மண்ணும் நீயும்
மண் -
இரு பரப்புகள் மோதி மலையாக,
காலத்தால் கரைந்து கல்லாக,
மாற்றாத்தால் ஒடிந்து மண்ணாக,
ஆறு அடித்து மணலாக,
அதை விதைகள் உண்டு பயிராக,
அவை உண்டு வாழ்கிறாய் நீ் உயிராக..........
மனிதன்
இரு தெய்வங்கள் ஒன்றாக,
பிறந்தாய் நீயும் கன்றாக,
வளர்ந்தாய் நீயும் நன்றாக,
சேர்த்தாய் யாவும் உனக்காக,
மண் உன்னை அழைத்தது தனக்காக;
நாளை பயிர்கள் உருவாக,
ஆனாய் நீ எருவாக,
இறுதியில் மண்ணோடு மண்ணாக........
உன் வாழ்க்கை நன்றெனில் வரலாறு உன் பெயர் போற்றும் பொன்னாக......
அதுவே இழிதெனில் உன் கல்லறையும் உன்னை உமிழும்,
உனக்கு முன்னாக........
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro