மர்மம்-5
எழுந்து கிளம்பிய அனைவரும் ஹாலில் கூட...
ஆர்வின் " டேய் சத்யா நேத்து ஒருத்தன போட்டுட்ட போல???"
ஷக்தி "ஆமா மச்சி "
மீனா " டேய் யாரடா போட்டுத்தள்ளுன??? "
மீண்டும் அந்த அயோக்யனின் கதை கூறப்பட... அது முடிவடையும் போது மெல்லிய கொலுசொலி அவர்களை கலைத்தது... அனைவருக்கும் யாரென புரிந்து விட கதவை நோக்கி காத்திருந்தனர்... அழகிய கருப்பு நிற புடவையில் வெள்ளை ரோஜாவாய் புன்சிரிப்புடன் உள்ளே வந்தாள் தாரா... அவளுடனே ஸ்வத்திக்காவும் ஷ்ரவனும் உள் நுழைந்தனர்... அனாமிக்காவை கண்ட ஸ்வத்திக்கா ஓடிச் சென்று அணைத்து " எப்போ டி வந்த????" என கேட்க... தாரா பதிலளித்தாள்...
" இன்னைக்கு தான் டி " என கூறவும்... உனக்கு எப்டி தெரியும் என எதிர் கேள்வி வர " ஆல் டீட்டைல்ஸ் ஐ நோ " என இல்லாத காலரை தூக்கி விட்டாள் தாரா...சத்யன் அவளை பார்த்து இரகசியமாய் சிரிக்க அவள் கண்களாளே எச்சரித்து வைத்தாள்...
நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடியதில் மகிழ்ச்சியுடன் களிந்தது நேரம்....
மரைன் சிட்டி...
காலை பத்து மணி போல் எழுந்து வந்த அரானா தன் கண்களை கசக்கியாவாறே மாடியின் முதல் படியில் கால் வைத்தாள்.... தானாய் கீழ் சென்ற படிகள் அடித் தளத்தை அடைந்து தரையில் கால் வைப்பதற்கு முன் காற்றில் பறந்துக் கொண்டிருந்தாள்...என்ன நடக்குது என கண்களை விரித்து பார்த்தவளது முன் தன் குறும்பு புன்னகையுடன் நின்றிருந்தான் ஃத்வருன்... அவன் பின் தில்வியா மற்றும் ராவனா சிரித்துக் கொண்டு நின்றிருந்தனர்....
அதிர்ச்சியுடன்
அரானா : நீங்க எங்க டா இங்க???
லியான் : நான் தான் காலை ல கால் பன்னி வர சொன்னேன்...
அரானா : ரியலி ????
மித்ரான் : ரியலி தான் டி..
தில்வியாவும் ராவனாவும் இவன்களை கண்டதில் ஓடிச் சென்று அணைத்துக் கொண்டனர்...
மித்ரான் : தங்கச்சீஸ் எப்டி டி இருக்கீங்க??
இருவரும் : சூப்பரா இருக்கோம் டா..
இன்னும் ஃத்வருன் அரானாவை தன் கைகளிள் தூக்கிக் கொண்டே நிற்பதை கண்ட ராவனா அவனின் காதருகில்...
ராவனா : மச்சான் இரெண்டு வர்ஷம் களிச்சு இப்போ தான் தில்வி யும் நீயும் பாத்துர்க்கீங்க.... இவள கீழ இறக்கி விடாம அவளையே தூக்கி சுத்து னு கோவப்படப் போறா பாரு... என ஏத்திவிட.... டக்கென கீழே இறக்கி விட்டான்...
தில்வியா அவனை குழப்பமாய் நோக்கவும் அவனோ ஈஈ என இழித்து வைத்தான்....
லியான் : சரி அவன் எங்க டா???
ஃத்வருன் : எவன் டா???
அரானா : டிவின் எங்க டா??? என ராவனாவை ஓரக் கண்ணால் பாத்துக் கொண்டே கேட்டாள்....
தில்வியா : அவன் நைட் தான் டி வருவான்...
மித்ரான் : ஓஹோ.... என இழுத்துக் கொண்டே கண்மணிகளை மட்டும் அங்கும் இங்கும் சுழல விட்டான்... அவனின் அவள் தெரிய மாட்டாளா என.... அனைவரும் அவன் யாரை தேடுகிறான் என தெரிந்தும் அவளின் மிரட்டலால் வாய் மூடியிருக்க...
அப்போது மித்ரானின் பின் புறம் மணி ஆடும் சத்தம் மெலிதாய் கேட்க..... அவனின் தேடல் வேட்டையால் அதை கவனிக்க தவறினான் மித்ரான்.... சரியாக மெல்லமாய் அவன் புறம் வந்தவள் அவனின் இமைகளை தன் கைக் கொண்டு மூடும் முன் அவளின் கையை தன் வசம் கொண்டு வந்தான் மித்ரான்.... அச்சச்சோ என முளிக்கத் தொடங்கினாள் நம் மித்ரானின் அவளான நரா.... பப்பிமா என்ற அழைப்பில் நான் உன்னை அறிவேன் என்றது நிறம்பி இருந்தது....
ராவனா : நான் தான் சொன்னனே அவன் கண்டு புடிச்சிடுவான் னு....
நரா : ஏதோ ஒரு தில்லு ல வந்தோட்டேன்... விற்ற முடியுமா... அதான் ட்ரை பன்னீட்டேன்...
லியான் : குட்டிமா எப்டி டா இருக்க???? என்று நராவை கட்டிக் கொண்டு கேட்டான்...
நரா : போடா... பிரிச்சு வேர வச்சிட்டு நலம் விசாரிக்கிறியா????
லியான் :ஈஈஈஈ அதான் நானே திரும்ப சேத்து வச்சிட்டேனே...
ராவனா : அதனால தான் உன்ன விட்டு வச்சிர்க்கோம்...
தில்வியா : இல்லன்னா பீஸ் பீஸ் ஆய்ருப்ப டா...
லியான் : நன்றி தெய்வங்களே...
ஃத்வருன் : சரி நம்ம ஆராய்ச்சி பத்தி எதாவது தெரிஞ்சிதா???
டிவின் : நான் ஒன்னு கண்டு புடிச்சிர்க்கேன் என்று கத்திக் கொண்டே உள்ளே வந்தான்.... ( லாஸ்ட் பார்ட்டில் மடிக்கணினியில் வந்த குரலின் சொந்தகாரன்)
அரானா : என்ன டா இவ்ளோ சீக்கிரமா வந்துட்ட???
அதற்கு பதிலளிக்காமல் ராவனா வை கட்டிக் கொண்டு ஐ மிஸ் யூ டி என வசனம் பேச தொடங்க....
ஆர்வத்தில் அவனை பிரித்த நரா... " என்னத்த டா கண்டு புடிச்ச???? " என கேட்க....
ராவனா : கொஞ்மாவது எங்கள பீல் பன்ன விடேன் டி...
அப்போது சரியாய் லியானின் அறையில் அலாரம் போன்ற ஒலி கேக்கத் தொடங்கியது....
இவங்க மொத்தமா... 8பேரு...
லியான்
அரானா
மித்ரான் - நரா
ஃத்வருன் - தில்வியா
டிவின் - ராவனா
எட்டு பேருமே விஞ்ஞானிகள்... லியானோட ப்லனால மத்த ஐந்து பேரும் வெவ்வேறு இடத்துல படிச்சாங்க....
லியான்
ஆல்ரெடி உங்களுக்கே தெரியும்.... புத்திசாலி.... திறமைசாலி... சொல்லீட்டே போகலாம்... கொஞ்சம் கோவக்காரன்... ஒரு விஷயத்த எடுத்தா அத ஆராயாம இருக்க மாட்டான்... 22 வயசுலையே சிறந்த விஞ்ஞானி ன்னு அவார்ட் வாங்குனவன்...
மித்ரான்
அன்பானவன் அறிவானவன்... நண்பர்களுக்காக எதையும் செய்வான்.... நல்ல பையன்...ஒரு வேல பாத்தா சீரியசா வேல செஞ்சு முடிச்சிக் குடுப்பான்....
ஃத்வருன்
அமைதி.... பொருமையை கை ஆல்பவன்.... தீர ஆராய்ந்து முடிவெடுப்பன்.... நண்பர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்வான்.... எவ்ளோ பெரிய புதிரா இருந்தாலும் இரெண்டு நிமிஷத்துல பதில் கண்டுபுடிச்சிடுவான்...
டிவின்
குறும்பு... சேட்டை பன்னிக்கிட்டே இருப்பான்...சிரிக்க வக்கிறது தான் இவன் வேல... எப்ப எது கேட்டாளும் செய்வான்... ஆனா சார் படிக்க ஆரம்சாரு யாரு கூப்ட்டாலும் திரும்ப மாட்டாரு...அவனுக்கு பாடம் நடத்துர ப்ரப்பசரே கூப்டலாம் "திரும்ப முடியாது போடா" ன்னு சொல்லீட்டு புக்கு குள்ள போய்டுவான்... அவ்ளோ பெரிய புத்தக புழு...
அரானா
சேட்டகாரி... பேச்ச கேக்கமாட்டா... கிருக்கு... குட்டிபிசாசு.... நிறையா சொல்லிட்டே போலாம்... எல்லாம் அவதான்... கும்பகர்ணன் தங்கச்சி.... ஆனா செயல்ல கெட்டிக்காரி....
தில்வியா ராவனா
இரெண்டும் ஒரே மாரி தான் இருக்கும்... எல்லாத்துலையும்.... ஒன்னா அடிச்சிக்குட்டி அப்ரம் ஒன்னாவே சேந்துர்வாங்க.... சேந்து ஒரு விஷயத்துல இறங்னா அவ்ளோ சீக்கிரம் வர மாட்டாளுங்க... படிப்பு டாப்பு.... அழகிகளின் கூட்டம்தான்....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro