சிறிது சிறிதாக ஏற்று கொண்டனர்.ஷிவதேவ் வர்மரும் சித்தாரா தேவியாரும் மணிமேகலையாரும் பிரியா ,அர்ஜுன் ,மித்ரா கார்திக்குடன் சென்னைக்கு வந்தனர்.
அவர்களுக்கு முதலில் நகர வாழ்க்கைக்கு மாறுவது சிரமமாக இருந்தாலும் பின் அதை ஏற்று கொண்டனர்.பின் ப்ரியாவிற்கும் அர்ஜுனிற்கும் ஒரு நன்னாளில் திருமணம் மிகவும் விமரிசையாக நடந்தது அதே மேடையில் மித்ரா கார்த்திக்கிற்கும் ஊரறிய திருமணம் நடந்தது.
10 வருடங்களுக்கு பிறகு
பிரியா "டேய்ய் அர்வின் டேய்ய் எங்க தான்டா போன "என்று ஏலம் விட்டு கொண்டே இருக்க "அம்மா" என்ற குரல் கேட்டு திரும்பினாள் அங்கே அவளது 7 வயது புதல்வி அவந்திகா நின்று கொண்டிருந்தாள் அவளிடம் சென்றவள் அவன்திமா அர்வினஹ் பாத்தியா ?"என்று வினவ
அவளோ "இல்லம்மா நா பாக்கல அப்பா உன்ன கூப்டாருமா"என்று விட்டு செல்ல
அவளோ "நேரம் கெட்ட நேரத்துல இந்த அர்ஜுன் வேற "என்று முனகிக்கொண்டே உள்ளே செல்லவோ
அவன் அவளை இழுத்து சுவரோடு நிற்க வைத்தவன் அவளுக்கு இரு பக்கமும் கை போட்டு "என்ன சொல்லிட்டு வந்த இன்னொரு முறை சொல்லு பாப்போம் "என்க
அவளோ "ஹைய்யோ என்ன அர்ஜுன் இது காலங்காத்தால விடுங்க எதுக்கு கூப்டீங்க "என்று நெளிய அவளோடு இன்னும் ஒட்டி
நின்றவன் "என்ன மேடம் காலங்காத்தாலயே இவ்ளோ டென்ஷனாஹ் இருக்கீங்க "என்று வினவ
அவளோ "நம்ம பையன் அர்வினஹ் காணோம் அதான் தேடிட்டு இருக்கேன் .பொறந்தது தான் ஒரே நேரத்துல பொறந்துச்சுங்க ஆனா அவந்திக்கும் அஅர்வின்கும் குணத்துல கொஞ்சம் கூட ஒத்துமை இல்ல.அவ அவ பாட்டுக்கு சொல்றத கேட்டுட்டு இருக்கானா அவன் எப்போ பாரு வாலு தனம் பண்ணிட்டே இருக்கான் .அப்டியே அவுங்கப்பா மாறி "என்று கூற
அவனோ "எது நா வாலா வாலு என்ன பண்ணும் தெரியுமா" என்று அவளை நோக்கி குனிய
அவளோ "சீ போங்க அர்ஜுன் என்று அவனை தள்ளி விட்டு ஓடிவிட்டாள்.
அர்ஜுனிற்கும் ப்ரியாவிற்கும் 7 வயதில் ஒரு மகளும் மகனும் என இரட்டை குழந்தைகள் உள்ளனர் .மகளின் பெயர் அவந்திகா மகனின் பெயர் அர்வின் .அவந்திகாவும் அர்வினும் குணத்தில் ஏக பொருத்தம் .அவந்திகா அமைதியின் சொரூபம் என்றால் அர்வின் அட வடித்தனத்தின் சொரூபம்.ஆனால் இருவரும் தந்தை தாய் சொல்லை தட்டாது பொறுப்பாக நல்லமுறையில் நர்குணங்களோடு வளரும் குழந்தைகள்
அவளை பார்த்து சிரித்தவன் வெளியே வந்து சமையலறை பக்கம் போகவோ அங்கே கார்திக்க்கும் மித்ராவும் வழமை போல் சண்டை இட்டு கொண்டிருந்தனர் .அதை கண்டவன் இதுகளுக்கு வேற பொலப்பிள்ளை என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து நகலாவோ அவனது மகள் அவந்திகா வந்து "அப்பா என் கூட வாங்களேன் "என்று கரம் பிடித்து இழுக்க அவன் "என்ன மா என்ன ஆச்சு ?"என்று வினவ அவள் "நீ வா பா காட்டுறேன்"
மித்ரா"கார்த்திக் சுகர் நா correctaah தாண் போட்ருக்கேன் coffeela "என்க
கார்திக்கோ "ஏண்டி காபீயா டி இது ஒரே கசப்பா இருக்கு இதுல சுகர் போட்டேன்னு போலீஸ் காரண்ட்டையே பொய் சொல்றியா "என்க
அவளோ "ஆமா இவரு பெரிய cid ஷங்கரு இவர் ட பொய் சொல்லி நாங்க ஏமாத்த போறோம் இதுக்கு மேல சுகர் போட்டு குடிக்குறதுக்கு நீ ஜீனி தண்ணியே குடிக்கலாம் "என்க
அவனோ "என்னது வேணும்னா நீயே குடிச்சு பாரு "என்று கொடுக்க அவளும் வாங்கி குடித்தால்
"டேய்ய் நல்ல தானடா இருக்கு என்று கூறி கொடுக்க "அவனும் வாங்கி
குடித்து விட்டு "ஆங் இப்போ கரெக்டாக இருக்கு " என்று அவள் இதழை பார்த்து கூற
அவளோ "சீ போடா "என்று விட்டு நகர போக அவளை பின்னிருந்து அணைத்தான் .
அவன் பின் அவளை முத்தமிட போகவோ அவர்களது 9 வயது மகன் அஷ்வின் "அப்பா அம்மா" என்று கத்திகொண்டே வர இவர்கள் இருவரும் சட்டென விலகினர் பின் ஹாலிற்கு சென்றனர்.
அங்கே அஷ்வின் தன் பார்வையை சுழல விட்டபடி "அப்பா அம்மா எங்கே இருக்கீங்க?"என்று அழைக்க அவன் பின்னே சென்ற கார்த்திக் அவனின் காதின் அருகில் சென்று கத்த அவனும் திரும்பி கத்தினான் பின் இருவரும் தாங்கள் வழக்கமாக செய்யும் hifiyai செய்து கொண்ட பின் மித்ரா அவனிடம் "அஷ்வின் என்னடா ஏன் எங்களை தேடுற ?"என்று கேட்க
அவனோ "அம்மா என் கூட வா அப்பா நீயும் வா"என்று அழைத்து செல்ல அவர்களும் எங்கே செல்கிறோம் என்றே தெரியாமல் சென்றனர் .
மித்ராவிற்கும் கார்த்திக்கிற்கும் இரண்டு குழந்தைகள் 9 வயதில் மூத்த மகன் அஷ்வின் 6 வயதில் இளைய மகள் அஸ்வதி.இருவரும் நர்குணங்களோடும் கார்த்திக் மித்ராவின் குறும்புகளோடும் வளரும் குழந்தைகள் . அஸ்வினும் அர்வினும் உயிர் தோழர்கள் அதே போல் அஸ்வதியும் அவந்திகாவும் உயிர் தோழிகள்.ஆனால் அஸ்வதியும் அர்வினும்..... (அத நீங்களே பாருங்க)
அங்கோ அவர்களுக்கு முன் அர்ஜுன்,பிரியா மற்றும் அவந்திகா ஒரு சுவற்றிற்கு பின் ஒளிந்து கொண்டு அங்கே எதையோ பார்த்து தங்கள் கைகளால் வாயை பொத்தி கொண்டு சிரித்து கொண்டிருந்தனர் அங்கே சென்ற கார்த்திக் அர்ஜுன் தோல் தொட்டு 'என்ன மச்சான் "என்று கேட்க அர்ஜுனும் ப்ரியாவுமோ அவர்களிடம் "ஷு "என்று உதட்டில் கை வைத்து அங்கே பார்க்க சொல்லி சைகை காட்ட அங்கோ
அர்வினும் மித்ரா கார்த்திக்கின் 6 வயது மகள் அஸ்வதியும் தீவிரமாக சண்டையிட்டு கொண்டிருந்தனர் .பின் திடீரென்று மழை பெய்யவோ அவள் நனைவதை கண்ட அர்வின் அவன் அணிந்திருந்த ஜாக்கெட்டை அவிழ்த்து அவள் தலையில் போட்டவன் அவளை அழைத்து கொண்டு மரத்தடிக்கு சென்றான்.
இதை கண்ட அர்ஜுன் கார்த்திக்கிடம் "ஆக அடுத்த கார்த்திக் மித்ரா pair ரெடி ஆயிருச்சுங்க "என்று கூறி சிரிக்க கார்திக்க்கும் மித்ராவும் அவர்களோடு சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தனர்.
இவர்கள் சம்பாஷணைகள் ஏதும் புரியாத அவந்திகாவும் அவர்களோடு சேர்ந்து சிரிக்க அஷ்வினோ அவந்திகா நனைவதை பார்த்து அவளை உள்ளே இழுத்து சென்றான் .இவர்கள் நால்வரும் சிரிப்பதை கண்ட ஷிவதேவரும் சித்தாரா தேவியாரும் மணிமேகலையும் "என்ன?"என்று வினவ அவர்கள் நடந்ததை கூற அதை கேட்ட அவர்களும் சிரிக்க துவங்கினர்.இனி இவர்கள் வாழ்வில் என்றும் இன்பமே ஆட்சி புரியும் .
சுபம்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro