தவிப்பு... !
அனன்யாவின் வலக்கையில் வெண்பிளான் போடப்பட்டிருக்க, சலைன் அதன் வழியே,துளிநீர் பாசனம் போல் சொட்டு சொட்டாய் ஏறி கொண்டிருந்தது....
இடக்கையில் பெரிதாகவும் அல்லாமல், சிறிதாகவும் அல்லாத ஒரு கட்டும், சிறிய பிளாஸ்டரும் போடப்பட்டிருந்தது .... நெற்றியில் ட்ரெஸ்ஸிங் செய்யப்பட்டிருந்தது....
அவள் கண்கள் மூடிய நிலையில் சுயஉணர்வற்று, மருத்துவமனை பெட்டில் படுத்திருந்தாள்....
அவள் அருகில், அவளின் இடக்கையின் மணிக்கட்டை தன் இரு உள்ளங்கைகளாலும் பற்றி, அதை தன் வலக்கன்னத்தருகே வைத்திருந்த படி, அனன்யாவை பார்த்துக்கொண்டிருந்தான், யுவராஜ்....
யுவியின் கண்கள் சிவந்து கலங்கி இருந்ததே தவிர, விழிநீர் விழியை விட்டு நகரமறுத்து, அவன் பார்வையை தாற்காலிகமாக நிறுத்திவைத்தது ....
கண்ணைமூடி, அவன் தன் சோகம் போக்க, யுவி முயல, கண்ணீர் அவன் விழியோரம் வழிந்தது ....
அவள் கையை படுக்கையின் ஒரு ஓரத்தில் வைத்த யுவி, கண்களை துடைத்து, அவளை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்..
சிறிது நேரத்தில் கண்முழித்த அனன்யா, தன் உடல் முழுதும் வலியை உணர்ந்தாள்.....
அனன்யாவின் கண்கள் திறந்தவுடன் கண்டது, தன் முன் மங்கிய முகத்துடன், சிரிப்பை இழந்த, உணர்வற்ற யுவியை தான்.....
அனன்யா சுயஉணர்வு பெற்றதை கண்ட யுவி, வேகமாய் நர்ஸ் என கத்தினான்...
உடனே செவிலியர், "நான் போய் டாக்டர கூட்டிட்டு வரேன் சார் " என சொல்லிவிட்டு வேகமாய் சென்றார்.....
டாக்டர் வந்து, அனன்யாவை செக் செய்துவிட்டு," ஷி நீட் சம் பெட்ரெஸ்ட் & மெடிசின் டு ரிகவர்... தென், ஷி வில் பி ஆல்ரைட் " என யுவியிடம் சொல்ல.... யுவராஜிற்கு கவலை அகன்றது...
"தேங்க்ஸ் டாக்டர்... " என மருத்துவரிடம் கைகுலுக்கி அவரை வெளியே அனுப்பினான், யுவி.....
மருத்துவர் சென்றதும், அனு யுவியை பார்த்தாள்..... அவனும் அவளையே பார்க்க, அனன்யாவே பேச்சை துவங்கினாள்....
"யுவி.... ஒரு கார் வந்து மோதிருச்சு... அப்புறம்.... ஒரு லாம்ப்போஸ்ட் மேல மோதி.... " என அனு சொல்லி முடிப்பதற்குள்ளே, "ஸ்ஸ்ஸ்ஸ் " என காலில் சிறு வலியை உணர்ந்தாள்....
அனு வலியில் துடிப்பதை பார்த்த யுவி அவளின் அருகில் சென்று, "அனன்யா... விடு... நான் தான் உன்னை இங்க சேர்த்தேன்.... கார் நொறுக்கிப்போனது உண்மைதான்... ஏர் பேக் பெசிலிட்டி அந்த கார்ல இருந்ததுனால , அதிர்ஷடவசமா உனக்கு சின்ன சின்ன அடி மட்டும் தான்.... சோ.. ஸ்ட்ரைன் பண்ணிக்காத " என சொல்ல, அனு அமைதியானாள்..
விபத்தின் அதிர்ச்சியில் இருந்து, சற்று மீண்டவளுக்கு, அப்போதே யுவி சித்துவின் சண்டை நினைவில் வந்து நின்றது..... அனு மீண்டும் யுவியின் முகத்தை நெற்றி முதல் தாடைவரை கூர்ந்து கவனிக்க, அதில் இடப்புருவ ஓரத்தில் ஒரு ட்ரெஸ்ஸிங் மற்றும் அவன் வலப்பக்க உதட்டோரத்தில் சிறிய பேண்ட்டேஜூம் ஒட்டப்பட்டிருந்தது.....
அனன்யா எழுந்து உட்கார முயல, அவள் ஒரு கையில் ட்ரிப்ஸ் மற்றும் மறுகையில் கட்டு போட்டுருந்திததினால் எழ முடியாமல் போக, யுவி அவளின் முழங்கையை பற்றி அவள் அமர்வதற்கு, அவள் படுக்கையின் ஒரு ஓரத்தில் அமர்ந்து உதவி செய்துவிட்டு, அவன் நகர முயன்ற கணம், அனன்யா தனது ஒரு கையால் அவனது இடையை பற்றி, அவன் தோளில் தனது தாடையை பொருத்தியபடி, கண்களை மூடிய படி, யுவியை அணைத்துக்கொள்ள, யுவியின் இதயம், அதிவேகத்தில் தாறுமாறாய் தறிகெட்டுபோன வேகத்தில் துடிக்க, வியர்வை நெற்றியில் துளிர்விட, யுவி ஒரு நிமிடம் உறைந்துவிட்டான்.....
அனன்யாவின் கண்ணீர், யுவியின் வலப்பக்க தோளின் முனையை சட்டையை தாண்டி தொட, உணர்வுபெற்ற யுவி, மறைத்துவைத்த ஆறுவருட காதல் அக்கணம் நெஞ்சில் பொங்கி வழிய, யுவியின் கண்கலங்கிட, ஒரு நொடி அகிலம் மறந்து, கண்களை மூடி தன் இருகைகளாலும் அணைத்து, அனுவிற்கு வலிக்காவண்ணம், அவளை மேலும் தன்னுள் இழுத்துக்கொண்டான்....
யுவியின் மிதமான அழுத்த அணைப்பில் பாதுகாப்பை உணர்ந்த அனன்யா, "நான் ரொம்ப பயந்துட்டேன் யுவி " என அனன்யா சிறுவிசும்பலோடு யுவியின் தோளில் கண்ணை மூடியபடியே கூற, யுவியின் வலக்கை தானாக, அனுவின் தலையை வருடிக்கொடுத்தது....
"சித்து... சித்து நல்லா தானே இருக்கான்???? அவனுக்கு ஒன்னும் இல்லையே????? " என அனு மாறா விசும்பலோடு கேட்க, சித்துவின் பெயரை கேட்டதும் யுவிக்கு பொங்கிய காதலெல்லாம் நொடியில் கரைந்துபோனது.... உடனே அனுவிடமிருந்து விலகி அமர்ந்து, முகத்தை இறுக்கிக்கொண்டான் ...
யுவியின் தீடீர் விலகலில் அனு குழப்பமுற்றாலும், "சித்து நல்லாதானே இருக்கான்.... அவனுக்கு ஒன்னும் இல்லையே???? " என கலங்கிய கண்களுடன் அனு கேட்க,
யுவி, "சித்துவுக்கு ஒன்னும் இல்லை..... சின்னசின்ன வீக்கம் மட்டும் தான்.... அவன் ரொம்பவே நல்லா இருக்கான்.... " என யுவி சொல்லி முடிக்கவும், சித்து அந்த அறையின் கதவை திறந்து உள்வரவும் சரியாக இருந்தது......
சித்துவின் வருகையில், யுவியின் முகம் மேலும் இறுகிப்போனது..... உள்நுழைந்த சித்து, "அனு இப்போ ஓகேவா??? பெயின் ஜாஸ்தி இருக்கா??? " என அக்கறையுடன் கேட்க...
"ரொம்பலாம் பெயின் இல்ல சித்து.... இப்போ கொஞ்சம் பரவாயில்ல...." என அனு சொல்லிவிட்டு, யுவியின் முகம் காண.... அதில் உணர்ச்சி துளியும் இல்லை....
"சரி... நான் போய் டாக்டர பாத்துட்டுவரேன்.... " என சித்து அனுவிடம், சொல்ல , அனு ஆமோதிப்பதாய் தலையசைக்க, சித்து அங்கிருந்து சென்றுவிட்டான் ..
சித்து சென்றதும், அனு யுவியிடம் பேச வாயெடுக்க,
"அனன்யா .. நீ சித்துவை கல்யாணம் பண்ணிக்குறது தான் நல்லது....அப்போதான்... " என்ற யுவியின் பேச்சை.....
"என்ன சொன்ன???... " என கோபம் கொந்தளிக்க அனு கேட்டு நிறுத்தினாள்.....
அனுவின் கோபத்தை கண்ட யுவி, சிறிது குரலை தாழ்த்தி, "நீ சித்துவையே கல்யாணம் பண்ணிக்கோ.... அதுதான் நல்லது..... புரிஞ்சுக்கோ... " என மெதுவாக யுவி கூற ...
"என்னால முடியாது...... " என சினத்துடன் கத்தி சொன்ன அனு, ஒருபுறம் தலையை திருப்பி, தன் கண்ணீரை கட்டுப்படுத்த முயன்றாள்...
"அனு...... " என யுவி சொல்ல....
"என்னால முடியாது.... பர்ஸ்ட் நீ இங்க இருந்து போ..... ! " என மிகஅதிக சினத்துடன் தன் பலத்தை குரலில் உயர்த்தி கத்த.....
"ஏன் முடியாது??? " என யுவி அமைதியாய் கேட்க, அனுவின் முறைப்பே பதிலாய் வந்தது....
"ஏன் முடியாது????? நீ சித்துவை தான் கல்யாணம் பண்ணனும்..... " என யுவி சொன்னதையே சொல்லி, அனுவின் கோபத்தை அதிகரித்தான்..
"என்னால நீ சொல்றதையெல்லாம் செய்ய முடியாது.... கெட் அவுட் .. " என அனு கத்தி கூற....
"அதான் ஏன்????? " என யுவியும் குரலை உயர்த்த..
"போ.... இங்க இருந்து.. " என அனு தன் அருகில் இருந்த அனைத்தையும் யுவியின் மீது ஏறிய.......
அதை பொருட்படுத்தாத யுவி, "ஏன்?? ரீசன் சொல்லு "என கோபமாய் கத்த.....
"ஏன்னா????.... நான் உன்னை தான் லவ் பண்றேன்டா... லூசு...... மனசுல உன்னை வச்சுட்டு... எப்பிடிடா என்னால சித்துவ மேரேஜ் பண்ண முடியும்..... " என அனன்யா அழுதபடி கத்தி கோபத்துடன், தன் காதலை யுவியின் முன் தெரிவிக்க......
யுவியின் கண்கள் அகல விரிந்தது..... அவன் கண்கள் கலங்கின....இப்படி ஒரு பதிலை அனன்யாவிடம் இருந்து அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை....
மகிழ்வதா??? இல்லை அழுதுவதா???..... இல்லை அழும் அவளை தேற்றுவதா??? என்ற மனநிலையில் யுவராஜ் இருந்தான்.....
அனன்யா பொருட்களை தூக்கி இருந்ததில், வெண்பிளான் இடம்பெயர்ந்து, குருதி அவள் மணிக்கட்டில் இருந்து வழிய துவங்கியது.....
அதை கவனித்த யுவராஜ், தன் உணர்வுபோராட்டத்தை மறந்து, அவள் குருதி வடியும் கையை பற்ற,
யுவியின் கையை வேகமாக உதறிய அனன்யா, "போ... இங்க இருந்து.... ஜஸ்ட் கெட் அவுட்.... " என கத்த..... யுவி அங்கேயே கலங்கிய கண்களுடன் நிற்க.....
"போன்னு சொன்னேன்..... என் கண்ணு முன்னாடி வந்து என்னை இரிடேட் பண்ணாத.... லீவ் மீ அலோன் " என அனு மீண்டும் கத்த.....
அனுவின் சத்தம் கேட்டு அங்க வந்த, செவிலியர், யுவியிடம் "சார்.... பேஷண்ட்ட டிஸ்டர்ப் பண்ணாதீங்க சார்.... கொஞ்சம் வெளிய போங்க... நான் அவங்க வெண்பிளான மாத்தணும் "என கடிந்து பேச, யுவி வேறு வழியில்லாமல் அங்கிருந்து வெளியேறினான்...
அவன் வெளியேறுவதை பார்த்த, அனன்யா படுக்கையில் படுத்தபடி, தன் தலையை மறுபுறம் திருப்பி கண்களை மூடி அழ, அவள் விழியோரம் நீர் வழிந்து அவள் தலையணையைத் தொட்டது...
யுவி, அறையின் கதவை திறந்து வைத்துவிட்டு சென்றுவிட, வெளியில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுமி, தன் அன்னையின் வாட்சப் ஸ்டேட்டஸை காண,
"காதல் என்றால் வெறும் காயங்களா
அது காதலுக்கு அடையாளங்களா
வெயிலா மழையா வழியா
சுகமா எது நீ
நீதானே என் பொன்வசந்தம் "
என்ற பாடல் வரிகள் சத்தமாய் கேட்க, அது அனன்யாவின் காதின் வழியே சென்று அவள் மனதை தொட, தவிப்பில், அவள் விழிநீரின் வேகம் அதிகரித்து, அவள் நனைந்த தலையணையை மேலும் நனைத்தது...
......
Hi my dear readers.....
Sorry for late & short update..... enaku free time kidaikala pa...college, Camp, survey, presentation, , clinic nu rombave busy a pothu...
Ethukume time illa 😐..Next part sekram koduka try panren...😒😔
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro