மர்மம்-10
ஷ்ரவன் : சரி அப்போ உள்ள போய் பாத்துடுவோமா???
மீரா : முடிவு பன்னியாச்சு... போலாம் வாங்க....
வினய் விட்டின் உள் சென்று... அந்த கட்டிடத்தின் சாவியை எடுத்து வந்தான்.... கதவை திறந்து... அனைவரும் உள் செல்ல... ஒட்டடையிலும்.. இருட்டிளும்... கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது அக்கட்டிடம்... தூசி படிந்து... மிக பழமையாய் தெரிந்தது... தடவி தடுக்கி... ஆராய்ந்து.. எப்படியோ விலக்கை கண்டுபிடித்து ஒளியூட்டினர்....
பல உடைந்த மரசாமான்கள்... சில உடைந்த கன்னாடி பொருட்கள்.... சில பத்திரங்கள்... சில கோப்புகள்.. என பலவை சிதறிக்கிடந்தது... அங்கங்கு பல அறைகள்... சில ஜன்னல்கள்... ஒன்றாய் அனைவரும் காலடி எடுத்து வைக்க.... சிறிது அடி எடுத்து வைத்த... தாரா.... திடீரென " கரப்பான்பூச்சி " என கத்திக் கொண்டே சத்யாவை பிடித்துக் கொள்ள.... மெடர்மானில் " கரப்பான்பூச்சி " என்னும் வார்த்தைக்கு " கொடிய பாம்பு " என அர்த்தம் உள்ளதால்... அதை கேட்ட... அரானா....அருகிலிருந்தவனை " டேய் லியான்.. என்ன காப்பாத்து " என கத்திக் கொண்டே லியானை பிடித்துக் கொள்ள.... லியானும் சத்யாவும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு சிரிக்க... மற்றவர்கள் அவர்களையே பார்த்து முளித்துக் கொண்டிருக்க... அப்போதே அனைவருக்கும் புரிந்தது... தாரா சத்யா என நினைத்து... லியானையும்... அரானா லியான் என நினைத்து சத்யாவையும் பிடித்துக் கொண்டு நிற்பது....
சத்யா மற்றும் வியான் இருவரும் ஒரே நிறத்தில் உடை... ஒரே நிறம்.. ஒரே முக அமைப்பு.. ஒரே உயரம்.. என எந்த ஒரு வித்யாசமும் இல்லாமல் அப்படியே இருப்பதால்... யாராலுமே யார் சத்யா யார் லியான் என கண்டுபுடிக்க முடியவில்லை.... இருவரும் சிரிப்பதை கண்டு தாரா மற்றும் அரானா கண்களை திறந்து முளித்து விட்டு.. அதன்பின்பே ஒருவாறு நடந்ததை யூகித்து... ஈஈஈ என இழித்து விட்டு விலகிக் கொண்டனர்....
அதன் பின்னே அரானா கரப்பான்பூச்சி என்றால் சாதாரண பூச்சி தான் என தெரிந்துக் கொண்டாள்.... ஒருவாறு அனைவரும் உள் நுழைந்து ஒரு ஒரு பக்கமும் எதாவது கிடைக்கிறதா என தேட ஆரம்பிக்க... நம் மெடர்மான் நாயகர்களுக்கே... இவை அனைத்தும்... அந்த ஆடிட்டோரியத்தில் உள்ளதை போலவே இருக்கிறதே என்ற அதிர்ச்சியிலே இருந்தனர்....
சிறிதும் ஒளியே இல்லாத அவ்விடத்தையே சுழன்றவர்ளுக்கு பல நொடிகளின் பின் கிடைத்தது ஸ்விட்ச் போர்ட்... பாலடைந்ததானாலும்... லைட் நன்றாக தான் இருந்தது.... மங்களான ஒளியில் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு... மீண்டும் தேட தொங்கினர்.... அரானா ஒரு அலமாரியை பொரட்ட தொடங்கினாள்.... அவள் அருகிலே இருந்த மரட்டேபிலை நோண்ட தொடங்கினாள் தாரா...
வினய் அவனுக்கு கிடைத்த ஒரு அறையில் நுழைந்து தேடினான்.... லியான் மற்றும் சத்யா ஒரே இடத்தில் நின்று ஆய்வு செய்துக் கொண்டிருக்க.... பின் அவர்களும் வேறு அறைகளிள் நுழைந்தனர்.... ராவனா மற்றும் மீரா இருவரும் செவுரில் இருந்த ஜன்னல் கதவு... படம்... அலங்காரப்பொருள் என அனைத்தையும் அலச தொடங்கினர்.....
திடீரென தாராவின் " ஐ காட் இட் " என்னும் சத்தத்தில் அனைவரும் அவள் புறம் ஓட.... ஒரு பழைய அட்டையை வைத்துக் கொண்டு விழி விரிய பார்த்துக் கொண்டிருந்தாள் தாரா.....
தாரா : கய்ஸ்..... யு மேட் இட்.... நீங்க உண்மையாவே கண்டுபுடிச்சிட்டீங்க... என மெடர்மான் நாயகர்களை பார்த்து கத்திக் கொண்டிருந்தாள்....
அரானா :அடியேய் என்ன டி ஆச்சு?? புரியிர மாரி சொல்லி தொல.... என இவளும் ஆர்வத்தில் கத்த....
தாரா : இதப்பாருங்க... என அந்த அட்டையை காட்ட....
அதில் மங்களான நிறத்தில்.... அழகிய மெடர்மான் உலகின் ஓவியம் .... அதன் கீழ்..... மார்ன் என்ற.... கையெழுத்திருந்தது....
டிவின் :ஓ மை காட்... அப்டீனா... உண்மையாவே... பூமிக்கும் மெடர்மானுக்கும் சம்மந்தம் இருக்கு...
சக்தி :கங்ரட்ஸ் கய்ஸ்....
ஃத்வருண் : நன்றி டா.... நெக்ஸ்ட் என்ன...
ஆர்வின் : என்ன சம்மந்தம் னு கண்டுப்புடிக்கனும்.... அங்க... எர்த்தோட... ட்ராயிங்கும்.. இங்க மெடர்மானோட ட்ராயிங்கும் எப்டி வந்துச்சுன்னு கண்டுபுடிக்கனும்...
மீனா : ஓக்கே கய்ஸ்... எல்லாரும் உக்காருங்க... நாம யோசிக்கலாம்....
ஷ்ரவன் : ஃர்ஸ்ட்ட அஃப் ஆல்.... இந்த இரெண்டு கட்டிடமும் எப்டி ஒரே மாரி இருக்கு.... அன்ட் தி டிராயிங்... எப்டி ஒன்னா இருந்துச்சு....
அனாமிக்கா :பட்... இட்ஸ் அன்பிலீவபல்... இதுக்கு சாத்தியமே இல்ல... வேற வேற கிரகத்துல உள்ள கட்டிடம் ஒரே மாரி இருக்கு.... ஒரே மாரியான ஆர்ட்டிஸ்ட் ஓட நேம்...
தில்வியா : அது என்ன ஒரே மாரி... இரெண்டும் ஒரே ஆல் தான்...
நரா : சரி நெக்ஸ்ட் மூவ் என்ன???
லியான் : ஷ்ரவன் அந்த தர்மனுக்கு ப்ரொட்டெக்ஷன் ஃபோர்ஸ் அனுப்பனும்....
அப்போதே அப்படி ஒன்று இருப்பது நினைவு வந்தது அனைவருக்கும்... உடனே ஷ்ரவன் போனுடன் வெளியே ஓடினான்.... பல கட்டளைகளை போன் வழி பிறப்பித்தவன்... மீண்டும் இளித்தவாறே உள்ளே வந்தான்....
மித்ரான் : முடிஞ்சிதா வேலை???
ஷ்ரவன் : ஈஈஈ டன் டா....
நரா : சரி அந்த தர்மன் யாரு... ரொம்ப பரபரப்பா பேசுனியே...
வினய் : இரு நா காமிக்கிறேன்... என கூகுலில் தேடி எடுத்தான் அவரின் படத்தை... அதை வாங்கி கண்ட மெடர்மான் நாயகர்கள் மயங்கி விழாத குறைக்கு சென்றனர்....
ராவனா : டேய்... இது பிரதமர் கார்மன் டா....
மீனா : அவன் பிஸ்னஸ் மேனா இருக்குரதே எங்களாள தாங்க முடியல... நீ என்ன டி பிரதமர் னு சொல்லி ஹார்ட் அட்டக் குடுக்குர???
தில்வியா : எங்க கிரகத்துல மரைன் சிட்டியோட பிரதமர் கார்மன் டி இவரு....
ஷ்வத்திக்கா : என்ன டி சொல்றீங்க...
அரானா : ஆமா டி... லியான் சத்யா எப்டி ஒரே மாரி இருக்காங்களோ அதே மாரி அவங்களும்... கொஞ்சொ ஒரே மாரி தான் இருக்காங்க....
ஆர்வின் : கொஞ்சம் தான... உலகத்துல ஏழு பேரு ஒரே மாரி இருப்பாங்கன்னு சொல்ற மாரி... ஏழு ல ஒன்னு மட்டும் வேற கிரகத்துல இருக்கு போல விடு....
லியான் : இது என்ன புதுசா இருக்கு... உலகத்துல ஒரே மாரி ஏழு பேரு இருப்பாங்களா என்ன???
சத்யா : தெரியல லியான்.... ஆனா இது உலகம் முழுக்க தெரியும்.. ஒரே மாரி இருப்பாங்களான்னு கேட்டா... சரியா தெரியல... பட் வாய்ப்புகள் இருக்கு....
அரானா : இன்ட்ரெஸ்ட்டிங்....
டிவின் : சரி வாங்க... கொஞ்சம் ரிலக்ஸ் ஆகலாம்... என அங்கிருந்து வீட்டிற்கு சென்றனர்... சரியாக அன்பரசி வெளியே வர.... அவரையும் அழைத்துக் கொண்டு உணவுண்ண அமர்ந்தனர்.... மெடர்மான் நாயகர்களுக்கு... தமிழ்நாட்டு உணவுகள் ஆலை மயக்கியது... அந்த நேரத்தை உரையாடியவாறே களித்தனர்..... நேரம் காத்திராமல் செல்ல... மெடர்மான் நாயகர்களும் தாரா மற்றும் ஆர்வினும் ஆராய்ச்சியில் மூழ்கினர்.... இரவு வெகு நேரமாகி விட.... உறங்காமல் இருந்த பெண்களை வலுக்காட்டாயமாக உறங்க அனுப்பிவைத்தான் லியான்... அதன் பின் வேலையில் மூழ்க.... அனைவரும் ஒருவர் பின் ஒருவராய் உறங்க சென்றனர்.... லியானை தவிர்த்து.... பூமியிலிருந்து மெடர்மானை காணும் வேலையில் இருந்தான் அவன்....
வெகு நேரம் கட்டிலில் புரண்டும் உறக்கம் கிட்டாமல் கீழிறங்கி வந்தான் சத்யா.... லியான் மட்டும் அமர்ந்திருப்பதை கண்டு அவன் அருகில் சென்றான்.... சத்யாவிற்கு லியானை காண தன்னை ஒரு கன்னாடி முன் நிருத்தியது போல தான் இருந்தது... பிரம்பிப்பு இருவரை விட்டும் இன்னும் அகலவில்லை... சற்று மானீட்டரில் இருந்த கண்களை எடுத்த லியான் சத்யாவை கண்டு புன்னகைத்தான்...
லியான் : தூங்கலையா....
சத்யா : தூக்கம் வரல லியான்... நீ என்ன பன்னிக்கிட்டு இருக்க...
வியான் : பூமியில இருந்து மெடர்மான் தெரியாதான்னு பார்த்துக்குட்டு இருக்கேன்.... அதுக்கான வேலை ல தான் இருந்தேன்....
சத்யா : ம்ம் இன்னும் என்னால இத நம்பவே முடியல... வேறு ஒரு கிரகத்துல மனிதர்கள்..
லியான் : ஹ்ம் உண்மை தான்... அதுவும் நம்ம இரெண்டு பேர் ஒன்னா இருக்குரது இன்னும் அதிர்ச்சியா இருக்கு...
சத்யா : ஹ்ம் ஆமா.... மெடர்மான் ல எப்டி டா வாழ்வீங்க...
லியான் : இங்க இருக்குர மாரி தான் டா... ஒரு வித்யாசமும் இல்லை... ஆனா அங்க வாணம் காலைல பச்சையா இருக்கும்... இங்க நீலமா இருக்கு... மழை சிவப்பா இருக்கும்... இங்க சாதாரண தண்ணி மாரியியே இருக்கு... அதான் வித்யாசம்... அங்க டெக்னாலஜி வேர லெவல்க்கு இருக்கும்... மத்தபடி நாங்களும் உங்கள மாரி தான் மூச்சு விடுவோம்... அப்படி தான் வாழுறோம்....
சத்யா : ம்ம்ம்ம் இந்த பிரவஞ்சத்துல மனிதர்கள் ஒரு கிரகத்துல தான் வாழ்றோம் னு நெனச்சோம்... இப்போ இரெண்டு கிரகம் ன்னு தெரிஞ்சிடுச்சு... இட் மீன்ஸ்... இரெண்டே கிரகத்துல தான் மனிதர்கள் வாழ்ராங்கலா...
லியான் : நிச்சயமா இல்ல... கண்டிப்பா வேற கிரங்கள் இருக்க வாய்ப்பிருக்கு... ஆனா அங்க வாழ்க்கை முறை வேற மாரி இருக்கும்.... அங்க வாழ்ரவங்க வேற மாரி இருக்கலால்... கிரகம் இப்டி கூட இருக்கலாம்... என ஒரு படத்தை காட்டினான்... அதில் லேசாய் ஒரு கிரகத்தின் படம் இடம் பிடித்திருந்தது...
சத்யா : டேய் லி... இது நிலா டா....
லியான் : அதோ தெரியிதே அத சொல்றியா.... என ஜன்னல் வழி தெரிந்த வாணத்தில் இருந்த நிலவை காட்டி கேட்டான்....
சத்யா : ஆமா ....
லியான் : இல்ல டா... இது நிலா இல்ல....
சத்யா : பட் அப்டியே இருக்கு... சரி இத எப்போ கண்டுபுடிச்ச...
லியான் : நா கண்டுபுடிச்ச முதல் கிரகமே இதான் டா....
சத்யா : என்ன டா சொல்ற...
லியான் : ம்ம்ம் ஆனா யாருக்கும் தெரியாது... அந்த மெகா சட்டிலைட் வெடிச்சதும்.... எங்க மெடர்மான் மேல தெரிஞ்சது இந்த ப்லனெட் தான்... பட் மெடர்மான் ல இருந்து பாக்க அது கோனீக்கல் ஷேப் ல இருந்துச்சு... அதனால தான் எங்க சூரியகுடும்பத்துல உள்ள ஒரு நிலா தான்னு நெனச்சேன்... பட் கொஞ்ச நாள்ளையே அப்டி ஒரு நிலாவே எங்க சூரிய குடும்பத்துல இல்லங்குர விஷயம் தெரிய வந்துச்சு... இன்னும் அத பத்தி யார்ட்டையுமே சொல்லல...
சத்யா : சரி இது எங்க இருக்கு... எவ்ளோ தூரத்துல இருக்கு....
லியான் : பூமி ய விட்டு நிலா இருக்க அதே தூரத்துல தான் இந்த ப்லனெட்டும் இருக்கு..... அதாவது இது பூமிக்கு ரொம்ப பக்கத்துல தான் இருக்கு....
சத்யா : என்ன டா பூமில இருக்குரவனுக்கே தெரியாததல்லா சொல்ற....
லியான் : ஆமா சத்யா... இந்த கிரகம்.... நீலா கூடவே உங்க பூமிய சுத்திகிட்டு இருக்கு... பட் கொஞ்சம் தள்ளி..... சொல்லப்போனா... உங்க பூமிய நிலா மட்டும் இல்லை... இந்த கிரகமும் சுத்துது.... என்ற ஒரு பெரும் இரகசியத்தை கூறினான்.....
சத்யா : இட்ஸ் அன்பிலீவபல்....
லியான் : ம்ம்.. உனக்கு அப்டிதான் இருக்கும்....
சத்யா : அது ஏன் டா எனக்கு மட்டும் அப்டி இருக்கும்...
லியான் : உனக்கு மட்டும் இல்ல.... யாரு கேட்டலும் அவங்களுக்கு அப்டி தா இருக்கும்...எனக்கு தா உண்ம முன்னாடியே தெரியுமே....
சத்யா : எப்டி தா உன்னால மட்டும் இவ்ளோ ஈசியா குண்ட தூக்கி போட முடியிதோ....
லியான் : அது ஒரு கிருக்கு கிட்ட இருந்து கத்துக்குட்டேன் டா....
சத்யா : கிருக்கா.... யாரு டா அது...
லியான் : இப்பதிக்கு உன்னால அந்த கிருக்க சந்திக்க முடியாது.... அடுத்த கதைல பாக்கலாம்..
சத்யா : கதையா... என்ன டா என்ன என்னமோ சொல்ற...
லியான் : அந்த கிருக்கு எப்பபோப்பாரு கிருக்கிக்கிட்டே இருப்பா டா.... சும்மா ஒரு விஷியம் தெரிஞ்சாலும் அத வச்சி ஒரு கத கரு உருவாக்கிக்கிட்டு இருக்கா....
சத்யா : ஒஹோ... அப்போ அந்த கிருக்கோட நெக்ஸ்ட் ஸ்டோரி ல தான் நா அவள மீட் பன்னனும் னு சொல்ல வரியா...
லிலான் : டெஃபெனிட்லி....
சத்யா : ம்ம்ம் பாக்குறேன்... யாரந்த கிருக்குன்னு....
திடீரென வீட்டின் பின் ஏதோ விழும் சத்தம் கேட்டு இருவரும் பதறி ஓடிட..... உறங்கிக் கொண்டிருந்த அனைவரும் அதே நேரம் கீழே ஓடி வர..... வீட்டின் பின்..... முழுவதும் நீல நிற ஒளி பறவியிருக்க.... அவ்வொளியில் கண் கூசிட அனைவரும் முளித்தவாறு இருக்க..... நல்லவேளையாக அன்பரசி இரவு மாத்திரை உண்டதால் உறக்கத்தில் இருந்தார்....
மெல்ல மெல்ல ஒளி குறைய..... அனைவரும் அவ்விடத்தை நோக்கி பார்வையை ஜூம் செய்ய.... அங்கிருந்து இரு உருவங்களின் நிழல் வெளி வருவது தெள்ளத்தெளிவாய் தெரிய..... அதை கண்டு அதிசயத்தில் கண்களை அகல விரித்து நின்றனர் அனைவரும்.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro