மர்மம்-31
லியான் : காய்ஸ்... இது அதிர்ச்சியாக டைம் இல்ல.... வி னீட் டு வொர்க் குயிக்....
சத்யா : சரி என்ன செய்யனும் னு சொல்லு...
லியான் : எனக்கு ஒரு டைம் டிடெக்டர் வேணும்...
ஆர்வின் : அது எதுக்குடா...
ராவனா : இப்பொதிக்கு... தூரத்துல வர்ர அந்த எரிக்கல்ல டைம் கொண்டு மட்டும் தான் ஸ்டடி பன்ன முடியும்... என அவளின் முன்னிருந்த ஸ்க்ரீனிலிருந்து கண்களை எடுக்காமல் கூறினாள்...
தாரா : நா அத எடுத்துட்டு வரேன்... என உடனே கீழே ஓடினாள்...
ஃத்வருண் : டேய் மச்சான் சக்தி... வினய்... இந்த பாக்ஸ்ல உள்ள ஒயர்ஸ அங்க மேல இருக்க அன்ட்டனா ஓட கனெக்ட் பன்னுங்க டா... என வீட்டில் டீவி பார்க்க உள்ள கேபிலின் அன்ட்டனாவை காட்டினான்... உடனே சுவரில் ஏரி... குரங்கை போல் இருவரும் தாவி அந்த அன்ட்டனா அருகில் நெருங்கினர்...
நரா : அடியேய் ஒரு ஹெல்ப் பன்னுடி... இந்தா இத அந்த எரிக்கல்ல நோக்கி உயர்த்தி பிடி... என ஒரு மைக்கை போலிருந்த பெரிய இயந்திரத்தை 🔈ஸ்வத்திக்காவின் கையில் கொடுத்து விட்டு அதனுடனே தொங்கிக் கொண்டிருந்த சிகப்பு நிற ஒயரை அவளின் ஆராய்ச்சி மடிக்கணினியுடன் இணைத்தாள்.... ஸ்வத்திக்காவும் அந்த மைக்கை பிடித்துக் கொண்டே நின்றுக் கொண்டாள்....
தில்வியா : ஆர்விணண்ணா... ஒரு நிமிஷம் இங்க வா... என அழைத்தாள்... அவனும் உடனே அவளருகில் ஓடினான்
ஆர்வின் : என்ன தில்வி
தில்வியா : அது அண்ணா... இது என்னன்னு தெரியல... ரொம்ப நேரமா அந்த எரிக்கல் பின்னாடி வந்துக்குட்டு இருக்கு... லைக் அந்த எரிக்கல்ல தடுக்குர மாரி... இத நா மெடர்மான் ல பாத்தது இல்ல... அதனால தான் கேக்குறேன்...
ஆர்வின் : இது ஸட்டிலைட்னு நெனக்கிறேன்...
தில்வியா : சரி ண்ணா... நா பாத்துக்குறேன்....
ஆர்வின் : அது என்னன்னு கன்ஃபார்மா சொல்லை தெரியல தில்விமா... சோ கெர்ஃபுல்..
தில்வியா : ஓக்கே அண்ணா...
தாரா : இந்தாங்க... டைம் டிடெக்டர் என ஓடி வந்தாள் ஒரு இயந்திர பெட்டியை தூக்கி கொண்டு... அதை வாங்கிய அரானா உடனே எங்கோ ஓடினாள்... விரைந்து வந்த லியான் தாராவிடம் அவனின் மடிக்கணினியை கொடுத்து விட்டு அரானாவிடம் ஓடினான்...
விரைந்து செயல்பட்டாள் தாரா... லியானின் மடிக்கணினி அவளுக்கு முற்றிலும் புதியதாய் இருந்தாலும் அவளுக்கு புரிய வேண்டுமென்பதற்காய் அவள் கீழே சென்று மேலே வந்த சிறிது நேரத்திலே அவளுக்கு ஏற்றார் போல் மாற்றியிருந்தான் லியான்...
அதை தன் வசப்படுத்திய தாரா உடனே புதிய மென்பொருளுடன் அவளின் விண்கல ஆராய்ச்சிகளுடன் அதை இணைத்து செயல் பட தொடங்கினாள்... தாராவின் ஆராய்ச்சிகளுக்கு இந்தளவு நவீனத்தின் அபார உயரத்தில் இருக்கும் அந்த எரிக்கல்லை வெகு சீக்கிரத்தில் கண்டுப்பிடிக்க இயலாது தான் என்றாலும்... அவள் ஆராய்ச்சிகளுடன் இணைந்த லியானின் அதிநவீன முறைகள் தாராவின் சாதாரண ஆராய்ச்சி முறைகளையே விண்வெளியையும் தாண்ட வைத்தது.... அவளின் மூளை திறனை சோதித்துத்தான் பார்த்தது அந்த எரிக்கல்...
லியானின் தீவிர விழிகள் எதையோ சுழன்றுக் கொண்டே இருக்க... அரானாவினருகில் ஓடியவன் தாரா கொண்டு வந்த டைம் டிடெக்ட்டரை அவளின் மடிக்கணினியுடன் இணைத்து அதை முழுதாய் ரீசெட் செய்தான்.... அரானாவின் ஆராய்ச்சி முறையுடன் இணைந்த அடுத்த நொடியே அந்த இயந்திரம் மெடர்மான் நவீனத்தின் வகையுடன் தன் தன்மையை மாற்றிக் கொண்டது...
அந்த டிடெக்ட்டரை புதிதாய் உயிர்பித்த லியான்... உடனே அரானாவின் மடிக்கணினியில் தெரிந்த எரிக்கல்லை நோக்கி அந்த டிடெக்ட்டரின் அன்ட்டன்னாவை வளைத்தான்.... டீன் டீன் என ஒரு சில நொடிகள் ஒலியெழுப்பிய இயந்திரம் பின்.... அமைதி அடைந்து விண்கலத்தை அளக்க தொடங்கியது....
அரானாவின் மடிக்கணினி இரண்டாய் பிரிந்து.. ஒரு பக்கத்தில்.. அந்த எரிக்கல்லும்... மறுபக்கத்தில் டைம் டிடெக்ட்டரின் கோடிங் அனைத்தும் வந்து கொண்டிருந்தது....
ஸ்வத்திக்கா : இன்னும் எவ்ளோ நேரம் டி இதே மாரி நா புடிக்கனும்... என வலித்த கையை பார்த்து கொண்டே கேட்டாள்...
நரா : கொஞ்ச நேரந்தான் அப்டியே இரு டி... என கண்களை மடிக்கணினியை விட்டு அகற்றாமல் கத்தினாள்...
டிவின் : லி... உன் வட்ரன் ( நியாபகம் இருக்கும் னு நெனக்கிறேன்... ) பூமிய சுத்தி 300 கிலோ மீட்டர்ல இருக்கு...
லியான் : அதோட டரெக்ஷன மாத்து டா...
டிவின் : சரி டா....
மித்ரான் : டேய் ஷ்ரவா
ஷ்ரவன் : சொல்லு டா.... என டிவினுக்கு உதவிக் கொண்டிருந்தவன் இவனை பார்த்து கத்த...
மித்ரான் : உன்னோட மெட்டல் கீ வேணும்.. குடு என கத்த
ஷ்ரவன் : சரி இந்தா பிடி... என அங்கிருந்து தூக்கி எறிய... அப்பக்கம் ஒரு இயந்திரத்தை தூக்கி கொண்டு நிரனருகில் சென்று கொண்டிருந்த சத்யா அதை ஒரு கையில் லாவகமாய் கேட்ச் பிடித்து திரும்பி பாராமலே மித்ரானை நோக்கி தூக்கி எறிய... அதை லபெக்கென கெட்ச் பிடித்த மித்ரான் உடனே அதை அவனின் ஒரு குட்டி பெட்டிக்குள் இருந்த சிறிய இடைவேளையுள் செழுத்தினான்.... அவன் அருகிலே நின்றிருந்த அஜிம்சனா புரியாது விழிக்க..
மித்ரான் : என்ன அஜிமா அப்டி பாக்குர...
அஜிம்சனா : நீ என்னண்ணா பன்னிக்கிட்டு இருக்க...
மித்ரான் : இதோ இருக்குல்லை இந்த பெட்டி மெட்டலால தான் வொர்க் ஆகும்... அதுக்கு தான் மெட்டல் கீ...
அஜிம்சனா : அது என்ன பன்னும்...
மித்ரான் : அந்த எரிக்கல் பின்னாடி ஒரு சட்டிலைட் இல்லனா... இரும்பால ஆன ஏதோ ஒன்னு வந்துக்குட்டே இருக்கு... அத ஸ்டடி பன்னி உடனே அந்த எரிக்கல்ல விட்டு நகர்த்தனும்... அதுக்கு நாம காந்தசக்திய தான் யூஸ் பன்னனும்... இந்த பொட்டி இருக்குல்ல... இது தேவையான காந்தசக்தி அப்சர்ப் பன்னி அந்த மெட்டல் சட்டிலைட்ட தனியா நகர்த்த கூடிய வேவ்ஸ அனுப்பும்...
அஜிம்சனா : இங்க இருந்துக்குட்டே வா...
மித்ரான் : ம்ம்ம் இல்ல...
அஜிம்சனா : அப்ரம்...
மித்ரான் : எங்களோட சில ஆராய்ச்சி பொருட்களே பூமிய சுத்திக்கிட்டு இருக்கு... அதுல என்னோட ஒரு ஆர்பிட்டரும் இருக்கு... அத தான் இதோட கனெக்ட் பன்னி வேவ்ஸ் அனுப்ப போறேன்...
(ஆர்பிட்டர் என்றால் ஒரு கிரகத்தை சுற்றி வரும் பொருளோ அல்ல எரிக்கல்லோ அல்லது சட்டிலைட்களோ அல்லது கிரகங்களோ ஆர்பிட்டர் என அழைக்கப்படும்.... எடுத்துக்காட்டாக நம் பூமியின் ஆர்பிட்டர் நிலா.... நிலாவை சந்திராயன் 2 அனுப்பியபோது ஒரு ஆர்பிட்டர் ஒரு வருடம் சுற்றி வரும் இன்றளவும் சுற்றுகிறது... )
அஜிம்சனா : ஓஹோ... என கூறவுமே மித்ரானின் மடிக்கணினி அவனின் ஆர்பிட்டர் இங்கிருக்கும் மெட்டல் அப்சர்வருடன் இணைந்து கொண்டதாய் செய்தியை காமித்தது...
அடுத்த சில நொடிகளிள்.... அவன் மடிக்கணினியிலே அவனின் ஆர்பிட்டரில் இருக்கும் ஒரு கெமரா அங்கு நிகழ்வதை ஒளிபரப்பியது... அந்த ஆர்பிட்டருக்கு நேரெதிராக ஒரு 30 40 ஆயிரம் மைல்களில் இருந்தது அந்த எரிக்கலும்... அதன் பின் வந்து கொண்டிருந்த அந்த இயந்திரமும்....
மித்ரானின் கட்டளைக்கு இணங்கி பூமியினருகில் ஒரு 1 கோடி மைல் தூரத்தில் இருந்த அந்த ஆர்பிட்டர் உடனே அந்த எரிக்கல்லை நோக்கி விரைந்தது....
டிவினின் மடிக்கணினியோ அவனின் கட்டுப்பாட்டை இழந்ததை போல் அவன் சொல்வதை கேட்காமல் அந்த எரிக்கல்லை சுற்றி சுற்றியே வந்ததே தவிற அதை நோக்கி செல்லாமல் போக்கு காட்டிக் கொண்டிருந்தது...
ஷ்ரவன் : என்ன டா ஆச்சு...
டிவின் : தெரியல டா... ரொம்ப நேரமா என் ஆர்டர கேக்க மாட்டுது...
ஃத்வருண் : டேய் கேமரா ரக்ஒயர (USB) பிடிங்கி விடு டா... அது என் லப்போட கனெக்ட் ஆய்ருக்கு என கத்த.... மேலிருந்து கீழே குதித்த வினய் அவன் கூறிய ஒயரை டிவினின் மடிக்கணினியிலிருந்து அகற்ற.... அடுத்த நொடியே டிவினின் மடிக்கணினி அவன் கட்டுப்பாட்டிற்குள் நுழைந்து... மாபெரும் அதிர்ச்சியை தூக்கி போட்டது....
டிவின் : காய்ஸ்... என பெருங்குரலெடுத்து கத்த....
மும்மரமாய் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் ஒரு நொடி இவனை நோக்கி திரும்ப... அவர்களில் இருவர் மிக மும்மரமாய் தங்கள் தலையையே மடிக்கணினியுள் விட்டுக் கொண்டு இவனை கவனிக்காமல் இருந்தனர்... அரானாவும் தாரவும் தான்....
அனாமிக்கா : என்ன ஆச்சு...
டிவின் : பெரிய ப்ராப்லமாய்டுச்சு...லியானோட வட்ரன் மிசைல் அதோட கட்டுப்பாட்ட இழந்து இப்போ அந்த எரிக்கல்ல நேருக்கு நேரா தாக்க போகுது.... என கத்த....
லியான் : என்ன டா சொல்ற.... என அதிர்ச்சியில் இவனும் கத்த....
டிவின் : ஆமா டா.. நா இன்னும் டரெக்ஷன கூட மாத்தல... ஆனா அது நேரா இப்போ அந்த எரிக்கல்ல நோக்கி தான் போய்ட்டு இருக்கு... எரிக்கல்லோட வேவ்ஸ் வட்ரன அது பக்கம் இழுக்குதோ என்னவோ....
சத்யா : என்ன டா அந்த எரிக்கல்ல போய் தாக்குனா... என்ன
ஃத்வருண் : அது சின்ன விஷயமில்ல மச்சான்.... லியானோட அந்த வட்ரன் அளவுல வேணா அந்த எரிக்கல்ல விட ரொம்ப சின்ன தான் இருக்கலாம்... ஆனா அதோட சக்தி அப்டி கிடையாது.... நேரா அந்த எரிக்கல் மட்டுமே பூமிய தாக்குனா பூமில டிஸஸ்டர் வெடிச்சு அழியும்... ஆனா அந்த மிஸைல் போய் எரிக்கல்ல தாக்குனா.... அது இருக்குர இடத்துலையே வெடிச்சு சிதறும்...
நரா: அப்டி மட்டும் அது வெடிச்சுதுன்னா..... அந்த எரிக்கல்ல சுத்தி 40 கோடி மைல் தூரத்துல இருக்க எல்லா கிரகங்கள் நிலாக்கள் சூரிய குடும்பங்கள்ன்னு எல்லாமே உருதெரியாம அதோட அதிர்வுல வெடிச்சு செதறிடும்....
ராவனா : இல்லனா கிரகங்கள் இருக்குர ஆர்பிட்ல இருந்து தவறி... நிலையில்லாம ஒன்னோட ஒன்னு இடிச்சு அழியும்.... எந்த ஸைட்ல போனாலும் இப்போ நமக்கு பிரச்சனை தான்.... என பதற்றத்தில் கத்தினாள்....
மீரா : இப்போ என்ன பன்றது....
லியான் : ஒரே வழி தான்.... என அர்த்தம் பொருந்திய தன் பார்வையை அனைவரையும் நோக்கி செழுத்த.... அவனின் கண்களில் தெரிந்த தீவிரமே ஏதோ வில்லங்கத்தை தான் முடிவெடுத்திருக்கிறான் என சொல்லாமல் சொல்லியது....
---------------------------------------------------------------
தங்களின் உணர்வுகயும் கருத்துகளையும் மறவாமல் தெரிவியுங்கள் இதயங்களே....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro