விரிசல்
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாக பார்த்துவிட்டு ஒரு சேர அவனை நோக்கினோம்...
இப்போது அவன் தரையை பார்க்கவில்லை... எங்களை நோக்கியவாறு அமர்ந்திருந்தான்....
----------------------------------
அனு வாயை பிளந்தவாறு ஆச்சரியத்தோடு யுவராஜை நோக்கினாள்....
" நீ.... நீயா பேசுன??.... என மெல்லிய ஆச்சர்யத்தோடு ஆரம்பித்த அனுவின் குரல்...." சே.. இல்லை இவனால தான் பேசமுடியாதே " என முடிந்திட.
"எனக்கு உன்ன விட நல்லாவே பேச தெரியும் " என ஏளன பார்வையோடு யுவராஜ் பேசிட... எனக்குமே ஆச்சர்யமாய் தெரிந்தது. .
"அப்போ உனக்கு பேச தெரியும்....இந்த ஒரு வாரமா பேசத்தெரியாத மாதிரி நடிச்சுருக்க.. .. எல்லாரையும் நம்ப வச்சு ஏமாத்திருக்க ....சரியான பிராடு.... இதுக்குதான் யாரையும் நம்ப கூடாது... "......உயர்ந்த அனுவின் குரலில் கோபத்தின் வெளிப்பாடு இருந்தது....
மரபெஞ்சில் இருந்து இறங்கிய யுவராஜ்....
"ஏய் யார பாத்து நடிக்கிறேன்,, பிராடுனு சொல்லுற.... நான் உன்கிட்ட சொன்னேனா என்னால பேச முடியாதுனு..... நீயா நினச்சா நா ஒன்னும் பண்ண முடியாது " என யுவராஜும் கோபத்தில் எகிறிட......
கணநேரத்தில் இவ்விருவரின் குணமாற்றமும் என்னை திகைப்படையச் செய்துவிட்டது... நான் செய்வதறியாது நின்றுவிட்டேன்...
"ஆமான்டா நீ பிராடு.... உங்க அம்மா பிராடு.... உங்க குடும்பமே ஒரு பிராடு குடும்பம்..... என அனு மேலும் எகிறிட....
"என் குடும்பத்தை பத்தி பேசுன நா சும்மா இருக்கமாட்டேன் "என ஆவேசமாய் யுவராஜ் பேசிட...
"அப்டிதான்டா பேசுவேன்... என்னடா பண்ணுவ??? " என அனு மேலும் யுவராஜின் கோபத்தை தூண்டிட...
"இதுக்கு மேல பேசிதான் பாரேன் " என ஆவேசமாய் யுவராஜ் அனுவை நெருங்க..
அதுவரை கல்லென நின்ற நான் ஓடிச்சென்று யுவராஜின் முன் நின்று "தப்பு என்மேல தான்டா..... சாரி நான்தான் அனன்யா கிட்ட உன்னால பேசமுடியாதுனு சொன்னேன்... அவ ஏதோ தெரியாம பேசுறா விட்டுடு " என சொல்லிட அவன் ஆவேசம் சிறிது குறைந்தது....
"நீ எதுக்கு அவனுக்கு சாரி சொல்லுற..., எல்லாரையும் நடிச்சு ஏமாத்துனதுக்கு அவன் தான் சாரி சொல்லனும் "என என்னிடம் பாய்ந்திட.....
யுவராஜின் கனல் பார்வை மீண்டும் அனுவை நோக்க, பதிலுக்கு அனுவும் யுவராஜை எரித்திடும்படி பார்க்க, நான் அனுவை தரதரவென இழுத்துக்கொண்டு வகுப்பறைக்கு சென்றுவிட்டேன்....
அனு "இப்போ எதுக்குடா என்னை இழுத்துட்டு வந்த....???..... " என காரமாய் கேட்டிட....
"இன்னும் கொஞ்சம் நேரம் நீ அங்க இருந்தா பிரளயமே வந்துருக்கும் அதான் " என நான் பதில் கூறினேன்.....
"பாத்தியா அவன உன்ன நல்லா நடிச்சு ஏமாத்திருக்கான்.... சரியான பிராடு " என மீண்டும் அனு ஆரம்பிக்க.....
"அம்மா தாயே மறுபடியுமா.... முடியல... விட்டுடு " என நான் தலைமேல் கைகூப்பிட.......
கோபம் தளர்ந்து அனு கலகலவென சிரித்துவிட்டாள்......
தொலைதூரத்தில் இருந்த யுவராஜ் மீண்டும் அனுவின் கண்ணில் விழ, கணநேரத்தில் அனுவின் சிரிப்பு கோபக்கனலானது.....
"இனிமே நீ அவன் கூட பேச கூடாது... எனக்கு அவன சுத்தமா பிடிக்கல "என அனு கூறிட என் மனதில் மிக சிறிதான கோபம் ஒன்று எட்டிப்பார்த்தது....
அந்நேரம் அவளை சமாளிப்பதற்கு வேறு வழி தெரியாமையால், அக்கோவத்தை நெஞ்சில் புதைத்து நானும்"சரி பேசல " என்றவாறு என் தலையை ஆட்டினேன்.....
இடைவேளைக்கு பிறகான வகுப்பில்.... அவள் எனக்கும் யுவ்ராஜ்க்கும் இடையில் அமர்ந்துகொண்டாள்......
அவர்கள் இருவரும் சண்டையிட தயாராகும் சேவலைப்போல முறைத்துக்கொண்டிருந்தனர்.....அதை பார்த்தகணம் எழுந்த சிரிப்பை வழக்கம்போல புதைத்துவிட்டு பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்....
வழக்கம்போல் மாலை எங்களின் காரில் ஏறி வீடு நோக்கி பயணமானோம்....
பயணத்தின் போது அனு "அவன கிளாஸ்ல வேற இடத்துல உக்காரச்சொல்லு.... வேற யாரையாச்சும் மாத்தி உக்காரசொல்லுவோம் " என்றிட....
அதில் எனக்கு துளியும் விருப்பம் இல்லாதபோதிலும் "சரி" என்றவாறு தலையசைத்தேன்....
மறுநாள் காலை வகுப்பில் இடைவேளை நேரம்.....
அனுவுக்கு உடம்பு சரியில்லாத காரணத்தினால் என்னுடன் பள்ளிக்கு வரவில்லை....
யுவராஜிடம் எனக்கு தனியாக பேச வாய்ப்பாய் அமைந்தது.....
நான் தனியாக எனதுஇருக்கையில் அமர்ந்திருந்தேன்.... அவன் வழக்கம்போல் தரையை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.....
"யுவராஜ் " என நான் மென்மையாக அழைத்தேன்....
நிமிர்ந்த அவன் சிநேகமா மெலிதாய் சிரித்தான்.....
"யுவராஜ் நேத்து.... "என நான் ஆரம்பிக்கும் முன்னரே "அத பத்தி பேசவேணாம் "என அணையிட்டான்.... நான் செயற்கையாய் புன்னகைத்தேன்.....
அனுவைத்தவிர தவிர எனக்கு வேறு நண்பர்கள் இல்லாத காரணத்தால் யுவராஜிடம் நட்பு பாராட்ட என்மனம் தவித்தது....
"பிரண்ட்ஸ்? " என சிறிது தயக்கத்தோடு அவனிடம் கையை நீட்டினேன்..... அதுவரை சிரித்த முகமாய் மலர்ந்திருந்த அவன் முகம் வாடிய மலராய் வழக்கம்போல் தரையை நோக்கியது....
நான் கையை எடுக்க போகும் நேரம், யுவராஜ் என் கையை மலர்ந்த முகத்துடன் குலுக்கி "ஓகே பிரண்ட்ஸ் "என்றிட அவன் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொண்டது....
"அப்புறம் நாம பிரண்ட்ஸா இருக்குறது அனுவுக்கு தெரியவேணாம்... தெரிஞ்சா பிரச்சனை பண்ணுவா " என மீண்டும் தயக்கம் மேலிட நான் கோரிட.... அவன் சிறிது முறைத்து பின் சிரித்தவாறு "சரி " என்றவாறு தலையசைத்தான்....
அவன் வேறுஎதுவும் கேட்காமல், என்னை புரிந்துகொண்ட விதம் என்னை வெகுவாக கவர்ந்தது.....
இப்படியே நாட்களும் சென்றது.....
அனு மற்றும் யுவராஜ்றிக்கு இடையே நடக்கும் பனிப்போர் வலுத்ததே தவிர குறைந்தபாடில்லை...... இருவரும் சண்டைக்கோழிகளாய் வலம்வந்தனர்.... வருடங்களும் உருண்டோடின.....
இந்த ஏழு வருடங்களில் "யுவராஜ் " எனக்கு "யுவி "ஆகினான்; ஆருயிர் நண்பனாகினான் ; மிகமிக நல்லவன் ;பொறுமையின் சிகரமாய் விளங்கினான்... அவனுக்கு சிறுவயதிலே அம்மா இறந்துவிட்டார்.... அப்பா வாசன் .... தோல் தொழிற்சாலை சொந்தமாக வைத்துள்ளார்.... இவை, நான் அவனை பற்றி ஏழு வருடங்களில் அறிந்தவை...
நானும் யுவராஜும் எங்களின் நட்பினை அனன்யாவிடம் மறைக்க பல நாடகங்களை அரங்கேற்றி சமாளித்துவந்தோம்..... இருந்தாலும் அவளுக்கு எங்களின் மேல் சந்தேகம் இருந்தததை நான் அறிவேன்...
இதோ 12 ஆம் வகுப்பின் கடைசி பொதுத்தேர்வு முடிந்து தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தோம்......
முடிவுகளும் வந்தன.... நான், யுவி, அனு நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தோம்.... சென்னையிலே ஒரு நல்ல பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது.....
அனன்யாவுக்கு கணிதத்தின் மேல் உள்ள வெறுப்பால் பொறியியல் படிப்பில் அவளுக்கு நாட்டமில்லை..... நான் அங்கே தான் படிக்க போகிறேன் என உறுதியாய் அவளிடம் சொன்னமையால் அவளும் அங்கே படிப்பதற்கு சம்மதம் தெரிவித்தாள்.....
கல்லூரியில் சேர ஒரு மாதமிருந்தது.....
அன்று ஒரு நாள் அனன்யாவின் பிறந்தநாள்.....
நானும், யுவியும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தோம்.......
அப்போது என் கைபேசி ஒலித்தது..... திரையில் அனுவின் பெயரை பார்த்ததும் மென்சிரிப்புடன் நான் அழைப்பை ஏற்றேன்....
"சொல்லு பர்த்டே பேபி....அதான் 12 மணிக்கே விஷ் பண்ணிட்டேனே..... அப்புறம் என்ன?? " என நான் ஏற்ற இரக்கத்தோடு வினவ....
"டேய் சித்து....அதில்லடா " என இழுத்தவாறு சினுங்க....
"இது அனன்யா தானே??? இல்லை வேற யாருமா??? " மேலும் அவளை வம்பிழுக்க...
"சித்து விளையாடாத.... நான் சொல்லுறத கேளு " என சிறிது அடாவடியாய் அவள் கூறிட...
நான் "சரி சொல்லு அனு " என்றிட...
"எங்க இருக்க? " என அனு வினவிட...
நான் யுவராஜுடன் இருப்பதை மறைத்து "பாக்ஸிங் ப்ராக்டிஸ் " என பொய்யுரைத்தேன்....
" சரி சித்து..... அது... அதுவந்து நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும் " என அவள் பொறுமையாக கூறிட...
""முக்கியமான விஷயமா....?? சரி இப்போவே சொல்லு "என நான் கேட்டிட...
"அது.... அது வந்து... போன்லாம் சொல்லமுடியாது..... இன்னைக்கு ஈவினிங் பர்த்டே பார்ட்டிக்கு சீக்கிரம் வந்துரு.... நேர்ல சொல்றேன்..... " என கூறினாள்....
எனக்கு அவளது பேச்சு வித்தியாசமாக தென்பட்டது.... "சரி அனு சீக்கிரம் வரேன் ".....என்றேன்.
"கண்டிப்பா சீக்கிரம் வரணும் .... ப்ராமிஸ் பண்ணு " அனு கேட்டிட
" ப்ராக்டிஸ் முடிஞ்சதும் சீக்கிரம் வரேன்... ப்ராமிஸ்.... பை "என நான் அழைப்பை துண்டிக்கப்போகும் நேரம்....
"சித்து..... "
"சொல்லு அனு "
"அது..... அது வந்து..... ஐ.. .. " என அனு இழுக்க...
"அதான் வந்துட்டியே " என நான் கேட்டிட....
"அது ஒண்ணுமில்ல... குட் மார்னிங் " என்றவாறு அழைப்பு துண்டிக்கப்பட்டது....
நான் சிரிப்பு மேலிட அலைபேசி அழைப்பை துண்டித்தேன்....
கிரிக்கெட் விளையாடி முடிக்க மாலை 5:45 மணி ஆனது....
யுவி பைக்கை ஓட்ட, நான் அவன் பின் அமர்ந்தேன்....
நான் யுவியிடம் "சீக்கிரம் போ....இல்லை அந்த அனு லூசு பேயாட ஆரம்பிச்சிருவா " என புலம்ப.....
அவன் வழக்கமான புன்னகையுடன் வண்டியின் வேகத்தை கூட்டினான்....
ஒரு வளைவில் நாங்கள் திரும்பும்போது.... எதிரில் வேகமாக வந்த கார் எங்களை கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது......
நாங்கள் இருவருமே தூக்கி எறியப்பட்டோம்..... என் கண்கள் முழுவதும் இருள் படர்ந்தது.....
நான் கண்முழித்த நேரம், தலை பாரமாய் இருப்பதாய் உணர்ந்தேன்.... யுவி என்னருகில் இல்லை.... என்னை சுற்றி ஒரே கூட்டமாக இருந்தது..... என் மேல் தண்ணி தெளிக்கப்பட்டுருந்தது..... தண்ணியை குடித்துவிட்டு... யுவராஜை தேடினேன்... அங்கே ஒரே கூட்டமாய் இருந்தது.....
பதற்றம் தொற்றிக்கொள்ள....... என்னால் முடிந்த அளவு வேகமாய் அங்கு இருந்த கூட்டத்தை விலக்கி முன்னேறினேன்.....
யுவி ஒரு புறமும்.... என் பைக் ஒருபுறமும் கிடந்தது.... யுவியின் தலையில் இருந்து ஆறு போல் இரத்தம் வந்துகொண்டிருந்தது.... அரைமயக்க நிலையில் இருந்தான்...... நான் வேகமாக சென்று யுவியை என் மடியில் ஏந்தினேன்......
குற்றவுணர்ச்சி மேலோங்க....என் கண்களில் இருந்து கண்ணீர் வந்துகொண்டிருந்தது.....
"யுவி... யுவி.... என்ன பாருடா" என நான் அழுகையுடன் அவன் கன்னத்தை தட்ட.....
"நா... நான்..... "என்று எதையோ யுவி சொல்ல தொடங்கும் முன்பே என் மடியிலே மூர்ச்சையானான்..
அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவும் நான் யுவியுடன் வண்டியில் ஏறினேன்....
மருத்துவமனையின் அவசர பிரிவில் அவனை கொண்டுசென்றனர்..... உள்ளே நுழைய முயன்ற என்னை தடுத்து நிறுத்தினர்.... சிறு காயத்தினால் , எனக்கும் சிகிச்சை நடைபெற்றது....
தலையில் கட்டுடன், உணர்வற்ற நிலையில் அவசர பிரிவின் வாசலில் காய்ந்த, ரத்தம் வடிந்த சட்டையுடன் அமர்ந்திருந்தேன்...... செவிலியர்களும், மருத்துவர்களும் உள்ளே போவதும், வெளியே வருவதுமாய் இருந்தனர்.... "யுவிக்கு பயப்படுறபடி ஒன்னும் இல்லையே??" என்ற என் கேள்விக்கு பதிலளிக்க அவர்கள் மறுத்துதது..... மேலும் என் பதற்றத்தை கூட்டியது.....
அவனின் நிலைமைக்கு நான் தான் காரணம் என குற்றவுணர்ச்சி என்னை வாட்டியது.... கடவுளிடம் அவனுக்காக மன்றாடினேன்....
அப்போதே அவன் தந்தைக்கு தகவல் தெரிவிக்காதது நியாபகம் வந்தது.... அலைபேசியை தேடினேன்..... பல தவறிய அழைப்புகள்.... அனுவிடமிருந்து.....
நான் யுவியின் அப்பாவுக்கு முயற்சி செய்தேன்.... அவர் தொழில் விஷயமாக வெளிநாடு சென்று இருப்பதால் தொடர்பு கிடைக்கவில்லை.... இடையில் அனுவின் அழைப்பு வந்து என்னை மேலும் கடுப்பேற்றியது.......
யுவியின் அப்பாவிற்கு தொடர்பு வெகுநேரம் முயற்சித்தும் கிடைக்கவில்லை..... சோர்ந்து போய் நான் அமர்ந்திருந்தநேரம் மீண்டும் அனுவின் அழைப்பு......
ஒரு வித எரிச்சலுடன் அழைப்பை ஏற்ற நான் "சொல்லு அனு " என்றேன், என்நிலை மறைத்து...
"இது தான் நீ சீக்கிரம் வர லக்க்ஷணமா??? " காரமாய் வந்தன அவள் வார்த்தைகள்....
நான் பதில் பேசும் முன்னரே "இன்னைக்கு பாக்ஸிங் ப்ராக்டிஸ் இல்லையாமே.... ராம் மாமா சொன்னாங்க...... " அவள் பேச்சில் அனல் தெறிக்க....
"அனு யுவி..... " என நான் ஆரம்பிக்க....
"அப்போ நான் எவ்ளோ சொல்லியும் நீ அந்த பிராடுகூட தான் சுத்திட்டு இருக்க???...... உனக்காக நான் எவ்ளோ நேரம் காத்திருந்தேன் தெரியுமா......?? என்னைவிட உனக்கு அவன் முக்கியமா போய்ட்டானா? "என கோபமாய் ஆரம்பித்த அவளின் வார்த்தைகள் .....
"என்னடி....? விட்டா ஓவரா பேசுற..,! யுவிய பத்தி இனி ஒரு வார்த்தை தப்பா பேசுன.... நான் மனுசனாவே இருக்கமாட்டேன்..... நீ எப்பவும் உன்ன பத்தி மட்டும் தான் யோசிப்பியா???? என்ன பத்தி யோசிக்கமாட்டியா??? நான் என்ன உன் நாய்க்குட்டியா நீ சொல்றதெல்லாம் கேட்டுட்டு உன் பின்னாடியே வாலாட்டிடு சுத்துறதுக்கு???..........நீ சரியான சுயநலவாதி....ஆமாண்டி எனக்கு அவன் தான் முக்கியம்....... நீ முக்கியமில்லை......உன்னால முடிஞ்சத பாத்துக்கோ.... போடி.... " அதுநாள்வரை புதைத்து வைத்த எனது கோபம் எரிமலையாய் வெடித்தது....
மறுபுறம் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.... நான் மீண்டும் அழைத்த போது சுவிட்ச் ஆப் என வந்தது..... நானும் சரி தான் போடி என விட்டுவிட்டேன்.....
சிகிச்சை முடிந்தபின் வந்த மருத்துவர் "சரியான நேரத்துக்கு கொண்டு வந்ததும் , பிளட் பேங்க்ல பிளட் கிடைச்சதும் தான் அவர காப்பாத்திருக்கு ......"என்றார்...
கண்களில் கண்ணீருடன் "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்... நா இப்போ அவன பாக்கலாமா " என்றிட....
"போய் பாருங்க " என சொன்னார் மருத்துவர்...
தலை, கை மற்றும் காலில் கட்டுடன் பாவமாய் படுத்திருந்தான்..... அவனருகில் அமர்ந்தேன்..... ஒரு மணி நேரத்திற்கு பின் கண்முழித்தான்.... அவன் அமர்வதற்கு உதவி செய்தேன்.....
"சாரி டா.... என்னால தான் உனக்கு இப்படி ஆச்சு.... நான் தான் உன்னைய வேகமா போக சொன்னேன்" என குற்றவுணர்ச்சி மேலோங்க நான் கேட்டிட....
யுவி பொய்யாய் முறைத்தபடி "உத விழும் "என்றவன்.......
"கொஞ்ச நேரத்தில பயப்படவச்சிட்டியே " நான் சொல்லிட..
யுவி வழக்கமான புன்னைகையை சிதறவிட்டு "நீ அனன்யா பர்த்டே பார்ட்டிக்கு போல?? " என வினவிட...
எனது தீப்பார்வையில் அமைதியானான்....
மறுநாள் காலை... யுவராஜின் வீட்டிற்கு சென்று அவன் சட்டையை நான் மாற்றிக்கொண்டு அவனுக்கு மாற்று துணி மற்றும் அவன் வேலையாள் தயார் செய்த உணவை எடுத்துக்கொண்டு மருத்துவமனை சென்றேன்.....
அப்போது என் அம்மா சீதா எனக்கு அலைபேசியில் அழைத்தார்.....
"ஹலோ மம்மி...." என ஆரம்பித்த நான் யுவராஜின் நிலையை விளக்கினேன்....எனக்கு அடிபட்டதை மறைத்து.... சிறிய அடிதான்..... ஆனால் அம்மா பதறிவிடுவார்கள் என மறைத்தேன்....
"என்னால வீட்டுக்கு வர முடியாது மம்மி, யுவிய பாத்துக்க ஆள் இல்லை " என்றேன்....
"சரிடா... பாத்துக்கோ.... பாவம் அந்த பிள்ளை "என்றவர்... "அனு என்று ஆரம்பிக்க....
"மம்மி... அத பத்தி பேசவேணாம்" என்று அழைப்பை துண்டித்துவிட்டேன்... யுவராஜை மருத்துமனையில் இருந்து அவன் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டேன்....
இரு தினங்களுக்கு பிறகு......
யுவராஜ் ஓரளவு தேறியிருந்தான்.... நான் அனுவுடன் பேச முயற்சிக்கவில்லை....
மீண்டும் என் அம்மா என் தொலைபேசியில் அழைத்தார்......
"சொல்லுங்க மம்மி " என நான் அழைப்பை ஏற்க....
"சித்து..... அனு....என பதட்டமாக ஆரம்பித்த அம்மா "அனுவ காணோம் டா ".. என முடிக்க....
"அனுவ காணோமா ?????????!!!!" என நான் மேலும் பதற்றமானேன்.....
Author note:
Hai friends....Merry Christmas 🎊🎉🎂🎊🎉to all.....
Negative & positive comments are most welcome.... your golden votes are appreciated.... Add your feedback about this story on comments....
With love 💞
💞sana...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro