paguthi 13
அடுத்த நாள் காலை மீண்டும் கோவிலுக்கு செல்ல அங்கு கோவிலில் அந்த கோவிலில் உள்ள பழமையான தீர்த்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வர பட்டு சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் அபிஷேகம் நடந்தது.பின் அங்கு உள்ள பெண்கள் அனைவரும் பல மொழிகளிலும் கடவுளைத் துதிக்கும் பாடலை பாட அந்த இடமே ஒரு தெய்வீக ஒலியால் நிறைந்து மனதிற்குள் நிம்மதியை பரவ விட்டது.பின் ராமாயணக் கதையை நாடகமாக அவ்வூரின் இளவள்கள் மிகவும் நேர்த்தியாக நடித்தனர்.
மாலை வேளை துவங்க அனைவரும் ஆவலுடன் எதிர்ப் பார்த்த வர்ணப்பூச்சு விழா ஆரம்பமானது.
தந்தையும் தாயும் தனயனும் என தங்கள் உறவு என்றும் நிலைக்க வேண்டி தாராளமாக பூசிய வர்ணங்கள் மாயாபுரியை வண்ணமயமாக செய்தது. அங்கு அனைவரும் சந்தோஷமாய் இருக்கும் நேரத்தில் நம் அவினாஷ் பதட்டத்தோடு ஓடிக் கொண்டிருந்தான் அவன் முன் ஒருவர் வந்து நின்று அவன் வழியை மறைக்க பின்னால் ஓட முயன்றவனை பின்னால் ஒருவர் மறைக்க பயத்தோடு நின்று கொண்டு இருந்தவனின் இரு புறத்திலுமிருந்தும் நீல சாயம் பாய்ச்சப்பட்டது பிரியா மற்றும் மித்ராவின் கரங்களிலிருந்து.
அவன் முகத்தில் சாயத்தை ஊற்றிய இருவரும் சத்தமாக சிரிக்க அவன் அவர்கள் எதிர் பாரா நேரத்தில் இருவர் மேலும் சாயத்தை ஊற்றிவிட்டான்.
பின் இருவரும் தங்கள் முகத்தை துடைத்துக்கொண்டு மீண்டும் அவனை துரத்த அவனோ வெவெவேவே என்று பலிப்பு காட்டி விட்டு சென்று விட்டான்.
அவனை துரத்தி கொண்டிருந்த ப்ரியா யார் மீதோ மோத அவள் நிமிர்ந்து பார்த்த போதோ அர்ஜுன் விஷமமாய் சிரித்து விட்டு அவள் மேல் மஞ்சள் சாயத்தை ஊற்றி விட்டான்.
பிரியா"யு அர்ஜுன்" என்று கத்திக் கொண்டே அவனை தன் புறம் இழுத்து அவன் மேல் தன் மீதிருந்த சாயத்தை ஒட்டவைத்தால்.
அவளது செய்கையில் திகைத்திருந்த அர்ஜுன் அவளின் காதருகில் சென்று "பிரியா பப்ளிக் place "என்று கூறிய பின்பே அவள் தான் செய்யும் காரியம் யாதென்பதை உணர்ந்தாள் பின் அங்கு நிற்க முடியாமல் ஓடியவளை புன் முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
அவினாஷ் பின் சென்று கொண்டிருந்த மித்ரா அவனை காணாது திரும்ப அவளைத் தொடர்ந்த ப்ரியாவும் காணாமல் போய் இருந்தால் .
பின்"சே கைல சாயத்தை வேற எடுத்துட்டேன் யார் மேலயாவது ஊத்தியே ஆகணுமே" என்று நினைத்தவள் கண்களில் சிக்கியதோ காவலர்களில் ஒருவருடன் பேசி விட்டு திரும்பிய கார்த்திக் தான் .
அவன் அருகில் சென்று அவன் மீது சாயத்தை ஊற்றப் போக அவனோ ஷூ லேஸ் கழன்றுக்கே என்று அதை கட்ட கீழே குனிந்ததால் சாயம் அவன் மேல் விழாமல் போனது
.அவள் சாயம் ஊற்ற முயற்சித்ததை கண்டு கொண்டவன் அவளை துரத்த அவளோ அவனுக்கு "முடிஞ்சா என் மேல ஊத்து பாப்போம்" என்னும் வகையில் இடுப்பை ஆட்டி பலிப்பு காட்டி விட்டு ஓடினாள்.
அவளை துரத்தியவன் சாயம் வைக்கப் பட்டிருந்த மேஜையின் ஒரு பக்கம் நிற்க மறு பக்கம் அவள் நின்றாள் .இருவரும் அதில் இருக்கும் சாயத்தின் நிறத்தை கூட பார்க்காமல் ஒருவர் மீது மற்றொருவர் ஊத்த அதில் இருந்ததோ மஞ்சள் வர்ணம் .அவர்கள் ஒருவர் முகத்தை இன்னொருவர் அதிர்ச்சியாய் பார்க்க அந்நேரம் ஆலயத்தின் மணியோசை அழகாய் ஒலித்தது.
பின் மித்ராவிடமும் கார்த்திக் "சாரி "என்று சொல்ல வர அதற்குள் ப்ரியாவும் அர்ஜுனும் அங்கு வந்து சேர்ந்தனர் .பின் மித்ரா முகம் கழுவுவதற்காக குளக்கரை நோக்கி செல்ல .அவளை நோக்கி ஒரு கடிதம் பறந்து வந்தது.அதைப் பார்த்தவள் அதிர்ச்சியில் கண்களை விரிக்க வேகமாக அவினாஷைத் தேடினால்.அவனை எங்கும் காணாததில் அவளின் பதற்றம் பன் மடங்காய்க் கூடிப் போனது.
பின் எதையும் யோசிக்காமல் ஆற்றின் கரையை அடைந்தவள் யாருடைய வரவயோ எதிர் பார்க்க எதிர் வந்தவர்களைக் கண்டு மீண்டும் அதிர்ந்தாள்.
"என்னம்மா மித்ராம்மா இந்த அதிர்ச்சி ஆகுறீங்க "என்று கேட்டுவிட்டு நக்கலாக சிரித்தார் அவ்வூர் கடவுளை போல் மதிக்கும் அவ்வூரின் தலைவர்.
அவரது கேள்வியைக் கேட்ட மித்ராவின் முகம் எத்தனை குழப்பத்தோடு இருந்ததோ அத்தனை ரௌத்திரமாய் மாறியது பின் "என் தம்பி எங்க ?"என்று அவள் கத்த.
ஊர்த் தலைவரோ "பார்ரா ரொம்பதான் கோவம் வருது பாசமலர் மேல கை வச்சா .டேய்ய் கொண்டு வாங்கடா அந்த பாசமலரை."என்று கூற அவினாஷ் கை கால் கட்டப் பட்டு மயங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டான் .
அவனை பார்த்து துடித்த மித்ரா "அவி"என்று கத்தலுடன் அவன் அருகில் செல்ல .அவளது கை பிடித்து தடுத்த அவ்வூர்த் தலைவர் "எங்கம்மா போற நா என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்குல்ல ??ஒழுங்கு மரியாதையா கப்பல்ல ஏறு.இல்ல இவன் பொணத்த தான் பார்ப்ப" என்க
அவளோ முகத்தில் அருவருப்புடன்"சீ நீங்களும் ஒரு மனுஷனா பொண்ணுங்கள இப்டி சொந்தங்களை பணயம் வச்சு கடத்தி அவுங்கள விக்குறீங்களே அசிங்கமா இல்ல ??"என்று கேட்க
அவளது கூற்றில் நகைத்த தலைவர் "பணம்மா பணம் .பணத்துக்காக என்ன வேணா செய்யலாம்.உலகத்துலயே அதிகமான மனுஷங்க விரும்புற போதைப் பொருள் பொண்ணுங்க தான்.அதை வியாபாரம் பண்ணுறதுல என்ன தப்பு."என்க
அவளோ"இப்டி தொழில் பண்ணுறீங்களே உங்கள பெத்த அம்மாவையும் ,கட்டுன பொண்டாட்டியையும்,பெத்த பொன்னையும் விப்பீங்களா?"என்க
அவளது கூற்றில் ஆத்திரமுற்ற தலைவர் "டேய்ய் பிடுச்சு கட்டுங்கடா இவள."என்று கூறிய மறுநிமிடம் 5 அடியாட்களால் தாக்கப்பட்டு மயக்கமடையச் செய்யப்பட்டால் மித்ரா .
இங்கு அர்ஜுனும் கார்திக்க்கும் பேசி கொண்டிருக்க அவர்களிடம் பிரியா பதட்டத்தோடு ஓடி வந்தால் .அவளைக் கண்ட அர்ஜுன்"ஹே பிரியா என்ன ஆச்சுடி ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க?"என்று வினவ
பிரியா "மித்ராவையும் அவினாக்ஷயும் காணம் அர்ஜுன்.நா எல்லா இடத்துலயும் தேடி பாத்துட்டேன் ."என்க கார்திக்கிற்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது பின் மூவரும் ஒருமுறை ஊரை சுற்றி வர அவர்கள் இருப்பிடத்தை தகவல் எதுவும் தெரியவில்லை.
பின் ஏதோ யோசித்தாள் கார்த்திக் தன மடிக்க கணினியில் மித்ராவின் தொலைபேசி எண்ணை trace செய்ய அது அவ்வூரின் ஆற்றின் கரையை காட்டியது.
கார்த்திக்"அர்ஜுன் மித்ரா போன் ஆத்தங்கரை கிட்ட இருக்கிறதா தெரியுது நீ வண்டிய அங்க விடு" என்று கூற அங்கு சென்று பார்த்தாலோ அங்கு ஆள் அரவமே இல்லாமல் இருந்தது .
கார்த்திக்"அர்ஜுன் நம்ம எல்லாரும் ஒரே எடத்துல தேடுனா சரி வராது நீ நம்ம போர்ஸோட தேடு நா உனக்கு இந்த ப்ளூடூத் வழியா தகவல் சொல்லிட்டே இருக்கேன் ."என்று கூற அர்ஜுன் ஏதோ புரிந்தவன் போல் சரி என்பது போல் தலை அசைத்து விட்டு ப்ரியாவையும் அழைத்து சென்றான்.
பின் கார்த்திக் அவ்விடத்தை நோக்க அங்கு ஆற்றில் மித்ராவின் shawl மிதந்து கொண்டிருந்தது.
இப்பொழுது அவளது தொலைபேசியின் இடத்தை பார்க்க அது ஆற்றில் பயணிப்பதை போல் காட்டியது.பின் நொடியும் தாமதிக்காமல் அவன் அங்கு ஆற்றங்கரைக்கு அருகிலேயே வைக்கப்பட்டு இருந்த மோட்டார் படகுகள் வைக்கும் இடத்திற்கு சென்றவன் அது பூட்டி இருக்க கதவை உடைத்து உள்ளே சென்றவன் மோட்டார் படகுடன் அவ்வாற்றில் மித்ராவின் தொலைபேசி இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.
அவ்வப்பொழுது தகவலைப் பகிர்ந்து கொண்டிருந்த கார்த்திக் தூரத்தில் ஒரு படகைப் பார்த்தான் அதன் உட்புறத்தை பைனாகுலர்ஸ் மூலம் பார்த்தவன் ஆள் நடமாட்டம் இல்லாத பக்கமாக பார்த்து அப்படகின் வழி ஏறி உள்ளே சென்றான் தன் படகை அதனுடன் இணைத்த பின்.உள்ளே சென்றவன் வழியில் 3 பேரை வீழ்த்தி அங்குள்ள ஓர் அறைக்குள் செல்ல அங்கு மித்ரா கட்டப் பட்டு மயங்கிய நிலையில் இருந்தால் .
அவள் அருகில் சென்றவன் மித்து என்று அழைக்க அவள் பதிலேதும் சொல்லாமல் மயங்கிய நிலையிலேயே இருந்தால்.பின் ஆட்களின் காலடி சத்தம் கேட்க அவன் மித்ராவை தோள் மேல் போட்டுக் கொண்டு வெளியில் ஓட ஆரம்பித்தான் பின் தன் மோட்டர் படகை அடைந்தவன் அதில் அவளை போட்டுக் கொண்டு கிளம்பியவனை அவ்வூர்த் தலைவர் பார்த்து விட்டார் .
பார்த்தவர்"டேய்ய் அந்த படகை சுடுங்கடா என்க அடியாட்கள் அப்படகை தாறு மாறாக சுட்டனர்.பல குண்டுகளிலுமிருந்து லாவகமாக தப்பித்த படகு ஒரு குண்டு பட்டு புகை வர தொடங்க இனியும் தாங்காது என்று எண்ணிய கார்த்திக் படகை கரை பக்கம் நிறுத்தி அச்சத்தத்தில் முழித்திருந்த மித்ராவையும் இழுத்துக் கொண்டு ஓடினான்.
அவள் "கார்த்திக் அவினாஷ் அவினாஷ்" என்று பிதற்ற
அவனோ அவள் கூறும் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் ஓட முடியாமல் போக அவள் முட்டி போட்டு உட்கார்ந்தாள்.
கார்த்திக்"மித்து வா அர்ஜுன் கிட்ட சொல்லிட்டேன் அவன் இந்த இடத்துக்கு வர வரைக்கும் நாம அவுங்க கைல மாட்டாள் கூடாது வா"என்க
அவளோ"முடியல கார்த்திக் இதுக்குமேல என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது"என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே ஊர்த் தலைவர் அடியாட்களுடன் வந்து சேர்ந்தார்.
அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்த கார்த்திக் தன் கண்களை அவ்விடம் நோக்கி சுழல விட அவன் கண்ணில் மாட்டியது ஒரே ஒரு வழி தான்.
அது என்னவாக இருக்கும்??
கார்த்திக் மித்ரா தப்பிப்பரா ??
அடுத்து நடக்க இருப்பது என்ன?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro