மர்மம்-36
தாராவின் திடீர் அலரலில் அனைவரும் மேலே விரைந்தோட... ஒரு பக்கம் தாரா பேய் பிடித்ததை போல் அமர்ந்திருக்க... அரானாவோ காரணமே இல்லாமல் ஓவென ஒப்பாரி வைத்து கொண்டிருந்தாள்.... இதை கண்டு அதிர்ந்த நாயகர்கள் அவர்களருகில் ஓட.... தாரா திடீரென சுயநினைவடைந்து " நோ " என கத்தினாள்....
மீனா : அடியேய் ஏன் டி இந்த கத்து கத்துர....
அனாமிக்கா : கூல் கூல்... என்னாச்சு.. டி...
தாரா : அது... அ.து... லி..லி... என சொல்ல முடியாமல் தினற
வினய் : லியான்க்கு என்ன மா...
அரானா : அவன் சொல்ல சொல்ல கேக்காம விண்வெளிக்கு போய்ட்டான்.... என பெருங்குரலெடுத்து கத்த....
இதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் மாரடைப்பு வராத குறைக்கு நிற்க.... அழுது கதறிக் கொண்டிருந்த அரானா மெல்ல மெல்ல மூச்சு தினறலில் தினற... அதை அதிர்ச்சியில் கவனித்திறாத நாயகர்கள் கண்களை விரித்து வைத்து எதையோ பவென பார்த்து கொண்டிருக்க.... அவளின் கேவல் அதிகமாகிய சில நொடிகளில் சுயநினைவு வந்து அவளருகில் ஓடிய சத்யா...
சத்யா : அரா... அரா... அழாத டி.... அச்சோ அரா... கூல்.. ஒன்னும் இல்ல... என அணைத்து சமாதனப்படுத்த முயல.... அவனுள் ஒன்றிய அரானா...
அரானா : ப்லீஸ் என்ன வி..ட்டு போகாத... நா உன்ன உன்ன இழந்துருவனோன்னு பயமா.. பய..மா இருக்கு... பேச்ச கேழு... போகாத டா... என லியானென நினைத்து சத்யாவிடம் உலரினாள்....
சத்யா : அய்யோ எங்கையும் போல மா... அவனுக்கு ஒன்னும் ஆகாது.... கூல் ... கூல்.... காய்ஸ்... எல்லாரும் இங்க வாங்க... என கத்த.... அவனின் சத்தத்தில் நிஜ உலகிற்கு வந்த அனைவரும் அரானாவின் நிலை கண்டு துடித்து போய் அவளருகில் வந்தனர்...
அஜிம்சனா : அரானா... கூல் அழாத டி... அண்ணா எங்கையும் போய்ர்க்க மாட்டான்...
அரானா : என்ன விட்டு போகாத.... என ஜெபம் போல் அதையே தான் கூறிக் கொண்டிருந்தாள்....
தாரா : அ..ஜி.. அஜி... இத இத நீ செக் பன்னு... நா நா.. பதட்டத்துல கூட தப்பா பாத்துர்க்கலாம்... அந்த எரிக்கல்லுக்கு 3 கோடி கிலோ மீட்டர்ல தெரியிரது என்னன்னு பாரு... எனக்கு பய... பயமா இருக்கு... என நடுங்கி கொண்டே அஜிம்சனாவிடும் லியானின் லப்டப்பை கொடுக்க.... படபடப்புடன் அதை வாங்கிய அஜிம்சனா தானும் அஞ்ச கூடாது... என முடிவெடுத்து அதில் புகுந்தாள்.... 3 கோடி தூரத்தில் தாரா கூறியவை போலவே ஏதோ போவதை கண்ட அஜிம்சனா உள்ளூர நடுங்கிக் கொண்டே அதை சூப்பர் லென்சஸ் மூலம் ஜூம் செய்ய.... அங்கு மிதப்பதை கண்டவள் அதிர்ந்தாள்....
அல்ட்ரா மூன்
எதனிலோ தன் முழு கவனத்தையும் புதைத்திருந்த நிரன்... திடீரென தன் உடல் அதிர்வதை உணர்ந்து... அதிர்ச்சியில் அருகிலிருந்த அஜிம்சனாவின் ரோபோட்டிடம் சமாளிக்க கூறிவிட்டு கழிவறையை நோக்கி ஓடினான்.... ஓர் தனி அறையில் அடைந்ததும் தன் உடலில் மறைத்து வைத்திருந்த அவனின் தட்டையான போனை எடுத்தான்... அதில் அஜிம்சனாவினது பெயரை கண்டவன் உடனே கனெக்ட் செய்ய... அங்கோ... படபடப்புடன் அவளின் குரல் ஒலித்தது...
அஜிம்சனா : நிரா... நிரா... டேய் நிரா...
நிரன் : சொல்லு டி... என்ன ஆச்சு... ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க....
அஜிம்சனா : நீ எங்க இருக்க... அங்க என்ன நடக்குது... லியான் அண்ணா எங்க டா... என கேள்விகளை அடுக்க...
நிரன் : நா இங்க கிங்கோட ராயல் ஸ்பேஸ் க்லப்ல (Royal space club )இருக்கேன்...
அஜிம்சனா : என்ன அங்கையா...
நிரன் : ம்ம் ஆமா... என்றவனின் குரலிலிருந்த ஏதோ ஒன்று இப்போது குறைந்திருக்க....
அஜிம்சனா : லியான் அண்ணா எங்க.... என சட்டென கேட்க....
தன் குரலில் இருந்த மாறுதலை உணராமல் அவள் நொண்ணனை பற்றி கேட்கிறாள் என புலுங்கிக் கொண்ட நிரன்... அதை வெளிகாட்டாது...
நிரன் : என் லப்ல இருக்கான்...
அஜிம்சனா : கன்ஃபார்ம்??? நல்லா தெரியுமா...
நிரன் : ஒரு நிமிஷம் இரு ... நா க்ராவிக்கு கனெக்ட் பன்றேன்... என கூறியவன்.... க்ராவியின் செர்வருடன் கனெக்ட் செய்ய....
க்ராவி : எஸ் பாஸ்...
நிரன் : க்ராவி லியான் கிட்ட செர்வர குடு
க்ராவி : ஓக்கே பாஸ்...
லியான் :சொல்லு டா... என மெதுவாய் வந்தது அவனின் குரல்...
அஜிம்சனா : டேய் அண்ணா நீ அங்க தான இருக்க... எங்கையும் போகலையே...
லியான் : ம்ம்ம் போப்போறேன்...
நிரன் அஜிம்சனா : எங்க டா
லியான் :விண்வெளிக்கு...
நிரன் : டேய் ஏன் டா...
லியான் : வட்ரன் டிஃப்யூஸ் ஆய்டுச்சு டா...
நிரன் : நல்லது தான...
லியான் : அத வச்சு தான் டா.. நம்மளால எரிக்கல்ல அழிக்க முடியும்.... அத நா திரும்ப ஆன் பன்னனும்...
அஜிம்சனா : அண்ணா... இது விளையாடுர விஷயமில்ல... நீ போகக்கூடாது... அங்க இருக்க நிரனோட ஆப்ஜெக்ட் வச்சு ன்யூ மிஸைல உருவாக்கு...
லியான் : இட்ஸ் நாட் பாசிபில்... வட்ரனால மட்டும் தான் அந்த எரிக்கல்ல அழிக்க முடியும்... அதுக்கு நா விண்வெளிக்கு போய் தான் ஆஹனும்...
அஜிம்சனா : சரி உண்மைய சொல்லு... நீ எங்க இருக்க...
லியான் : லப்ல தான்....
அஜிம்சனா : அப்போ ஸ்பேஸ்ல எரிக்கல்க்கு 3 கோடி தூரத்துல இருக்குரது யாரு...
நிரன் : வாட் வெளிய போய்ட்டியா.... டேய் உனக்கு போக கூடாதுன்னு சொல்லிட்டு தான டா வந்தேன்....என இவன் பட்டாஸாய் வெடிக்க...
லியான் : நா எங்கையும் போல டா... அங்க இருக்குரது உன் ரோபோட்டு...
நிரன் : அன்... அதுவா...
லியான் : ஆமா.... அத அனுப்பி அப்ரமா நா போலாம்னு இருக்கேன்... உங்களுக்கு நம்பிக்கை வரனும் ல... நா இப்போ போய்ட்டு... அத சரிபன்னிட்டு.... திரும்ப வந்துருவேன்... கவலப்படாத....
அஜிம்சனா : அண்ணா சொன்னா கேளு... நீ போகாத...
லியான் : என் ஒருத்தன் பாதுகாப்ப பாத்துட்டு ஒரு கிரகத்தையே நா இழக்க விரும்பல... நா கெளம்புறேன்... என் கவரர் இருக்கு... எனக்கு ஒன்னும் ஆகாது பயப்புடாதீங்க... என கட் செய்தான்...
நிரன் : நாம என்ன சொன்னாலும் அவன் புடிச்ச முயலுக்கு மூணு காலுங்குரத அவன் மாத்த மாட்டான்...
அஜிம்சனா : ம்ம்ம் சரி நா ப்ரமா பேசுறேன்...டாடா... என கட் செய்து விட.... நிரனுக்கு புஸ்ஸென போய் விட்டது.... " கடைசி வர ஏன் இங்க இருக்கன்னு கேட்டியா நீ.... இங்க வருவல்ல அப்போ பாத்துக்குறேன் ... உன்ட்ட பேசவே மாட்டேன் டி " என அஜிம்சனாவை அர்ச்சித்த அதே நேரம்.....
" ரொம்ப அர்ச்சன பன்னாத டா.... உன்ன பத்தி எனக்கு தெரியாதா.... எதுவா இருந்தாலும் சேர்ந்து எதிர்ப்போம்... கவலப்படாம போடா " என அஜிம்சனாவின் குரல் அருகில் கேட்க...
அதிர்ச்சியின் கண்களை அகல விரித்த நிரன்.... " இப்டி ஒரு ரெக்கார்டே நாம கேட்டதில்லையே " என யோசிக்க..... " இனிமே கேப்ப " என்று மீண்டும் அவள் குரல் பதிலளிக்க.... " கேடி என் டாலர் கூட கனெக்ட் பன்னீர்க்கா " என்பதை புரிந்துக் கொண்டான் நிரன்.... அவன் நிலையும் சகஜமாக அங்கிருந்து வெளியேறினான்....
பூமி
அஜிம்சனா : காய்ஸ்.... அது லியான் அண்ணா இல்ல... நிரன்
ராவனா : என்னது அண்ணாவா... அவன் ஏன் டி போனான்...
தாரா : அவனுக்கு மட்டும் தனியா சொல்லனுமா...
அஜிம்சனா : அவன் இல்ல டி... முழுசா சொல்லை விடுங்க என்ன... நிரனோட ரோடோட்...
அனைவரும் :ஒஒஒ
அஜிம்சனா : ஆனா இப்போ அண்ணா ஸ்பேஸுக்கு போறான்.... என கூற.... சற்றே அழுது அழுது கலைத்து போய் சத்யாவின் அணைப்பிலே கண்ணயர்ந்திருந்த அரானாவை அனைவரும் சட்டென திரும்பி பார்க்க.... அவள் தூங்குவதை உறுதி படுத்தியதும்....
அனாமிக்கா : என்னடி சொல்ற...
அஜிம்சனா : ஆமா இப்போ வேற வழி இல்லன்னு அவனே போய்ட்டான்.... வட்ரன் டிஃப்யூஸ் ஆய்ட்டான்... அத சரி பன்ன இவன் போயே ஆகனுமாம்...
சக்தி : எதுக்கு இவனுக்கு இந்த வேலை... அவனுக்கு எதாவது ஆய்டுச்சுன்னா என்ன பன்றது...
ஸ்வத்திக்கா : இறைவா... நீ தான் அவன காப்பாத்தனும்....
ஃத்வருண் : கூல் காய்ஸ்... அவன் வந்துருவான்... நாமலும் அவனுக்கு சரியா ஹெல்ப் பன்னனும்.... வாங்க வேலைய கன்ட்டின்யூ பன்னலாம்... லேட் பன்ன வேண்டாம்...
சத்யா : நா அரானாவ ரூம்ல விட்டுறேன்... யாரும் அவள டிஸ்டர்ப் பன்ன வேண்டாம்.... டைம் டிடெக்டிங் வேலைய
தாரா : நானே பாத்துக்குறேன்...
மீனா : அத நா பாத்துக்குறேன்...
ரியா : நா அவளுக்கு ஹெல்ப்பா இருக்கேன்...
சத்யா : சரி... என அரானாவை தூக்கி கொண்டு கீழே சென்றான்...
அல்ட்ரா மூன்....
மூன்று மணி நேம் கடந்திருக்க.... தன் கண்களை அரணாய் பாதுகாத்துக் கொண்டிந்த பச்சை கன்னாடியை தலைக்கு கொடுத்த நிரன்... அவன் முன் இருந்த காப்பர் ஐயர்ன் மற்றும் சில்வரால் ஆன வெளிப்பகுதியை கொண்ட ஒரு மெகா பந்து இருந்ததை பார்த்துக்கொண்டிருந்தான்.... அதை கண்டவன்.... பெருமூச்சொன்றை விட்டுவிட்டு.... சில பல ஒயர்களை அதனுடன் இணைத்தான்.....
அவன் முன் ஒரு ஸ்க்ரீன் உருவாகிட.... அதில் தன் இரு கைகளால் ஏதேதோ கோலம் போட்டவன்.... அதில் தெரிந்த ஆப்ஷன்களையெல்லாம் சரி பார்த்துக் கொண்டே ஒரு பெட்டியில் அந்த பந்தை அடைத்தவன்.... அதை தூக்கி கொண்டு வெளியேறினான்....
வெளியே சற்றே தொலை தூரத்தில் ஒரு மாபெரும் புல் டௌஸர் இன் உருவத்தில் இருந்த வாகனம்..... கர் கர்... என சத்தம் எழுப்பியவாறிருக்க..... அதன் முன் சென்றவன்.... அந்த பெட்டியை திறந்து... அந்த பந்தை வெளியிலெடுத்தான்....
நிரன் : அஜிம்சனா.... என அழைக்க.... உள்ளிருந்து வந்த அஜிம்சனாவின் ரோபோட் அவனிடம் ஒரு கன்னாடி டம்ளரை கொடுக்க.... அதை பத்திரமாய் வாங்கியவன்.... அந்த பந்தில் ஒரு பட்னை அழுத்தி.... மற்றுமோர் பட்டனை அழுத்தினான்... உடனே அது தேங்காயை உடைத்ததை போல் அழகாய் திறந்துக்கொள்ள.... அதனுள் அந்த கன்னாடி டம்ளரை வைத்தவன்.... அந்த மிக பெரிய வாகனத்தின் முன் அந்த பந்தை வைத்தான்....
அவ்விடத்தை சுற்றி மூனில் இருக்கும் அரசாங்க விஞ்ஞானிகள் அனைவரும் கூடியிருந்தனர்.... ஏறகுறைய நாழாயிரத்திலிருந்து ஆறாயிரம் பேராவது கூடியிருப்பர்.... அவர்களனைவருக்கும் நடுவில் நிரன் சர்வசாதாரணமாய் நிற்க...... மற்றைய அனைவரின் முகத்திலும் வேர்வை முத்து முத்தாய் பூத்து கொண்டிருந்தது.... நிரனோ எவ்வித உணர்வும் இல்லாது துடைத்தெடுத்ததை போல் நின்றான்.... பத்தடி தூரத்தில் இருந்தனர் அனைவரும்.... அப்போது அனைவரும் எதிர்பார்த்ததை போல் அந்த மிகப்பெரிய வாகனம் அந்த பந்தை நோக்கி மெல்ல ஊர்ந்து வர.... அனைவரும் அவரவர் கண்களை கூராக்க.....
சட்டென வேகமெடுத்த அந்த வாகனம் மிக வேகமாய் மின்னலை தோற்கடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருவதடி தூரத்தை கடந்திருக்க.... அனைவரும் பதறி போய் அப்பந்தை தேட.... அவர்கள் சரியாய் அதை கண்டறியும் முன்னே.... மீண்டும் அதன் மேல் ஏறி இறங்கியது அந்த வாகனம்... இதை போல் ஏறகுறைய ஒரு இருவது முறை ஏறியதும்.... புழுதி பறக்க.... ஓரிடத்தில் நின்றது அந்த வாகனம்.... அனைவரும் அந்த பந்தை தேட... நிரனோ கண்களில் புன்னகை பூத்திட நிமிர்ந்து நின்றான்.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro