வில்லாதி வில்லன்
அனன்யா தன் மனதை நிறைத்த ஆடவனின் நினைவுகளில் தூக்கத்தை தொலைத்து, தேன்காற்றினை ரசிக்க துவங்கினாள்.....
காதல் கண்ணாளனின் நினைவுகளில் மூழ்கிய பின் ஏனோ, முழுமதியும் அவளிடம் சிரித்து கதை பேசுவதாய் அனன்யாவிற்கு தோன்றியது.....
ரசிக்க மறந்த வெண்நிலவை, பார்த்து பித்து போல் வெட்கி சிரித்தவள்,
தன் முகத்தில் விழுந்த சிறுகூந்தல் கற்றையை தன் வலக்காதோரம் சொருகியவாறு, நின்று இருந்தவளின்
முகத்தில் சிரிப்பு மட்டும் அகலவே இல்லை...
பாரிஸின் இரவு நேர பனி, மென்தென்றலுடன் அனன்யாவை தீண்டி செல்ல,
அவளின் கருங்குழலோ மென்மையாய் அசைந்திட, கண்களை மூடி திறக்கையில் பனியை உணர்ந்தவள்,
தன் இரு உள்ளங்கைகளையும் தேய்த்து உண்டான வெப்பத்தை, தன் முழங்கைக்கு மேலே தடவியபடி, அந்த இதமான சூழ்நிலையை ரசித்தவாறு, தன் ஹனி டார்லிங்கின் நினைவுகளில் மூழ்கினாள்....
அங்கே சித்தார்த், யுவராஜிற்கு இடையில் ரணகளமாய் சண்டை நடந்து ஓய்ந்திருக்க, அதை அறியா அனன்யாவோ ரணகளத்திலும் கிளுகிளுப்பாய், தன் காதலனின் நினைவுக்கடலில் மூழ்கி முத்தெடுத்தாள்.....
யுவிக்கு, சித்து அனன்யாவிடம் தன்னை தவறாக சித்தரித்து விடுவானோ என்ற பயம், அவன் தூக்கத்தை தொலைவாக்கியது....
சித்துவிற்கோ, யுவி சூழ்ச்சி செய்து அனன்யாவை பிரித்துவிடுவானோ என்ற அச்சம் சித்துவின் இரவை பகலாக்கியது....
மூவரும் மூன்று வேறுபட்ட காரணங்களால் தங்களின் இரவை நீள செய்தனர்... கிருஷ்ணாவிற்கும், வாணிக்கும் மட்டுமே அது, வழக்கமான இரவாய் அமைந்தது.....
அடுத்து வந்த இரு தினங்களிலும் சித்து, யுவியை வெறுப்பேத்துவதற்க்காக அனன்யாவுடன் மிகவும் நெருக்கமாய் இருப்பதாய் காட்டிக்கொண்டான்....
யுவிக்கோ, நெருப்புக்குள் தன்னை தூக்கி போட்டது போல் இருந்தது.... சித்து -அனுவின் நெருக்கம் அவனை பற்றிக்கொள்ள செய்தது.... இருந்தும் பொறுக்காமல் பொறுத்து கொண்டான்.....
சித்து மற்றும் யுவி இருவரின் மறைமுக போர், அவர்கள் இருவரை தவிர அறிந்தவர் எவரும் இல்லை.....
கிருஷ்ணா -வாணி தங்களின் உலகில் மிதக்க துவங்கியதால், அவர்களும் யுவி -சித்தார்த்தின் கருத்துவேறுபாட்டை அறியவில்லை.....
அனன்யாவோ, எந்த மாற்றத்தையும் உணரும் மனநிலையில் இல்லை....
போட்டோஷூட் முடிந்து இந்தியா திரும்பும் நாளும் வந்தது....
சித்து ஒரு திட்டத்தோடு இந்தியாவை நோக்கி பயணமானான்.....
அனைவரும் இந்தியாவை சென்றடைந்தனர்....
அனன்யா ஆபிஸ் சென்றிருக்க, சித்து ஆபிஸ் செல்லாமல் வீட்டில் இருந்தான்......
முருகனும், ராமும் ஹாலில் அமர்ந்து பேசிகொண்டிருக்க, தேனுவும், சீதாவும் சமையலில் மூழ்கியிருந்தனர்.....
தயங்கி வந்தபடி, முருகன் மற்றும் ராமின் முன் சித்து நிற்க......
ராம் சித்துவை நோக்கினார்.....
"மா... மாமா.... நான் உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் " என சித்து தயங்கியபடி, சொல்ல.....
முருகனும், ராமும் ஒருவரை ஒருவர் குழப்பமாய் பார்த்து கொண்டனர் ...
தன் கண்ணாடியை சரி செய்த முருகன், "சொல்லு சித்து... என்ன பேசணும் " என சொல்ல... தேனுவும், சீதாவும் அங்கு வந்து சேர்ந்தனர்....
"அது... மாமா.... " என தயங்கி நின்றவன் மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டவன்... "மாமா... எனக்கும், அனன்யாவுக்கும் நடக்குற கல்யாணம்.... இன்னும் ரெண்டு நாள்ல நடக்கணும் " என சித்து சொல்லி முடிக்க....
ராமுக்கோ கோபம் முட்டிக்கொண்டு வந்தது..... "டேய்... என்னடா நினைச்சுட்டு இருக்க.... நினைச்சா கல்யாணத்தை தள்ளிவைக்கணும்னு சொல்ற.... நினைச்சா சீக்கிரம் வைக்கணும்னு சொல்ற..... என்னை விளையாடுறியா???? உனக்கு எல்லாம் விளையாட்டா போச்சா " என சினத்தில் சிவந்த ராம், சித்துவை அடிக்க கை ஓங்க.....
முருகன் ராமின் கைப்பற்றி, சித்துவை அடிப்பதை தடுத்தார்....
"ராம் கொஞ்சம் பொறுமையா இருடா..... " என ராமை அமைதிபடுத்திய முருகன்.....
"சொல்லுப்பா சித்து .... என்ன காரணம்???... இன்னும் ஒரு மாசத்தில கல்யாணம் நடக்கபோது..... அப்புறம் எதுக்கு இந்த அவசரம்....??? " என முருகன் அமைதியாய் வினவ....
சித்து "மாமா.. ப்ளீஸ் மாமா.... நான் அனன்யா நல்லதுக்கு தான் சொல்லுறேன்.... என்னை நம்புங்க ப்ளீஸ்.... எனக்கு பயமா இருக்கு மாமா.... ஏதாச்சும் தப்பா நடந்துருமோனு.... ப்ளீஸ் மாமா... இப்போ என்னால எதையும் தெளிவா சொல்லமுடியாது..... கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் நானே சொல்லுறேன்.. மாமா.... இப்போ எப்படியாச்சும் இந்த கல்யாணத்தை எப்படியாச்சும் நடத்திவைங்க ப்ளீஸ் " என சித்து கெஞ்ச....
சீதாவோ "ஏன் பயம் உனக்கு???என்னாச்சு???? எதுவா இருந்தாலும் சொல்லுடா " என சித்துவை கேட்க.....
"மம்மி.. இப்போதைக்கு எதுவும் என்னால சொல்ல முடியாது " என சித்து திட்டவட்டமாய் உண்மையை மறைக்க....
"என்னடா...என்ன உனக்கு பிரச்சனை..... ஏன் இப்படி லூசு மாதிரி பேசிட்டு இருக்க.." என ராம் மீண்டும் சித்துவை அடிக்க கை ஓங்க ....
ராமின் தோள்பற்றி அவரை தடுத்த முருகன், "நீ கொஞ்சம் பொறுமையா இரு " என சொல்ல, ராம் சற்று தணிந்தார்.....
"சரி சித்து... நீ சொல்லுற மாதிரியே இன்னும் ரெண்டு நாள்ல உனக்கும், அனுவுக்கும் கல்யாணம் " என சொல்ல....
சித்துவின் முகமோ மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது.... தேனு, சீதாவின் முகமோ குழப்பத்தில் ஆழ்ந்தது....
"என்னடா.. அவன் சின்ன பையன் ஏதோ சொல்றனா.... நீயும் அவன் பேச்சை கேட்டு ஆடுற.... " என ராம் கோபமாய் கத்த..
"ராம்.... கொஞ்சம் பொறுமையா இரு.... இவன் யாரு ராம்... சித்து.. நான் பாத்து வளந்த பையன்... அவன் ஏதோ சொல்லுறான்... அவனை நாம நம்பாம யாரை நம்ப சொல்லுற.... சித்துவ நான் நம்புறேன்... இப்போ மட்டுமில்ல எப்பவும்... " என சித்துவின் தோளை பற்றியபடி, முருகன் சொன்ன போதிலும் ராமின் கோபம் முழுமையாய் தணியவில்லை....
சித்து கெஞ்சும் தொனியில் தன் அப்பா ராமை பார்க்க, "இவ்ளோ யோசிக்குற நீ அனன்யாவை பத்தி யோசிச்சியா முருகா " என ராம் கேட்க....
முருகனோ ஒரு நொடி தலையை கவிழ்த்து, மீண்டும் நிமிர்த்தி "நான் எது செஞ்சாலும் என் பொண்ணோட நல்லதுக்கு மட்டும் தான் செய்வேன் " என வீராப்பாய் சொல்ல....
ராமுக்கோ முருகனின் பேச்சு, வருத்தத்தை கொடுத்தது.... சித்துவின் மேல் கோபம் உண்டானது.....
"எப்படியோ போங்க..... உங்க இஷ்டப்படி செய்ங்க.... " என வேகமாக பேசிவிட்டு ராம் சென்றிட.....
அவர் செல்லும் திசையே சித்து கவலையாய் நோக்க, சித்துவின் தோளை பற்றிய முருகனோ "விடு சித்து... அவன் எங்க போயிற போரான்... அவனை பத்தி உனக்கு தெரியாத என்ன????.. நிறைய வேலை இருக்கு... டைம் ரொம்ப கம்மியா இருக்கு.... இன்னைக்குள்ள பாதி வேலைய முடிக்கணும்... வா போலாம்.... " என பேசி சித்துவை அழைத்துக்கொண்டு வெளியில் புறப்பட்டார்....
சீதாவும் அவ்விடத்தை விட்டு அகன்றிட, தேன்மொழியின் உள்ளம் மட்டுமே தன் மகளுக்காய் தவித்தது......
ஏற்கனவே, அனன்யாவிற்கு திருமணத்தில் நாட்டமில்லை... அவ்வாறு இருக்கும் போது, அவளிடம் ஒரு வார்த்தை கேட்காமல், செய்யப்படும் திடீர் திருமணத்தை அனன்யா ஏற்பாளா???..... முருகனின் முரட்டு பிடிவாதத்தால், எங்கே தனது மகளின் ஆனந்தம் பறிபோய்விடுமோ என பதறியது, தாயுள்ளம்......
முருகனுடன் சென்ற சித்துவின் மனதில் ஒரு எண்ணம் மட்டுமே ஓடி கொண்டிருந்தது.... இத்திடீர் அவசர திருமணம் யுவிக்கு தெரியாமல் பார்த்து கொள்ளவேண்டும் என்பது மட்டுமே...... யுவிக்கு தெரிந்தால், இக்கல்யாணம் நடப்பது கேள்விக்குறியே என்பது சித்து நன்கு அறிவான்...
யுவி வில்லனாய் செயல்பட துணிந்தால், சித்துவோ யுவிக்கு ஒரு படி மேல் சென்று, வில்லாதி வில்லனாய் செயல்பட துவங்கினான்......
யுவிக்கு பயந்து தானே இந்த திடீர் திருமண திட்டத்தையே சித்து தீட்டினான்...
.
.
.
*****************
யுவியும் அலுவலகம் செல்லாமல், தன் அறையில் புதிதாய் நடைபயில்வது போல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான்..
இன்னமும் தன் காதல் அனன்யாவிடம் வெளிப்படாமல் இருப்பது, யுவிக்கு வேதனையை தந்தது....
சித்துவின் சவாலும் யுவியின் கண்முன் காட்சியாய் விரிந்து மறைய, இனம்புரியா சிறுபயம், யுவராஜின் அடிவயிற்றில் தொற்றிக்கொண்டது.... அட்ரீனலின் அளவுக்கு அதிகமாய் சுரந்து, யுவியை படபடக்க செய்தது.....
"என்ன பண்றது???? என்ன பண்றது?? " என யுவி வாய்விட்டு புலம்பிய படி, அங்குமிங்குமாய் நடக்க, அவன் மூளையில் யோசனை உதித்தது.....
"யுவி.... இந்த அப்பா உன்னோட சந்தோஷத்துக்காக எந்த எல்லைக்கும் போவான்.... எனக்கு என் பையன் சந்தோசம் மட்டும் தான் முக்கியம்.... எதுனாலும் என்கிட்டே தயங்காம சொல்லு..... " என யுவியின் அப்பா வாசன் சொன்ன வார்த்தைகள் யுவியின் மூளையெங்கும் எதிரொலிக்க, உடனே தன் அப்பாவின் எண்ணுக்கு கைபேசியில் அழைத்தான்.....
வாசன் வெளிநாட்டில் இருக்கவே, அழைப்பு கிடைக்காமல் போனது ........ "ச்ச்ச.... இந்த நெட்ஒர்க் வேற.... மனுஷன் கஷ்டம் புரியாம கடுப்ப ஏத்துது.... " என வாய்விட்டு புலம்பிய யுவி, மீண்டும் கடும் யோசனையில் மூழ்கினான்...
.
.
.
.
******************
கிருஷ்ணாவின் காதுக்கு அனன்யாவின் அவசர திருமண செய்தி எட்டியவுடன், அவனும் தன் தங்கைக்காக வருத்தம் கொண்டான்.... ஆனால், இது தன் அப்பாவின் முடிவு என்று அறிந்தவுடன் அவனால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது......
வேறு வழியில்லாமல் அவனும் திருமண வேலைகளை மேற்கொண்டான்....
***********
அலுவலகத்திற்கு சித்து, யுவி இருவரும் வராததால் அனன்யா குழம்பிபோனாள்.... "என்னாச்சு??? இவங்க ரெண்டு பேருக்கும்.... " என எண்ணியவள் "எப்படியோ போறாங்க" என தன் யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தன் அலுவலக பணியை துவங்கினாள்....
.
.
.
இரவு நேரம், அலுவலகம் முடிந்து அனன்யா திரும்புகையில், வீட்டில் வாழைமரம் கட்டப்பட்டிருந்தது....
வண்ணவிளக்கு தோரணத்தால் அவள் வீடே ஒளிர்ந்தது.... மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன.... ரேடியோ செட் போடப்பட்டிருந்தது......
அனன்யா, குழப்பத்துடன் வீட்டுக்குள் செல்ல முற்படும் போது, அங்கு வந்த ஒரு வேலையாளிடம்,
"அக்கா... என்ன பங்க்ஷன்,?? எதுக்கு இப்படி கிராண்ட்டா டெக்கரேட் பண்றாங்க??? " என அனன்யா வினவ....
"என்ன பாப்பா??? கல்யாணம்னா பண்ண மாட்டாங்களா???? " என வேலையாள் சொல்லிவிட்டு செல்ல.....
அனன்யா குழப்பத்துடன் வீட்டுக்குள் வர, அங்கிருக்கும் அலங்காரமோ அவளை வியக்க செய்தது.....
தேன்மொழி அவ்விடம் வர, அவரை கண்ட அனன்யா "அம்மா.... யாருக்கு கல்யாணம்.... அதான் டைம் இருக்கே....இப்போ எதுக்கு இதெல்லாம்??? " என அனன்யா வினவ...
தேன்மொழி வாய்திறப்பதற்குள், "உனக்கு தான் கல்யாணம்.... உனக்கும், சித்துவுக்கும் இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம் " என முருகன் அனன்யாவிடம் சொல்ல, அனன்யாவின் கண்கள் கோபத்தில் சிவந்து, விரித்து சுருங்கியது....
சித்துவை தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் அங்கே கூடியிருந்தனர்.....
"அம்மா.... என்ன இதெல்லாம்??? " என அனன்யா, தேன்மொழியிடம் கோபத்தில் கத்த...
"அவளை ஏன் கத்துற... என்கிட்டே பேசு.... " என முருகன் அனன்யாவிடம் சொல்ல...
"என்னால உங்க இஷ்டத்துக்குலாம் ஆட முடியாது.... என்னால இந்த கல்யாணத்தை பண்ணிக்க முடியாது " என அனு கத்தியபடி தன் முடிவில் பிடிவாதமாய் நிற்க....
"நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.... உனக்கு விருப்பம் இருந்தாலும் சரி, இல்லனாலும் சரி.... ரெண்டு நாள்ல உனக்கு கல்யாணம் " என முருகன் அனன்யாவுக்கு மேல் பிடிவாதம் பிடிக்க....
"நான் இங்க இருந்தா தானே கல்யாணம் நடக்கும்.. நான் இங்க இருந்து போய்ட்டா எப்படி கல்யாணம் நடக்கும் " என அனன்யா கோபத்தில் தன் அப்பாவிடம் சண்டையிட...
"ஒஹோஒ... உனக்கு அவ்வளவு தைரியம் ஆகிடுச்சா... முடிஞ்சா ட்ரை பண்ணி பாரு... அப்போ தெரியும்... உன் அப்பா யாருனு.... இப்போ போய் சாப்பிட்டு தூங்கு.... நீ என்ன செஞ்சாலும் இந்த கல்யாணத்தை எப்படி நடத்துறதுனு எனக்கு தெரியும்.... நான் உனக்கு அப்பா... உன்னை விட எனக்கு பிடிவாதம் அதிகம்.. நியாபகம் வச்சுக்கோ... " என்றதோடு முருகன் அங்கிருந்து சென்றுவிட.....
அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.....
தேன்மொழி மட்டுமே, தன் மகளுக்காக வருந்தினார்....
அனன்யாவின் அடக்க முடியா கோபம், கண்ணீராய் அவள் கண்களில் இருந்து வெளியேறியது.....
அழுதுகொண்டே அவள் அறைக்கு சென்றவள் பின், அவள் அம்மா தேனு "அனு... அனு.... " என அழைத்தபடி, அவள் பின் செல்ல....
"என்னை கொஞ்சம் தனியா விடுங்க..... " என கத்திய அனு, தேனுவின் முகத்தில் அடித்தது போல், அறைக்கதவை சாற்றினாள்....
கோபமிகுதியால், அழுதபடியே அறையில் இருந்த அனைத்து பொருட்களையும், கீழே போட்டு நொறுக்க துவங்கினாள், அனன்யா.....
"திருமணத்தை எவ்வாறு நிறுத்துவது???? " என அனன்யா தன் மூளையை கசக்கி யோசிக்க, ஆத்திரத்தில் அவளுக்கு ஒன்றுமே பிடிபடவில்லை...
தற்கொலைக்கு முயன்றால், திருமணம் நின்றுவிடும் என கிறுக்குத்தனமாக யோசித்த அனன்யா, அவள் அறையில் பழம் வெட்ட வைக்கப்பட்டுள்ள கத்தியை கையில் எடுத்தாள்.....
தற்கொலைக்கு முயலுபவர்களை அனைவரும் கோழை என்றே அழைப்பர்....
ஆனால், உண்மையிலே தற்கொலை செய்வதற்கு, பெரும்துணிவு தேவைப்படுகிறது....
பாவம் அவளுக்கு தெரியவில்லை, தற்கொலைக்கு மிகுந்த தைரியம் வேண்டுமென்பது....
வேகமா கத்தியை, மணிக்கட்டை நோக்கி கொண்டுபோனவளால் ஒரு சிறு கோட்டை கூட அவள் கையில் கீறி கொள்ளஇயவில்லை... அந்தோ, பரிதாபம்...
மீண்டும், தனது கண்களை இறுக்கி மூடி கொண்டு, கத்தியை தன் மணிக்கட்டிற்கு கொண்டு போக, அவளால் மீண்டும் முடியாமல் போகவே கத்தி அழுதபடி, தரையில் அமர்ந்தாள்......
ஆத்திரத்தில், வேகமா அவள் கத்தியை மாற்றிபிடிக்க கத்தி அவள் வலது உள்ளங்கையை பதம் பார்த்தது.... அதில் சிறு கீறல் விழுந்து ரத்தம் வடிய, "ஆஆஆ.... அம்மா " என வலியில் துடித்தபடி கையிலிருக்கும் கத்தியை கீழே போட்டாள்.....
சிறுகீறலை பொறுக்க முடியாதவள், தன் இன்னுயிரை மாய்க்க துணிந்தாளாம்........
அவளுக்கே, அந்த யோசனை அதிகமாய் தோன்ற, அந்த யோசனையை விடுத்து, மாற்றுவழி அனன்யா யோசிக்க, எதுவும் தோணாமல் போகவே, அழுகை மட்டும் அவளுக்கு முட்டிக்கொண்டு வந்தது......
கையில் வழிந்த ரத்தத்தை தன் ஆடையில் துடைத்தபடி, அழுதபடி அமர்ந்திருந்தாள், அனன்யா.....
அவள் கண்கள் தொடர்ந்து அழுதததால், சிவந்து வீங்கிருந்தன....
.
.
.
.
சிறுது நேரத்திற்கு பின்......
.
.
.
ஆங்காங்கே பொருட்கள் சிதறியும், உடைந்தும் கிடந்தன....
ரத்தகறை படிந்த கத்தி ஒரு ஓரத்தில் கிடந்தது....
அங்கே ஓர் மூலையில்,
காய்ந்த ரத்தக்கறைகளோடு.... கலைந்த கூந்தலோடு கையில் ஒரு புகைப்படத்தை ஏந்தியவாறு..... அமர்ந்திருந்தாள் அனன்யா....
அந்த புகைப்படத்தை நோக்கி..... "நீ ஏன் இப்படி இருக்க????? ஏன் என்னோட காதல் உன் கண்ணுக்கு தெரியல??? உன் மேல உள்ள கோபத்தை நான் மத்தவங்க மேல காட்டிட்டு இருக்கேன்???? நானும் மத்தவங்க மாதிரி தான், சந்தோசமா வாழ ஆசைப்படுறேன்..... ஆனால் என்னால முடியல ...... ஏன் வாழ்க்கைல வந்த??? ஏன்???????????????? !!!!!!!!!!........ " என வாய்விட்டு புலம்பியபடி, இருந்த அனன்யாவின் வீங்கிய கண்களில் இருந்து விழிநீர் வெள்ளபெருக்கெடுத்து அவள் கன்னங்களை வஞ்சமின்றி நனைத்தது.......
.......
To be continued .....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro