Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மர்மம் -13

லியான் : ஆமா எனக்கு தெரியும்...

மித்ரான் : இன்னும் என்ன என்ன விஷயத்தலாம் எங்கள்ட்ட சொல்லாம இருக்க டா...

லியான் : உங்களுக்கு மறந்துருச்சா டா.... நா எப்பையோ கண்டிப்பா வேற கிரகம் இருக்குன்னு கண்டுபுடிச்சிட்டேன்... அப்ரம் தான் அத கண்டுப்புடிக்கிற நம்ம ஆராய்ச்சி தொடங்குச்சு... அது கூடவே... என்னோட இன்னோறு ஆராய்ச்சி இருக்குரத மறந்துட்டீகளா...

மெடர்மான் நாயகர்கள் : ஆமால்ல...

சத்யா : அது என்ன இன்னோறு ஆராய்ச்சி...

லியான் : மெடர்மான்க்கும் வேற ஏதோ ஒரு கிரகம்.. அதாவது பூமிக்கும் உள்ள தொடர்பு.. எப்டி உருவாச்சுன்னு கண்டுப்புடிக்கிறது தான்... அப்போ... தொடர்பு இருக்காங்குர ஆராய்ச்சில இருந்தேன்...

நிரன் : சரி ரிஸல்ட் என்ன....

லியான் : பிகாஸ் ஆஃப் க்ராவிட்டி ஃபோர்ஸ்... (Gravity force ) அன்ட்... மக்னெட்டிக் ஃபோர்ஸ்... (Magnetic force)
புவியீர்ப்புசக்தி .... காந்தசக்தி...

மீனா : அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்...

லியான் : ஐ வில் எக்ஸ்ப்லைன்... மொதல்ல இத நம்ம இரெண்டு தியரியா பிரிச்சக்கலாம்... ஒன்னு மேக்னெட்டிக் ... இன்னோன்னு கிரவிட்டி.... ஓக்கே... நா உங்க எல்லார்க்கும் முன்னாடியே... வேற கிரகம் இருக்குன்னு கண்டுப்புடிச்சிட்டேன் ல... அத எப்டி கண்டுப்புடிச்சிர்ப்பேன்... ஐ மீன்... நமக்கு எதாவது கெடைச்சா தான... நாம அத பத்தி ஸ்டடி பன்ன முடியும் அந்த மாரி கேக்குறேன்...

ஸ்வத்திக்கா : ம்ம்ம் ஆமா.... சரி அப்டி என்ன டா கெடச்சிது...

அனாமிக்கா : மெட்டீரியல்ஸா....

லியான் : இல்ல.... மனித எலும்பு கூடுகள்

அனைவரும் : வாட்....

லியான் : ஆமா... மனித எலும்பு கூடுகள்... நாழு வர்ஷத்துக்கு முன்னாடி... ட்ரன் சிட்டியோட கடல்ல... சில எலும்பு கூடுகள் கறைல கிடக்குன்னு சொன்னாங்கல்ல...

மெடர்மான் நாயகர்கள் : ஆமா...

லியான் : அத வச்சி தான் கண்டுபுடிச்சேன்... எப்டினா... அந்த எலும்புகள் மிஸ்ட்ரியா கண்டுப்புடிக்க பட்டதால... தனியா சேகரிச்சு வச்சாங்க... ஆராய்ச்சியாளர்களுக்கான கலகத்துல... நா அங்க போனப்ப.. அந்த எலும்புகள ஸ்டடி பன்னேன்... அது மெடர்மான் வாசிகளுடையது கிடையாது... ஆனா மனிஷங்க... அத வச்சி தான் கன்ஃபார்ம் பன்னேன் வேற கிரகம் இருக்குன்னு...

அஜிம்சனா : அந்த எலும்புகூடுகள் பூமிய சேர்ந்ததுன்னு சொல்ல வரியா...

லியான் : எஸ்...

தாரா : பூமிய சேர்ந்ததா இருந்தா... அது எப்டி அங்க வந்துருக்கும்....

லியான் : பிகாஸ் ஆப் மேக்னெட்டிக் ஃபோர்ஸ்... கடல்லோட ஒரு குறிப்பிட்ட இடத்துல... மட்டும் அதிக மெக்னெட்டிக் போர்ஸ்னால வெளிய உள்ளது உள்ள இழுக்கப்படுது... இழுக்கப்படுரவங்க... இதுவர உயிரோடையே... இல்ல உயிரில்லாமையோ... அந்த கடல விட்டு இதுவர வந்ததில்ல... இன்னும் தெளிவா சொல்லனும் னா.... பூமில இதுக்கு பெயர்... பெர்முடா ட்ரையங்குல் (Bermuda triangle)

வினய் : அந்த ட்ரையாங்கலா....

லியான் : ஆமா.... பூமில ஒரு ஏரோப்லேன்... அப்ரம் அத தேடி போன இரெண்டு ஜெட்... போனது இது வர வரல... 100 வர்ஷமாச்சு இன்னும் கண்டுப்புடிக்க படல... அப்ரம் தான் விஞ்ஞானப்படி... பெர்முடா ட்ரையாங்கல கண்டுபுடிச்சாங்க... ஆனா அது அக்யூரெட்டா எங்க இருக்குன்னு யாருக்குமே தெரியாது... அதுல தான் காணாம போறாங்க... ஆனா காணாமப் போறவங்க எங்க போறாங்கன்னு இன்னும் கண்டுப்புடிக்கல... கரெக்ட்டா... இதல்லா நா இங்க வந்த கொஞ்ச நேரத்துல உங்க கூகுல்ன்னு ஏதோ இருக்கே... அத வச்சி சத்யா போன்ல பாத்து தெரிஞ்சிச்கிட்டேன்.... இங்க பெர்முடா ட்ரையங்குல்ல இழுக்கப்பட்டவங்க.... மெடர்மான் ஆழ் கடல்ல எலும்பு கூடுகளா கண்டுப்புடிக்க பற்றுக்காங்க.... லூசு தனமா இருக்கலாம்... பட்.... மெடர்மான் ல உள்ள அந்த கடல்ல... இந்த பெர்முடா ட்ரையங்குல் இருக்கு... அத நான் தான் கண்டுபுடிச்சேன்.... நம்ம கிரகங்களுக்கு இது ஒரு தொடர்பு.. ஆனா இது வழியா யோக முடியாது... போனா அங்க போயும் பிரயோஜனம் இல்லை....

ஷ்ரவன் : அடேய்... நீ புத்திசாலின்னு தெரியும் டா... ஆனா இவ்ளோ அதி புத்திசாலியா இருப்பன்னு நெனச்சு பாக்கல டா...

லியான் : இனிமே பாரு....

தாரா : ஆவ்ஸம் லியான்... இன்னும் பூமில எக்ஸக்ட்டா... பெர்முடா ட்ரையங்கல பத்தி ரிசர்ச் பன்னல... அதாவது எவ்ளோ பன்னாலும்... அது எங்க போய் முடியுது ன்னு கண்டுப்புடிக்கல... இன்னும் ரிசர்ச் ல தா இருக்காங்க... ஆனா நீ இவ்ளோ சீக்கிரம் கண்டுப்புடிச்சிட்ட...

லியான் : இல்ல தாரா... நா இந்த ட்ரையாங்கல பத்தி முழுசா தெரிஞ்சிக்க.... இன்னையோடு சேர்த்து 3 வருஷமாச்சு...

நிரன் : அதல்லா ஓக்கே... செக்கென்ட் தியரி என்ன அத சொல்லு....

லியான் : விண்வெளி ல க்ரவிட்டி இல்ல ன்னு தான் நாங்க படிச்சோம்... பூமிலையும் அப்டிதா படிச்சிர்க்காங்க...

நிரன் : நாங்களும் அப்டி தான் டா படிச்சோம்.. ஏன்னா உண்மையாவே அங்க கிரவிட்டி இல்ல...

லியான் : இருக்கு டா நிரா...

ஃத்வருண் : அங்க எப்டி டா ....

லியான் : இருக்கு... ஒரே ஒரு இடத்துல மட்டும்...

மீரா : எங்க...

லியான் : ப்லக்ஹோல்ல....

தாரா : ப்லக் ஹோலா...

லியான் : ஆமா.... அந்த ப்லக்ஹோல்... மெடர்மான் பூமி இரெண்டுத்துக்கும் மையத்துல இருக்கு... அதுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்ல தான்... ஆனா... அந்த ப்லக் ஹோல் தா நம்ம கிரகங்கள் இரண்டும் பல முயற்சிகள் எடுத்தும் தெரியாம இருக்குரதுக்கு காரணம்... மத்தபடி அதுல ஒன்னும் இல்ல...

ஸ்வத்திக்கா : ப்லக் ஹோல் னா என்ன...

நரா : அது தெரியாம தான் கேட்டுட்டு இருந்தியா எரும...

ஸ்வத்திக்கா : ஈஈஈஈ

அரானா : பிரவஞ்சத்துல... இருக்க ஸ்டார்ஸ்... ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்ரம் எறந்துரும்... அதாவது எஸ்ப்லோட் (வெடித்தல்) ஆய்டும்... முழுசா கருப்பு நிறத்துல மாறிடும்... அது தான் ப்லக் ஹோல்... அதுக்குள்ள என்ன இருக்குன்னு லாம் இன்னும் தெரியல... ஆனா அங்க க்ராவிட்டி அதிகமா இருக்கும்... அதுக்கு பக்கத்துல உள்ள ஆப்ஜெக்ட்ஸ்ஸையே அது உள்ள இழுத்துக்கும்....

தாரா : ஒரே ஒரு லேடி... அந்த ப்லக் ஹோல போட்டோ எடுத்துர்க்காங்க... இதான் அது... ப்லக்ஹோல்ஸ் இப்டி தான் இருக்கும்... இது தான் உண்மையான ப்லக்ஹோல எடுத்த முதல் போட்டோ....

அனைவரும் : இன்ட்ரெஸ்ட்டிங்...

தில்வியா : சரி எல்லாரும் தூங்கலாம்... ரொம்ப டைம் ஆச்சு... நாளைக்கு நிறைய வேல இருக்கும்...

சரி என அனைவரும் உள் நுழைந்திட... யாரும் அறியாது... சத்யனின் பார்வை லியானை பின் தொடர்ந்தது... அவன் கண்களோ... " யார் கிட்ட இருந்து மறச்சாலும் ... உன்னால என் கிட்ட இருந்து மறைக்க முடியாது டா லி... எதையோ நீ மறக்கிற.. அது என்னன்னு சீக்கிரமே கண்டுப்புடிக்கிறேன்... " என பேசிக் கொண்டிருந்தது....

அனைவரும் உறங்க சென்றிட.... கதையின் வில்லன்களை பார்த்து விட்டு வருவோம்...

அமெரிக்கா....

பறந்து விரிந்திருந்த அந்த சுகமான நேரத்தில் காற்றை கிழித்துக் கொண்டு சீரிப் பாய்ந்தது ஒரு கார்.... வெகு விரைவிலே... ஒரு நட்ச்சத்திர உணவகத்தில் நிறுத்தப்பட்டது... அதிலிருந்து ஐம்பது வயது மதிக்கதக்க ஒருவர்... தன் தொப்பையை தள்ளிக் கொண்டு இறங்கினார்... தன் கருப்பு கன்னாடியை சரி செய்த படி வந்தவருக்கு பணியாட்கள் மரியாதை செழுத்தினர்... ஓர் அறையுள் நுழைந்தவர்... கோர்ட் ஸ்யூட்டை எல்லாம் கலட்டி வைத்து விட்டு... தன் ஸ்யூட் கேஸில் இருந்த ஏதோ ஒரு பொட்டி போன்ற எதையோ எடுத்தார்... அதில் ஏதோ பட்டனை அழுத்தியதும்.. அந்த நவீன சாதனம்... தானாய் ஒளியூட்டிக் கொண்டே உயிர் பெற்றது.... அதற்கு உயிர் கொடுத்ததும்.... நன்கு மூச்சை விட்ட அந்த பெட்டி... " காள் கனெக்டட் தர்மன் சார் " என கூறியது.... சிறு மணி துளிகளின் பின்... அப்பெட்டியில் தர்மனின் சாயலை ஒத்த ஒருவர் தெரிந்தார்... ( அதான் பா கார்மனு ) இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து விட்டு...

கார்மன் : எப்டி இருக்க மை ப்ரதர்...

தர்மன் : ஃபைன் ப்ரதர்... வாட்ஸ் கோயிங்... (Fine brother whats going)

கார்மன் : டூ டேஸா உன் காள்க்காக வெயிட் பன்னிக்கிட்டு இருகேன்...

தர்மன் : ஏன் என்னாச்சு..

கார்மன் : மரைன் சிட்டில ஒரு சின்னபையன் (லியான் ) உலகத்தின் சிறந்த விஞ்ஞானி பட்டம் வாங்கீர்க்கான்....

தர்மன் : அதனால என்ன... மெடர்மான் ல தான்... நெறைய பேர் இந்த பட்டத்த வாங்கீர்க்காங்களே...

கார்மன் : அவங்க எல்லாம் எக்ஸ்ப்பீரியன்ஸ்டு தர்மா... இவன் விஞ்ஞானியாகியே இன்னும் ஒரு வருஷம் ஆகல...

தர்மன் : ரியலி... என்று உண்மையாகவே அதிர்ச்சியடைந்தார்...

கார்மன் : ஆமா...

தர்மன் : இன்ட்ரெஸ்டிங்... சரி அதனால என்ன...

கார்மன் : அவன பாத்ததுல இருந்தே என் மனசு சரி இல்ல... அவனால ஏதோ ப்ராப்லம் வரும் னு தோனுது...

தர்மன் : சின்ன பய கார்மா... அதெல்லா போட்டு கொளப்பிக்காத...

கார்மன் : உனக்கு ஏன் பயமே புரிய மாட்டுது... இவன் சாதாரண பையன் இல்ல... இவனால நிச்சயம் ஏதோ நடக்கும்..

தர்மன் : சரி பாத்துக்கலாம்... அவன பத்தி கொஞ்சம் விசாரிக்க சொல்லு...

கார்மன் : அப்ரம்... சட்டிலைட் ல இப்போ சில ப்ராப்லம் வந்துருச்சான்... அத வேற சரி பன்ன காசு கேக்குறானுங்க... காச எல்லாம் குடுத்துட்டா... அப்ரம் நா என்ன பன்றது...

தர்மன் : கூல் .... இந்த டைம்... நா மெக்னிட்டிக் அன்ட் க்ராவிட்டி ஒயர் லைன் மாடல் பன்ன சொல்லீர்கேன்... சோ அத கொஞ்சொ காஸ்ட்லியா விக்க சொல்லு... தானா பணம் குவியும்...

கார்மன் : ம்ம்ம் நைஸ் டீல்... அப்ரம்... ஏர் ப்ராடெக்ட்ஸ் ரெடி ஆய்டுச்சு... ரொம்ப கஷ்ட்டப்பட்டு சேமிச்சது... சோ இதையும் விற்பனை பன்றப்ப... காஸ்ட்லியாக்கு...

தர்மன் : ஓக்கே டா... நாம உலகத்துலையே பெரிய பணக்காரங்களாக போறோம் ஹாஹா...

கார்மன் : ஹாஹா...

தங்களின் சாம்ராஜ்ஜியங்களே சிலரால் அழியப்போவதை அறியாமல் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர்....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro