💖💑 விண்ணப்பம் 💑💖
இரு வேறு துருவங்கள் என்றாவது இணைந்திடுமா,.?
கிழக்கும் மேற்கும் எப்போதாவது கைக்கோர்குமா,.?
ஒளியும் இருளும் ஒரு நாளாவது ஒன்றிணையுமா,.?
।வாய்பில்லை தானே!!।
ஆனால் பெண்ணே! எதிரெதிரான குணங்கள் கூட ஒரே நேரத்தில் உன் முன் மண்டியிடுவதின் ரகசியம் தான் என்னவோ!!?
குழப்பியது போதும் தெளிவாக சொல் என்கிறாயா,.?
பாவை உன்னிடம் நான் பார்த்ததை பகிர்கிறேன்.. பொறுமையுடன் கேள்!!
அன்னையிடம் அடம்பிடிப்பதும் அதே நேரம் அத்தையிடம் அடங்கி போவதும்
தந்தையிடம் திமிராக நடப்பதும் தன்னவனை ஈன்றவனிடம் தாழ்ந்து போவதும்
சகோதரனிடம் சண்டை வார்பதும்
கொழுந்தனிடம் விட்டுகொடுப்பதும்
பிறந்த வீட்டில் குழந்தையாய் சினுங்குவதும்
புகுந்த வீட்டில் பொறுமையாய் திகழுவதும்
அத்துணையும் ஒரே நேரத்தில்😊😊
அப்பப்பா!! எப்படி பெண்ணே நீரையும் நெருப்பையும் ஒரு சேர வெளிகாட்டுகிறாய்?!!
அனைவரையும் அழகாக சமாளிக்கும் உன் பொறுமைக்கும், திறம்பட சமாளிக்கும் உன் திறமைக்கும் முன் கால் மடித்து கல்வி கற்கும் மாணவனாக மாற ஆசை!..😍😍
எதிர் பார்ப்போடு காத்திருக்கிறேன்😊😊
ஏற்றுக் கொள்வாயா என்னை?!!
-- மனைவியின் மாண்பறிந்த மணாளன்😍😘 --
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro