Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

யோசனையுத்தம்


யுவியின் நினைவலைகளை கலைத்து, அவனை நிகழ்காலத்திற்கு அழைத்துவந்தது, அவன் திரைஉடைந்த கைபேசியின் அழைப்பொலி.....

அதில் அவன் அப்பாவின் பெயர் ஒளிர்ந்தது.......

அழுது களைத்தவன் விழிநீரை தன் இருகைகளாலும் அழுத்தி துடைத்தபடி, அழைப்பை ஏற்றான்....

"சொல்லுங்கப்பா... " என அவன் உடைந்த குரலை பழுது செய்து சீராய் பேசிட....

மறுமுனையில், "எங்க யுவி... இருக்க??? " என யுவியின் அப்பா வினவ,

"பக்கத்துல தான்பா இருக்கேன் " என யுவி சொல்லிட...

"சரி... வேகமா வீட்டுக்கு வா... " என யுவியின் அப்பா சொல்லிட,

"இதோ வரேன்பா... " என அழைப்பை துண்டித்த யுவி , கடமைக்கே வண்டியை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி புறப்பட்டான்.....

வழிநெடுகிலும் யுவியின் மனம் தீக்காயம் பட்டதுபோல் எரிந்து துடிக்க....

வலியை தாங்கவும் முடியாமலும், வலியினால் ஏற்படும் விழிநீரை கட்டுப்படுத்தும் வழி அறியாமலும், இயந்திரம் போல் வீட்டை அடைந்தான்.....

வாசன் வாசலிலே காத்திருக்க, அவனின் நிலையை கண்ட வாசன், வேகமாய் யுவியை நெருங்கி,

"யுவி... என்னாச்சுடா???? என் உன் சட்டையெல்லாம் கிழிஞ்சு இருக்கு... " என அவன் சட்டையை ஆராய்ந்தவர்...

யுவியின் உதட்டின் ஓரத்தில் உள்ள ரத்த காயத்தை அவரின் கையால் துடைக்க... "ஸ்ஸ்ஸ்ஸ்...." என யுவி வலியில் துடித்தான்....

"என்னதுடா இது ரத்தம் ... எப்படி அடிபட்டுச்சு...ஏன் ஒரு மாதிரியா இருக்க?? " என பதட்டம் கலந்த பரிதவிப்புடன் யுவியின் அப்பா கேட்க...

"அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா... ஒரு சின்ன ஆக்சிடெண்ட்... அவ்ளோதான்...... " என ஒரு விதமாய் யுவி சமாளிக்க...

"ஆக்சிடெண்ட்னு சொல்லுற.... வண்டிக்கு அடிபடல..... கண்ணெல்லாம் கலங்கிருக்கு.... சட்டை கிழிஞ்சுருக்கு..... உண்மைய சொல்லு என்ன நடந்துச்சு.... " என யுவியின் அப்பா கண்டிப்புடன் வினவ....

யுவி தரையை நோக்கிய படி மௌனம் சாதித்தான்....

அவனின் மௌனத்தை கண்ட யுவியின் அப்பா அவனை கைப்பற்றி வீட்டிற்குள் அழைத்து சென்று காயத்திற்கு மருந்திட்டபடி,
"நீயும், சித்துவும் இன்னும் சமாதானமாகலாயா???..... ஏன்டா இப்படி அடிச்சுக்குறீங்க???? " என வினவ.....

யுவியின் வாய் "இல்..... இல்லப்பா.. நீங்க நினைக்குற மாதிரிலாம் ஒன்னுமே இல்லப்பா " என பொய்யுரைக்க.....

"பொய் சொல்லாத யுவி, சித்து இப்போதான் இங்க வந்துட்டு போனான்.... அவனுக்கும் உன்ன மாதிரியே தான் அடிபட்டுருந்துச்சு.... நான் தான் அவனுக்கும் மருந்து போட்டுவிட்டேன்..... " என யுவராஜின் அப்பா சொல்ல, யுவியின் சிவந்த கண்களில் நீர் தேங்கி நின்றது.....

"சித்து எதுக்கு இங்க வந்துட்டுப்போனான்... " என யுவி உணர்வற்ற நிலையில் தொடர்ந்தபடி கேட்க,

"அனன்யா ரோட்ல மயங்கி கிடந்தா நான் தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்...." என வாசன் முடிப்பதற்குள்ளே.......

"அனன்யாவுக்கு என்னாச்சுப்பா???? " என பதட்டமானான் யுவி....

யுவியின் பதட்டத்தை கண்ட வாசன்... "டாக்டர் வந்து பாத்துட்டு போய்ட்டாங்க.... சாதாரண மயக்கம் தான்.... சித்துவ நான் தான் போன் பண்ணி வர சொல்லி, அனன்யாவை அழைச்சுட்டு போகச்சொன்னேன் " என சொல்ல, யுவியின் கண்கள் மேலும் கலங்கியது.....

யுவியின் கலங்கிய கண்களை கண்ட வாசன், "ஏன் யுவி என்கிட்டே எதுவுமே சொல்லாம எல்லாத்தையும் மறைக்குற.... " என கேட்க....

"அப்படிலாம் இல்லப்பா..... நான்.... " என யுவி முடிப்பதற்குள்,.....

"உன்மேல எந்த தப்பும் இல்ல யுவி...நான் தான் உனக்கு நல்ல அப்பாவ இல்ல... எல்லாம் என் தப்பு தான்.....பிசினஸ்... பிசினஸ்னு அலைஞ்சு உன்ன சரியா பாத்துக்காம விட்டுட்டேன்..... உனக்கு எது பிடிக்கும்னு கூட தெரியாம இருந்துட்டேன்..... " என அவர் உணர்ச்சி மேலிட சொல்லிட....

"அப்பா...... இல்லப்பா..... நீங்க தான் இந்த உலகத்திலே எனக்காக இருக்குற ஒரே ஜீவன் அப்பா..... இப்படிலாம் பேசாதீங்கப்பா.... யாருக்காக ஓடி ஓடி உழைச்சீங்க எனக்காக தானே..... நடந்ததை பேசி எந்த ஒரு யூசும் இல்லப்பா..... " என யுவி வாசனை சமாதானம் ஆக்க முயல.....

"இல்ல.... யுவி.. நான் ஒரு நல்ல அப்பாவே நடந்துக்குல..... ஆனா இனிமே அப்படி இருக்கமாட்டேன்..... எனக்கு என் பையனோட சந்தோசம் தான் முக்கியம்..... சொல்லு யுவி உனக்கு ஏதாச்சும் மனவருத்தமா????.... இல்ல அனன்யாவை கல்யாணம் பண்ணிக்க நினைக்குறியா?????? " என தன் மகனின் மேல் கொண்ட கலப்படமில்லா பாசத்தில் கேட்க...

"இல்லப்பா.... என்ன கொஞ்சம் தலை வலிக்குதுப்பா..... நான் ரூமுக்கு போறேன்..... " என யுவி பேச்சை மாற்றியபடி தனதறைக்கு செல்ல முற்படும் போது.......

" சாப்பிட்டு போடா.... " என வாசன் சொல்ல....

"வேணாம்பா... பசிச்சா நானே சாப்பிடுறேன்..... " என யுவி சொல்லிவிட்டு மாடிப்படிகளில் ஏற....

"யுவி.... இந்த அப்பா உன்னோட சந்தோஷத்துக்காக எந்த எல்லைக்கும் போவான்.... எனக்கு என் பையன் சந்தோசம் மட்டும் தான் முக்கியம்.... எதுனாலும் என்கிட்டே தயங்காம சொல்லு..... " என அவர் சொல்லிட.....

அதை காதில் வாங்கிய யுவி, அவன் அறையை அடைந்தான்.....

அவனின் அப்பாவின் வார்த்தைகள் செவியை எட்டியதே தவிர, அவன் மனதில் பதியவில்லை.....

அவன் அறையின் ட்ராயிங் ரூம்.... அனுவின் நினைவால் அவனை மேலும் வதைக்க..... காதலின் காயத்தால் , இதயத்தில் வலியை உணர்ந்தான்.....

கண்ணீர் அனிச்சையாய் அவன் கண்ணில் ஊற்றெடுத்து ஓட , தாங்கமுடியா சோகம் கலந்த ஏமாற்றம் அவன் சிந்தையை செயலிழக்க செய்ய.....

அனுவின் ஓவியங்கள் புகைப்படங்களை தவிர்த்து, அனைத்தையும் உடைத்து எறிந்தான்.....

உடைந்த பொருட்களின் மத்தியில் , ஓடும் மின்விசிறியை வெறித்தபடி அவன் படுத்திருக்க அவன் விழியோரத்தில் வழிந்த கண்ணீர் கண்களை தாண்டி, தரையை நனைத்தது.....

அனன்யா திருமணமானவள் என்பதை அவன் மனதால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை..

அனன்யா இனி தனக்கில்லை என நினைக்கையிலே அவன் மனம் நோக, அனன்யாவின் மேல் அவன் கொண்ட காதல் நீங்க மறுத்து, மேலும் அதிகரித்து வெறியாய் உருப்பெற்றது........

மனதின் மையல்வெறி, அவன் ஆறாம் அறிவை செயலிழக்க செய்து, அவனுள் மறைந்திருக்கும் விலங்கை வெளிக்கொணர்ந்தது....

"அனன்யா எப்பவும் எனக்கு மட்டுமே சொந்தமானவ...... அவளுக்கு கல்யாணம் ஆனாலும் சரி..... ஆகலானாலும் சரி..... என் டோரா எனக்கு தான்.... எனக்கு மட்டும் தான்..... யாருக்காகவும் அவளை நான் விட்டுத்தரமாட்டேன்..... விட்டுக்கொடுக்கவும் முடியாது......" அவனின் மூளை ஆறாம் அறிவை மறந்து, ஐந்தறிவு விலங்காய் யோசித்து, அவன் களங்கமில்லா காதல் நெஞ்சில் நஞ்சை கலந்தது....

.
.
.

மனமுடைந்து வண்டியை, மனம் போன வழியில் செலுத்தி கொண்டிருந்த சித்தார்த்தின் மனதில் பல குழப்பங்கள், எல்லையில்லா வேதனைகள்.....

"அனு ஏன் இப்படி பண்ண?????..." என வாய்விட்டு புலம்பிய சித்துவின் கண்கள் கலங்கி சிவந்திருந்தது.....

"அனு கல்யாணம் பண்ணியிருந்தா????? ஏன் அவ ஹஸ்பண்ட விட்டு பிரிஞ்சு இருக்கா..... யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்குற அளவு என்ன பிரச்சனை....?? யாரவன்????..... யாரா இருந்தாலும் பரவாயில்ல..... என் அனுவை என்கிட்டே இருந்து பிரிச்சிட்டானே.... " என எண்ணிய சித்துவின் மனதில் கோபம் வெள்ளமென சீறி பாய்ந்தது.....

"பர்ஸ்ட்..... அவன் யாரு????..... நல்லவனா???? இல்ல கெட்டவனா??? என் அனுவ நல்லா பாத்துக்குவானா????? ஏன் அவனும், அனுவும் பிரிஞ்சு இருக்காங்க...... அப்படி வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிக்குற அளவு என்ன அவசியம்???? ...... " என விடையறியா வினாக்கள், வலியால் குழம்பிய சித்துவின் நெஞ்சை, மேலும் குழப்பி வெதும்பச் செய்தது.......

அனைத்து வினாக்களும் பதில் அனுவிடம் இருந்து எளிதில் கிடைக்காது என்றறிந்த சித்தார்த், தன் கைபேசியை உயிர்ப்பித்து, டெல்லியில் உள்ள தன் நண்பன் ஒருவனை தொடர்பு கொண்டு, அனுவை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்து தருமாறு கூறிவிட்டு, பீச்சில் வண்டியை நிறுத்தினான்.....

கடற்க்கரை மணலில் உணர்வற்று அமர்ந்திருந்தான் சித்தார்த்.....

சோகம் நிறைந்து ஆவேசமாய் இருக்கும் அவன் மனதிற்கு, ஆழிஅலைகளும் அதன் ஆவேசம் தீராமல் திரும்ப திரும்ப தோன்றுவதாய் தோன்றியது.....

தெளிவில்லா மனதில் அமைதியை மட்டும் கடற்கரை பரிசளிக்க, வீடு நோக்கி சென்றான், சித்தார்த்.......
.
.
.
.
.
.
.
அழுது ஓய்ந்த அனன்யாவோ மெத்தையை தன் கண்ணீரினால் நனைத்து உறங்கியும் போனாள்......

மறுநாள் விடியல் குழப்பத்தை தீர்க்குமா என எண்ணிய சித்துவும், கனத்த இதயத்துடன் கண்களை மூடி, துயில்கொள்ள முயன்றான்.....
.
.
.
.

மறுநாள் காலை....

வேகமாக எழுந்து கிளம்பிய சித்துவின் மனதில் கோபமும், குழப்பமும் நிறைந்து இருந்தது.....

அவற்றை போக்க, அனன்யாவின் வெளிப்படையான பேச்சே தீர்வென அறிந்த சித்து அனுவின் அறையை அடைந்து, அவளின் அறையை திறந்து பார்க்க, அவள் அங்கில்லை.....

கீழே சென்ற சித்து, அவனின் தேனு அத்தையிடம் "அத்தை அனு எங்க போனா???? " என கேட்க...

"அவ காலையிலேயே சீக்கிரம் கிளம்பி, கம்பெனிக்கு போய்ட்டா..... சாப்பிடாம போய்ட்டா..... நீயாச்சும் சாப்பிட்டு போ..... " என தேன்மொழி சொல்ல....

"இல்ல அத்தை.... எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு...... நான் கேன்டீன்ல சாப்ட்டுக்குறேன்..... " என சொல்லியவன் வேகமாக அலுவலகத்திற்கு வண்டியை செலுத்தினான்......

அலுவலகத்தின் பார்க்கிங் பகுதியில் சென்று, சித்து வண்டியை நிறுத்திவிட்டு வேகமாய் செல்ல..... ஒருவரின் மேல் மோதி நெற்றியை தேய்த்தான், சித்தார்த்.....

அவன் தலையை தேய்த்து நிமிர, எதிரே யுவராஜும் தலையை தேய்த்தபடி சித்துவை நோக்கினான்......

இருவரும் எதிர்எதிராய் நோக்க, குத்துச்சண்டைக்கு தயாராகும் எதிரணி வீரர்கள் ஒருவரை ஒருவர் முறைப்பது போன்று முறைத்துக்கொண்டும், பார்வையால் வெட்டி வீசிக்கொண்டும் அவர்களின் அலுவலக அறையை அடைந்தனர், சித்தார்த் மற்றும் யுவராஜ்....

அவர்கள் இருவரும் அறையை அடைந்தவுடன், சித்தார்த் மற்றும் யுவராஜின் விழிகள் விரைந்து தேடியது அனன்யாவைதான்.....

ஆனால் அவ்விருவரின் தேடல் நாயகியோ, அவ்விவரையும் அலட்டிக்கொள்ளாமல் கடமையே கண்ணென வேலையில் மூழ்கியிருந்தாள்....

அன்று முக்கியமான மீட்டிங் இருந்ததால் அவள் வேலையில் கண்ணாய் இருந்தாள்.....

சித்தார்த் மற்றும் யுவராஜ் இருவரும் தங்களின் அறையில் உள்ள கண்ணாடி திரையின் வழியே அனன்யாவை கண்டுகொண்ட பிறகே, அவர்களின் வேலையில் மூழ்கினர்.....

அன்று மிக முக்கியமான அலுவலக சந்திப்பு இருப்பதனால், சித்தார்த் மற்றும் யுவராஜ் தங்களின் மறைமுக முறைப்பு சண்டைக்கு தற்காலிக விடுப்பு கொடுத்து, மீட்டிங்கிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய துவங்கினர்.....

மீட்டிங்கின் போது, சித்தார்த் மற்றும் யுவராஜின் விழிகள், நொடிக்கு ஒரு முறை அனன்யாவின் பூமுகத்தை தீண்டி சென்றது...

ஆனால் அனன்யாவின் இமைவிழிகளோ, ப்ரோஜெக்டரில் இருந்து வெளிப்படும் ஒளியான ப்ரெசென்ட்டேஷன் மீதே நிலைத்தது......

மீட்டிங் நன்முறையில் முடிய, அனைவரும் அவரவர் அறையை அடைந்தனர்......

சித்தார்த் இதற்கு மேல் முடியாது, அனுவிடம் பேச வேண்டும் என நினைத்து, அனன்யாவை காண செல்லும் வேளை அவன் கைபேசியின் அழைப்பொலி அவனை ஈர்த்தது.....

"ஹலோ.. " என அழைப்பை ஏற்ற சித்து, மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தியால் அதிர்ச்சியுடன் கூடிய கோபத்தின் பிடியில் சிக்குண்டான்......
.
.
.
.

யுவராஜ் அவன் அறையில் அங்கும் மிங்கும் அலைந்தபடி, குழப்பத்தில் மூழ்கி தவித்தான்.....

தன்னை தன் டோராவிடம் இருந்து, பிரித்த வஞ்சகன் யாரென அறியும் ஆவலும், அவ்வஞ்சகனை ஒழித்திடும் கட்டுக்கடங்கா கோபமும் அவன் மனதை ஆக்கிரமிக்க மனஉளைச்சலில் சிக்கி தவித்தான், யுவராஜ்......

அனன்யாவிடம் கேட்டு தான் இதைபட்டு அறியமுடியும் என உணர்ந்த யுவி, அனன்யாவிடம் எப்பாடுபட்டாவது அவளிடமிருந்து விஷயத்தை வாங்கும் பொருட்டு, அனன்யாவை காண சென்றான், அவளின் கேபினை நோக்கி......

.
.
.
.

அதிர்ச்சியான சித்தார்த், அனன்யாவிற்கு போன் செய்து அவனின் அறைக்கு வரும் படி கூறினான்.....

அனன்யா கதவை தட்டி, சித்துவின் அறையினுள் நுழைய ........

சித்துவின் கண்கள் கோபத்தால் சிவந்திருந்தது......

சித்தார்த்தின் சிவந்த கோப முகம், அனன்யாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது......

"சித்து..... எதுக்கு வர சொன்ன?? " என்று சொன்ன அனன்யாவின் குரலில் சிறு நடுக்கம் ஏற்பட்டது.......

"உன் ஹஸ்பண்ட் யாரு?????? " என சித்து கோபத்தை முகத்தில் வெளிப்படுத்தி, வார்த்தையில் மறைத்து கேட்க......

அனன்யா அமைதியாகவே இருக்க........

அனன்யா சித்துவின் அறையில் இருக்கிறாள் என அறிந்த யுவராஜும் சித்தார்த்தின் அறையை அடைந்தான்......

யுவராஜை கண்ட சித்து, மீண்டும் அனன்யாவிடம் " சொல்லு..... உன் ஹஸ்பண்ட் யாரு ???? " என சத்தமாக மறைக்கப்பட்ட கோபத்துடன் அனன்யாவை வினவ....

யுவராஜும் அவளின் பதிலை ஆர்வமுடன் எதிர்நோக்க......

அனன்யாவின் பயம் அதிகரிக்க மௌனித்து நின்றாள்...

அனன்யாவின் மௌனம் சித்துவின் கோபத்தை அதிகரிக்க.... "இப்போ சொல்ல போறியா??? இல்லையா???? " என சொல்லிய சித்து அவன் இரு கைகளாலும் மேஜையின் மீது ஓங்கி அடிக்க....

அனன்யாவின் உடல் பயத்தில் ஒரு முறை நடுங்கி அடங்கியது.....

"என் ஹஸ்பண்ட்......பாரின்ல இருக்காரு .... " என நடுங்கியபடி, அனன்யா வார்த்தைகளை தேடி தேடி பேச.....

அவள் பதிலில் ஆத்திரமடைந்த சித்தார்த், அவளின் முழங்கையை அழுத்தி பற்றி, "பொய் சொல்லாத...... எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு..... என் பிரண்ட்கிட்ட உன்ன பத்தி விசாரிக்க சொன்னேன்..... நீயே உன் வாயால சொன்னா நல்லா இருக்கும்னு பாக்குறேன் " என கோபத்தில் சித்து கத்த, அனன்யாவின் கண்ணில் தேங்கி நின்ற விழிநீர் அவள் கன்னத்தில் பட்டு தெறித்தது......

அனன்யாவின் அழுகை பொறுக்காத யுவியும், அவளின் பதிலுக்காக தன்னை கட்டுப்படுத்தி பொறுமை காத்தான்....

"ஆமா.... எனக்கு கல்யாணம் ஆகல.... கல்யாணம் ஆனதா பொய் சொன்னேன் " என அனன்யா தரையை பார்த்தபடி சொல்ல, சித்து அனன்யாவின் முழங்கையை விடுவித்தான்....

அவளின் வார்த்தைகள் யுவராஜின் காதில் தேனை பாய்ச்சியது...... மனமெங்கும் இன்பவெள்ளம் கரைபுரண்டோடியது......டோரா தனக்கு சொந்தமாகும் நாள் வெகுதொலைவில் இல்லை என நினைக்கையில் அவன் நின்றும் பறப்பதாய் உணர்ந்தான்......

"ஏன் பொய் சொன்ன???? " என சித்து மாறா கோபத்துடன் உரக்க கேட்க.......

"ஆமா.. பொய் சொன்னேன்..... நான் யாரையும் கல்யாணம் பண்ணல... எனக்கு கல்யாணம் ஆகல...... ஏன்னா எனக்கும் கொஞ்சம் டைம் வேணும்..... இப்போ தான் படிச்சு முடிச்சேன்..... அதுக்குள்ள கல்யாணமா????...... இன்னும் நான் என் கரியரல ஸ்ட்ராங்கா நிக்கணும்..... அப்புறம் தான் மத்ததெல்லாம்....இதை சொன்னா யாரும் ஒதுக்கமாட்டீங்க...... அதான் பொய் சொன்னேன்....... எனக்கு இப்போ கல்யாணத்துல இன்ரெஸ்ட் இல்ல..... ப்ளீஸ் சித்து...... எப்படியாச்சும் இந்த கல்யாணத்த நிறுத்து..... எனக்கு ஒரு டூ, த்ரீ இயர்ஸ் டைம் வேணும்..... " என ஆவேசத்தில் தொடங்கிய அனன்யா கோரிக்கையுடன் முடிக்க.....

சித்து மென்சிரிப்புடன் "ஹே.... லூசு..... இதுக்கு தான் பொய் சொன்னியா?????? நான்கூட வேற ஏதாவதும் இருக்குமோனு பயந்துட்டேன்...... இப்போ என்ன உனக்கு டைம் வேணும் அதானே.... நான் மாமாகிட்ட பேசுறேன்..... டூ, த்ரீ இயர்ஸ்க்கு அப்புறம் நம்ம மேரேஜ் வைச்சுகுட்டா உனக்கு ஓகேதானே?????...... " என கேட்க......

"பாக்கலாம் சித்து.... மூணு வருசத்துல என்ன வேணும்னாலும் நடக்கலாம் " என சொல்லிய அனு சித்துவின் அறையில் இருந்து வெளியேறிவிட்டாள்..

சித்து அப்போதே யுவியின் வருகையை உணர்ந்து, யுவியை முறைக்க...

யுவியும் சித்துவிற்கு முறைப்பை பரிசளித்துவிட்டு அவன் அறைக்கு சென்றுவிட்டான்......

அன்றிரவு சித்து அவன் அறையில், "அப்பாடி நல்ல வேளை என்னோட அனுகுட்டிக்கு கல்யாணம் ஆகல..... அவ என்னைவிட்டு எங்கயும் போகமாட்டா... போகவும் விடமாட்டேன்..... அனுவுக்கு கொஞ்சம் டைம் வேணும்னு சொல்லுறா.... அனுவுக்கு எது சந்தோஷமோ அது தான் எனக்கும் சந்தோசம்..... மாமாகிட்ட இதை பத்தி பேசணும்..... இந்த மூணு வருஷம் போதும் அனுகுட்டி...... நான் காட்டப்போற பாசத்துல நீயே நமக்கு எப்போ கல்யாணம்னு கேக்க போற... பாரு...... ஐயோ.... சந்தோஷத்துல தூக்கம் வரமாட்டேங்குதே....... " என அவன் தலையணை நெருக்கி பிடித்தபடி தூக்கத்தை தொலைத்தபடி மெத்தையில் உருண்டுகொண்டிருந்தான்......
.
.
.
.

யுவராஜ் அவன் ட்ராயிங் அறையினுள் வழக்கத்தை விட அதிக சந்தோசத்துடன், கையில் ட்ராயிங் கலர்சுடனும், காதில் பெயிண்டிங் பிரஷ் ஒன்றை சொருகியபடியும், அனன்யாவின் ஓவியத்தை தீட்டி கொண்டிருந்தான்.....

ஓவியத்தை வரைந்தவன் அதில் தெரிந்த அனன்யாவின் முகத்தை கிள்ளாமல் கிள்ளி முத்தமிட்டான்...... "என் செல்லக்குட்டி....... உம்மம்மா.... ஒரே நாள்ல என்னை என்னபாடு படித்தியெடுத்துட்ட....... என்னவோ ..... உனக்கு கல்யாணம் ஆகல..... அதுவே எனக்கு போதும்.... மூணு வருஷம் போதும்..... என் காதல சொல்லி உன்ன என்னோட காதலி ஆக்கல, என்னோட பேர் யுவராஜ் இல்ல....... என்னோட டோரா எனக்கு தான்.... எனக்கு மட்டும் தான்..... யாருக்காகவும், எதுக்காகவும் உன்னைய விட்டுதரமுடியாது....... விட்டுத்தரவும் மாட்டேன்...... " என சொல்லி தனியே சிரித்தவன், தூக்கத்தை தொலைத்து, அனன்யாவின் பலவித ஓவியங்களை வரைய துவங்கினான்........

சித்தார்த் மற்றும் யுவராஜ் அனன்யாவை பற்றிய யோசனையுத்தத்தில் போரிட்டபடி, தங்களின் தூக்கத்தை தொலைத்தனர்....

இரு இளைஞர்களும் தூக்கம் தொலைக்க காரணமான அனன்யாவோ, அவளின் அறையில் ஆழ்ந்த துயிலில் மூழ்கியிருந்தாள்.....

கண்களை மூடவில்லை....
கனவுகளும் வரவில்லை......
தூக்கமும் என்னை சேர மறுக்குதடி.....
நீ என்னை சேராததால்.......



........

Hi friends.....

Siddarth & yuvaraj got equal votes.....

Thank u so much for ur valuable votes.....

Catch u later on next update makkale 👋👋👋👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro