Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ரோமியோ - ரோஸலின்

என் அப்பா வந்து, என்னை வீட்டுக்கு அழைத்து சென்ற பிறகே, என் உயிர் என்னிடம் திரும்பியது போல் இருந்தது.....

வீட்டுக்கு வந்தும் நான் பையை வைத்துக்கொண்டே சுற்றுவதை பார்த்த அப்பா,

"அப்படி என்ன அந்த பையில இருக்கு. யுவி?? " என கேட்க,

மீண்டும் பயம் தொற்றிகொள்ள "ஒன்னும் இல்லப்பா".... என்று எனதறைக்கு ஓடிவிட்டேன்......

எனதறையில் சென்று டோராவின் புகைப்படத்தை வெளியே எடுத்த நான், அதை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தேன்....

அப்பாவின் காலடியோசை கேட்க, அதை என் பையில் வைத்துவிட்டு, வேகமாய் மெத்தையில் அமர்ந்துகொண்டேன்.....

என் அப்பா, என்னை ஒரு முறை வினோதமாய் பார்த்துவிட்டு, மீண்டும் சென்றுவிட்டார்....

அன்றிரவு எனதறைக்கே உணவு வந்தது..... அப்பா வேலை நிமித்தமாக, அலுவலகம் சென்றிருந்தார்......

நான் "பவர் ரேஞ்சர்ஸ் " கார்ட்டூன் பார்த்து கொண்டே, டோராவின் படத்தை பார்த்து கொண்டிருந்தேன்....

மீண்டும் அதை என் பையில் வைத்துவிட்டு, அதை அணைத்தவாரே சோபாவிலே உறங்கிபோனேன்......

மறுநாள் காலை, எழுந்து பார்க்கும் போது....மெத்தையில் படுத்தபடி இருந்தேன்.....

என் மீது போர்வை போர்த்தப்பட்டிருந்தது..... என் அருகே அப்பா படுத்திருந்தார்...... என் பையானது மேஜை மீது வைக்கப்பட்டிருந்தது......

வேகமாக எழுந்த நான், அதை எடுத்து பார்க்க, அதில் டோராவின் படம் இருந்தது......

அதை மறைத்து வைக்க எண்ணிய நான், ஸ்டோர் ரூமில் வைத்துவிட்டு வந்து பார்க்க, அப்போதும் அப்பா உறங்கிக்கொண்டு தான் இருந்தார்.....

நிம்மதியுடன் கிளம்பிய, அன்று பள்ளிக்கு சென்றுவிட்டேன்......

அதன் பின் நான் டோராவிடம் சரியாக பேசுவதில்லை

சின்ன வயதில் பலருக்கு பல பொருட்கள் பிடிக்கும்....

விதவிதமான பொம்மை படங்கள் மனதை ஈர்க்கும்...

அது சமந்தபட்ட பொருட்கள், பொம்மைகள், படங்கள், ஸ்டிக்கர்கள் சேமிப்பது சிலரின் தலையாய வேலையாய் அமையும்.....

அது தன்னிடமே இருக்கவேண்டும் என்ற அர்த்தமில்லா பிடிவாதம் உண்டாகும்.....

அதை யாரும் தன்னிடம் இருந்து பிரித்துவிடுவார்களோ என்ற தேவையற்ற பயம் ஆர்ப்பரிக்கும்...

எனக்கும் அது போன்ற ஒரு உணர்வே அனன்யாவை பார்த்துவுடன், ஏற்பட்டது....

அதுவே அவளின் படத்தை அபகரிக்க என்னை தூண்டியது...

அதை யாரும் என்னிடம் இருந்து பறித்துவிடக்கூடாது என நினைத்து மறைத்து வைக்க தூண்டியது.....

என் தனிமை காலத்தின் போது, பொம்மை படங்களே என் பெரும் ஆதரவாய் அமைந்தது...

அனன்யாவை பார்த்தவுடன், தொலைக்காட்சியில் பார்த்த டோராவை நேரில் கண்டுகொண்டதாக என் உள்ளம் எண்ணிக்கொண்டது....

அனன்யாவை டோராவாக உருவகப்படுத்திக்கொண்டது.... அதனாலே அவளிடம் நட்பு பாராட்ட என் மனம் வேண்டியது.....

ஆனால் அவளுடன் பேசிய பிறகே தெரிந்தது, அவள் உருவம் மட்டும் டோராவாகவும், பேச்சில் அவள் ஒரு சூனியக்காரி என்றும்.... 😂

இவையனைத்தும், அந்த வயதில் எனக்கு புரிந்திட வாய்ப்பே இல்லை...
.
.
.

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தது.... சித்தார்த்துடனான என் நட்பு, டோராவின் மந்திரக்கண்களில் விழாத வண்ணம், ஆலமர விருட்சமாய் வளர்ந்தது.....

எனக்கும் டோராவிடம் பேச வேண்டும் என்று தோன்றும் சமயத்தில், அவளிடம் சாடை மாடையாக பேசி, என்னுடன் சண்டையிட வைத்துவிடுவேன்........

சண்டையிடும் எங்கள் இருவருக்கும் எவ்வித சேதாரமோ, பாதகமோ ஒரு போதும் ஏற்படாது....

பாவம் சித்தார்த்தின் தலை தான் எங்கள் இருவர் சண்டையில் பந்தாடப்படும்.... எங்கள் இருவருக்கிடையில் சித்தார்த் இருத்தலைகொள்ளியாய் தவித்துபோவான்....
.
.
.

மூன்று வருடங்கள் வேகமாக பறந்தோடின.....

சித்தார்த்தை " சித்து " என்று அழைக்க தொடங்கியிருந்தேன்... அனன்யாவை " டோரா " என்றும், "சூனியக்காரி " என்றும், என் மனநிலைக்கேற்ப மனதினுள்ளே அழைத்துக்கொள்வேன்...

பின்னே.. ... வெளியில் அவ்வாறு அவளை அழைத்தால், போருக்கு செல்லும் ஜான்சிராணியை போல் என்னை வதம் செய்ய தயாராகிவிடுவாள், அந்த சூனியக்காரியை தன்னுள் வளர்க்கும், டோராவாகிய அனன்யா.....

பிடிவாதத்தின் மொத்த உருவம், அவள்.... ஆணவமாய் சுற்றித்திரியும் சூனியக்காரி....

சித்தார்த் யாருடனாவது பேசுவதை கண்டால், அவள் வயிறு தீயில்லாமலே பற்றிக்கொண்டு எரிந்துவிடும்.... கோபத்தில் அவள் மூக்கு, கண்கள் ரத்த நிறத்தை சொந்தமாக்கிக்கொள்ளும்.....

அதை பார்க்கையில் எனக்கு மீளா சிரிப்பு ஏற்படும்.... அவளை வெறுப்பேற்றிவிடவே, அவள் பார்க்கும் வண்ணம், சித்தார்த்திடம் பேசுவேன்...... அவள் கடுப்பில், சிவந்து வெம்பிவிடுவாள்.....

அன்று ஒரு நாள் நானும், சித்துவும் புட்பால் விளையாடிக்கொண்டிருந்தோம்.......

தவறுதலாக, என் கால் அவன் காலில் பட்டிட, சித்து நிலைத்தவறி கீழே விழுந்தான்..... அவன் தலையிலிருந்து நிற்காமல் உதிரம் வெளியேறிக்கொண்டிருந்தது....

உடனே அவனை பள்ளியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.... அவனுக்கு தையல் போடப்பட்டு, மருந்திடப்பட்டது....

தவறுதலாக நடந்த போதும், என்னாலே தான் சித்துவுக்கு அடிபட்டது என்ற உணர்வு என்னை வாட்டிவதைத்தது..

சித்துவோ, என் சோகமுகத்திலே, என் மனதை அறிந்தவனாய், "விடுடா.... தெரியாம தானே நடந்துச்சு.... முகத்தை அப்படி வைக்காத... பாக்க சகிக்கல... " என்றான்...

அவன் என்ன சொல்லியும், என்னால்தான் அடிப்பட்டதென உள்ளூர வருத்தமிருந்தது.....

சித்துவை வீட்டிற்கு அவன் அப்பா அழைத்து சென்றுவிட்டார்.. ..... விஷயம் அறிந்த அனன்யா அன்று முழுதும் என்னை பார்வையால் எரித்தபடி, சுற்றிக்கொண்டிருந்தாள்......

மறுநாளே, சித்து பள்ளிக்கு வந்துவிட்டான்...

கேம்ஸ் பீரியட்டின் போது, என்னையும், அனன்யாவையும் ஆசிரியர், கேம்ஸ் பொருட்கள் இருக்கும் அறைக்கு சென்று, பந்துகளையும், இறகுப்பந்து, கிரிக்கெட் பேட், ஸ்டெம்புகளை எடுத்துவருமாறு சொல்லி, அனுப்பிவைத்தார்....

"ஐயோ.... இந்த சூனியக்காரியோட கோர்த்துவிடுறாரே, சும்மாவே முறைச்சிட்டு அலையுறா... இப்போ, தனியா போனா என்ன ஆகுமோ?? " என புலம்பியபடி, அவளுடன் நடந்தேன்....

முறைத்துக்கொண்டே என்னுடன் நடந்தாள், டோரா....

அறையை அடைந்தவுடன், பொருட்களை தள்ளிவிட ஆரம்பித்தாள்...

"ஆஹா.... சைத்தான்... வேலையைக்காட்ட தொடங்கிடுச்சு.... " என்றெண்ணிய நான், கண்டும் காணாமல் தேவையான பொருட்களை எடுத்துவைக்க ஆரம்பித்தேன்....

"எதுக்குடா?? சித்துவோட மண்டைய உடைச்ச.... " என கோபத்தை முகத்தில் வெளிப்படுத்தி, வார்த்தையில் அமைதியை நாட்டியவண்ணம் என்னிடம் கேட்டாள், அனன்யா.....

"நான் வேணும்னே பண்ணல அனன்யா... அது தெரியாம நடந்துருச்சு... " என நான் என்நிலை விளக்க,

"தெரியாம நடக்கலாம் வாய்ப்பே இல்லை... நீ வேணும்னே செஞ்சுருப்ப... " என அவள் பேச்சில், எரிச்சல், கோபம் கலந்திருக்க....

"நான் வேணும்னு பண்ணல " என நானும் கோபத்தில் அனல் தெறிக்கும் படி, பேசிட....

"நீ பண்ணிருப்ப...பண்ணிட்டு தெரியாம பண்ணிட்டேன்னு... சித்துக்கிட்ட சொல்லி நடிச்ச மாதிரி, என்கிட்டயும் நடிக்காதே..... " அவள் ஆவேசமாய் பேச...

"நான் ஒன்னும் நடிக்கல... " என நான் என் குரலை உயர்த்த...

"நீ நடிச்சு தான் ஏமாத்திருக்க.... ஏன்னா.... நீ ஒரு பிராடு.... " அவளும் குரலை உயர்த்த....

" என்னடி விட்டா ஓவரா பேசுற??? பிராடா??? நான் உனக்கு பிராடா??? உன்கிட்ட எப்பவாச்சும் பேசிருக்கேன்னா???... உன்ன ஏமாத்திட்டேன்னா???.... இப்போ எதுக்கு ஓவரா சீன் கிரெய்ட் பண்ற?? " என நானும் விடாது எகிறிட....

"ஆமான்டா, நீ ஒரு பிராடு, 420.....இல்ல 840.....இல்ல... இல்ல... அதுக்கும் மேல..... " என டோரா என் ரத்தஅழுத்தத்தை மேலும் உயர்த்த......

"வேண்டாம் டி.... ரொம்ப ஓவரா... போற.... " என நான் அனன்யாவை எச்சரிக்க....

"அப்படித்தான்டா... பேசுவேன்.... பிராடு.... என்னடா பண்ணுவ?? " என டோரா மேலும் என்னை கடுப்பேற்ற.....

"நான் பிராடுனா.... நீ ஒரு கழுதை... " என நானும் அவளை ஏச....

" யாரு பாத்துடா.... கழுதைன்னு சொன்ன???.... நீ தான்டா வெள்ள சிம்பன்சி " என டோரா கேட்க....

"உன்ன பாத்துத்தாண்டி சொன்னேன்... நான் சிம்பன்சினா..... நீ ஒரு வெள்ளைப்பன்னிடி ......

ஆள, பாரு.... நல்லா பன்னை டியில முக்கி எடுத்தமாதிரி இருந்துட்டு, என்னைய பாத்து சிம்பனிசினு சொல்றியா??.....

இப்போ இந்த ரூம்குள்ள வரும்போது கூட, கதவை எப்படி அடச்சுகிட்டு வந்த?? என்னய வேற உன் கூட தனியா அனுப்பிவைச்சுட்டாங்க...... நீ வேற இந்த ஆட்டம் போடுற.... இது வேற பழைய பில்டிங்..... " என நான் சொல்ல, சொல்ல... டோராவின் முகம் கோபத்தில் ரத்தகளறியாய்
காட்சியளித்தது....

கோபத்தில் டோராவின் காதில் கண்ணுக்கு தெரியா புகை வருவது, என்னால் உணரமுடிந்தது....

கோபமாய் டோரா கீழே குனிந்து ஏதோ தேட....

"என்னத்த தேடுறா?? ஏதாச்சும் பெருசா ட்ரை பன்றாளோ?? " என நான் யோசித்த வேளை,

அவள் கிரிக்கெட் பந்தை கையில் எடுத்து உருட்டியபடி, என்னை கோபத்துடன் நோக்க...

"ஆத்தி.... கொல்லபாக்குறாளே.... சூனியக்காரி.... " என்று மனதினுள் எண்ணிய நான்,

"வேணாம் அனன்யா... பேச்சு... பேச்சாதான் இருக்கனும்..... ஆயுதத்தாலாம், கையில எடுக்க கூடாது..... நான் வேற நிராயுதபாணியா இருக்கேன் " என நான் கூறி கொண்டே இருக்கும்போதே,

அனன்யா பந்தை என் மீது ஏறிய, நான் விலகியதால், என் மீது படவில்லை....

"திடீர்னு... அடிக்காதடி, தீவிரவாதி " என அவள் குறியிலிருந்து தப்பியபடி சொல்ல...

" நான்... தீவிரவாதின்னா... நீ ஒரு கேவலவாதிடா.... " என சொல்லியபடியே அவள் என்னை தாக்கிகொண்டிருக்க....

என் மீது படவில்லை என்று தெரிந்ததும், அடுத்ததாக, இறகுப்பந்து, கிரிக்கெட் பேட், ஸ்டெம்ப் என வரிசையாக என் மீது எறிய ஆரம்பித்துவிட்டாள்....

அவள் குறியிலிருந்து, தப்புவதற்குள், உயிர் போய் உயிர் வந்தது.....

"வேணாம்....அனன்யா.... " என முதலில் கெஞ்சிய நான், பதிலுக்கு நானும் என் கையில் இருந்ததை ஏறிய ஆரம்பித்துவிட்டேன்....

" டேய்... என்னடா பண்ணிட்டு இருக்கீங்க??? " என உள்ளே வந்த சித்தார்த்துக்கும், வாலிபாலால், கையில் ஒரு உதை அனுவால் தரப்பட்டது....

அவன் " அம்மா " என்று கத்தியபடி, அவன் கையை தேய்க்க.....

"நீ ஏன் சித்து... இங்க வந்த?? " என கேட்ட என் மேலும் ஒரு கிரிக்கெட் ஸ்டெம் விழுந்தது.....

நானும், "அம்மா " என்றபடி, என் முதுகை தேய்க்க......

"என்ன நடக்குது.... இங்க??? " என உள்ளே வந்த பி.டி ஆசிரியர் தலையிலும், வாலிபால் விழுந்தது.....

அவர் தலையில் பால் விழுந்ததும், மூவரும் சிலையென நிற்க.....

அவர் நெற்றியானது, புடைத்து வீங்கிய, சிவந்த ஒழுங்கற்ற பாதம் கொட்டைபோல் காட்சியளித்தது...

அதை பார்த்த எனக்கும், சித்துவுக்கும் சிரிப்பு மேலோங்க, நாங்கள் கைகளால், வாயை மூடியபடி, சிரிப்பை கட்டுப்படுத்த... டோரா சிற்பம் போல் அசையாமல் நின்றுவிட்டாள்.....

அவர் எங்கள் எங்கள் மூவரையும் முறைத்து கொண்டே வெளியே சென்றுவிட்டார்....

அதன் விளைவு, அடுத்த சிலமணித்துளிகளிலே நாங்கள் மூவரும், தலைமையாசிரியின் அறையின் வெளியே நின்றோம்....

எங்கள் இருவரின் சண்டையில் தேவையில்லாமல், சித்தார்த்தும் மாட்டிக்கொண்டான்.... அவன் மேல் தப்பே இல்லாத போதும், தப்பு செய்தவன் போல் எங்களுடன் அவனும் நிற்கவைக்கப்பட்டான்... தலையை கீழே தொங்கபோட்டபடி, பாவமாய் நின்றான்....

சட்டை கசங்கியபடியும், தலைமுடி கலைந்தும், வியர்வையில் குளித்தவாறும் நின்றிருந்தேன்....

டோராவின் இரட்டை ஜடையில், ஒரு ஜடை அவிழ்ந்தும், அவள் முடி மொத்தமும் கலைந்தும், காணப்பட்டது... அவளின் முகத்தில் பயம் தென்பட்டாலும், என்னை முறைக்க அவள் தவறவில்லை.....

அவள் முறைப்பதால், நானும் அவளை முறைக்க, அதை பார்த்த சித்தார்த், "இதுங்க... திருந்தாதுங்க... " என உணர்த்தும்வண்ணம், தலையில் அடித்துக்கொண்டான்....

எங்கள் மூவரின் தந்தையருக்கும் பள்ளியிலிருந்து தகவல் அனுப்பட்டது....

அரைமணி நேரத்தில், மூவரும் ஒருவர் ஒருவராய் வர ஆரம்பித்தனர்....

மூவரின் தந்தையரும் வரிசையாய் அமர்ந்திருக்க, தலைமையாசிரியர் எதிரில் அமர்ந்து எங்களை முறைத்துக்கொண்டிருந்தார்.....

நாங்கள் மூவரும், குற்றவாளி கூண்டில் நிற்கும் குற்றவாளிகளை போல் வரிசையாய், தலையை தொங்கபோட்டபடி, நிற்க....

தலைமையாசிரியர் எங்களின் மீதான குற்ற பத்திரிகையை வாசிக்க ஆரம்பிக்க, எங்கள் மூவரின் தந்தையர் முகத்திலும் , தாளிக்க தயாராய் இருக்கும் எண்ணெய்யில், சிறு துளி நீர் விழுந்தால், வெடிப்பது போல், எந்நேரமும் கோபத்தில் வெடித்துவிடுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன....

இறுதியில், நாங்கள் மூவரும் ஒரு வாரம் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டோம்....

மூவர் தந்தையரும், அவர்களின் பிள்ளைகளின் கையை பிடித்துக்கொண்டு வெளியேற, அப்போதும் நானும், டோராவும் முறைத்தபடி திரிவதை கவனித்த அப்பா, வேகமாக, என்னை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டுவிட்டார்.....

அன்றிரவு, என் காதில் இருந்து ரத்தம் வராத குறையாய், என் அப்பா அறிவுரை மழையில் என்னை நனைத்துவிட்டார்.....

ஒரு வாரம் கழித்து, நாங்கள் பள்ளி செல்லுகையில், எங்கள் விஷயம் பள்ளி முழுதும் பரவியிருந்தது...

அப்போதும், நானும், அனன்யாவும் முறைத்துக்கொண்டே இருப்பதை பார்த்த மாணவர்களில் சிலர், "சண்டைக்கோழிகள் "; "இந்தியா-பாகிஸ்தான் " ; " டாம் அண்ட் ஜெர்ரி " என பல பெயர்களால், அழைக்க தொடங்கினர்....

.
.
.
.
.

நாட்கள் வேகமாய் நகர்ந்தன....

பதினொன்றாம்  வகுப்பு...

இப்போது எனக்கு பெரிய நட்பு வட்டாரமே இருந்தது... ஆனால் எப்போதும், எனக்கு, சித்து மட்டுமே, முதன்மையானவன் ...

உம்மனாமூஞ்சி யுவியாக அல்லாமல், கலகலப்பான யுவியாக மாறினேன்....

அன்றைய நாளுக்கான பாடவேளை ஆரம்பமானது...

ஸ்வாலஜி  முடிந்ததும், வந்த கணித ஆசிரியர், பாடம் தொடங்குவதற்கு பதில், எங்கள் அனைவரையும் பார்த்து,

" உங்கள எத்தனை பேருக்கு ரோமியோ - ஜூலியட் கதை தெரியும்??? " என வினவ....

வகுப்பில் சிலர் கையை தூக்கினர், எனக்கும் கதை தெரியாததால் கையை தூக்கவில்லை... டோராவும், சித்துவும் கூட கையை தூக்கவில்லை....

"சரி தெரிஞ்சவங்க விடுங்க... தெரியாதவங்க லைப்ரரி போய் படிச்சு தெரிஞ்சுக்கோங்க  . " என ஆசிரியர் சொல்ல, நானும் கதையை படிக்க, ஆர்வமானேன்....

" சில்ட்ரன்ஸ்.... இந்த வருஷம் ஆன்வல் டே பங்ஷ்ன்க்கு ரோமியோ - ஜூலியட் ட்ராமா பண்ணலாம்னு... ஐடியா வச்சிருக்கோம்.... ப்ரின்சிபால், மத்த எல்லாரும் சேந்து, சில கேரக்டர்ஸ் உங்க கிளாஸ்ல இருந்து செலக்ட் பண்ணிருக்கோம்.... நேம் லிஸ்ட் நோட்டீஸ் போர்டுல போட்ருக்கோம்... போய் செக் பண்ணிக்கோங்க " என்றவாறு, சென்றுவிட்டார்...

நான் ஆர்வமாய் சென்று, அறிவிப்பு பலகையை பார்க்க, அதில், ரோமியோவாக சித்தார்த்தின் பெயரும், ஜூலியட்டாக அனன்யாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது..... என் பெயரும், பேனாவோலியோவாக இடம்பெற்றிருந்தது....

நான் நூலகம் சென்று, கதையின் சுருக்கத்தை வாசித்து, கதையின் சுருக்கத்தை அறிந்துகொண்டேன்....

அன்று மாலையே நாடகத்திற்கான ஒத்திகை ஆரம்பமானது.....

அப்போது, ரோமியோவும், ஜூலியட்டும் நடனமாடுவதும் போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டன....

ஆசிரியர் சித்துவையும், அனன்யாவையும் சால்சா நடனமாட சொல்ல, சித்தார்த் - அனன்யா ஆட துவங்க, அவர்கள் இருவரின் நெருக்கம் எனக்கு காரணமில்லா கோபத்தை ஏற்படுத்த, அவ்விடத்தில் இருப்பதே, எனக்கு நரகமாகிப்போனது.....

அன்று இரவு முழுதும், எனக்கு அவர்கள் நடனமாடிய காட்சியே கண்ணுள் விரிந்திட, வெறுப்பாய் உணர்ந்தேன்....

"ஏன் எனக்கு இவ்வாறு கோபம் வருகிறது?? " எனக்குள்ளே நான் வினவிட....

"ஏன்னா.... அனன்யாவை உனக்கு பிடிச்சுருக்கு... அதான் அவ சித்து கூட நெருங்கி ஆடுனது உனக்கு பிடிக்கல.." என என் உள்மனம் சொல்லிட....

"அந்த சூனியக்காரியவா எனக்கு பிடிச்சுருக்கு.... !!! "என என் மனம் அனன்யாவை பற்றி யோசிக்க..... அவள் கள்ளமில்லா சிரிப்பும், அழகு மிளிரும் முகமும் என்னில் சலனத்தை ஏற்படுத்த.... என் உதடுகள், தானாய் விரிந்தது.....

"இது ஜஸ்ட் க்ரஷ் தான்...." என என் உள்மனம் சொல்ல, "அப்படி தான் இருக்கும்..." என எண்ணிக்கொண்டேன்....

இரவு முழுதும், அனன்யாவை பற்றியே யோசனைகளும், நினைவுகளும் மனதை நிறைக்க, தூக்கம் தொலைவாகிப்போனது...

மறுநாள் , பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருக்கும் வேளை, ஒத்திகை நேரம் வரும் போது, அவர்கள் இருவரும் ஆடுவர் என நினைக்கையிலே எனக்கு பற்றிகொண்டுவந்தது.....

அதே எரிச்சலுடன் பள்ளிக்கு சென்றேன்.....

ஆனால் அன்று சித்தார்த் பள்ளிக்கே வரவில்லை... விசாரித்தத்தில், அவனுக்கு அம்மை போட்டது தெரியவந்தது.... என் நட்புள்ளம் அவனுக்காக வருந்தியது.....

அன்று மாலை ஒத்திகையின் போது, அங்கு வந்த ஆசிரியர் என்னையே ரோமியோவாக நடிக்க சொன்னார்.....

நானும் நடிப்பதற்கு வசனங்களை மனனம் செய்ய, ஒத்திகை ஆரம்பமானது.....

ரோமியோ - ஜூலியட் நடன காட்சி வரும் வேளை, நான் அனன்யாவை நெருங்க, என் உள்ளம் படபடவென அடித்துக்கொண்டது.....  உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது....

அதை சமாளித்து, என் வலக்கையால் அவள் இடக்கையை பற்றி, என் இடக்கையால் அவள் இடையை பற்றி, இசைகேற்ப நடனமாடுவதற்குள், உள்ளங்கை வியர்க்க ஆரம்பித்தது....

என் இதயத்தின் "லப் - டப் " ஓசைகள் எனக்கே கேட்கும் வகையில், உயர் சுதியில் அமைந்தன....

ரத்தஅழுத்தம் குதிரை வேகத்தில் ஓட்டமெடுத்தது......

அவள் கண்ணை நான் பார்க்க, அதில் இதுவரை நான் காணாத ஏதோஒன்று என் கண்ணுக்கு புலப்படுவதாய் எனக்கு தோன்றிட, எனக்கே என்நிலை என்னவென்று புரியவில்லை....

என் பார்வையின் சூட்டை தாங்காத அனன்யா... என் கண்களில் இருந்து அவள் கண்களை விலக்கிக்கொண்டு, என்னிடம் இருந்தும் விலகிவிட்டாள்...

வேகமாக சென்ற அனன்யா, ஆசிரியரிடம் ஏதோ தெரிவிக்க, அனைவரிடமும் வந்த ஆசிரியர், ஜூலியட்டாக வேறு ஒரு பெண்ணை நடிக்கும் படி, சொல்ல நாடகஒத்திகை நடத்தப்பட்டது.....

அனன்யா, அதில் "ரோஸலின் " ஆக நடித்தாள்...

ஒத்திகையின் போது, வேறு ஒரு பெண்ணுடன் நான் நடனமாடும் போது, அனன்யாவுடன் ஏற்பட்ட உணர்வுகள், எனக்கு அப்பெண்ணிடம் துளியும், துளிர்விடவில்லை....

அன்றிரவு,நான் "எனக்கு ஏன் அவ்வாறு அனன்யாவிடம் தோன்றியது??? என பலவகையில் யோசித்தேன்....

அனன்யாவிடம் தோன்றிய உணர்வுகள், ஜூலியட்டாக நடித்த வேறுபெண்ணிடம் ஏன் வரவில்லை..." என என் மூளையை, நான் கசக்கி யோசித்தாலும், ஏன் என்றால், அனன்யாவை உனக்கு பிடித்திருக்கிறது... என்ற பதிலே விடையாய் அமைய,

"அப்போ இது கிரஷ்ஷா??? அப்டின்னா அந்த பொண்ணுக்கிட்டயும் வந்துருக்கணுமே..... " என மீண்டும் என் மூளை யோசிக்க....

"அதுக்கும், கொஞ்சம் மேல " என்று என் மனம் விடை தர,

"அதுக்கும் மேல என்ன இருக்கு???...... "
என யோசிக்க, "அப்போ லவ்வ்வ்வா???? எனக்கு அனன்யா மேல லவ்வா??? " என நான் மீண்டும், யோசிக்க

மனமானது "ஆமா லவ் தான் " என்க,

கம்பளிப்புழுவானது, பட்டாம்பூச்சியாய் மாறியதற்கு நிகரான, மகிழ்ச்சி என் உள்ளமெங்கும் ஆர்ப்பரித்தது....

அதே மகிழ்ச்சியுடன், மேஜை மீது, நான் வாங்கிய "ரோமியோ -ஜூலியட் " கதை புத்தகத்தை வாசிக்க துவங்கினேன்.....

"ரோமியோ -ஜூலியட்" , உலகறிந்த காதல் காவியம்.... காதலிக்காக, காதலனும் ; காதலனுக்காக காதலியும் மரித்து, தங்கள் அழியா காதலை உலகுக்கு உணர்த்திய, ஷேக்ஸ்பியரின் உன்னத படைப்பு...

அனைவரும் அறிந்தது, ரோமியோவின் உயிர் காதல் "ஜூலியட்" என்று....

ஆனால், ரோமியோவின் முதல் காதல் "ரோஸலின் "......

வாழ்வில் பலரும்," முதல்"  என்ற வார்த்தைக்கு தனித்துவம் அளிக்கிறோம்,  முதல் நாள் பள்ளி,  முதல் வருமானம்,  அதே போல் "முதல் காதல்...." முதல் குழந்தை போல, மறக்கமுடியா நினைவுச்சின்னம்....

உலகறிந்த, ரோமியோவுக்கே முதல் காதல் " ஜூலியட் " அல்ல....

"ரோஸலின்.... ஜூலியட்டை காட்டிலும் கொள்ளை அழகு... .... ஜூலியட்டின் குடும்பத்தை சேர்ந்தவள்.. அழகில் செல்வசெழிப்பானவள்....." இதுவே நான் அப்புத்தகத்திலிருந்து, தெரிந்து கொண்ட தகவல்.....

"ரோஸலின் " என்றதுமே, அனன்யாவின் நினைவே வந்தது....

"ரோஸலின் " அந்த ரோமியோவுக்கு மட்டுமல்ல.....

இந்த ரோமியோவுக்கும், "ரோஸலின் " தான் முதல் காதல் என என் மனம் சொல்லிட....

என் நெஞ்சில் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறப்பது போன்று தோன்றியது.... காற்றில் மிதப்பது போன்ற மோனநிலை என்னில் உருவானது....

அடுத்துவந்த நாட்களில், அனன்யாவை திருட்டுத்தனமாய் ரசிப்பதும், நேரடியடியாக ரசிப்பதுமே என் முக்கிய வேலையாகிபோனது....

கனல்பார்வைக்கும், காதல் பார்வைக்கும் வித்தியாசமறியா அனன்யா, அவளை கேலிசெய்வதாய்  எண்ணிக்கொண்டு, பதிலுக்கு என்னை எரித்திடும் தீப்பார்வையை பரிசளிப்பாள்.... அதுவும் எனக்கு அழகாகவே தோன்றும்....

ரோமியோ - ஜூலியட் நாடகம் அரங்கேறும் நாளும் வந்தது.....

ரோமியோ பாத்திரமான எனக்கு, ஜூலியட்க்கு பதில் ரோஸலினுடன் நடமான வேண்டுமென தோன்றும் அளவிற்கு, அழகாய் வந்தாள், அனன்யா...

நான், ரோமியோ - ஜூலியட் காட்சியை விட, ரோமியோ - ரோஸலின் காட்சிக்கே உணர்வுபூர்வமாய் உணர்ந்தேன்....

அந்த நாடகத்திற்கு பின், நான் பள்ளியில் மிகவும் பிரபலமானேன்....

அனைவரும் என்னை "ரோமியோ " என்றே அழைக்க தொங்கினர்...

ஜூலியட்டாக நடித்த பெண்ணுடன்  என்னை  சேர்த்து வைத்து வதந்திகள் பரப்பப்பட்டன....

பல பெண்கள் தங்கள் காதலை என்னிடம் வெளிப்படுத்தினர்... யாரையும் என்னால் ஏற்க முடியாது என்பதால்,  அனைவரையும் நான் நாகரிகமாக மறுத்தேன்...

அவர்கள் யாவரும் அறியா உண்மை என்னவென்றால், " ரோமியோவாகிய என் உள்ளம் ரோஸலினாகிய அனன்யாவிடம் உருகி கிடப்பது.... "

Author note :

Story  epdi poguthunu sollunga pa....

Corrections irundalum solunga....

Pls do votes & comments... that means a lot to me..

Catch u later on next update makkale 👋👋👋👋👋👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro