நிச்சயதார்த்தம் -2
யுவி நிச்சயம் வேண்டாம் என மறுத்து மேடையில் இருந்து கீழிறங்கி செல்ல.....
அவ்வாறு அவன் சென்றது என் உணர்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை....
அனுவின் முகம் மேலும் கோபத்துடன் கூடிய குழப்பமாகவும்..... மற்ற அனைவரின் முகமும் இருண்டு கலையிழந்தும் காணப்பட்டது.......
மேடையின் கீழிருந்த அனைவரும் ஒவ்வொரு விதமாக பேச.......
அச்சலசலப்பு சத்தமே, இனம்புரியா வேற்றுணுர்வில் இருந்து என்னை மீட்டெடுக்க.....
நிலைமை கை மீறி போவது என் புத்தியில் உரைத்தது....
என்கும்பத்தின் மரியாதை காற்றிலாடுவதை காண சகிக்காத நான்.....
வேகமாக சென்று என் அப்பாவிடமிருந்து மைக்கை வாங்கி....
"அன்டன்ஷன் ப்ளீஸ்... " என மைக்கில் பேசி அனைவரின் சலசல பேச்சுக்கு, தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தேன்......
செயற்கையாய் ஒரு புன்னகையை வரவழைத்தபடி..... " இது சும்மா ஒரு பிராங்..... எங்கப்பா என்ன சொன்னாரு.... இந்த குடும்பத்துல இன்னொரு எங்கேஜ்மெண்ட் இருக்குனு சொன்னாரு.... அப்போவே நீங்க யோசிச்சுருக்க வேணாமா...... இன்னைக்கு எனக்கும், அனன்யாவுக்கும் தான் எங்கேஜ்மெண்ட்..... " என சொன்ன நான், ஒரு கணம் நிறுத்தி,
"இல்ல்லப்பபபா.... " என என் அப்பாவை பார்த்து அழுத்தி சொல்ல.....
என் அப்பா என் கையில் இருந்த மைக்கை வாங்கி, "ஆமா சித்து சொல்றது கரெக்ட் தான்.... இது ஒரு பிராங் தான்.... இன்னைக்கு என்னோட பையன் சித்தார்த்க்கும், என்னோட குளோஸ் பிரண்ட் முருகன் பொண்ணு அனன்யாவுக்கும் தான் எங்கேஜ்மெண்ட் " என அறிவித்துவிட்டு, சமாளிப்பாய், அப்பா அனைவரிடமும் சிரித்துவைத்தார்....
அப்பா அப்படி அறிவித்தவுடன் என் குடும்பத்திலுள்ள அனைவரின் முகத்திலும் பேரதிர்ச்சி.....
ஆக யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை என தெள்ள தெளிவாய் விளங்கிற்று........
வாசன் அப்பாவின் கையிலிருந்த மோதிரத்தை நான் வாங்கி, அனுவின் கையை மறுகையால் பற்றினேன்....
அனுவோ என்னை எரித்திடும் படி பார்வையால் துளைக்க.....
அவளை கண்டும், காணாதவாறு பற்றியிருந்த அவளின் வெண்டைவிரலில் மோதிரத்தை அணிவித்து, என் திருமணத்திற்கான அஸ்திவாரத்தை அமைத்துக்கொண்டேன்....
அவள் மோதிரத்தை என் கைகளில் போடாமல், என்னை காரமாய் பார்ப்பதிலே முனைப்பாய் இருக்க.....
மோதிரத்தை எனக்கு போடு என குறிப்பால் அவளுக்கு உணர்த்த, நானே என் கையினை அவள் முன் நீட்டினேன்....
தேனு அத்தை அவளை ஒரு இடி இடிக்க, தேனு அத்தையையும் முறைத்தவாறு, என் கைவிரலில் மோதிரத்தை அணுவித்தாள்......
நாங்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ள கரகோஷம் எழும்பியது.......
அந்த கூட்டத்தில் என் கண்கள் தேடியது யுவியை தான்... அவனும், ஒரு ஓரமாக நின்று கொண்டு சின்ன சிரிப்புடன் கை தட்டிக்கொண்டிருந்தான்........
விதவிதமாக புகைப்படங்கள் என்னையும், அனுவையும் சேர்த்து வைத்து புகைப்பட கலைஞர்களால் பதிவு செய்யப்பட்டது.....
புகைப்படத்திற்கு மட்டுமே நான் பெயரளவில் சிரித்தேன்..... அது என் மனத்தையோ, கண்களையோ எட்டவிட்டலை.....
மனமானது விளக்க முடியா குழப்பத்தில் கூத்தாட.... எங்கிருந்து உளமார உவகைக்க.....???
ஒரு புகைப்படத்திற்கு அனுவின் இடுப்பில் கைவைக்க புகைப்படம் எடுப்பவர் சொல்ல.....
நான் எவ்வித தயக்கமும் இன்றி,என் கையினால் அவள் இடையை, என் இடையோடு சேர்த்தணைக்க..... அனுவின் முகம் கோவத்தில் சிவந்து என்னை நோக்கியது....
நான் அவளின் முகத்தை மறுகையால் திருப்பி, கேமிராவை பார்க்க செய்தேன்.... பல புகைப்படங்கள் எடுத்த போது.... அனுவின் நிலை அதே கோபத்தில் நீடிக்க.... நான் அவளை சிறிதும் கண்டுகொள்ளவே இல்லை.....
அனைவரும் மேடையில் வந்து எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.....
நிச்சியம் முடிந்து அனைவரும் சென்றுவிட.... அங்கே என் குடும்பம் மற்றும் அனன்யாவின் குடும்பம் வாசன் அப்பா, யுவி மட்டுமே இருக்க அனைவரும் தோட்டத்தில் கூடியிருந்தோம்.......
அனைவரும் அமைதியாக ஒருவரையொருவர் வெறித்தபடி இருக்க, நான் கோபத்தின் உச்சியில் இருந்தேன்.....
நிசத்ப்தம் நிலவிட...." யாராச்சும் இங்க என்ன நடக்குதுன்னு சொல்றீங்களா??? .... எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் போல " என நான் குரலை உயர்த்தி சத்தமிட...
"சித்து..." என முருகன் மாமா மெல்ல ஆரம்பிக்க....
"சும்மா நிறுத்துங்க மாமா..... நானா உங்ககிட்ட சொன்னேன்... அனன்யாவை கல்யாணம் பணிக்குறேனு??? சொல்லுங்க..... " என நான் ஆதங்கம் வெளிப்பட கேட்டிட....
............................. பதில்லாமல் அமைதியாய் நின்றார்.....
"நீங்க தான் குடும்பம் இன்னும் நெருக்கமாகும்... அனு சந்தோசப்படுவா.... யோசிச்சு சொல்லு... அப்படி, இப்படினு என்னை குழப்பிவிட்டுட்டு.....
அப்பா மேடைல யுவி - அனுவுக்கு எங்கேஜ்மெண்ட்னு சொல்லும் போது பேசாம தானே இருந்தீங்க???........ ஏன் இப்படி, என் மனசோட விளையாடுறீங்க மாமா???.....
....................பதிலில்லை.....
நான் அங்கே ஓரமாக நின்றிருக்கும் யுவியின் அருகே சென்றேன்......
"அனு அப்பவே சொன்னா..... நான் தான் கேக்கல......உன்னை எவ்ளோ நம்புனேன்..... கடைசில அனு சொன்ன மாதிரியே ஆயிடுச்சு..... நீ சரியான பிராடு..... துரோகி.... கூடவே இருந்து நம்பவச்சு ஏமாத்திட்ட...." என நான் அவனிடம் கோபத்தில் கொந்தளிக்க....
யுவி மறுப்பாய் தலையசைத்து "சித்து....." ஏதோ கூற வாயெடுக்கும் முன்,
"போதும் நிறுத்து...... இனிமேல் என்னைய அப்படி கூப்பிடாத..... மனசுல இப்படி ஒரு எண்ணத்தை வச்சுக்கிட்டு, நடிச்சு என்னை ஏமாத்திருக்க......."
"அனுவுக்கு உன்ன சுத்தமா பிடிக்காதுன்னு தெரிஞ்சும், அவளோட விருப்பம் இல்லாம நிச்சயம் பண்ண ஏற்பாடு பண்ணி, அது உனக்கு தெரியாத மாதிரியே என்ன ஒரு நடிப்பு....."
'ப்ப்ப்ப்பா... ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் போலயே...... என சத்திமிட்டபடி, கோபத்தின் உச்சி விளிம்பில் இருந்த நான்,
வேகமாக யுவியின் சட்டையை இரு கைகளாலும் பற்றிய நான், " உனக்கு மோதிரம் போடுனு சொன்னப்போ, அனுவோட முகத்தை பாத்தியா........
அதுல, உன் மேல கோபமும், வெறுப்பும் அப்பட்டமா தெரிஞ்சது.... அனுவுக்கு என்னைக்குமே உன்னைய பிடிக்காது.... புரிஞ்சுதா உனக்கு???.....
இப்போ அனு எனக்கு சொந்தமானவ.... இனிமேலும் ஏதாச்சும் ஏடாகூடமா பண்ண, நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்..... " என கோபத்தில் வார்த்தைகளால் அவனை எச்சரித்தபடி, அவன் சட்டையை நான் மேலும் இறுக்கிப்பிடிக்க, யுவியின் கண்கள் கலங்கி சிவந்திருந்தது....
வாசன் அப்பா வேகமாக வந்து, என் பிடியிலிருந்து, யுவியை விடுவித்தார்...
" என்ன நடந்துச்சுனு தெரியாம பேசாத, சித்து " என வாசன் அப்பா ஆதங்கமாய் கேட்க.....
"எது வேணும்னாலும் நடந்துருக்கட்டும்பா..... இவன் எப்படி என்னோட அனு மேல ஆசைப்படலாம்???......." என நான் யாரையும் பேசவிடாது,
"எப்பிடிடா எனக்கு துரோகம் பண்ண உனக்கு மனசு வந்துச்சு????.... அனு சொன்னப்போ கூட நான் நம்பலை......
ஆனா, இப்போ தோணுதுடா எங்க ரெண்டு பேருக்கும் இடையில நீ வந்திட்டியோன்னு..... " என மனதில் உள்ள வலியை, கண்கள் மற்றும் வார்த்தைகளில் வெளிப்படுத்திய நான் , உடைந்து பேசினேன்......
யுவி கண்களில் வலியுடன்," சரிடா இனிமே நான் உங்க ரெண்டு பேர்க்கு இடையில வரமாட்டேன் "என என் அருகில் வந்து சொல்ல, நான் என் முகத்தை திருப்பிகொண்டேன்.....
வேகமாக யுவியிடம், வந்த வாசன் அப்பா " வாடா போலாம் " என யுவியின் கையை பிடித்து இழுக்க, அவன் என்னை பார்த்தவாரே, அவர் இழுத்த இழுப்பிற்கு சென்றான்.....
வாசன் அப்பா வேகமாக செல்ல..... என் அப்பா வேகமாக அவரின் பின் சென்று " டேய்... வாசு... நில்லுடா... நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா.... " என கெஞ்ச...
"போதும்டா பட்டதே போதும்.... " என சொன்ன வாசன் அப்பா, யுவியை இழுத்து கொண்டு சென்றுவிட்டார்.....
அவர் செல்லவும், கோபமாக என்னிடம் வந்த என் அப்பா....
"சித்து.... நீ என்ன பண்ற?? " என என் அப்பா, என்னிடம் கடிந்துகொண்டே கேட்க......
"நான் என்ன பண்றேன்.... நீங்க எல்லாரும் தான் என்ன ஏமாத்துறீங்க.... என் பீலிங்சோட விளையாடுறீங்க..... " என நான் குரலை உயர்த்தி கத்த......
"இப்போ,என்ன நடந்துச்சுனு இப்படி கத்திகிட்டே இருக்க????....
என்ன நடந்துச்சுனு உனக்கு தெரியுமா??? " என என் முழங்கையை பற்றியவாரே, குரலை உயர்த்த..... நான் அமைதியாக அவர் சொல்வதை கேட்க... மௌனமாய் உணர்வற்று நின்றேன்....
"இந்த எங்கேஜ்மெண்ட் நடக்கபோதுன்னு யாருக்குமே தெரியாது.... ஏன்.... அனு, யுவிக்கே தெரியாது..... " என என் அப்பா சொல்ல,
"என்ன சொல்றீங்கப்பா???"என நான் குழப்பத்துடன் கேட்க.....
ரெண்டு நாளைக்கு முன்னாடி முருகன் வந்து என்கிட்ட சொன்னான்....
உனக்கும், அனுவுக்கும் கல்யாணம் பண்ணப்போறதாவும், உன்கிட்ட பேசும் போது நீ தயங்கி நின்னதாவும் சொன்னான்......
நீ தயங்கினதுனால, அவன் என்கிட்ட அட்வைஸ் கேட்டான்......நானும் யோசனையில இருந்தப்போ ......
யுவியோட அப்பா எங்க கம்பெனிக்கு வந்தாரு..... அனுவ யுவிக்கு பொண்ணு கேட்டாரு.... கம்பெனியில பார்ட்னெர்ஷிப் வச்சுக்குறதாவும் சொன்னாரு....
"ஆனா, அனுவுக்கும், யுவிக்கும் ஆரம்பத்தில இருந்தே ஒத்து வராது......நீங்க சொல்றது சரியா வருமா????..... இல்லை யுவிக்கு அனுவ பிடிச்சிருக்கா??? "என நான் வாசனிடம் கேட்டேன்.....
"அனுவ எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.... என் வீட்டுக்கு அனன்யா மருமகளா வந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்.....இல்லை, யுவிக்கு இதைப்பத்தி தெரியாது.... நானா தான் கேட்டு வந்துருக்கேன்...... யுவி, அனுவ பத்தி கவலைப்படாதீங்க...இப்போ மோதிக்குறவங்க.... கல்யாணம் நடந்தா சரி ஆகிடுவாங்க..... கவலையைவிடுங்க.... கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம ரெண்டு கம்பெனிய ஒன்னாக்கிருவோம்..... " என வாசன் சொல்ல....
நானும், முருகனும் யோசனையில் ஆழ்ந்தோம்........ "இருந்தாலும் யுவி, அனன்யாவிடம் எதுக்கும் பேசிபாப்போம்.... "என முருகன் சொல்ல.....
"அவங்க சின்ன குழந்தைங்க.... அவங்களிடம் பேசுனா.... வேணாம்னு தான் சொல்லுவாங்க..... நாமதான் குழந்தைங்களுக்கு எது நல்லதுன்னு பாத்து செய்யணும்..... " என வாசன் பேச.....
'சரி, ஒரு நல்லநாளா பாத்து யுவி - அனு எங்கேஜ்மெண்ட்ட வச்சுக்கலாம்னு "நான் சொன்னேன்....
வாசன் தான், வாணி - கிருஷ்ணா எங்கேஜ்மெண்ட் அப்போ அனௌன்ஸ் பண்ணலாம்னு சொன்னாரு.... நாங்களும் அதுக்கு ஒத்துக்கிட்டோம்.....
எல்லாம் சரியா நடந்தப்போ யுவி ஒத்துக்காம இறங்கிபோய்ட்டான்..... நாங்க எப்படியாச்சும் அவன பேசி சம்மதிக்கவச்சுருப்போம்.....
அதுக்குள்ள நீ மைக்கை வாங்கி.... அப்படி சொல்லவும், வேற வழியில்லாம உனக்கும், அனுவுக்கும் எங்கேஜ்மெண்ட் நடத்தவேண்டியதா போச்சு..... " என அப்பா பேசிமுடிக்க....
அவர் சொல்வதை கேட்ட நொடி எனக்கு சித்தம் கலங்கிற்று.....
தேவையில்லாமல் யுவியை காயப்படுத்திவிட்டோமே என்ற குற்றவுணர்வு மனதில் மேலோங்கியது.....
"அப்பா.... " என நான் ஆரம்பிப்பதற்குள்,
"போதும் நிறுத்துங்க.... " என அனு கத்தியவாறு கோபத்தில் அனைவரிடமும் கொந்தளித்தாள்.......
எல்லாரும் அவளை பார்க்க, "என்ன நினைச்சுட்டு இருக்கீங்க??? எல்லாரும்.... ஹான்..... சொல்லுங்க.....
இந்த சித்துவுக்கு அவனோட பீளிங்ஸ், மனசு முக்கியம்..... உங்களுக்கு உங்க பிசினஸ், பிரண்ட்ஷிப் முக்கியம்.....
என்ன பத்தி யாராச்சும் யோசிச்சு பாத்தீங்களா???
எனக்கும் மனசு இருக்கு..... அந்த மனசுக்குள்ளயும் ஆசை இருக்கு.... உணர்வுகள் இருக்கு....
நான் என்ன பொம்மைன்னு நினைச்சீங்களா?? பிசினஸ் டீல்க்கு விலை பேசி விக்கிறதுக்கு??....
நான் கேட்டானேன்னா கல்யாணம் வேணும்னு ...... என்னோட வாழ்க்கையை என்னையே கேக்காமலே முடிவு பண்றீங்க......!" என மாமாவை பார்த்து காரசாரமாய் கேட்ட அனு.............
உணர்வுகளால் அலைக்கழிக்கபட்டு,சோர்வுற்ற நிலையில் இருந்த என்னிடம், மாறாத அதே கோபத்துடன் வந்த அனு..... "அந்த யுவராஜ் என்னன்னா..... நிச்சயம் வேணாம்னு சொல்லுறான்...... உனக்கென்ன ஹீரோனு நினைப்பா??..... எனக்கு வாழ்கை பிச்சை போடுறியா???? " என அவள் குத்தலாய் கேட்க......
பதில் என்வசம் இல்லை.....
குறையா கோபத்துடன் அனைவரையும் நோக்கிய அனு "எனக்கு இந்த சித்தார்த்தும் வேணாம்..... அந்த யுவராஜும் வேணாம்.......
இப்போ நடந்ததே ஒரு டம்மி எங்கேஜ்மெண்ட்..... என நான் போட்ட நிச்சிய மோதிரத்தை கழற்றி புல்தரையில் எறிந்தாள்.....
இனிமே யாராச்சும் என் கல்யாண பேச்சு எடுத்தீங்க..... என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது " என ஆவேசமாய் பேசிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள்.....
Catch u later on next update makkale 👋👋👋👋👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro