Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மர்மம்-30

ஷப்பா என மூச்சை இழுத்து விட்டனர் நம் நாயகர்கள்....

நிரன் : ஒரு ரோபோட்ட உருப்புடியா உன்ன மாரி உருவாக்க மாட்டியா டி...

அஜிம்சனா : அத டிஸைன் பன்னது நீ தான டா

நிரன் : உன் உணர்வுகள நீ தான குடுத்த...

அஜிம்சனா : அத நீ தான அசெம்பில் பன்ன... என இருவரும் முட்டி மோதிக் கொண்டிருக்க.... மற்றவர்கள் இருவரையும் பிரித்து அமர வைத்த அதே நேரம்..... திடீரென கேட்ட சில பல அலரல்களை கேட்டு வெளியே ஓடி வந்தனர்.... பலர் அந்த கம்பெனியிலிருந்து ஓடிக் கொண்டிருந்தனர்.... அனைவரும் ஓடி சென்று ஜன்னல் வழியே வெளியே பார்க்க...

அங்கோ பலர் விழுந்தெழுந்து தலை தெறிக்க ஓடி கொண்டிருந்தனர்.... வீதியில் பல பேர் பயந்து எங்கெங்கோ ஓடிக் கொண்டிருந்தனர்... வீடு உணவகம் வங்கி என அனைத்திலும் இருந்த மக்கள் வெளியேறி எங்கோ பயந்து ஓடிக் கொண்டிருந்தனர்.... அங்கங்கு டீவி சனல்கள் தாருமாறாய் மாறிக் கொண்டிருந்தது... காதுகளை கிளித்தெறியும் ஒலியுடன் பயங்கரமாய் தொலைகாட்சிகளின் ஓசைகள் வெளி வந்தது... அங்கங்கு சில பல ரேடியோகளும் ஓடிக் கொண்டிருந்தது போலும்.... அப்போது எதற்சையாய் விண்ணை கண்ட சத்யா அதிர்ந்து அனைவரையும் அதன் புறம் திருப்ப.... அங்கோ நூற்றுக்கு 99 ஆவது இடத்தில் வந்து கொண்டிருந்த அந்த எரிக்கல்... இப்போது 60 அருகில் தெரிய.... அதை கண்டு தமிழ்நாட்டு நாயகர்கள் சாதரணமாய் இருந்தாலும்... மெடர்மான் நாயகர்கள் அதிர்ச்சியடைய.... அங்கிருந்த ஒருவனின் கண்கள் தீவிரமாய் செயல் பட தொடங்கியது....

லியானின் கண்கள் தீவிரமடைந்ததை கண்ட நிரன்.... அவன் மூளையில் ஓடுவதை உணர இயலாமல் குழம்பி போனான்....

நிரன் : லியான்....என்ன டா இது....

லியான் : அது... என இவன் தொடங்கும் முன்னே....

சக்தி : அது ஒன்னும் இல்ல மச்சான்... சும்மா தர்மன குழப்பி விட்ரதுக்காக லியான் பன்ன குளறுபடி தான் அது...

தில்வியா : என்னண்ணா சொல்ல வரீங்க....

ஷ்ரவன் : அது வெரும் ரிஃப்லெக்ஷன் தான் தில்விமா...

அரானா : ஆனா பாக்க அப்டி இல்லையே

சத்யா : லியான்.... உண்மைய சொல்லு இதுக்கும் அந்த ப்லக்ஹோல்க்கும் எதாவது சம்மந்தம் இருக்கா...

அஜிம்சனா : ப்லக்ஹோலா.... அது ஏன் இப்போ இங்க வந்துச்சு..

சத்யா : அன்னைக்கு சொன்னான்ல.... ப்லக்ஹோல்ல புவியீர்ப்பு சக்தி இருகு... மத்தபடி அதுக்கும் நம்ம கிரகங்களுக்கும் சம்மந்தம் இல்லன்னு... ஆனா சம்மந்தம் இருக்கு... நா அன்னைக்கே நெனச்சேன்... ஏதோ இருக்குன்னு... நா இப்போ பூமிக்கு வந்ததே அந்த ப்லக்ஹோல் வழியா தான்.... என சத்தமாய் கூற.... அனைவருக்கும் அதிர்ச்சியில் கண்கள் விரிந்தது....

லியான் :சத்யா... உண்மை தான்... இப்போ அத பத்தி விவரிக்க டைம் இல்ல டா... நா நிச்சயமா எல்லாருக்குமே அத பத்தி முழுசா சொல்றேன்... இப்போ நாம இந்த இடத்த விட்டு போகனும்...

அனாமிக்கா : டேய் இங்க என்ன டா நடக்குது... எதாவது புரியிர மாரி சொல்லுங்க டா...

அப்போது சரியாக தாராவின் மொபைல் பலத்த சத்தத்துடன் அலர.... அதை உடனே அட்டன் செய்தவள் காதில் வைக்க.... அப்புறம் என்ன கூறப்பட்டதோ... முதலில் அதை கேட்டு சாதரணமாய் இருந்தவள்.... மீண்டும் அப்புறத்திலிருந்து ஏதோ கூறப்படவும் அதிர்ச்சியில் மொபைலை கீழே போட்டுவிட்டாள்...

ரியா : என்னடி ஆச்சு...

தாரா : அங்க தெரியிரது ரிஃப்லக்ஷன் இல்ல டி...

அனைவரும் : அப்ரம்....

லியான் : உண்மையான எரிக்கல்....

தாரா பதிலளிக்கும் முன்னே அங்கே உரக்க ஒலித்தது அவனின் குரல்...

ஆர்வின் : என்னாடா சொல்ற..

லியான் :ஆமா டா...  அது பூமிய தாக்க கிட்டதட்ட 34000000 கிலோ மீட்டர் தூரத்துல வந்துக்குட்டு இருக்க உண்மையான நம்ம பூமிய விட ஒரு மடங்கு பெரிய எரிக்கல்...

நிரன் : என்னடா சொல்ற... உனக்கு முன்னாடியே தெரியுமா

லியான் : இப்போ அத பத்தி பேச நேரமில்ல டா...

நரா : டேய் அண்ணா... மரியாதையா பாதியாவது சொல்லு டா... ஒன்னும் புரியாம எங்களால ஒன்னும் பன்ன முடியாது....

லியான் : சரி... இந்த எரிக்கல்.... 34 கோடி தூரத்துல இருக்க அந்த ப்லக்ஹோல்ல இருக்க ஒரு திமிலோட பகுதி... அதாவது விண்வெளி சுத்திக்கிட்டு இருக்க ஏதோ ஒரு ஆப்ஜக்ட்ட அந்த ப்லக்ஹோல் உள்ள இழுக்குரப்ப.... எதனாலையோ இடிச்சு ஒரு சின்ன பகுதி தனியா பிரிஞ்சிடுச்சு... அதோட மோஷன் படி... அது மூன்று நாள்க்கு முன்னவே பூமி புறமா திரும்பீடுச்சு... நாளைக்கு மதியத்துக்குள்ள பூமிய அந்த எரிக்கல் தாக்கிடும்... அதுக்குள்ள நாம அத விண்வெளிலையே வெடிக்க வைக்கனும்.... என படபடவென கூறி முடிக்க....

ஆர்வின் : இதப்பத்தி ஏன் டா உலகத்துல உள்ள யாருக்கும் முன்னாடியே தெரியல...

லியான் : ஏன்னா... அந்த எரிக்கல் ஒரு ப்லக்ஹோலோட பகுதி... இதுவர பூமிலையும் மெடர்மான்லையும் ஒரு ப்லக்ஹோல முழுமையா ஆராய்ச்சி பன்னதில்ல... அதப்பத்தி நமக்கு மூணுல ஒரு பகுதி கூட முழுசா தெரியாது... அந்த ஒரு கருந்துளைக்குள்ள ஏகப்பாட்ட மர்மங்கள் இருக்கு... நமக்கே தெரியாம என்னென்னமோ இருக்கு டா.... பூமில பூமிய எதாவது எரிக்கல்லோ இல்ல ஏதோ ஒரு பொருளோ நெருங்குரத உங்க விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் கண்டுப்புடிப்பாங்க... ஆனா ஒரு கருந்துளையோட பகுதிங்குரதுனால அது எந்த வகையான பொருள்ன்னு நமக்கு தெரியாது... அதுக்கு ஏத்தமாரி இங்க எந்த ஃபைண்டிங் மிஷினும் இல்ல.... அதனால பூமிக்கு மேல நிலா இருக்க தூரத்துல வந்தா மட்டும் தான் அவங்களால ஏதோ ஒன்னு நெருங்குதுன்னே கண்டுப்புடிச்சிர்க்க முடியும்....

தாரா : ஆமா இப்போ அதான் சொன்னாங்க.... அந்த எரிக்கல் எங்க இருந்து வந்துச்சுன்னு தெரியல... அது பாக்குரதுக்கும் வித்யாசமா இருக்காம்... அது எந்த வகையான எரிக்கல்ன்னும் கண்டுப்புடிக்க முடியல... இதுல முக்கியமான விஷயம் என்னன்னா.... அந்த எரிக்கல் பூமிய நெருங்குனத இன்னைக்கு மதியம்தான் சரியாவே கவனிச்சிர்க்காங்க.... இன்னுமே அத பத்தி முழுசா சொல்லி முடிக்கலையாம்....

அவர்களுக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்க....

லியான்  : அதிர்ச்சியடைய இது நேரமில்ல.... வாங்க என் கூட.... என அனைவரையும் தள்ளி கொண்டு உடனே அந்த கம்பெனியை விட்டு நகர்ந்தான்... மறைமுகமாய் கார்மன் மற்றும் தர்மனும் இவர்களாலே கடத்தப்பட்டனர்....

அவர்களின் வீட்டை வெகு விரைவில் சென்றடைந்தனர்... சாலை முழுவதும் மரியலாய் இருந்தும் எப்படியோ சமாளித்து இங்கே வந்து விட்டனர்... கார்மன் தர்மன் இருவரையும் ஒரு அறையில் அடைத்து விட்டு உடனே மாடிக்கு ஓடினர்.... லியான் அவனின் வாட்சை உருவி அதை கீழே வைத்து ஏதோ ஒரு பட்டனை அழுத்தினான்... அடுத்த இரண்டாவது நொடி அங்கு அவன் ஆராய்ச்சி கூடமே உருவாகி இருந்தது... அடுத்தடுத்து மெடர்மான் நாயகர்கள் அனைவரும் அவரவர் வாட்ச்சை கலட்டி அதே போல் செய்து அவர்களின் ஆராய்ச்சி கூடத்தையும் உருவாக்கினர்....

மீனா : இப்போ என்ன பன்னபோறோம்...

லியான் : லிஸென் காய்ஸ்... இப்போ அந்த எரிக்கல்ல நாம விண்வெளிக்கு வெளியவே வெடிக்க வைக்கனும்... அதுக்கு என்ன பன்றதுன்னே தெரியல... ஒரு எடுத்துக்காட்டு சொல்லனும்னா.... இங்க ஒரு படம் இருக்கு... அது பேரு " டிக் டிக் டிக் " அதுலையும் இந்த மாரி தான் பன்னீர்ப்பாங்க...

அஜிம்சனா : எக்ஸம்ப்பிலுக்கு தான் சொல்றான்... உடனே படம்பாக்க போய்டாத டி... என படத்தின் நினைவில் மிதந்த மீராவை அடித்தள்...

டிவின் : இப்போ நம்ம டாஸ்க்கே இது தான்... எப்டியாவது உடனே புது மிஸைல் உருவாக்கனும்....

லியான் : யு ஆர் ரைட் டிவின்...

ஷ்ரவன் : ஆனா அந்த எரிக்கல்ல வெடிக்க வக்கிர அளவு மிசைல் உருவாக்குறதுக்கு நம்ம கிட்ட நேரமில்லையே டா...

ஃத்வருண் : பூமிலையுமே எந்த நாட்டுலையும் அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த ஒரு ஏவுகணை இல்ல

ஸ்வத்திக்கா : அப்போ அந்த நாட்டு கிட்ட கூட இல்லையா...

அனைவரும் அவளை மூக்கு முட்ட முறைக்க...

ஸ்வத்திக்கா : இல்ல படத்துல அதான காம்ச்சாங்க... அதான் கேட்டேன்....

லியான் : இருக்கலாம் தங்கச்சி மா... ஆனா அந்த அளவுக்கு சக்தி அதுக்கு இருக்க வாய்ப்பில்ல... ஏன்னா... ஒரு நார்மல் மிஸைல்னால பூமியையே ஒன்னும் பன்ன முடியாது... சில சேதாரம் மட்டும் தான்... ஆனா அந்த ஒரு எரிக்கல்லே நம்ம பூமிய விட ஒரு மடங்கு பெருசா இருக்கு... அதனால இந்த மிஸைல்ஸ்லாம் நிச்சயமா அத ஒன்னுமே பன்ன முடியாது...

தில்வியா : அப்போ வேற என்ன தான் பன்றது.....

தாரா : நாம எதாவது செஞ்சே ஆஹனும்... நாம தாமதிக்கிர ஒவ்வொரு வினாடியும் பூமி அழியிரதுக்கு நாமலே விட்ட வழி.... அந்த எரிக்கல் நேராவே பசிப்பிக்ஓஷன (Pacific ocean ) நோக்கி தான் வருது... ஒரு வேளை பசிப்பிக் ஓஷன் (Pacific ocean ) விழுந்துச்சுன்னா... நிச்சமா நம்ம உலகம் தாங்காது... அது இருக்க சைஸுக்கு நம்ம உலகத்த சுத்தியிருக்க பசிபிக் ஓஷன் (Pacific ocean )  மொத்த சுனாமியா எழும்....

நிரன் : இல்ல தாரா... அது இன்னும் சிவியரா இருக்கு.... அந்த எரிக்கல்... பசிப்பிக்ல (Pacific )  இல்ல.... அன்ட்டர்ட்டிக்காக்கும் (Antarctica)  பசிப்பிக்கோட எல்லைலயும் தான் விழ போகுது.... அங்க விழுந்தா பூமியோட அடிமட்டமா இருக்க பனிபிரதேசமே ஒன்னு கடலுக்குள்ள மூழ்கி பயங்கரமான சுனாமி உருவாகும்... கடல்ல உருவாகுர அதிர்வுகள்னால நிலநடுக்கம் வர வாய்ப்பிருக்கு.... இல்லனா.... டெக்ட்டானிக் ப்லேட்ஸ் நகர்ந்து... பூமி முழுக்க நிலநடுக்கம் வரும்.... மொத்தத்துல நிலநடுக்கமும் சுனாமியும் வர்ரது நிச்சயம்... என அவனின் செயலியை பார்த்துக் கொண்டே கூறினான்....

அனைவருக்கும் மனம் திக் திக்கென இருந்தது.... அவர்களால் அச்சத்தில் வாயையும் திறக்க முடியவில்லை... அதிர்ச்சியில் அனைவருமே சிலையாயினர்.... 2004 வந்த சுனாமி தான் உலகளவிலே அத்துனை மரணத்தையும் பயங்கரமான சருக்கலையும் கொடுத்து சென்ற சுனாமி... அப்படி இருக்க.... இந்த நிலமையோ இன்று என்ன... நாளை பூமி இருக்குமா என்றே அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது....

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாட்டின் விண்வெளி மையங்களும் அந்த எரிக்கல்லின் அளவை கண்டு மலைத்து போயினர்.... அதை என்ன செய்து தடுக்க முடியும் என்ற வழியையும் அறியாது அனைவரும் மூச்சடைப்பு வராத குறையாக வாழ நடுங்கிக் கொண்டிருந்தனர்.... பெரும்பாலும் உலக மக்கள் அனைவரும் இறைவன் படி சாய்ந்தனர்.... உலகம் அழிவை நெருங்கிவிட்டதாய் பலர் கூக்குரலிட்டனர்.... குழந்தைகள் நிகழ்வது புரியாது அழுது ஓய்ந்தனர்....
-------------------------------------------------------------------------------

முக்கிய செய்திகள்

வட்பட் செய்திகள்... தீராதீ வாசிப்பது...

இங்கு கூறபட்டவை அனைத்தும் கற்பனையே... எவரும் அஞ்ச வேண்டாம் என்றும் நிகழப்போவது எதுவானாலும் எழுத்தாளரை தண்டிக்க வேண்டாமென்றும் அறிவிக்கிறோம்...

மீண்டும் நாளை __ மணிக்கு செய்திகள் வாசிக்கப்பைடும்

தங்களிடமிருந்து விடைப்பெறுவது உங்கள் தீராதீ 😜   
DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro