Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மர்மம்-23

அனைவரும் கீழிறங்கி வந்து " டேய் சத்யா " என கத்த.... மடிக்கணினியில் கண் பதித்திருந்த சத்யா என்கிற லியான்... நிமிர்ந்து... " வந்தாச்சா " என கேட்டான்...

ஆர்வின் : நீ மட்டும் தனியா என்ன டா பன்னிக்கிட்டு இருக்க....

லியான் : போர் அடிக்குதுன்னு சும்மா கன்டி க்ரஷ் வெளையாண்டுக்குட்டு இருந்தேன்.... என போனை காட்டினான்....

மீரா : சரி வாங்க எல்லாரும் சாப்டலாம்... என டைனிங் டேபிலுக்கு அழைத்து செல்ல... லியான் யாரும் அறியாமல் மடிக்கணினியுடன் கனெக்ட் செய்த தன் வாட்ச்சை டிஸ்கனெக்ட் செய்து விட்டு எழுந்து வந்தான்.... மடிக்கணினி தானாய் ஆஃப் ஆகியது...

மெடர்மான்

கார்மன் : சபாஷ்... யு ஆர் அ அல்ட்ரா ஜீனியஸ் லியான்... (ultra genius) அல்ட்ரா ஜீனியஸ் நீ சாதிச்சிட்ட... ஒன் இயரா உன்னோட க்ரேட் சீனியர் சைன்ட்ஸ்ட் ஃப்ரஃபஸர்ஸாலையே (Great senior professors )முடியாத காரியத்த நீ வெறும் ஐந்தே நிமிஷத்துல ஒன் அவர்க்கு மேல நிக்க வக்கிர எஸ்டப்லிஷ்மென்ட்ட குடுத்துர்க்க... யு ஆர் யுனீக்... எப்டி செஞ்ச லியான்... இட்ஸ் அன்பிலீவபல் என்று புகழ்ந்து தள்ள... நம் சத்யனோ சிரிக்க முடியாமல் சிரித்து வைத்துக் கொண்டிருந்தான்...

சத்யா : பின்ன தனி தனியா பிரிச்சு விட்டவனுக்கு சேர்க்க தெரியாதா டா...

கார்மன் : அன் என்ன லியான் சொன்ன...

சத்யா : அ அது... இது என் கடமைன்னு சொன்னேன் ஸர்... என தரையை அளந்துக் கொண்டே கூறினேன்...

கார்மன் : ஓக்கே லியான்... இன்னைக்கு நைட் நா உன்ன ஒரு இடத்துக்கு அழச்சிட்டு போவேன்... நீ அங்க எதனாலையோ செயழிலந்து போன ஒரு எர் மிஷின சரி செய்யனும் என கூற.... டப்பென நிமிர்ந்து அவரை நோக்கினான் சத்யா.... லியானின் கனிப்பை நினைத்து தன் நண்பனை மெச்சிக் கொண்டான்....

சத்யா : போகலாம் ஸர் போகலாம்..

கார்மன் : நாம இன்டியாங்குர சிட்டிக்கு போக போறோம்... தயாரா இரு...

சத்யா : இன்டியா நாடுயா டுபாக்கூர்... என ஒரு வேகத்தில் கூறிவிட... அதன் பின்பே தான் கூறியதை உணர்ந்த லியான் கண்களை விரித்து கார்மனின் புறம் திரும்ப... அவரோ அதிர்ச்சியில் நிற்க....

சத்யா : பின்ன என்ன ஸர்... இன்டியனம்ட்டம் நம்ம மெடர்மான்ல இருக்க பெரிய கன்ட்ரி... அத போய் சிட்டின்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே... என வாய்க்கு வந்ததை அடித்து விட...

தனக்கு தெரியாமல் நாடு வந்துவிட்டதா என நினைத்த கார்மன்... அதன் பின்.... இவனுக்கு அங்க(பூமி) இருப்பது தெரியவா போகுது... அவன் இங்க உள்ளததான் சொல்லீர்ப்பான்... என தனக்குள்ளே கூறிவிட்டு...

கார்மன் : அன்.. ஆமா ஆமா லியான்... சரி... நீ போய்ட்டு வா...

லியான் : ரொம்ப நன்றி ஸர்... என அங்கிருந்து விடைப்பெற்று வெற்றி புன்னகையுடன் வெளியே வந்தான் சத்யா....

அவன் வாட்ச்சில் ஏதோ சத்தம் கேட்டு அதை எடுத்தவன்... அதில்... " சீக்கிரம் செர்வர ஆடியோவோட கனெக்ட் பன்னு " என்ற கோடிங் வந்திருக்க... உடனே கனெக்ட் செய்ததும் உணவு உண்டுவிட்டு தன் அறைக்கு வந்த லியான் அவனின் காதிலிருந்த செயலியை ஆன் செய்தான்....

லியான் : என்ன டா வெளிய வன்ட்டியா....

சத்யா : ஹப்பா வன்ட்டன் டா... எப்பா டேய் ப்லன் போடும் போது தெரியல டா... நா இங்க வந்ததுல இருந்து பாதி எலச்சிட்டேன் டா... எத்தன பேரு வரானுங்க... இரெண்டு நாளா நிரன் கூடவே இருந்ததால தப்பிச்சேன்... இவன் கிட்ட தனியா மாட்டிக்கிட்டேன் டா...

லியான் : அதான் நான் உன் கூட எல்லா நேரத்துலையும் ஹெல்ப்பா இருக்கனே... அப்ரம் என்ன டா....

சத்யா: நல்லா ஹெல்ப் பன்ன டா... கோடிங் கோடிங்கா அனுப்பி என்ன கம்ப்யூட்டராவே மாத்திட்ட...

லியான் : வேற வழி... இனிமே உன் காதுலையே சொல்றேன் கவல படாத...

சத்யா : டேய் அத விடு டா.. எப்டி டா இரெண்டே நிமிஷத்துல வேளைய முடிச்ச

லியான் : பின்ன... நா லியான் ல... பிரிச்சவனுக்கு சேர்க்க தெரியாதா... ஈசி டா...

சத்யா : அதல்லா நீ பன்னிடுவன்னு தெரியும்... கடைசி நேரத்துல ஏன் டா போன...

லியான் : இங்க எல்லாரும் மாடில இருந்து வந்துக்குட்டு இருந்தாங்க டா... அதான் உடனே முடிச்சிட்டு போய்ட்டேன்...

சத்யா : கார்மன் இந்த வேலைய பாப்பாருன்னு எப்டி டா கெஸ் பன்ன....

லியான் : மெயில் வரும் போதே... எதாவது காரணம் இருக்கும் னு எனக்கு தோனுச்சு... என்ன கூப்ற்றுக்காருன்னா... ஒரு கேஸ குடுத்து வாதாடவா சொல்ல போறாரு... இத கண்டுப்புடி அத கண்டுப்புடின்னு தான சொல்லுவாரு...

சத்யா : ஹ்ம்...

லியான் : சரி... அந்த மிஷின நா சொன்ன மாரி டிஃப்யூஸ் பன்னிட்டீங்கல்ல...

சத்யா : நேத்து நீ கோடிங் அனுப்புன உடனே அந்த ஆடிட்டோரியம்க்கு போகாம இரெண்டு பேரையும் அங்க அழைச்சிட்டு போய் டிஃப்யூஸ் பன்னிட்டு தான் டா மறுவேலை பாத்தேன்... ஆனா....

லியான் : என்ன டா ஆனா....

சத்யா : அவரோட தொழிலே ஹோல்ட் ல போய்டுச்சுங்குர ஒரு கவலையே இல்ல டா அவரு முகத்துல...

லியான் : ஓஹோ... அவரு சரியான கேடி டா... இத்தன வர்ஷமா பன்ற கேடித்தனத்தல்லாம் மறச்சவருக்கு உன் முன்னாடி நடிக்க தெரியாதா...

சத்யா : பட் லியான்...

லியான் : என்ன டா....

சத்யா : ம்ம் எனக்கென்னமோ அவரு என்ன பாக்கும் போது எதையோ நெனச்சு மறைக்கிர மாரி இருக்கு டா...

லியான் : ம்ம்ம் அப்டியா.. எனக்கு அப்டி ஒன்னும் தோனலையே...

சத்யா : நா என் வக்கீல் மூளைய ஆன் பன்னிட்டேன் போல....

லியான் : ம்ம் இருக்கலாம்... அப்ரம் வாட்ச் பத்திரமா இருக்குல்ல...

சத்யா : ம்ம் இருக்கு...

லியான் : நல்லது... நைட் வரும் போது பாத்துவா...

சத்யா : அன் சரிடா... டேய் எனக்கு ஒரு டௌட்டு... இங்கேந்து எப்டிடா அங்க வருவோம்... என கேட்க... மறுப்பக்கத்திலோ ஆழ்ந்த அமைதி.... ஹலோ... டேய்... ஹலோ மச்சான் டேய் ... டேய் லியான்... என நடையை நிருத்திவிட்டு இவன் கத்த.... அப்போது தான் சாருக்கு லைன் அருந்து போன போனில் பேசுவது புரிந்தது... அவன் எப்போதோ தொடர்பை துண்டித்திருந்தான்...

நிரன் ஒரு மார்க்கமாகவே அவ்வறையில் சுற்றிக் கொண்டிருந்தான்.... அப்போது நடுவில் கிடந்த மெத்தையருகில் நெருங்கிய நிரன்.... அதன் நாழு மூலையிலும் தூக்கி விட்டு ஏதேனும் இருக்கிரதா என ஆராய்ந்தான்... ஆனால் அவனுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை... அப்போது எதார்த்தமாய் திரும்பியவனின் காலை இடித்தது ஏதோ ஒரு பொருள்... அப்பொருளை கண்டவன் குனிந்து எடுத்தான்...

ஏதோ துணி பை போல் இருந்தது... அதை திறந்தவன் அதை சுற்றியிருந்த தூசியை தட்டி உள்ளே கையை விட்டான்... கையை விட்டவனுக்கு இரு கரடி பொம்மைகள் புத்தம் புதுசாய் ஒரு கவருக்குல் இருந்தது அகப்பட்டது... அதை எடுத்தவன் அதன் டகில்... " மேட் இன் ச்சைனா (Made in china) " என எழுதப்பட்டிருந்தது அவனை குழப்பிவிட்டது...

நிரன் : சைனா வா.. என்ன பேரு இது... இந்த பேர்ல எந்த கம்பெனியோ இல்ல ஊரோ மெடர்மான்லையும் மூன்லையும் இல்லையே... ஒன் மினிட்... என கண்களை மூடி புருவத்தை சுருக்கியவனுக்கு முந்தைய நாள் தாராவின் போனில் ஏதோ ஒரு வீடியோவை தன் தோலில் சாய்ந்து அஜிம்சனா பார்த்துக் கொண்டிருந்தது நினைவு வர... அந்த வீடியோவை கவனிக்காமல் விட்டது இப்போது அவனை சோதிக்க... தலையை போட்டு உலுக்கிவனுக்கு... " லூசு பயலே... இதல்லாம் தெரிஞ்சுக்கனும் டா... பாரு சைனாங்குர நாட்டுல நோய் பறவுதாம் " என அவனையும் மற்றவர்களையும் பார்க்கவும் கேக்கவும் சொல்லி அஜிம்சனா உயிரை எடுத்தது இப்போது அவனுக்கு உதவியது...

நிரன் : அட ஆமா... இட் மீன்ஸ்... பூமில இருக்க சைனால உர்பத்தியான இந்த பியர்... இங்க எப்டி வந்துச்சு... என யோசித்தவனுக்கு அவன் மனம் " அண்ணன் தம்பிங்க அவனுங்கள்ளே தம்பி இங்கையும் அண்ணன் அங்கையும் ன்னு இருக்கும் போது இரெண்டு டெடி பியர் இருக்காதா " என வினா எழுப்ப.... அவனுக்கும் அது சரியெனவே பட்டது... தன் பின் ஏதோ தோன்றவும் அந்த கட்டிலின் கீழ் குனிந்து பார்த்தவன் அதிர்ந்தான்... ஏனெனில் அங்கு பெரும்பாலும் குழந்தைகளின் விளையாட்டு பொருளே குவிந்துக் கிடந்தது...

நிரன் : எந்த குழந்தையோட பொருள் இதெல்லம்... என குழம்பியவனுக்கு... முன் ஏதோ தெரியவும் அதை நோக்கி நடந்தான்... அங்கு... மரட்டேபிலின் மேல் ஒரு பெட்டி போல் இருந்தது... அதன் அருகில் சென்றவன்... டக்கென அப்பெட்டியை கையில் எடுத்து... டொப்பென கீழே போட்டவன் அந்த மரட்டேபிலை ஆராய்ந்தான்....

டேபிலில் அந்த பெட்டி இருந்த இடத்தில் மட்டும் ஏதோ ஒரு சிறிய லாக்கர் போல் இருந்தது... அதை திறக்க முயற்சித்தவனுக்கு தோல்வியே மிஞ்ச.... பல போராட்டங்களின் பின் அதை திறந்தான்... அதில் ஒரே இருட்டாக இருக்க.... உள்ளே கை விட்டவனுக்கு திடீரென ஏதோ கடிப்பது புரிய... சர்ரென கையை உருவிக் கொண்டான்.... உள்ளே எட்டி பார்த்தவனுக்கு திடீரென வெளியே பாய்ந்து வந்த பூச்சி தெரிய... ஜூமிங்கில் பார்த்தவன் பதறி போய் அதை கீழே தள்ளிவிட்டான்... அதன் பின் தன்னை நிலைபடுத்தி விட்டு மீண்டும் தில் கை விட்டவனுக்கு... ஒரு கோப்பு கிடைத்தது....

அதை எடுத்தவனை சரியாய் அனைவரும் அழைக்க.... அவ்வறையை ஏதோ ஓர் அர்த்தத்துடன் பார்த்தவாறே கீழே இறங்கிச் சென்றான்....

தன் அறையில் அமர்ந்திருந்த லியான் அவன் வாட்ச்சை கலட்டி அதில் ஏதோ ஒரு பட்டனை அழுத்தினான்... அடுத்த நொடி அது ஒரு மடிக்கணினியாய் மாறியது... அதனுடனே ஒரு அன்ட்டனாவும் ஒரு சிறிய வேவ் ஹியரரும் எழுந்தது... அதில் ஏதோ நோண்ட தொடங்கியவனுக்கு முந்தைய நாள் மாலை நிகழ்ந்ததனைத்தும் படமாய் கண் முன் ஓடியது....

தர்மனின் கம்பெனியிலிருந்து கிளம்பிய நாயகர்கள் உடனே வீட்டை நோக்கி விரைய.... சத்யா பைக்கை ஓட்ட.... லியான் நடுவில் அமர்ந்திருக்க.... நிரன் அவன் பின் அமர்ந்திருந்தான்...

நிரன் : டேய் என்ன டா ஆச்சு... ஏன் டா இப்டி காண்டா இருக்க...

லியான் : சும்மா இரு மச்சான்...

நிரன் : லி... ரியா வ நாம காப்பாத்தீடலம்... யு பீ கூல்...

லியான் : ஐ நோ டா...

சத்யா : நீங்க அங்க போக வேணாம் டா....

லியான் : இல்ல டா போய் தா ஆஹனும்...

சத்யா : லியான்.... எனக்கு தெரியாது... நீ இங்க தான் இருக்கனும்...

லியான் : முடியாது டா...

சத்யா : உனக்கு போக அனுமதி இல்ல... நீ இங்க தா இருக்கனும்...

லியான் : நான் போவேன்..

சத்யா : நோ... என இருவரும் கத்திக் கொண்டே வர....

நிரன் : டேட் டேய் பப்லிக் டா....

சத்யா : அடப்போடா... நாங்களே... போர் அடிக்கிதுன்னு கத்திக்கிட்டு வரோம்...

நிரன் : அதான் தெரியுமே... முன்னாடி உள்ளவங்க நிச்சயமா உங்க நடிப்ப நம்பீர்ப்பாங்க.. சோ கத்தி கத்தி என் காது ஜவ்வ கிழிக்காதீங்க....

லியான் : நம்பீர்ப்பாங்கங்குர....

நிரன் : அதல்லாம் நம்பீர்ப்பாங்க டா...

லியான் : சரி நம்ம ப்லன் படி இப்போ நா மெடர்மான் போய் அந்த கார்மன கையும் களவமா பிடிக்கிறேன்... நீங்க இங்கிருந்து தர்மன பிடிங்க....

சத்யா : லிட்டில் சேன்ஜ் மச்சான்....

நிரன் லியான் : என்ன டா

சத்யா : நாங்க இரெண்டு பேரும் மெடர்மான் போறோம்.. நீ இங்க இரு....

லிமான் : நானா...

சத்ய : ஆமா நீ சத்யாவா இங்க இரு... நா லியானா அங்க போறேன்....

நிரன் : ஏன் டா திடீர்னு...

சத்யா : நம்மள விட லி அந்த தர்மன் மேல செம்ம கோவத்துல இருக்கான்.... சோ அவன் தான் இங்கிருந்து நம்ம ப்ரெண்ட்ஸோட அவர பிடிக்கனும்.... அதான் டா...

லியான் : சரி நா இங்கையே இருக்கேன்..

நிரன் : அப்போ நாம போனுமா...

சத்யா : ஆமா....

லியான் : இது மட்டும் தான டா ப்லன்ல சேன்ஞ்சு...

சத்யா : ஆமா டா மத்தபடி நாம பைக்ல போகும் போது போட்ட அதே ப்லன் தான்... நாம தனித்தனி க்ரூப் ஆ இருந்து அவனுங்கள பிடிக்க போறோம்.... அவ்ளோ தான்...

லியான் : பட் ரியாவ பிடிப்பான்னு நா நெனச்சே பாக்கல டா.... என கோவத்துடன் கூறினான்....

நிரன் : உண்மை தான் டா... ஆனா நிச்சயமா ரியாவ அவன் ஒன்னும் பன்னமாட்டான்.... நாம இந்த தடவ மட்டும் அவன விட்டுட்டு அவன லைட்டா உஷாராக விட்டு அதையே சாக்கா வச்சு நாம தனித்தனியா இருந்து நெருங்கலாம் னு நெனச்சோம்.... ஆனா இவனே நமக்கு ஒரு வாய்ப்ப குடுத்துட்டான்....

சத்யா : ஓக்கே வீடு வரப்போகுது... இனி நா லியான்... நீ சத்யா...

நிரன் : அப்போ நானு....

சத்யா லியான் : நீ நிரன் தான் டா....

என கூறவும் வீட்டை நெருங்கவும் சரியாய் இருக்க.... அவர்கள் உணர்வை துடைத்தெடுத்தவர்களாய் உள்ளே நுழைந்தனர்.... ஆனால் அங்கும் சத்யன் ஒரு ட்விஸ்ட் வைத்தான்.... லியான் இறுதியாய் சென்ற சத்யாவை அணைக்கவும் அதே நேரம் நிரன் " நானும் போறேன் " என கூறவும்... அனைவரின் கவனமும் அவன் புறம் திரும்பிய அடுத்த நொடி.... சத்யா தன்னை பிடித்திருந்த லியானை இழுத்து தான் நின்ற இடத்தில் நிற்க வைத்துவிட்டு அவன் அவன் நின்ற இடத்தில் நின்றான்....

லியான் அவனை புரியாது நோக்கவும்... அனைவரும் அவர்களை கவனிக்கவும் சரியாய் இருக்க.... சத்யாவாகவே லியானை அணைத்தவன்.... " ப்லன் இது தான்... பட் இன்னோறு சின்ன சேன்ஜ்... நம்ம இப்போ மாறப்போறதில்ல... இன்னைக்கு நைட்டு தா மாறப்போறோம்.... நீ மெடர்மான்ல முடிக்க வேண்டிய வேலைய பக்காவா முடி..." என கூறி அவனை விட்டு விலகினான்....

லியானுக்கு அளவில்லா அதிர்ச்சி.... தான் சத்யாவிற்கே தெரியாமல் மெடர்மான் சென்று ஒரு வேலையை முடிக்கலாம் என திட்டம் போட்டதை அறிந்ததை போல் இவனே அனுப்பிவைக்கிறானே.... என பார்த்துக் கொண்டிருந்தான்.... தன் அதிர்ச்சியை எவரும் பார்க்காமல் மறைத்தவன் நிரனை அழைத்துக் கொண்டு மெடர்மான் சென்றான் லியான்....

அங்கு சென்றவன் தன் வேலையை முடிக்க.... அதே நேரம் சத்யா.... வேலை இருக்கு என வீட்டை விட்டு வெளியே வந்ததால் இருவருக்கும் நல்ல சந்தர்ப்பம் அமைய.... தன் ஆராய்ச்சி கூடத்தில் தனியாய் இருந்த லியான் எவரும் அறியாது பூமிக்கு மீண்டும் சென்று.... தான் அங்கு சத்யாவாக மாறிக் கொண்டான்..... சத்யாவும் லியானை போல் கனக்கச்சிதமாய் தன் வேலையை பார்த்து வந்தான்.....

அப்பொழுதிலிருந்தே லியான் கொடுத்த வாட்ச் வழியே சத்யாவை வழி நடத்தி வந்தான் அவன்.... நிரன் அறிவியலாய் அனைத்து வேலைகளையும் செய்ய.... சத்யா லியானை போல் அங்கு நடமாடினான்.... அவன் வாட்ச்சில் வரும் கோடிங்கை பார்த்தே லியானின் இரகசிய அறைக்குள் நுழைந்தான்... இப்படி அனைத்தைம் இருவரும் கோடிங் மூலம் பரிமாறிக் கொண்டனர்.... தாரா தந்த டிஃப்யூசிங் ஐடியாவை அன்றே லியான் சத்யாவிற்கு கோடிங் வழி அனுப்ப சத்யா அரானா மற்றும் மித்ரானை கூட்டிக் கொண்டு அதை போய் அவன் கூறியபடியே கொலாறுபடி செய்துவிட்டு வந்தான்.... இன்று வந்த மெயிலும் நேரே லியானுக்கு சென்றதாலே அரானா மித்ரனிற்கும் மெயில் வந்தது.... அதை லியான் உடனுக்குடன் அனுப்பிய கோடிங் மூலம் சத்யாவும் அறிந்துக் கொண்டான்...

இன்றளவும் ஆராய்ச்சிகளை நிரனை வைத்து சமாளித்த சத்யா தனியாய் கார்மனிடம் சிக்குவான் என எதிர்பார்த்திராததால் பீதியிலிருந்தவனை முன்பே அந்த மெயில் மூலம் உஷாரான லியான் சரியான நேரத்தில் இணைந்து கார்மன் கொடுத்த ஐந்து நிமிடத்தில் இரண்டே நிமிடங்களில் அதை செய்தும் முடித்தான்....

--------------;;----------------------------
இப்பொவாவது புரியாதா நா பொய் சொல்லலன்னு... நா உங்கள்ட்ட என்ன சொன்னேன்... மெடர்மான் போனது லியான் தான்னு சொன்னனா இல்லையா... அதுக்கப்பரம் நீங்க கேற்றுந்தா... இருக்கலாம் னு பதில் சொல்லீர்ப்பேன்... முன்னாடியே கேட்தால உண்மை ய தான் சொன்னேன்... உங்களுக்காக லேட்டா போட வேண்டிய சீக்கிரமா போற்றுக்கேன்... படிச்சிட்டு கமென்ட் சொல்லுங்க இதயங்களே...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro