மர்மம்-28
தனி அறையில் தனிமையில் மூழ்கி கிடந்த ரியா தன் தோழிகளின் அராஜகங்களை ஒரு சிறிய ஜன்னல் வழியே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.... விரைவிலே அவள் வெளிவர போகிறாளென நினைத்து நிம்மதி அடைந்தாள்.... அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அவள் இருந்த அறையின் கதவு தடதடவென தட்டப்பட்டது... பயந்துக் கொண்டே அதனருகில் சென்றவள்... அக்கதவின் ஓரத்தில் நின்று கொள்ள.... அடுத்த நொடி சத்தமே இல்லாமல் அக்கதவு உடைந்து கீழே விழுந்தது... கதவை உடைத்தவரை கண்டு அதிர்ச்சியுற்றாள் ரியா...
தர்மனின் கேபினுள் நுழைந்த பெண்கள் அவரை அர்ச்சித்துக் கொண்டிருந்த அதே நேரம் செக்யூரிட்டி ரிஷப்ஷனிஸ்ட் ஸ்டாஃப் என அனைவரையும் ஒதுக்கி விட்டு அதிரடியாய் கம்பெனியினுள் நுழைந்து தர்மன் கேபினுள் நுழைந்தனர் ஷ்ரவன் வினய் சக்தி மற்றும் ஆர்வின்.... அவர்களை கண்டு தர்மன் அதிர.... அவரை நிமிர்ந்து நோக்கிய நாழ்வரும்...
ஷ்ரவன் : ஐம் அஸிஸ்டென்ட் கமிஷ்னர் ஆஃப் போலீஸ் ஷ்ரவன் சக்ரவர்த்தி என நிமிர்த்தலாய் கூற....
சக்தி : ஐம் அன் சென்ட்ரல் ப்யூரோ ஆஃப் இன்டியாஸ் அன்டர்க்ரௌன்ட் ஆஃபீஸர் ஷக்தி சக்ரவர்த்தி.... என கூற....
வினய் :ஐம் அன் சென்ட்ரல் ப்யூரோ ஆஃப் இன்டியாஸ் அன்டர்க்ரௌன்ட் ஆஃபீஸர் வினய் சக்ரவர்த்தி... என கூற...
ஆர்வின் : ஐம் அன் சென்ட்ரல் ப்யூரோ ஆஃப் இன்டியாஸ் அன்டர்க்ரௌன்ட் ஆஃபீஸர் ஆர்வின் சக்ரவர்த்தி என கூறினான்....
இந்நாழ்வர் கூறியதை நம்ப இயலாமல் பெண்கள் ஐவரும்(தாரா அனாமிக்கா மீனா மீரா ஸ்வத்திக்கா) வாயை பிளந்துக் கொண்டு அவர்களை காண... பின் தர்மனை நடுங்க வைக்க போட்ட நாடகம் என அவர்களே முடிவெடுத்துக் கொள்ள.... உண்மை அதுவல்லவே....
சக்ரவர்த்தி க்ரூப்ஸா என பேரதிர்ச்சியடைந்தார் தர்மன்...
மெடர்மான்
சத்யாவின் முன் அமைதியும் ஆபத்தையும் நிறைத்தவாறு கரையை தீண்டிக் கொண்டிருந்தது ட்ரன் சிட்டியின் பெருங்கடல்.... அதை கண்ட சத்யா அதிர.... வண்டியிலிருந்து இறங்கிய கார்மன் சத்யாவையும் இறங்க வைத்து அவனை தவிர்த்து மற்றவர்களை அனுப்பி வைத்தார்... பின் சத்யாவை அழைத்துக் கொண்டு கரையுள் நுழைந்தார்...
சத்யாவின் மூளையில் அழைப்பில்லாமலே லியான் விவரித்த பெர்முடா ட்ரையங்கல் (Bermuda triangle ) மர்மம் வந்து போனது.... பெர்முடா ட்ரையங்கல் (Bermuda triangle ) வழியா வா பூமிக்கு வந்து போகிறார் இவர் என அதிர்ந்தவாறே அவர் பின் நடந்தவன்.... கடலுல் இவர் நகர்வதை கண்டு இன்னுமே அதிர்ந்தான்.... பெர்முடாவில் சிக்கினால் பூமிக்கு செல்கிறோமோ இல்லையோ... பரலோகம் செல்லப்போவது நிச்சயம் என வக்கீலான அவனே அறிவான்... கார்மன் பின் நடந்து வந்துக் கொண்டிருந்தவன் ஓரிடத்தில் கால் வைத்ததுமே ஓட்டி வைத்தார் போல் அப்படியே நின்றான்... முன் சென்ற கார்மன் திரும்பி பாராது முன்னேறி கொண்டிருந்தார்...
அதே இடத்தில் நின்ற சத்யா... அவன் காலை உயர்த்தி கீழே பார்த்தான்... அங்கு விட்டு விட்டு எரியும் ஒரு சிறிய ஒளியை தாங்கியவாறு ஒரு செயலி இருந்தது... அதனருகிலே லியான் என பட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்க.. அதை பட்டென எடுத்தவன் மீண்டும் கார்மனை பின் தொடர்ந்தான்... நடையை தொடர்ந்து கொண்டே இப்போது எடுத்த செயலியை நிச்சயம் லியான் தனக்காக விட்டுசென்றிருக்கிறான் என நம்பி முன்பே அவன் கொடுத்த செயலியை மறைவிடத்திலிருந்து எடுத்து இரு செயலிகளைளும் இரு கைகளிலும் வைத்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு திடீரென இரண்டும் ஒன்றை ஒன்றன் பால் ஈர்க்க படுவதை கவனித்தான்... அதை கண்டு அதிர்ந்தவாறே இரண்டையும் அருகருகே எடுத்து வந்தவனின் கனிப்பை பொய்யாக்காது இரண்டும் காந்தம் போல் சர்ரென ஒட்டிக் கொண்டு.... அதில் காந்தசக்தி இருப்பதனை சொல்லாமல் சொல்லியது.... இரண்டும் இணைந்ததும் அது ஒரே செயலியாய் ஆகி விட... இப்போது என்ன செய்வதென தெரியாமல் இருந்தவனுக்கு முன் சென்று கொண்டிருந்த கார்மன் திடீரென நடையை நிறுத்தி விட்டு ஒரு கற்குகை முன் நின்றார்....
இந்த குகை எங்கிருந்து வந்தது என்பதை போல் சத்யா பேந்த பேந்த விளிக்க.... கார்மனின் கையிலிருந்த ஒரு ரிமோட் சத்யாவிற்கு தெரியாமல் அவரின் கோட்டிற்குள் மறைந்துக் கொள்வது சரியாய் சத்யாவின் கண்களில் விழுந்தது... ஏதோ ஒரு மின்சார வசதியை கொண்டு மெடர்மான் வாசிகளே அறிய கூடாதென மெடர்மானிலே இருக்கும் மிகப்பெரிய கடலில் இயற்கையாய் அமைந்திருக்கும் இந்த கற்குகையை எதனாலோ கண்கள் அகப்படாதவாறு மறைத்து வைத்திருக்கிறார் என புரிந்துக் கொண்டான்...
அதனுள் நுழைந்த கார்மனை இவனும் பின் தொடர போக... திடீரென அவன் மூளை... " டேய் லூசு பயலே... அப்டியே எங்க போர.... எதாவது கேள்வி கேட்டுட்டு போ டா... அப்ரம் எல்லாம் உனக்கு தெரிஞ்சது தான்னு அவனுக்கு தெரிஞ்சிடும் டா... " என தட்டி எழுப்ப...
சத்யா : ஸர் எங்க போறோம்... என வரவழைத்த அதிர்ச்சியுடன் கேட்க...
இந்த கேள்விக்காகவே காத்திருந்ததை போல் திரும்பி அவனை நோக்கியவர்....
கார்மன் : அங்க போறதுக்கு ஒரு குருக்குவழி... வா... என முன்னே நடந்தர்...
இவனும் கேள்வி ஒன்னு கேட்டாச்சு... என்று அவரை பின் தொடர்ந்தவாறே நகர்ந்தான்... அந்த குகையில் நுழைந்து பத்தடி எடுத்து வைத்ததுமே அங்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஒளியும் மறைந்து விட ஆச்சர்யத்துடன் திரும்பி பார்த்தவனுக்கு அவன் வந்த வழி அடைத்திருப்பதை கண்டு இன்னும் அதிர்ச்சியடைந்தான்... முன் சென்ற கார்மனோ என் வழி எப்போதும் நேர் வழி என்பதை போல் நடந்துக் கொண்டே தான் இருந்தார்.... இவனும் சலித்தவாறே பின் தொடர்ந்தான்....
அப்போது திடீரென ஏதோ ஒன்று சத்யாவே இழுப்பதை போல் தோன்றவும்.... சற்றே மிரண்டவாறு வந்தவனுக்கு திடீரென அவன் மறைவிடத்தில் வைத்த அந்த செயலி வெளி வந்து காற்றில் மிதப்பதை கண்டு பதறியவன் அதை பிடிக்க முயல... அதுவோ அவனுக்கு போக்கு காட்டி அங்குமிங்கும் மிதக்க.... அவன் தாவி தாவி அதை பிடிக்க முயன்றுக் கொண்டே இருக்க... கார்மன் நல்லவேளையாக இவை எதையும் கவனிக்காமல் எங்கிருந்தோ வரும் அந்த விசையை நோக்கியே நடந்துக் கொண்டிருக்க.... எப்படியோ சத்யா அதை பிடித்ததும்.... அவன் வாட்ச்சில் திடீரென பல்பெரிந்ததும்.... அவன் காதில் இணைக்கப்பட்ட செயலியில் கேட்டதை அவன் மூளை உழ்வாங்கியதும்.... அதிர்ச்சியில் உச்சக்கட்டத்தின் மேல் மாடியில் இருந்தான்.....
தான் கேட்டது நெனவா... இல்லை கணவா... என குழப்பிக் கொண்டவனுக்கு... அது உண்மை தான் என நிரூபிக்கவே " கருந்துளையை நெருங்குகிறோம்... புவியீர்ப்பு அதிகமாய் உள்ளது " என்று தமிழில் ஒரு முறையும்.... " We are near to black hole.. gravity is Much more here " என ஆங்கிலத்திலும் ஒரு முறை கேட்டது....
அப்போது சட்டென நின்ற கார்மன்.... சத்யாவை பிடித்து அருகிலிழுத்து....
கார்மன் : லியான்.... குதி... என கூற....
அவன் ங என்று முளிக்க... கார்மனோ கீழே கை காட்டவும்.... அவன் அதை நோக்கி குனியவும் ஏதோ ஒரு விசை அவனை உள் இழுத்தது... தடுமாறி நின்றவன் அப்போதே கவனித்தான் அவர்கள் இருவருக்கும் ஒரு பத்து அடி முன் ஒரு மாபெரும் குளி.... சுற்றி இருப்பதை ஏதோ ஒரு விசை கொண்டு இழுப்பதும் நகர்த்துவதுமாய் இருப்பதை கண்டு இன்னும் அதிர்ந்தான்....
சத்யா: ஸர்... இதுவா குருக்கு வழி?
கார்மன் : ஆமா குதி....
சத்யா : ஸர்.... என வேண்டுமென்றே இழுக்க
கார்மன் : குதி லியான்... என அவரே அதனருகில் இழுத்து சென்று உள்ளே தள்ளிவிட்டார்....
சத்யா : கொலகார பாவி.... என கத்திக் கொண்டே கீழே விழுந்தான்.... நல்ல வேளையாக விசையின் ஓசையால் கார்மனுக்கு காதில் விழவில்லை.....
சத்யாவின் காதிலிருந்த செயலி தான் பாட்டிற்கு பேசி கொண்டே வந்தது....
" கருந்துளையில் இருக்கிறோம்.... 30 கோடி மைலை கடந்து விட்டோம்.. "
சத்யா : நுப்பது கோடி மைலா.... விழுந்து நுப்பது செக்கென்ட் கூட ஆகலையே... என புலம்ப.... கார்மனை தான் சுற்றிலுமே காணவில்லை....
சத்யா : எங்க அவர காணும்.... என்ன கொலப்பன்ன தள்ளிவிட்டுட்டு அவரு பாட்டுக்கு வேர வழியில பூமிக்கு வராரோ...
" பூமிக்கு செல்லும் வழி இது தான்.... " என அந்த செயலி பதிலளித்தது...
சத்யா : அய்யையோ இந்த லியான் பக்கி எதாவது பேய ஏவிவிட்டுட்டானா.... என அப்படியே உலர...
" நான் பேய் இல்லை... இயந்திரம் " என்று மீண்டும் பதிலளித்தது....
அவன் கையிலிருந்த அந்த செயலி காற்றில் மிதந்துக் கொண்டே அவனை பின் தொடர... அவனோ புவியீர்ப்புள்ளதால் ஏதோ ஒன்றை நோக்கி விழுந்துக் கொண்டிருந்தான்....
சத்யா : என்ன நீ பதிலுக்கு பதில் பேசுற...
" நான் ஒரு இயந்திரம்... என்னால் பேச முடியும்... புரிந்துக் கொள்ள முடியும்... விஞ்ஞானி லியான் புவியீர்ப்பை கண்டுப்பிடிக்க என்னை வடிவமைத்துள்ளார்... அவர் சந்தேகப்பட்டதை போலவே இந்த பாதை மெடர்மானில் தொடங்கி பூமியில் முடிகிறது... நடுவில் இருக்கும் கருந்துளை (Black hole) இவ்விரண்டு கிரகங்களுக்கும் வழியாய் எக்காரணத்தினாலோ அமைந்துள்ளது... இன்னும் சரியான காரணத்தை கண்டறியவில்லை " என கூறியது...
அப்போதே சத்யாவிற்கும் அன்று லியான் ப்லக்ஹோல் தான் பூமிக்கும் மெடர்மான்க்கும் உள்ள வழி என்று கண்டுப்பிடித்ததை தான் நம்மிடமிருந்து மறைத்திருக்கிறான் என்றும்.... அவன் வடிவமைத்ததை போலவே அந்த செயலி புவியீர்ப்பு அதிகமாய் உள்ள இடத்தில் புவியீர்ப்பு இல்லாத இடத்தில் மிதப்பதை போல் இருக்கிறது என்றும் சரியாய் யூகித்துக் கொண்டான்... சத்யாவால் லியானின் அதிபுத்திசாளித்தனத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.... அவன் சிந்தனையை கலைக்கும் பொருட்டு அச்செயலி மீண்டும்....
" 60 கோடி மைல் கடந்து விட்டது... " என கூற.....
இன்னுமா பூமி வரல.... என சிந்தித்து கொண்டிருந்த சத்யா.... தொப்பென எங்கோ கீழே விழுந்தான்.... விழுந்தவன் உடலெல்லாம் மண் ஒட்டிக் கொள்ள.... அதை தட்டிவிட்டு எழுந்தவன் பெருங்கடலை கண்டு அதிர்ந்தான்....
இருள் சூழ்ந்த வாணம்.... அழகாய் ஜொலிக்கும் பௌர்ணமி நிலவு... அங்கங்கு மினிக்கிக் கொண்டிருந்த நச்சத்திரங்கள்.... தொலைவிலிருந்த நிலா என அனைத்தும் நீ பூமிக்கு வந்துவிட்டாய் என சத்யாவிற்கு சொல்லாமல் சொல்லியது....
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro