டும் டும் டும்
பண்டிகை நாட்களுக்கு துணி எடுப்பது போல தான் ஆனால்
வருடா வருடம் விலையைப் பார்த்துவிட்டு திருப்பி வைக்கும் ஏமாற்றம் இன்று ஒரு நாளைக்கு இல்லை
கேட்டவற்றை எல்லாம் ஊட்டிவிடுகிறார்கள்
கிடாயுக்கு கடைசி கரிசனம் காட்டுவது உண்டு
சிறு வயதில் விளையாடியது
இப்போது மணப்பெண் வேஷத்துக்கு தோழிகளோடு சண்டை இல்லை
தோழியின் தம்பியை குச்சிமிட்டாயுடன் மாப்பிளையாய் அமர்த்தினோம்
இப்போது ஆறடி குழந்தைக்கு சமைத்து ஊட்டிவிட்டு துணி துவைத்து அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமாம்
எங்களுக்கு ஒத்து வராது மா என்றபோது
சின்ன பொண்ணு உனக்கு என்ன தெரியும் என்றார்கள்
ஒன்னும் தெரியாத புள்ள கழுத்துல தாலிய கட்டிட்டார்கள்
டும் டும் டும் முடிஞ்சுட்டு எழுந்திரிச்சு சாப்ட போங்க
( எவன் கேட்குறான் சார், எவன் கேட்குறான். பணம் இருக்கு, பார்க்க நல்லா இருக்கான், நல்லா தெரிஞ்ச பையன், படிச்சவன், என்ன குறை நு கேட்குறாங்க. இப்போருத்தன்களை இரு மனம் பொருந்துவது தானே திருமணம். செட் ஆகாது என்பது ஒத்துக்கொள்ளப்படாத காரணம்.
எவன் சார் கேட்குறான் நம்ம சொல்றத. )
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro