Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

paguthi 9

ஏதோ ஒரு படபடப்பாக உணர்வு எழ ப்ரியாவை ஒரு முறை அழைத்தான் அவள் திரும்ப அவளது முகத்தை பார்த்துவிட்டு விசாரணையை நடத்த தன் வாகனத்தை ஊரின் பக்கமாக செலுத்தினான்.

(சரி ஒரு சாப்டர் fulla இவனுங்களையே பாத்தாச்சு இப்போ நாம கார்திக்க்கையும் மித்ராவையும் பாப்போம்.நா வேற அதுக ரெண்டையும் கோர்த்து விட்டுட்டேன்)

அங்கு கார்த்திக்கும் மித்ராவும் ஜீப்பில் சிறுகுளம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். (என்னடா இதுக ரெண்டு அமைதியா இருக்குதுங்க இதுங்க இப்டி இருக்காதுகளே??)

சென்று கொண்டிருந்த போது கார்த்திக் வழக்கம் போல் பாட(சாரி கத்த) ஆரம்பித்தான் .

"அடியே அடியே இவளே அடி என் வாழ்க பாழாக்க பொறந்தவளே "

என்று பாட மித்ராவோ"எது நா உன் வாழ்க்கையை பாழாக்க பொறந்தேனா??"

என்றால் அதற்க்கு கார்திக்கோ "இதுல உனக்கு சந்தேகம் வேறயா of கோர்ஸ் என் வாழ்க்கையை பாழாக்க வந்தது நீ தான்"என்றான்

 அதற்க்கு மித்ராவோ "ஏய் மைதா மாவு உன் வாழ்க்கையை நா எப்போடா பாழாக்குனேன் கேக்குறவன் கேனையா இருந்த என்ன வேனா சொல்லுவ போல " என்றால் அதற்க்கு

கார்த்திக் "பாத்தியா இப்போ கூட நீ கேனன்னு ஒத்துக்கிட்ட.அப்பறோம் என்ன கேட்ட உன் வாழ்க்கையை எப்போ பாழாக்குனேன்னா .10thla நானும் ஸ்ரேயாவும் சேர போற நேரத்துல உள்ள வந்து கெடுத்து விட்டுட்ட அப்பறோம்

எனக்கு snow ஸ்கேட்டிங் காம்பெடிஷன்ல பார்ட்டிசிபேட் பண்ண கெடச்ச chanceah கெடுத்து விட்டுட்ட அப்பறோம் " என அவன் ஆரம்பிக்க 

மித்ராவோ "போதும் கார்த்திக் நிறுத்து உன் வாழ்க்கையை கெடுக்கறதுக்காக நா எதுவும் பண்ணல .நா அப்போ பண்ணது உன் lifeah பாத்துச்சுருந்துச்சுன்னா என்ன மன்னிச்சுடு .அண்ட் இனிமே என் கிட்ட official விஷயத்தை தவிர்த்து எதுவும் பேசாத. "என கண்ணீருடன் கூற கார்திக்கிற்கு ஏனோ குற்ற உணர்வு தலை தூக்கியது (பாரு பன்றதையும் பண்ணிட்டு திருவிழால காணாம போன புள்ள மாறியே முழிக்குறத)

பின் இருவரும் பேசிக் கொள்ள வில்லை மௌனமாகவே சிறுகுளம் நோக்கி சென்றனர்.சிறுகுளம் சாலையின் இருபுறங்களும் பழங்கால அமைப்பை உடைய அழகிய வீடுகளும் ,ஆங்காங்கே ஆட்டு மந்தைகளை உடைய குடிசைகளும் சர சர வென பாயும் நதியும் ஓங்கி உயர்ந்த ஓர் மலையும் என ரம்மியமான தோற்றத்தை பெற்றிருந்தது.

ஆனால் அந்த ஊரின் தோற்றத்தில் இருந்த அமைதி ஏனோ அங்கு வாழும் மக்களின் முகத்தில் இல்லை .எப்போதும் பயத்துடனும் பட படப்புடனுமே காட்சி அளித்தனர்.

பின் அங்கு உள்ளவர்களிடம் விசாரித்ததில் அந்த ஊரில் உள்ள அனைவராலும் பல அசம்பாவிதங்கள் அரங்கேறியதால் கைவிடப் பட்ட ஓர் கோவிலுக்கு மித்ராவை கார்த்திக் அழைத்து சென்றான்.அவன் ஏதோ பேச முயற்சிக்க மித்ராவோ அப்படி ஒரு ஜந்து அங்கு இருப்பது போலவே காட்டிக் கொள்ளாமல் சட்டென்று இறங்கி கோவிலுக்குள் சென்று விட்டால்.

(சரி இப்போ நாம அர்ஜுநஹ் கவனிப்போம்.)

ப்ரியாவை இறக்கி விட்ட அர்ஜுன் அந்த ஊரை ஒரு முறை தன் வாகனத்தில் சுற்றினான்.அந்த ஊரின் ஓர் எல்லை காட்டு வழிக்கு அழைத்து சென்றது .அவ்வழியே யாரும் செல்ல இயலாத வாறு முள்வேலிகள் போடப் பட்டிருந்தது.

பின் அங்கு பல பழங்கால சத்திரங்களும்,சிறு சிறு கோவில்களும் ,சிறு சிறு குன்றுகளும் என ஓர் பழங்காலத்தில் செல்வ செழிப்புடன் இருந்த ராஜ்ஜியத்தின் ஆதாரங்களுடன் இருந்தது.

ஆனால் அவன் விசாரித்த வரை அங்கு இருந்த யாருக்கும் அந்த பழமையான இடங்களை பற்றியோ ,அங்கு எவ்வகையான ஆட்சி இருந்தது என்பது பற்றியோ ,அந்த ராஜ்ஜியம் எவ்வாறு அழிந்தது என்பது பற்றியோ எந்த துப்பும் கிடைக்கவில்லை.

ஆனால் அவனுக்கு கிடைத்தது ஒரு துப்பு மாத்திரமே திருட்டு சம்பவங்கள் எதுவும் அங்கு உள்ள மக்களால் செய்ய பட வில்லை. பின் அந்த ஊருக்குள் நுழைய இருப்பது இரண்டு மார்க்கங்கள் தான் ஒன்று சாலை ,மற்றொன்று காடு.

அந்த ஊருக்கு யாரும் வருவதும் இல்லை போவதும் இல்லை .இதை ஊரின் எல்லையில் பொருத்தப்பட்டிருக்கும் CCTV காமெராவை வைத்து கண்டு பிடித்துவிட்டான்.எனவே கயவர்கள் காட்டு பாதையை தான் தனது மார்கமாக உபயோகிக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தான் .காட்டு பாதையில் செல்லலாம் என யோசித்தவன் பின் திடீரென ப்ரியாவின் ஞாபகம் வர வண்டியை மண்டபம் நோக்கி திருப்பினான்.

அங்கு ப்ரியாவோ அந்த மண்டபத்தின் சுவர்களில் உள்ள சிலைகளையும் சித்திரங்களையும் தனது பிரஷால் சுத்தம் செய்து அதில் உள்ள சித்திரங்களின் மற்றும் சிற்பங்களின் அர்த்தத்தை கண்டு பிடிக்க முயற்சித்துக்கொண்டிருந்தால் .

அப்பொழுது அந்த மண்டபபத்தின் ஓர் மூலையில் உள்ள சுவற்றில் பல சிற்ப பாகங்கள் சம்பந்தம் இல்லாமல் இருந்தது .அவற்றின் மேல் கை வைக்க அவை நகர்ந்தன .

அது ஏதோ ஓர் புதிர் என்று புரிந்து கொண்ட பிரியா அந்த நகரும் பாகங்களை பல முறைகளில் நகர்த்தி அந்த புதிருக்கான விடையை கண்டறிய பிரயத்தனம் செய்து கொண்டிருக்க அவளது தலைக்கு மேல் இருந்த அக்கட்டிடத்தின் ஓர் பாகம் சிறிது சிறிதாக இடிய தொடங்கியது .


அது எப்பொழுது வேண்டுமென்றாலும் அவளது தலையில் இடிந்து விழலாம் என்ற நிலையில் இருந்தது .அந்த பாகம் அவள் தலையில் விழ போக ஏதோ ஓர் கரம் அவளை பலமாக இழுத்தது. 

இழுத்த வேகத்தில் அவள் அந்த உருவத்தில் மோத இருவரும் தரையில் விழுந்தனர் .அப்பொழுது தான் அவள் அந்த நபரை பார்த்தால் .

அது வேறு யாரும் அல்ல அர்ஜுன் தான் .அவள் முதல் முறையாக அவனது முகத்தை இத்தனை அருகாமையில் கண்டால் அவளது பார்வை அவன் மேல் நிலைத்திருக்க அவனும் அவளது வதனத்தில் தன்னை தொலைத்திருக்க திடீரென இடியுடன் கூடிய மழை பெய்ததுமே இருவரும் தத்தம் சுயநிலைக்கு திரும்பினர்.(நீங்க பண்ற ரொமான்ஸ் மழைக்கே பொறுக்கலைடா )

பின் அர்ஜுன் ப்ரியாவை அமர்த்தி அவளுக்கு எதுவும் ஆகவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே பெருமூச்சு ஒன்றை விட்டான் .

பின் ப்ரியாவிடம்"லூசா பிரியா நீ மேல இருந்து இடுஞ்சு விழுறது கூட தெரியாமயா வேல பாப்ப.சுத்தி என்ன நடக்குதுன்னு பாக்க மாட்டியா??உனக்கு ஏதாவது ஆயிருந்தா நா "என்று அவன் மேற்கொண்டு பேச இயலாமல் நாக்கு தழுதழுத்தது.

அவனது தவிப்பையும்,பரிதவிப்பையும் கண்ட பிரியாவிற்கு ஏதோ ஓர் சொல்ல முடியாத இன்பம் ஏற்பட்டது "இதுவரைக்கும் மித்ரா,கார்த்திக் தவிர்த்து யாரும் என்கிட்டே பாசமா கூட இருந்தது இல்ல .ஆனா கார்த்திக் கிட்ட தோணாத ஏதோ ஒன்னு ஏன் இவன் மேல தோணுது.யாரும் 1 திட்டு திட்டுனா திருப்பி 10 திட்டு திட்டுற நா ஏன் இவன் திட்டேல மட்டும் அத ரசிக்குரேன்.ஏன் போவும் இவன் இந்த மாதிரியே ஏன் கூட இருக்கணும்னு நெனைக்கிரேன்??புரியலையே .(நீ tubelight தான don't worry சீக்கரமா ஒரு 10 சாப்டர் கழிச்சு புரிய வச்சுருரன்.)என எண்ணமதை கொண்டிருந்தால்.

 அவளது எண்ண ஓட்டத்தை கலைக்கும் விதமாக அர்ஜுன் அவளை உலுக்கி "உன்கிட்ட தானடி பேசிக்கிட்டு இருக்கேன் ஒன்னும் சொல்லாம இருந்தேனா என்ன அர்த்தம் ??"என்று வினவ 

ப்ரியாவோ"இல்ல அர்ஜுன் அது வேல இருந்ததுல கவனிக்கல இனிமே கவனமா இருக்கேன் ப்ரோமிஸ்."என்க அர்ஜுன் அமைதியாக இருந்தான்.

 உடனே அவள்"அட ஏன் teddy பிங்கி மேல ப்ரோமிஸ் "என்க அவன் வாய் விட்டு சிரித்துவிட்டான் .பின் இருவரும் அந்த சுவற்றின் புறம் தங்கள் பார்வையை திருப்ப அந்த சுவற்றில் ஒரு துவாரம் உண்டாகி இருந்தது .

உடனே இருவரும் அருகில் சென்று பார்க்க அந்த சுவற்றில் அவன் இழுத்த வேகத்தில் அவள் கை பட்டதால் அந்த கடைசி நகரும் பாகம் நகர்ந்து அது ஓர் தாமரை மொட்டு போல் காட்சி அளித்தது .அதன் கீழ் ஓர் ஆள் நுழையும் அளவிற்கு துவாரம் இருக்க அதற்குள் அர்ஜுனும் ப்ரியாவும் டார்ச்சை அடித்துக்கொண்டு செல்கின்றனர்.

அந்த துவாரத்திற்குள் என்ன இருக்கும்??

உள்ளே செல்லும் ப்ரியாவிற்கும் அர்ஜுனிற்கும் என்ன நடக்கும்??

stay tuned to know


friends naa idha kaekkanumnu nenaikkuraen.en story poga poga bore adikkudha ??illa nalla dhaan pogudhaa ??nalla illana dhayavu senju sollirunga naa storyah discontinue panniduraen.

please give your comments

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro