மர்மம் -1
அழகிய பச்சை நிற வாணம்.... பல பலக்க... அங்கங்கு மினுமினுக்கும் சிறு சிறு நட்ச்சத்திரங்கள்... நீல நிற மேகங்கள்... சூழ்ந்து மழை சிகப்பு நிறத்தில் பொழிந்துக் கொண்டிருந்தது... அழகிய நீண்ட மரங்கள்... மழையில் தன் மேணியை நனைத்து விளையாடிக் கொண்டிருந்த மஞ்சள் பூக்கள்... தொலைவில் விண்ணை தொட்டிருந்த மலைகள்...
ஆங்காங்கே மணலால் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள்... கல்லால் ஆன வீடுகள்... பூக்களாள் ஆன கூடாரங்கள்... மேல் தளமாய் இருந்த கட்டைகள்... பெரிய பெரிய கட்டிங்கள்... கண்களாள் அளவெடுத்து கைகளாள் செதுக்கப்பட்ட சிற்பங்கள்....
ஓர் பெரிய கட்டிடம் போல் இருக்கும் வீடு... தன் கரு நிற வண்ணத்தை வெளிபடுத்தி உள் உறங்கும் நபர்களை மழையில் இருந்து காத்து தனக்குள் வைத்திருந்தது.... அக்கட்டிடத்தின் வாயிலில் இரும்பாலான ஒரு கதவு... அதன் நடுவில் ஒரு வட்டம் போல் ஏதோ இருக்க... அதை தொட்டவுடன் அவ்வட்டத்தில் ஒரு புன்னகை வெளிச்சத்தை ஏற்படுத்தி தோன்ற...." வெல்கம் " என்ற வார்த்தை அக்கதவில் தோன்றி மறைந்து அக்கதவும் திறந்துக் கொண்டது...
உள்ளே நுழையவும்... ஓர் ஓரத்தில் காலணிகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்க... இன்னோறு ஓரத்திலோ வாட்ச் போன்ற ஏதோ சில பொருட்கள் இருந்தது.... தொடர்ந்து உள்ளே நுழையவும்... திட்டுக்கள் போல் அமைந்து அதில் ஒரு பக்கம் தண்ணீர் அருவி போல் கொட்ட.... கொட்டிய அதே நீர் தனி பாத்திரத்தில் சேமிப்பதைப் போல் அடுத்த பக்கத்தில் இருந்தது...
ஓர் பக்கத்தில் அப்பச்சை நிற வாணின் ஒலி கதிரைகள் வீட்டின் ஜன்னல்களை தாண்டி இடுக்கில் புகுந்து ஒளியை ஏற்படுத்தியிருந்தது.... அங்கு அமர்வதற்கு மண்ணால் ஆன நாற்காலிகள் துணியால் சுற்றப்பட்டு... நேர்த்தியான முறையில் இருந்தது....
சுற்றி பார்க்க... நடுவில் இருந்த படிக்கட்டு சுற்றி சுற்றி அமைக்கப்பட்டு இருந்தது.... அதிலோ கால் வைத்ததும் தானாக மேல் அழைத் சென்றது முதல் படி... முதல் தளத்தில் நான்கு அறைகள் இருந்தது... ஒவ்வொரு அறையின் கதவிலும் அதே வட்டமும் வெவ்வேறு விதமான ஓவியங்களும் இருந்தது.... நேராக வீட்டின் பால்கெனி அமைக்கப்பட்டிருந்தது....
இரண்டாம் படியில் கால் வைத்ததும் இரண்டாம் தளத்திற்கு அழைத்துச் சென்றது அப்படிக்கட்டு... அங்கு ஒன்றுமே இல்லை...
திடுமென இரண்டாம் தளத்தில் இருந்த ஒரு அறையில் இருந்து வெளிவந்தான் ஒருவன்... செவுரில் மாட்டப்பட்டிருந்த செவ்வக வடிவ கடிகாரத்தில் முற்கள் இடது புறமாய் சுற்றி கொண்டிருக்க... அவனோ 6 ஓ க்லாக் என்று கூறி... படிக்கட்டில் இரண்டாம் படியில் கால் வைத்து இரண்டாம் தளத்திற்கு சென்றான்... அங்கோ ஒரு ஓரத்தில் இருந்த பூ ஜாடியை சற்று தள்ளி வைத்தான்... உடனே அதன் அருகில் இருந்த செவுரு.. தன்னை உள் இழுத்துக் கொண்டு அவனுக்கு வழி வகுத்து கொடுத்தது...
கண்ணாடி போல் அமைக்கப்பட்டிருக்க... அதில் அவனின் விரல் நகத்தின் பின் புறத்தை பதித்து இன்னோறு கதவை திறந்தான்...
அக்கதவிற்கு பின் முழுதும் இருட்டு... அவன் நடக்கும் வேகத்திலே அது அவனுக்கு பழக்கமடைந்த இடமென தெரிய... ஓர் மேஜையை கடக்கும் முன் நின்றவன் அதன் பின் இருந்த ஒயரை பிடித்து இழுத்தான்..... உடனே ஒளிமயமாய் மாறியது அவ்வறை...
ஒரு சிறிய படுக்கை அறை என கூறலாம்...அங்கு ஒரு மெத்தையில் ஒரு உருவம் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க... அதன் அருகில் சென்றவன்... அதை உலுக்கு உலுக்கென உலுக்கியும் உறக்கம் கலையாமல் இருக்க... கட்டபடாமல் இருந்த அதன் கூந்தலை இழுத்ததும் ஆஆஆ என அலரியவாறே எழுந்தாள்... அரானா...
அரானா : மடசாம்பிராணி .... நான் உறங்கீட்டு எழுந்து வர மாட்டனா?? நீ ஏன் என் ரூமுக்கு வந்த???
அவன் : உங்க ரூமா?? கொஞ்சம் நீங்க எந்த ரூம்ல இருக்கீங்கன்னு பாருங்க...
அவளோ இதுவரை மூடி இருந்த இமைகளை பிரித்தாள்...ஆறடி இளைஞன்.. அவனின் கேஷ்வல்ஸில் கைகளை கட்டிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தான்... அவள் சுற்றி பார்க்க.. அது அவனின் இரகசிய அறை....
அரானா : உறக்கத்துல இங்கையே உறங்கீட்டேன் டா...
அவன் : நீ ஏன் இங்க வந்த??
அரானா : அது ஆ... வேற எதுக்கு??? உன்ன பாக்கத்தான்...
அவன் : நா உன் ரூம்ல உனக்காக வெயிட் பன்னி நைட் அங்கேயே தூங்கீட்டேன்... நீ என்ன தேடி வந்தன்னு பொய் சொல்றியா??? என அவளின் காதை பிடித்து திருகினான்....
அரானா : லியான்... விடு டா... வலிக்கிது...
அவன் தான் லியான்...
லியான் : சரி சரி வா மொதல்ல... என அவளை வெளியே இழுத்துச் சென்றான்... மீண்டும் முதல் தளத்திற்கு சென்றவன் நடுவில் இருந்த அறையை திறந்து அரானா உள் சென்றாள்...அங்கோ அவளை போலவே ஒரு உருவம் உறங்கியவாரிருக்க...
அரானா : என் உறக்கத்த கெடுத்தவன் உன்ன மட்டும் விட்டுட்டானா??? இரு வரேன்... என அருகில் இருந்த ஒரு ரிமோட்டை எடுத்தவள்... அதில் இரண்டு நிமிடத்திற்கு டைமர் செட் செய்து கதவின் மறைவில் மறைந்துக் கொண்டாள்... இவளை தேடி வந்த லியான் அவ்வறையில் நுழையும் போது சரியாக அட்டம்பாம் வெடிக்கப்போவதைப் போல் முழு வீட்டிலும் டிக் டிக் டிக் டிக் என சத்தமாக ஒலிக்க... தூங்கிக் கொண்டிருந்தவனும் கதவின் அருகில் வந்தவனும் பதறிபோய் கீழே விவிழுந்தனர்...
இவள் அடக்கமாட்டாமல் சிரித்து விட அவளை நிமிர்ந்து கண்ட இருவரும் காலை பிடித்து கீழே இழுத்து தள்ளிவிட்டு சிரித்தனர்.... லியான் மற்றும் மித்ரான்...
அரானா : போங்க டா லூசுங்களா... என உதட்டை பிதுக்க...
இருவரும் : நீ போடி லூசு... என கை அடித்து சிரித்தனர்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro