பிளவு
"அனுவ காணோமா?? " என நான் மேலும் பதற்றமானேன்....
"அம்மா என்னமா சொல்றீங்க.... நிஜமாவே அனுவ காணோமா??".....என உள்ளூர எழுந்த பதற்றத்தை மறைத்து கூற.....
"இரண்டு நாளாவே அவ சரியாவே சாப்பிடவே இல்லடா... ரூம விட்டு வெளியவே வரல..... என்னனு கேட்டாலும் சொல்லல... யார்கிட்டயும் பேசல..... இன்னைக்கு காலைல இருந்து அவளை ரூம்ல காணோம்.. போன் பண்ணா சுவிட்ச் ஆப்னு வருது....தேனு பாவம் டா... காலைல இருந்து அழுதுட்டே இருக்கா..... "....வருத்தம் மேலிட ஆரம்பித்தவர்..
"உண்மைய சொல்லு... எப்பவும் மம்மினு தானே சொல்லுவ... இன்னைக்கு அம்மானு சொல்லற.... ஏதோ இருக்கு.... அவளுக்கு உனக்கும் அவளுக்கும் சண்டையா??? அவளுக்கு உன்னைய தவிர பிரண்ட் யாரும் இல்ல.... " அதிகார தோரணையில் என்னிடம் வினவிட.....
அழுத்த மிகுதியால் என் கையினால் நெற்றியை தேய்த்தபடி.... "அதெல்லாம் எங்களுக்குள்ள ஒரு பிரச்சனையும் இல்ல மம்மி ..."என பொய்யுரைக்கும் போது மனதின் ஓரத்தில் ஏதோ ஒன்று அழுத்தியது...
"இங்கதா மம்மி எங்கயாச்சும் போயிருப்பா... தேனு அத்தைய கவலைபட வேணாம்னு சொல்லுங்க......நான் அனுவோட வீட்டுக்கு வரேன் " என அம்மாவை சமாளிக்கும் வகையில் பேசி அழைப்பை துண்டித்தேன்.....
நான் பேசிய அனைத்தையும் கேட்ட யுவி "என்னாச்சு?? அனன்யாக்கு என்ன??"என வினவினான்....
அவனிடம் மறைக்க விருப்பமின்றி அனுவிடம் காலையில் அலைபேசியில் பேசியது முதல் மாலை அலைபேசியில் அவளுடன் சண்டையிட்டதுவரை....அம்மாவுடன் அலைபேசியில் பேசியவரை... அனைத்தையும் கூறினேன்.....
அனைத்தையும் பொறுமையாக கேட்ட யுவியின் முகம் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.....
"முதல போய் அனன்யாவை தேடு சித்து" என யுவி சொல்லிட
"ஆனா நீ.... "என நான் முடிக்கும் முன்னரே
யுவி "என்னைய பாத்துக்க குக்கிங் அங்கிள் வந்துருவாங்க.... நீ போ" என்னை கிளப்பினான்...
கிளம்பும் முன் யுவியிடம் "யுவி அனு கிடைச்சுருவாளா???" என வினவ...
"கண்டிப்பா கிடைச்சுருவா " என யுவி நம்பிக்கையூட்ட..... பெருமூச்சை விட்டபடி யுவியின் காரில் அனுவை தேடி புறப்பட்டேன்...
நானும், அனுவும் வழக்கமாக செல்லும் மால், ஐஸ்கிரீம் பார்லர், காபி ஷாப்,
தியேட்டர், சர்ச், கோவில், ஜிம், டான்ஸ் கிளாஸ் என அனைத்து இடங்களிலும் தேடி அலைந்தேன்.... என் தேடலுக்கு எங்குமே பலன் கிடைக்கவில்லை.... ஆம் என் அனு எங்குமே கிடைக்கவில்லை.....
மாலை 6:30 மணியானது... காரை நிறுத்திவிட்டு அனுவின் அலைபேசிக்கு முயற்சித்தேன்.... சுவிட்ச் ஆப் என வர.... சோர்ந்து போய் காரின் ஸ்டிரியரிங் மீது சாய்ந்தேன்..... அனுவின் சிரித்த முகம் கண்ணிலாட மீண்டும் வண்டியை உயிர்ப்பித்து தேடலை தொடர்ந்தேன்....
கடைசி முயற்சியாக நாங்கள் சோகமாக இருக்கும் போது செல்லும் பார்க்கிற்கு பயணமானேன்..... செல்லும் வழியில் ஒரு இடத்தில் கூட்டமாய் இருந்தனர்.... நான் வண்டியை நிறுத்தினேன்...... "பாவம் சின்ன பொண்ணு.... இப்படி அல்பாய்சில போயிருச்சு " பேசி கொண்டு இருவர் செல்ல....
வியர்வை வழிந்தோட , கண்களில் கண்ணீர் தேங்கி நிற்க, அது அனுவாக இருக்க கூடாது என உள்ளுக்குள் சொல்லியபடியே வேகமாக அக்கூட்டத்தை விலக்கி முன்னேறினேன்... நினைத்தபடியே அது அனு இல்லை.... நிம்மதியாய் உணர்ந்தேன்.... ஆனாலும் தெரியாத அந்த பொண்ணுக்காக மனதில் சிறிது இரங்கல் தோன்றியது....
அப்போது என் கைபேசி ஒலித்தது.... அம்மா தான் அழைத்திருந்தார்.... அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என்ற யோசனையுடன் கூட்டத்தை விட்டு விலகி வந்து, அழைப்பை ஏற்ற நான் "சொல்லுங்க மம்மி " என்றேன்...
"டேய் சித்து... அனு வீட்டுக்கு வந்துட்டாள்" என அம்மா சொன்னவுடன்.... என்கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் ஒரு துளி வெளியேறியது.... நிம்மதி நெஞ்சமெங்கும் பரவ," சரி மம்மி நான் இப்போவே வரேன் "....என அழைப்பை துண்டித்து.... யுவராஜிற்கு அலைபேசியில் அழைத்து அனு கிடைத்துவிட்டாள் என தெரிவித்தேன்... சந்தோச பெருமூச்சுடன்..... காரை இயக்கி, மென்னகையுடன் அனுவை பற்றி சிந்தித்தேன்....
"என் செல்ல அனுகுட்டி.... செல்ல பிடிவாதக்காரி... கொஞ்ச நாள் கூட அவ மேல வச்ச கோபம் தங்கமாட்டேங்குது.... நானும் அன்னைக்கு கோபத்துல ஓவரா பேசிட்டேன்.... அவ பர்த்டேக்கு நிறைய சர்ப்ரைஸ் வச்சிருந்தேன்.... எல்லாம் அந்த சண்டையால பாழ போச்சு.... இப்போ என் மேல செம்ம கோவத்துல இருப்பா.... நான் பர்த்டேக்கு வாங்குன கிப்ட்ட எடுத்துட்டு போய் சமாதான படுத்தனும்....... இதுவே வேற யாராவதுன்னா, சரி தான் போறாங்கன்னு விட்ருவேன்.....
ஆனா இது.... அனு.... என்னோட அனு...... அவ ஒரு குழந்தை மாதிரி.... அடிச்சாலும் சரி.... திட்டுனாலும் சரி.... என்னவிட்டுட்டு எங்கயும் போகமாட்டா.... " என நான் எண்ணிய படி இருக்க....
"நீ எதுக்கு இப்போ அனுவுக்கு சப்போர்ட் பண்ற??? என எனது மனசாட்சி வினவ......
"ஏன்னா.... அனு எனக்கு எப்பவும் ஸ்பெஷல் " என நான் பதிலளித்து என் வீட்டின் முன் காரை நிறுத்தினேன்.....
சத்தமில்லாமல் அனுவின் வீட்டை எட்டி பார்த்தேன்..... யாரும் வெளியில் இல்லை..... முருகன் மாமாவின் கார் & மற்றும் கிருஷ்ணாவின் கார் இருப்பது அனைவரும் வீட்டில் இருப்பதை உணர்த்தியது.....
என் வீட்டிற்கு சென்றேன்..... என் அக்கா வாணி படிக்கும் சத்தம் மட்டுமே கேட்டது..... என் அம்மா வழக்கம் போல் அனுவின் வீட்டில் தான் இருப்பார்..... அப்பாவும் இப்போது அங்கே தான் இருப்பார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.....
சத்தமே இல்லாமல் எனதறைக்கு சென்று கிப்ட்டை எடுத்துக்கொண்டு அனுவின் வீட்டிற்கு செல்ல தயாரானேன்...
பிரியாணி ஆகப்போகும் ஆடு கறிக்கடைக்காரனிடம் வழிந்து மாட்டுவதை போல, அனுவின் வீட்டில் கண்டிப்பாக எனக்கு கச்சேரி உள்ளது என தெரிந்தும் அங்கு சென்றேன்..... ஆனால் நான் நினைத்தது போல் நடக்கவில்லை....
அங்கு குண்டூசி விழும் அளவு நிசப்தம் நிலவியது... நான் தலையை மட்டுமே வாசலில் விட்டபடி பார்க்க என் கண்ணில் ஒருவரும் அகப்படவில்லை..... "என்ன யாரையும் காணோம் " என்றபடி நான் பூனை நடையுடன் உள்ளே நுழைந்தேன்....
அங்கே என் அப்பா ராம், அம்மா சீதா, முருகன் மாமா, தேன் அத்தை, கிருஷ்ணா ஆகிய அனைவரும் சோபாவில் ஆச்சர்யம் கலந்த பயந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர்.....
நான் என்னாச்சு என என் கண்களால் அவர்களிடம் வினவ... அவர்கள் அனைவரின் கண்கள் மற்றும் தலையும் மேல்மாடியில் உள்ள அனுவின் அறையை காட்டியது....
நான் இரண்டு இரண்டு படிகளாய் தாவி வேகமாக அனுவின் அறையின் வாயிலை அடைந்தேன்.... கண்டிப்பாக கஜா புயலானது அனுவின் மூலமாக அறையை மையமிட்டு அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியிருக்கும் என அறிந்தும், மூச்சை இழுத்துவிட்டபடி அறைக்கதவை திறந்து புயலை எதிர்கொள்ள தயாரானேன்....
ஆனால் அறையானது வழக்கத்திற்கு மாறாக மிகவும் நேர்த்தியாக இருந்தது... "என்னடா புயல் ஒருவேளை கடந்து போயிருச்சோ... வாய்ப்பில்லையே "என நான் எண்ணியபடி அறையை நோட்டமிட.... பெரிய சூட்கேசில் அவளின் துணிகள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன... எதற்கு இதையெல்லாம் நான் யோசித்தபடி அனுவை தேட.....
மெத்தையின் ஓரத்தில் அனு அமைதியாக எனக்கு முதுகு காட்டியபடி அமர்ந்து எதையோ பார்த்துகொண்டிருந்தாள்.... "ஓஹோ இது தான் புயலுக்கு முன் அமைதியோ" என உள்ளுக்குள் பயந்தாலும் வெளியில் காட்டாதவாறு "அனு குட்டி " என மெல்ல ஆரம்பித்தேன்.....
என்னை பார்த்த அனு, கையில் இருந்த எதையோ தலைகாணியின் கீழ் வைத்துவிட்டு... துணியை அடுக்குவதில் கவனம் செலுத்தினாள்....
"காலைல இருந்து உன்ன காணோம்... எங்க போன?? " என நான் பொறுமையாக வினவினேன்....
..............பதில் இல்லை
"உன் போன் எங்க??? தேனு அத்தை பாவம் உன்னைய காணோம்னு துடிச்சு போய்ட்டாங்க " என மீண்டும் நான் பொறுமையை கைபிடித்தவாறு கூற.....
.....................அதற்கும் பதில்லை...
பொறுமை காற்றில் பறக்க, அவளை நெருங்கி அவளின் முழங்கையை பற்றி என் புறம் திருப்பி "உன்ன தான் கூப்பிடுறேன்.... இன்னும் கோவம் போலயா?? "என பாவமாய் கேட்க்க ஆரம்பித்த நான், அவளின் கனல் பார்வையை கண்டு செயற்கையாய் புன்னைகைத்தேன்....
"எனக்கு டெல்லி யூனிவர்சிட்டில M.C.A சீட் கிடைச்சருக்கு... நான் அங்க படிக்கப்போறேன் அதான் இப்போ கிளம்பிட்டே இருக்கேன்."... என உணர்ச்சியற்ற பொம்மை போல என் கையை உதறிவிட்டு துணியை அடுக்குவதில் மும்மரமானாள்....
இம்முறை சிரிப்பை அடக்க தோற்று கலகலவென சிரித்துவிட்டேன்... நானும் மனிதன் தானே எத்தனை முறை தான் சிரிப்பை என்னுள் புதைப்பது....????
அவள் மீண்டும் முறைக்க.... அமைதியானேன்....
அவள் அருகில் சென்று கரம் பற்றி அவளை மெத்தையில் அமர செய்தேன்.... அவளின் முன் மண்டியிட்டு அவள் முகத்தினை என் கைகளில் ஏந்தி " சாரி அனு... நான் அன்னைக்கு அப்படி பேசியிருக்ககூடாது..... அன்னைக்கு டென்ஷன்ல கோவமா பேசிட்டேன்.... நீயும் புரிஞ்சிக்காம பேசிட்ட... சரி முடிஞ்சது முடிஞ்சு போச்சு..... சாரி.... ப்ளீஸ் " என நான் பாவமாய் கெஞ்சிட....
"அவள் என் கையை எடுத்துவிட்டு.... நீ கரெக்டா தான் பேசி இருக்க..... நான் தான் சுயநலவாதி.... எப்பவும் என்ன பத்தி மட்டும் தான் யோசிப்பேன்....நான் உனக்கு மனசு இருக்கும்னு யோசிக்கல, மத்தவங்கள பத்தியும் நான் யோசிக்குறதில்ல"....என ஒரு நிமிடம் நிறுத்திய அனு....
"சாரி.... நான் தான் தப்பு பண்ணிட்டேன்........"என தலையை தொங்கபோட்டவாறு அவள் அமைதியாக பேசிட.....
என் அனு இப்படி பேசமாட்டாளே என யோசித்த நான் "ஹே அனு நான் தான் சாரி கேட்டுட்டேன்ல... இப்படி பேசுறது, சாரி கேக்குறதுலாம் உனக்கு செட் ஆகல....வா சாப்பிட போலாம் " என அவள் பேச்சை மாற்றவைக்க, சிரித்தபடி அழைக்க...
"என்ன விடு.... நீ போய் கொட்டிக்கொ....எனக்கு வேல இருக்கு"...என காரமாய் வந்தன... அவள் வார்த்தைகள்...
"அப்பாடி, பழைய அனு திரும்பி வந்துட்டா " என எண்ணிய நான் அவள் சினத்தை குறைக்கும் பொருட்டு "அனு குட்டி இந்த உன் பர்த்டே கிபிட் " என அவள் முன் நீட்டினேன்.....
அவள் அதை வாங்காமல் மரமென நிற்க...... இன்னும் அவள் கோபம் தணியவில்லை என்றெண்ணிய நான் மெத்தையின் மீது வைத்துவிட்டு கீழே சென்றுவிட்டேன்.....
கீழே சென்று நான் அனைவருடனும் உணவருந்தும் மேஜையில் சாப்பிட அமர்ந்தேன்....
அங்கே முருகன் மாமா, "சித்து அனு என்ன சொன்னப்பா?? "என வினவ....
"மாமா டெல்லி யூனிவர்சிட்டில படிக்கபோறேன்னு சொல்றா.... இப்போ ஏதோ கோவத்துல சொல்றா மாமா... அவளால நான் இல்லமா இருக்க முடியாது....நான் அவகிட்ட பேசுறேன்"என நான் அவருக்கு சமாதானமாய் பதில் தந்திட....
"இல்ல சித்து நான் ஏற்கனவே உனக்கும் அவளுக்கும் அங்க சீட் வாங்கிட்டேன்... அவகிட்ட முதல சொன்னேன்... வேணாம் உன் கூட படிக்குறேனு சொன்னா... இப்போ திடீர்னு வந்து நான் மட்டும் அங்க போறேன்னு சொல்றா " என முருகன் மாமா பேச....
"அவ யாருகூடவும் பழகவும் மாட்டா.... பேசவும் மாட்டா... வெளியுலுகம் தெரியாம வளந்துட்டா.... உன்ன கூட அனுப்புறோம்னு சொன்னாலும் வேணாம்னு சொல்றா.... நாளைக்கு காலைல பிளைட்க்கு கிளம்புறேன்னு அடம்பிடிக்குறா... நீ தான்பா அவள்ட பேசணும் " என வருத்தம் மேலிட தேனு அத்தை முடிக்க....
"நான் பேசுறேன் அத்தை " என சமாதானம் கூறினேன்...
சிறிது நேரத்தில் அனு கீழிறங்கி எங்களுடன் சாப்பிட அமர்ந்தாள்...அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது... கிருஷ்ணா பேசு என்றபடி எனக்கு கண்ஜாடை காட்ட...
"அனு " என நான் மெல்ல ஆரம்பித்தேன்...
"சொல்லு சித்து " என்றாள் சுரத்தையே இல்லாமல்...
"நீ டெல்லி யூனிவர்சிட்டிக்கு போய்தான் ஆகணுமா??? " என நான் கேட்க....
"ஆமா " என உடனடியாக வந்தது அனுவின் குரல்....
"நீ அங்க போக வேணாம்... இங்கயே என்கூட படி" என நான் சொல்ல
"ஏன்????? " என அவள் வினவ...
"அங்க என்னால வரமுடியாது " என சொல்ல
"அதுக்கு???? "என அவள் இழுக்க...
"ஜோக் பண்றியா??? நா இல்லமா நீ எப்படி இருப்ப??? " என நான் சிரித்தபடி கேலியாய் வினவிட...
"நான் எது பண்ணாலும் அது உனக்கு ஜோக்கா தான் தெரியுமா??? எனக்கு என்னய பாத்துக்க தெரியும்.... நீ இல்லாமலும் என்னால இருக்க முடியும் " என மிகுந்த சினத்துடன் வெளிவந்தன அனுவின் வார்த்தைகள்...
அவளின் பேச்சை அமைதியாக கேட்ட நான் கலகலவென சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.... "பாருங்க மாமா இவ நான் இல்லமா இருந்துருவாளாம்" என சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க என்னுடன் சேர்ந்து அனைவரும் கலகலவென சிரித்தார்கள்....
"நிறுத்துங்க " என அனு கோபமாக கத்தினாள்.... நாங்கள் யாரும் காதிலே வாங்காமல் சிரிக்க....
நான் எதிர்பாராத சமயத்தில் அனு சாப்பாட்டுடன் இருந்த தட்டை என் பக்கம் வேகமாக தள்ளினாள்.... அதில் இருந்த சாதம் பாதி தரையிலும், பாதி என் முகத்திலும் விழுந்தது....
நான் கோபத்தில் சிவந்து... அனுவை அடிக்க ஓங்கிய கையை அந்தரத்தில் நிறுத்த....
"பளார் " என அனுவின் கன்னத்தில் ஒரு அடி விழுந்தது....
Author note :
Negative & positive comments are most welcome...The votes & comments are appreciated....
Catch u later on next update makkale
With love💞
💞sana.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro