காலம்
அழுது கொட்டியவற்றையெல்லாம் சேர்த்துவைக்கிறேன்
கடலளவு இல்லை ஆனால் குவளையலவுண்டு
நீ சொன்னவற்றையெல்லாம் எழுதி வைக்கிறேன்
ஆனால் சொல்லாதவை தான் கண்ணை உறுத்துகிறது
வயதுக்கு வந்தபின் ஓர் உலகம் புலப்படுவதுபோல்
காதல் ஒரு புதினத்தைக் கண்டறிந்தது
இதுவும் கடந்து போகும் என் அறிவேன்
ஆனால் இவ்வளவு ஆழமாய் அழுத்தமாய் பதிந்துவிட்டு போகுமென நானறியேன்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro