பிரிந்தோம்.. சந்திப்போமா??
நான் கோபத்தில் சிவந்து... அனுவை அடிக்க ஓங்கிய கையை, அந்தரத்தில் நிறுத்த....
"பளார் " என அனுவின் கன்னத்தில் ஒரு அடி விழுந்தது....
நான் யார் அடித்ததென பார்க்க.... அங்கே முருகன் மாமா, ரௌத்திரம் மிகுந்தவராய் காணப்பட்டார்.....
அனு அடிவாங்கிய அவளின் கன்னத்தை அவளது இடது கையால் தாங்கியவாறு , அவரை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.... சிறு வயதில் இருந்து யாரும் அவளை அடித்ததில்லை... இதுவே முதல் முறை....
"என்ன ரொம்ப பண்ணுற.... உனக்கு உக்காந்தா இடத்துல சோறு கிடைக்குதுல.... அந்த திமிரு தானே இப்படிலாம் பண்ண சொல்லுது..... உன்னயலாம் சோறு தண்ணி இல்லாம பட்னியா போட்டா தான் சரியா வருவ........ " என அனுவிடம் சினத்தில் சிவந்தவர்....
"பட்டம்மா இங்க வாங்க.... அவளுக்கு நாளைக்கு காலைல வர, சாப்பிட எதுவும் கொடுக்காதீங்க..... வயிறு காஞ்ச தான், சாப்பாடுடோட அருமை தெரியும் " என வேலையாளிடம் கட்டளையிட்டார்.....
"மாமா....அவ ஏதோ கோபத்துல..."
என நான் அவரை சாந்தமாக்க முயல.....
"நீ கொஞ்சம் நேரம் சும்மா இரு.....மயிலே... மயிலே...ன்னா... மயிலு இறகு போடாது...நான் பாத்துக்குறேன்".....என அவர் கோபம் என்னிடம் திரும்ப, நான் மௌனித்தேன்......
"நானும் பாத்துட்டே இருக்கேன்.... ரொம்ப ஓவரா பேசுற..... பர்த்டே பார்ட்டியையும் கேன்சல் பண்ண....கேக்க தூக்கி குப்பைல போட்ட.... இரண்டு நாளா யார்கிட்டயும் பேசல..... ரூம விட்டு வெளிய வரல....
அப்படி சித்தார்த் என்ன பண்ணிட்டானு இப்படி முறுக்கீட்டு தெரியுற???.......பாவம் அந்த யுவி பையன்... அவங்க அப்பா வேற ஊர்ல இல்ல... அவனுக்கு அடிப்பற்றுக்குறப்போ எப்படி அவன தனியா விட்டுட்டு வருவான்.....
உனக்கு பிடிக்கலைன்னா அவன் யார்கூடவும் பேசக்கூடாதா???.... பழக கூடாதா????......இவனை பாத்தா உனக்கு எப்படி தெரியுது..... "
"மாமா " என நான் இழுக்க...
"உன்னைய சும்மா இருன்னு சொன்னேன்.. ஒரு தடவ சொன்னா கேக்க மாட்டியா நீ "..... என மீண்டும் என்னிடம் பாய, நான் மௌனித்தேன்...
"இதோ நிக்குறான்ல இந்த சித்து, அவன் மத்த குழந்தைகளோட விளையாடினா, நீ அழுகுறன்னு..... உன்ன பத்தி நினைச்சு, சின்னவயசிலே அவனோட வட்டத்தை உனக்காக... உன்னோட நிறுத்திக்கிட்டான்...
.உனக்கு கோபம் வரும்னு யார்கிட்டயும் பேசுறதில்ல, பழகுறதும் இல்ல... உனக்கு புட்பால் பிடிக்காதுன்னு..... அவன் புட்பால் விளையாடுறதையே நிறுத்திட்டான்.... உனக்கு பிடிச்சுருக்குனு கிரிக்கெட்ல சேர்ந்தான்....
பசங்களுக்கு அவங்க பிரண்ட்ஸ் தான் எல்லாம்....... உனக்காகவே அவன் யாரையும் பிரெண்டா ஏத்துக்கல....
உனக்கு, இது கேக்குறதுக்கு வேணா, சின்ன விஷயமா தெரியலாம்.... ஆனா, அவனோட இவ்ளோ நாள் வாழ்கை உன்ன சுத்தி மட்டும் தான் இருந்துருக்கு......
உனக்கு பிடிச்சதுனு அவன் யோசிச்சு, யோசிச்சு அவனுக்கு பிடிச்சதை அவன் மறக்க ஆரம்பிச்சுட்டான்.... அவனையே தொலைச்சுட்டு நிக்குறான்....
அவனும் மனுஷன் தானே,... யுவி கூட உனக்கு தெரியாம பழகிருக்கான்.... இதுல என்ன தப்பு...???? அது அவன் விருப்பம்.....
உனக்கு என்ன வந்துச்சு???..... உன்கூட மட்டும் தான் பேசணும், பழகணும்னு சட்டம் எதுவும் இருக்கா என்ன???......
அவன் யார்கூட பேசணும், பழகணும் நீ முடிவு பண்றது.... எந்த விதத்திலும் நியாயமே இல்ல.... அது அவனோட தனிப்பட்ட விருப்பம்.... அதுல நீ தலையிடாத.... தலையிடவும் கூடாது.... "என மாமா விடாது தொடர்ச்சியாக பேச...
"அப்பா... நான்.... "என அனு கலங்கிய விழிகளுடன் ஆரம்பிக்க...
"பேசாத " என் முருகன் மாமா இட்ட அதட்டலில்.... அனுவின் உடல் ஒரு முறை நடுங்கி அடங்கியது.....
"காலைல இருந்து எங்க போனியோனு எல்லாரும் தவிச்சு போயிருந்தோம்... போனும் சுவிட்ச் ஆப் பண்ணிட்ட....
பாவம் சித்து காலைல இருந்து உன்ன தேடி அலைஞ்சுட்டு உன்கிட்ட வந்து பாசமா பேசுனா.. சாப்பாட்டை அவன் மேல தட்டிவிடுற... ..
ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்தது ரொம்ப தப்பா போச்சு.... உன்னையலாம் அடிச்சு வளர்த்திருக்கணும்.... எல்லாம் என் தப்பு தான்....."
"இப்போ என்ன??? நீ அங்க போய் படிக்கணும் அவ்ளோதானே....... " என சத்தமாக சொன்னவர்.... அதே அதட்டலில் " டேய் கிருஷ்ணா... இங்க வாடா " என சொல்ல....
"அப்பா... "என்ற கிருஷ்ணன் அவரை நெருங்கினான்....
"நாளைக்கே இவ டெல்லி போறதுக்கான எல்லா ஏற்பாடையும் பண்ணிடு.... ".. என கிருஷ்ணாவிடம் சொன்ன மாமா அனுவை நோக்க, அவள் கண்களில் கண்ணீர் வழிந்த நிலையில், உணர்வற்று நின்றிருந்தாள்.....
"அப்பா... அனு .. " என கிருஷ்ணா வாயெடுக்க......
"சொன்னதை மட்டும் செய் " என கிருஷ்ணாவை எச்சரித்த மாமா....
அனுவிடம் சென்று....." ஒன்னு நல்லா நியாபகம் வச்சுக்கோ.... அங்க போனபிறகு.... யாரும் உன்ன பாக்க வரமாட்டோம்.... யாரும் உன்கிட்ட பேசவும் மாட்டோம்.... அப்போ தான் நீ திருந்துவ...
ஒரு பொருள் இருக்கற வரைக்கும் அதோட அருமை யாருக்கும் தெரியாது.... அது இல்லாம போனா தான் அதோட அருமை தெரியும்.... " என அவர் கோபம் மாறாமல் சொல்லி முடிக்க....
அனு அழுதபடி வேகமா மாடிப்படிகளில் ஓடினாள்..... நான் "அனு" என்றபடி அவளை பின்தொடர.... வேகமா அவள் அறைக்குள் சென்று, "படார் "என அறைக்கதவை சாற்றினாள்....
நான் கதவை தட்டியபடி, " அனு கதவ துற... அனு ப்ளீஸ்.... துற... நான் சொல்லுறத கேளு.... ",......என கதவை தட்டி ஓய்ந்த நான், கீழே செல்ல மாடிப்படியருகில் நின்றேன்....
"தப்பு எல்லாம் உங்க மேல தான்..,." என தேனு அத்தையின் சத்தம் கேட்டு நான் கீழே எட்டிப்பார்த்தேன்...
"என் மேல என்ன தப்பு?? "...என மாமா ஆறாத கோபத்துடன் அத்தையை வினவ,....
"உன் மேல தான்டா எல்லா தப்பும் "... என என் அப்பா ராமும் குரலை உயர்த்த....
"ராம் நீயுமடா???.... என்னடா எல்லாரும் என்னையே தப்பு சொல்லறீங்க.... நான் அவளுக்கு எது நல்லதோ அதைதான் செய்வேன்.... அவ என்னோட பொண்ணுடா.... " என முருகன் மாமா குரல் உடைந்து நிதானமாய் பேசிட....
தேனு அத்தை ஆவேசமாய்,
"சின்ன வயசிலேயே அவளை கண்டிக்கமா.... தப்பு செய்ஞ்சது நீங்க.... நான் உங்ககிட்ட சொல்ற சமயமெல்லாம்... வளந்தா சரி ஆகிடுவானு சொல்லி என் வாயாடச்சது நீங்க.... தண்டனை மட்டும் என்னோட பெண்ணுக்கா???.....கைக்குள்ளயே வளந்த பொண்ணு..... இப்படி மொழி தெரியாத ஊருக்கு தனியா அனுப்புறேன்னு சொல்றீங்களே " என அழுகையில் முடித்தார்...
"ஆமாடா அவ அப்படி என்ன கேட்டுடா.. படிக்க போறேன்னு சொல்லுறா.... அதுக்கு ஏன்டா இப்படி ஒரு தண்டனை... உன் முடிவ மாத்திக்கோடா " என என் அப்பா ராம் கோரிக்கை வைக்க....
மௌனமாய் நின்றார்... மாமா....
நானும் என் பங்கிற்கு கீழே சென்று, "நீங்க அனுக்கிட்ட அப்படி பேசியிருக்க கூடாது மாமா " என்றேன்...
மாமா, வேகமாக அவர் அறைக்கு சென்றுவிட்டார்....
அனைவரும் கலைந்துசென்றுவிட்டனர்... நான் என்ன செய்வது என யோசித்த வேளையில், யுவியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது....
அப்பொழுது தான் யுவியை தனியாக விட்டுவந்தது நியாபகம் வர..... என்னையே நான் கடிந்துகொண்டு, அவசரமாக யுவியின் வீட்டைநோக்கி பயணமானேன்....
யுவியின் வீட்டை அடைந்தவுடன், என்னை வரவேற்றது யுவியின் அப்பா வாசன் தான்......
அவரை கண்டதும், கவலை மறைத்து, மலர்ந்த முகத்துடன் "அப்பா நீங்க எப்போ வந்தீங்க???.... உங்களுக்கு எவ்வளவோ ட்ரை பண்ணேன்.... லைன் கிடைக்கவே இல்ல...."என்றேன்..
"அதுனால என்ன சித்து ... நீ அனுப்புன வாய்ஸ் மெசேஜ்ஜ நேத்து தான் பாத்தேன்.... பாத்த உடனே, பதறிஅடிச்சு, பிளைட் பிடிச்சு.... மதியமே இங்க வந்துட்டேன்........ ரொம்ப தேங்க்ஸ் சித்து ....யுவி சொன்னான்.... நீ தான் அவன பக்கத்துல இருந்து பாத்துக்கிட்டேன்னு.... " என அவர் உணர்ச்சிவசப்பட...
"அடஎன்னப்பா நீங்க.... ரொம்ப அழுகாச்சியா பேசுறீங்க...," என நான் பொய்யாய் சிணுங்கி, இல்லாத கண்ணீரை கையால் துடைக்க... அவர் கலகலவென சிரித்துவிட்டார்....
"சரிப்பா... நான் யுவிய போய் பாக்குறேன்... "என மாடிப்படிகளில் ஏறினேன்.... நான் யுவியின் அறையில் சென்றவுடன்....
"வாடா நல்லவனே.... புயலை எப்படி சமாளிச்ச??? " என கேலியுடன் என்னை வினவிய யுவி, வாடிய என் முகத்தை கண்டவுடன்....
"என்னடா எதுவும் பிரச்சனையா?? " என யுவி வினவ....எதையும் மறைக்காமல் அனைத்தையும் விவரமாக யுவியிடம் கூறினேன்....
அனைத்தையும் பொறுமையாக கேட்ட யுவி, " அவ செஞ்சது தப்பு தான்... என்ன தான் இருந்தாலும் அனன்யாவை அங்கிள் அடிச்சிருக்க கூடாது.... இப்படி ஒரு முடிவையும் அங்கிள் எடுத்துருக்க கூடாது.... அனன்யா பாவம் தான்.... " என்றதோடு அவன் நிறுத்திட...
"அதே தான் நானும் நினைக்குறேன் யுவி ;ஏதாச்சும் சொல்லி அவளை என்கூடவே இருக்க வைக்கணும் "என சபதமிட்ட நான்,
சிறிது குழப்பத்துடன் யுவியை நோக்கி "ஆமா என்ன திடீர்னு உன்னோட கரிசன சரால் அனன்யா மேல தூவுது??? " என வினவ....
"ஏன்னா, அனன்யாவோட சந்தோசம் தானே என் சித்துவோட சந்தோசம் அதுக்குதான்" என அவன் அழுத்தமாய் கூறிட...
அவன் கை, கால்களில் கட்டு போடப்பட்டிருப்பதினால் அவனை பக்கவாட்டில் அணைத்த நான், "அவ்ளோ நல்லவனாடா நீ??? " என பொய்யாய் சந்தேகித்த படி கேட்க....
"அப்படிதான் எல்லாரும் சொல்லுறாங்க" என, அவன் தாடையை தடவிய படி, யுவி கூறிவிட்டு,
ஒரு வினாடி கழித்து அவன் கலகலவென சிரிக்க, நானும் சிரித்துவிட்டேன்....
பின் நான் கிளம்ப எத்தனிக்கும் நேரம், அறையினுள் வந்த அப்பா "சாப்பிட்டு போப்பா சித்து "....என்க...
"இல்லப்பா நான் சாப்பிட்டு தான் வந்தேன் " என சொல்லிவிட்டு என் வீட்டை நோக்கி பயணமானேன்....
இரவு வெகுநேரம் ஆன காரணத்தினால், நாளை அனுவிடம் பேசி புரியவைக்கலாம் என எண்ணியபடி, என் படுக்கையில் விழுந்தேன்....
மறுநாள், வழக்கம் போல் சூரியன், நிலவினை மறைத்து தன்னை வெளிப்படுத்த... விடிந்தது.....
நான் குளித்து கிளம்பி அனுவின் வீட்டிற்கு செல்ல, அங்கு கிருஷ்ணா அனுவின் உடமைகளை வண்டியில் அடுக்கி கொண்டிருந்தான்.....
நான் உள்ளே செல்ல எத்தனிக்கும் வேளை, அனு ஒரு கைப்பையை எடுத்துக்கொண்டு வாசலை நெருங்கி கொண்டிருந்தாள்.... உள்ளே சென்ற நான் , அவளை வழிமறித்து
"அனு " என நான் அழைக்க....
அவள் என்ன??? என பார்வையினால் வினவினாள்...
"நீ போக வேணாம் "...என நான் சொன்னதிற்கு அவள் முறைப்பே பதிலாய் அமைய.....
"நான் வேணும்னா உன்கூட வந்து அங்கேயே தங்கி படிக்குறேன் "என நான் சொன்னதற்கும் அவள் மாறாமல் அதே முறைப்பை பரிசாய் தர.....
"அனு நான் என்ன சொல்ல வரேன்னா..... "என்று ஆரம்பித்த என் பேச்சு, அனுவால் தடைபட்டது....
"போதும் சித்து..... இனிமேலும் எனக்காக வாழாம , உனக்காக வாழு.... உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு.... இனிமேல், அந்த வாழ்க்கைல நான் இல்ல... "....என்றபடி அவள் என்னை கடந்து முன்னேற.....
நான் திரும்பாமலே, அவள் ஒரு கையை என் கையால் பற்ற.... அவள் திரும்பி என்னை பார்த்தாள்....
நான் திரும்பி அவளை பார்த்து "உன் சித்து சொன்னா கேக்கமாட்டியா அனு " என நான் தோய்ந்த குரலில் கேட்க....
"எப்பவும் நீ சொல்றதை தானே நான் கேட்டுருக்கேன்... இந்த ஒரு தடவை நான் சொல்றதை நீ கேளு ".... அமைதியாக என்று மொழிந்த அனு.... என் கையை எடுத்துவிட்டு, வேகமாக சென்று காரினுள் அமர, கிருஷ்ணா வண்டியை செலுத்தினான்....
நாங்கள் எல்லோரும் அவள் போவதையே பார்த்து கொண்டிருந்தோம்.....
ஐந்து வருடங்களுக்கு பிறகு......
இந்த ஐந்து வருடத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது.... நானும், யுவியும் ஒரே பொறியியல் கல்லூரியில் சேர்ந்து ஒன்றாக படித்துமுடித்தோம்.... எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்...
என் பிடித்த புட்பால் விளையாட்டை நான் இப்போது தினமும் விளையாடுகிறேன்.... நானும், யுவியும் ஒன்றாக கம்பெனி ஆரம்பித்து அதுவும் நன்றாக வருமானம் ஈட்டுகிறது....
ஆனாலும், ஏதோ இனம் புரியாத ஒன்று என்னை மனதில் அழுத்திக்கொண்டே பாரத்தை மேலும் மேலும் உயர்த்துகிறது.... அது என்னவென்றால் அனன்யா.... என் வாழ்க்கையில் எல்லாமே உள்ளது.... இருந்தும் என் வாழ்கை..அனன்யா இல்லாமல் முழுமையடையவில்லை.....
அனன்யாவை பார்த்து ஐந்து வருடம் ஆயிற்று.... அவள் அலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டாள்.... வீட்டிலும் யாருடனும் பேசுவதில்லை.... எப்போதாவது வேறு எண்ணில் இருந்து அவள் அண்ணன் கிருஷ்ணாவிடம் பேசுவாள்....
அவளை இந்த ஐந்து வருடமாக பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அணுகினேன்.... பல முறை நேரிலும் அணுகினேன்... ஆனால் முடிவு என்னவோ தோல்வி தான்.....
நான் இந்த 5 வருடங்கள் அதாவது, 60 மாதங்கள் , 1826 நாட்கள், 210240 மணி நேரங்கள், 12614400 நிமிடங்கள், 756864000 வினாடிகளாக, அவள் இல்லாமல் தவிக்கிறேன்...
இறுதியாக, ஐந்து வருட காத்திருப்பு இன்றுடன் முடிவடைகிறது....
"இன்று அனன்யா படிப்பை முடித்து ஊர் திரும்புகிறாள் .... அவளை அழைப்பதற்கு அனைவரும் கிளம்பி கொண்டுருக்கிறோம் .....என் அனன்யாவை சந்திப்பேனா.,???? "....
Author note :
Hai guyzzz....👋Wish you very very happy new year ✨🎊🎉🎂🎉🎊✨& have a prosperous year ahead💐💐☺☺...
As usual, the votes & comments are appreciated.....
Catch u later guyzzz....👋👋👋👋
With love 💞
💞sana........
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro