மனசு
வினிதா நொடிக்கு ஒரு முறை நொடிக்கு கணினியில் விழிகளைப் பதித்தால் மணித்துளிகள் மெதுவாக நகர்ந்தது. 10.30 மணி ஆகியும் பிரியா அலுவலகத்துக்கு வரவில்லை.
11 மணி அலுவலகத்திற்குள் ப்ரியா நுழைந்தாள். ஆனால் தண்ணீருக்கே அமராமல் முன்னோக்கி கோபமாய் நடந்து எங்கே செல்கிறாய் இவள்?' என வினிதா குழம்பினாள்.
பிரியா நேராக மேனேஜர் அறைக்குச் சென்றாள். வினிதாவுக்கு புரிந்து விட்டது. 'நேற்றய பிரச்சினையின் விளைவு இன்றைக்கும் தொடர்கிறதா ? ஐயோ ! இவள் என்ன செய்யப்போகிறாளோ? என்று சிந்தித்தவாறு பின் தொடர்ந்தாள்.
அறைக்குள் நுழைந்த பிரியா கையில் இருந்த கவரை மேனேஜர் மனோகர் மேசையின் மேல் வைத்தாள். "சார் ! இது என்னுடைய ராஜினாமா கடிதம். மெயிலிலும் அனுப்பி இருக்கிறேன்.."
பின்னால் நின்று இந்த வினிதாவுக்கு தூக்கிவாரிப்போட்டது.
மேனேஜர் மனோகர், அவளை ஏறெடுத்துப் பார்த்தார்.
"வாட் இஸ் திஸ் ப்ரியா? ஏன்... என்னாச்சு?" ஒன்றும் புரியாதவள் போல் குழப்பத்தோடு அவளிடம் கேட்டார்.
"உங்கள் மனசாட்சி கிட்ட கேளுங்க சார். இதற்கான பதில் கிடைக்கும்."என்றாள்.
அவர் குற்ற உணர்ச்சியோடு அதிர்ச்சியில் உறைந்திருதார்.
"சார்... நாங்கள்லாம் வயித்துப் பொழப்புக்கு எதிர்கால பாதுகாப்பு தான் வேலைக்கு வர்றோம். உங்கள் விற்பதற்கு நான் உடன்படாததால், எனக்கும் உங்களுக்கும் தொடர்பு என ஆபீஸ் பூரா கதை கட்டியிருக்கீங்க."
மனோகர் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்.
"பத்தினிங்கிறது உடம்பு சம்பந்தப்பட்டதில்லை. மனசு சம்பந்தப்பட்டது. நீங்க ஆபீஸ் பூரா பரவிட்டிருக்கிற கதைக்கு, நான் பல வருடங்களாக இன்னொருத்தர் மீது செலுத்திய அன்பு விலையாக கொடுக்க வேண்டியதாகிவிட்டது.."என்று துக்கம் தொண்டையை அடைக்க சொன்னாள்.
விழிகள் இரண்டிலும் நீர் கோர்க்க, அதற்கு மேலும் அங்கிருக்க பிடிக்காமல் வேகமாக நகர்ந்தாள்.
வினிதா துக்கம் தாளாமல் அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள்.
"பிரியா வேலை போனால் போகட்டும். சிவா சார் கிட்ட நான் பேசிப் பார்க்கிறேன்" என்றாள்.
"வேணாம்டி . எல்லாம் முடிச்சிட்டுது" என்றவள், அலுவலகத்தை விட்டு வேகமாய் வெளியேறினாள்.
அதே வேளை நைட் ஷிப்ட் முடிந்து அறைக்கு வந்து சிவா மொபைல் போனை ஆன் செய்ய , பிரியாவிடமிருந்து வாட்ஸ் ஆப்பில் வாய்ஸ் வந்திருக்க, அதை பதிவிறக்கம் செய்து கேட்க ஆரம்பித்தான்.
மெல்லிய குரலில் விசும்பலுடன் தொடர்ந்தது பிரியாவின் குரல்.
"சிவா... யார் என்ன சொன்னாலும் அதை நம்புவியா நீ ? அதில் இருக்கிற உண்மையை தெரிஞ்சிக்கணும்னு தோணாதா உனக்கு ? இங்க களங்கப்பட்டு நிகழ்கிறது நான் இல்ல சிவா நம்மோட காதல் .3 வருஷக் காதலை 3 விநாடியில தொலைக்க உன்னால முடியதுன்னா, இந்த அர்த்தமற்ற காதலைத் துறக்க முடியும்.
ஆண்கள், பெண்களோட அழகில் மயங்கி தான் காதல்ல விழுவாங்க. ஆனா பெண்கள் அப்படி இல்ல, ஒரு ஆனோட அன்பிலோ, காதல் நிறைந்த கண்களிலோ, அவனோட புன்னகையிலோ, அவன் கண்ணியமான மத்தவங்கிட்ட பழகிற விதத்திலோ தான் மனசைத் தொலைப்பாங்க. நானும் அப்படித்தான் சிவா, உன்னோட காதல் பார்வையில தான் என்னை தொலைச்சேன்.
அதை விடு... இங்க பார். உன் அம்மான்னா உனக்கு உசிருன்னு எனக்கு தெரியும். அவங்க வளர்ப்பு கண்ணியமானதுன்னா, இனிமேல் என்னைப் பார்க்க வராதே. என்னிடம் பேசவோ , சமாதானப்படுத்த லோ முயற்சிக்காதே. நமக்குள்ளே எல்லாம் முடிஞ்சிது. இனி நீ உன் வீட்டில பார்க்கிற பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்"
ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் சிறு விசும்பலுடன் தொடர்ந்தாள்.
"உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சிவா, என்னை போய் சந்தேகப்பட்டுட்டியே" என்ற கம்மிய குரலுடன் பேச்சு நின்றது. காதலை இழந்த வலி பிரியாவின் குரலில் தெரிந்தது.
பிரியாவின் கடைசி வரிகளைக் கேட்டு, சிவா கதறி அழுதான்.
'தனது தப்பான அணுகுமுறை ஒரு நல்ல காதல் நசுங்கிப்போக காரணமாகிவிட்டதே' என்ற குற்ற உணர்வில் மேனேஜர் மனோகர் அளவுக்கு அதிகமான மதுவில் மிதந்து கொண்டிருந்தார் !
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro