தாய்மை
தாய்மை...
என்ன ஒரு உன்னதமான நிலமை...
வலியென கேட்டாலே வெருண்டோடும் வஞ்சிக்கொடி இவளோ....
விரும்பியே கேட்கின்றாள்.. வாகையளிக்கும் இந்த தாய்மை வலியை..
தன்னில் தன்னவன் உயிர் உருவானதை உணர்ந்த இவளுக்கு கண்ணீர் கண்களில் கசிந்தோடுகின்றது...
கஷ்டமாக இருக்குமோ என்ற கவலையினாலா?..
கிடையவே கிடையாது..
தன் கண்ணானவனின் குலகொழுந்து தன் கருவில் உருவாகிவிட்ட மகிழ்ச்சி கலந்த கர்வத்தினால்....
தான் தாய்மை அடைந்ததை தெரிந்த நொடி தான் பேதையிவள் வாழ்வின் பொக்கிஷ நொடி..
ஆனந்த கண்ணீர் என்றால் என்ன என்பதை இவளறிந்த நொடி...
ஓடி ஆடி சிட்டாய் பறந்தவள்..
தன் பிள்ளைக்காக பதமையாய் பார்த்து பார்த்து நடப்பாள்...
தூங்கும் நேரம் தான் பிரளுவதால் தன் படுக்கையையே படுத்தியெடுத்த பாவையிவள்..
தன்னவனின் உயிருக்காக திரும்பி படுக்கவே திரும்ப திரும்ப யோசிப்பாள்..
குழந்தைக்கு நல்லதென்று கூறி விட்டால் போதும்... கொடுப்பது கசப்பான கருவேப்பிலை என்றாலும் குடித்து விடுவாள்..
தலைவலி வந்தாளே தகதிமிதாவென குதிக்குமிவளோ..
மசக்கையையும் வாந்தியையும் மகிழ்வோடு ஏற்று கொள்வாள்..
தன் வாரிசோடு தன் வயிறும் உடலும் வளர்ந்ததை பார்த்தாலும்..
வருத்தமின்றி புன்னகைப்பாள்..
அதனை தன் பிள்ளை தனக்களித்த பரிசாய் எண்ணி பூரிப்பாள்...
தன் வயிற்றிலிருக்கும் வாண்டு வாஞ்சையோடு கேட்பதற்கு வளையல்களை அணிந்துக்கொள்வாள்..
தன் பனிக்குடத்தில் பவனிவரும் பிள்ளை உணருமென இசைகளையும் தினம் கேட்பாள்..
குழந்தையின் நலனே அவள் கருத்திலிருக்கும்...
மற்றவைகள் மறந்து விடும்...
தன் பிள்ளையின் வருகை அதற்கு (பிள்ளைக்கு) முதல் ஜனனமென்றால்...
தனக்கோ மறு ஜென்மம் என்பதையும் நன்கறிவாள்..
இருந்துமே தன் பிள்ளையின் வரவைதான் எதிர்பார்ப்பாள்..
ஆம்ம்..
எந்த இன்பமும் வலியின்றி கிடைக்காதென்பது..
பெண்ணுடலுக்கு படைத்தவனளித்த வரமல்லவா...
இத்தணை நாள் எதிர்பார்த்த அந்த நாள் வந்ததும்..
பிரசவ அறைக்குள் செல்லும் நாம் திரும்பி வருவோமா? என்ற எண்ணம் அவள் மனதை அரிக்கும்...
இடுப்பு வலி உயிர் போகும்..
முதுகு தண்டில் ஓர் வலி உயிரை தொட்டுச்செல்லும்...
தன் இத்தனை நாள் உறுதியெல்லாம் தளர்ந்து போகும்...
அசுர வேகத்தில் ஊருக்குள் வர துடிக்கும் சுனாமியலை போல்..
அந்த பிஞ்சு இந்த பிரபஞ்சத்தை பார்க்க துடிக்கும்..
அந்த நொடி அவள் இடுப்பு எலும்பு விலக..
தொடைகள் நடுநடுங்க..
மூச்சு பிடித்து..
கை முறுக்கி பேதையிவள் அலற..
பனிக்குடம் உடைத்து படாரென் அவளின் பவள குழந்தை வெளியேற...
அதனை பார்த்த நொடி..
இவள் தன் வலி மறந்து சிரிப்போடும்..
தன் உயிர் கொடுத்து.. தன்னவனின் இவ்வுயிரை உலகம் பார்க்க வைத்த மகிழ்ச்சி கலந்த நிம்மதியோடு சோர்வும் ஒருசேர .. மயங்கிவிடுவாள் மங்கையிவள்..
பெண்களை பலவீனர்களென பகிரங்கப்படுத்துவோர்களே..
ஒரு முறை .. ஒரே முறை மட்டும் பிரசவித்து பாருங்கள்..
அப்போது புரியும் உண்மையான பலசாலிகள் யார் என்பது.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro