Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தனிமையில் என் காதல்

அவள் என் முன் வந்து நிற்க, வார்த்தை என் குரல்வளையிலிருந்து வரவில்லை....

பேச முயற்சித்தால் காற்று மட்டுமே வந்தது...

நான் கண்களை மூடி சிறிது என்னை நிலைப்படுத்தி பின் கண்ணை திறக்க, அதற்குள் டோரா என்னை கடந்து சென்றுவிட்டாள்...

நான் அவளை பின் தொடர, எங்கிருந்தோ வந்த கேப்பில் ஏறி சென்றுவிட்டாள்.....

நான் அவளை காரில் பின்தொடர்ந்தேன்....

பின்தொடர்ந்தவாரே, "ஐயோ... என்னடா..... யுவி.... இப்படி சொதப்பிட்ட...... அஞ்சு வருஷம் கழிச்சு உன் டோரவா பாக்குற..... இப்படி தான் பண்ணுவியா????...... அட்லீஸ்ட் ஒரு ஹாய் ஆச்சும் சொல்லிருக்கலாம்..... ஏன்டா இப்படி பண்ண...???...." என என் அறிவு என்னை ஏச,

"நான் என்ன பண்றது???.... அவளை பாத்தாலே ஹார்ட் படபடன்னு வேகமா துடிக்குது.... உடம்பெல்லாம் வேர்க்குது..... பேச்சு வராம காத்து தான் வருது என் வார்த்தையில...... நான் என்னை செய்ய சொல்லு.....??. எல்லாம் அந்த சூனியக்காரியலா தான்..... அவளோட மந்திரம் தான் "என என் மனது சொல்ல....

நான் பைத்தியம் போல, தனியே சிரித்துக்கொண்டேன்......

சிரித்துக்கொண்டே பார்க்க, டோரா சென்ற கேபை காணவில்லை......

"ஃபாலோ கூட ஒழுங்கா உனக்கு பண்ண தெரியல.... த்த்தூ....... " என என்னை நானே கழுவி ஊற்றிக்கொண்டேன்...

இந்த ஐந்து வருடத்தில் தேனு ஆன்ட்டி, முருகன் அங்கிள், அனன்யாவின் அண்ணா கிருஷ்ணா, சித்துவின் குடும்பம் என அனைவரிடமும் நல்லுறவு பாராட்டினேன்.....

என் வருங்கால மாமனார், மாமியாருக்கு என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஐஸ் வைத்தேன்.... அப்போது தானே எதிர்காலத்தில் என் காதல் கை சேருவதில் எந்த ஒரு எதிர்ப்பும் இருக்காது.....

இந்த ஐந்து வருடத்தில் தேனு ஆன்ட்டி நிஜமாகவே என் தாய் போலவே நடந்துகொண்டார்.... அவர் அன்பு என்னை சிலிர்க்கசெய்துவிட்டது.....

அடிக்கடி நான் அனன்யாவின் வீட்டுக்கு சென்றுவிடுவேன்..... அதனால் எவ்வித தயக்கமுமின்றி புறப்பட்டேன் என் டோராவின் வீட்டை நோக்கி......

"அங்க போய் சித்துகிட்ட என்ன சொல்லி சமாளிக்குறது.... சரி, எதையாச்சும் சொல்லி சமாளிப்போம்.." என எண்ணியவாரே சித்துவின் வீட்டின் முன்பு என் காரை நிறுத்தினேன்.....

அவர்கள் அனைவரும் வெளியே செல்வது போல் கிளம்பி நிற்க, அனன்யா இன்னும் வந்து சேரவில்லை... என அறிந்துகொண்டேன்...

"எனக்கு முன்னாடியே கிளம்பிட்டாளே.... இந்த நேரம் வந்துருக்கணுமே.... எங்க போனா????.." என நான் எனக்குள்ளே யோசித்திருக்க.....

என்னை பார்த்த சித்து .... "என்னடா இவ்ளோ காலைல வந்துருக்க???..... என வினவ,

"இல்லடா....முக்கியமான பைல் ஒன்னு உன்கிட்ட கொடுத்தேனே.....இன்னைக்கு கண்டிப்பா அதை முடிக்கணும், நீ வேற ஆபீஸ் வரமாட்ட, அதான் அதைவாங்கிட்டு போலாம்னு வந்தேன்...." என நான் சமாளிப்பாய் பேச....

"ஓ... அதுவா... இரு வரேன்... " என..... சொல்லி சென்ற சித்து, சிறிது நேரத்தில் ஒரு மஞ்சள் நிற பைலுடன் வந்தான்.....

"என்ன இவன் அதுக்குள்ள வந்துட்டான் இன்னும் கொஞ்சம் நேரம் கடத்தணுமே.. டோரா வேற இன்னும் வரல"என எண்ணிய நான் ,

"டேய் இது இல்லடா... ப்ளூ கலர்ல ஒரு பைல் இருக்குமே... மறந்துட்டியா??" என நான் வினவ.....

"இருடா வரேன்.... "....என பைலை தேட சென்ற சித்து , உடனே திரும்பிவந்து என் கையில் கோப்பை நீட்ட......

வேறுவழியின்றி நானும் கிளம்புவதற்கு, காரின் கதவை திறக்கும் சமயம்.......

ஒரு ஹாரன் ஒலி கேட்டது...
நானும் சித்துவும் ஒரு சேர திரும்ப........ அனன்யாவின் வீட்டின் வாசலில் , ஒரு கேப் வந்து நின்றது....

"அப்பாடா..... டோரா வந்துட்டா..... " என நான் கேபை நோக்க, உயிர்பெற்ற எழிலோவியமாய் டோரா கேபில் இருந்து தரையிறங்கினாள்.....

டோராவின் மாடர்ன் சின்ட்ரெல்லா தோற்றமே என் கண்ணை நிறைத்தது...... அவள் கண்டும் காணாமல் என்னை கடந்து செல்ல...... என் இதயத்தின் சிஸ்டோல், டயஸ்டோல் தாறுமாறான வேகத்தில் சென்றது......

நின்றும் மயங்குவது போல மோனநிலை ஒன்று உண்டானது......

எனக்குள் பல ரசாயன, வேதியியல், இயற்பியல் மாற்றங்கள் டோராவினால் ஏற்பட்டாலும், என் விழிப்பார்வை அவளை விட்டு விலக மறுத்தது.....

சித்து "அனு " என்று அழைத்தவாரே டோராவின் பின்னே சென்றான்.....

அவள் அம்மாவிடம் மட்டுமே பேசினாள்..... அங்கே டோரா ஆன்ட்டியை கட்டிக்கொள்ள, அவரும் டோராவிற்கு முத்தமிட அனன்யா-தேனு ஆன்ட்டியின் பாசப்பிணைப்பு அரங்கேறியது.....

பின் அவள் அலைபேசிக்கு அழைப்பு வர, மாடிக்கு சென்றுவிட்டாள்.....

முருகன் அங்கிள் அனன்யா அவரிடம் பேசவில்லை என வருந்த, சித்து அவரை தேற்றினான்.... அவர் உள்ளே செல்லவும், நானும் அங்கிருந்து புறப்பட்டேன்....

அவள் என்னுடன் பேசமாட்டாள் என்பது நான் நன்கு அறிந்த ஒன்றே...... ஆனாலும் அது எனக்கு வருத்தமளிக்கவில்லை.....

ஏனெனில் அவளை கண்டதே, ஐந்து வருடமாய் விரதமிருக்கும் என் கண்கள் மற்றும் மனதிற்கு விருந்து தான்.....

அவளை காணாமல் திண்டாட்டமாய் ஏங்கி தவித்த நான், டோராவை கண்டவுடன் கொண்டாட்டமாய் உணர்ந்தேன்.....

அதே கொண்டாட்ட மனநிலையுடன் எனது அறையிலுள்ள ட்ராயிங் அறையை அடைந்தேன்.....

அங்கு நான் மற்றும் அனன்யா ரோமியோ -ரோஸலினாக நடித்த காட்சி பெரிய அளவில் புகைப்படமாய் மாட்டிவைத்துள்ளேன்.... அறை முழுதும் அவள் உருவ ஓவியங்களே...

யாரையும் அந்த அறையினுள் நான் அனுமதிப்பதே இல்லை.... நானே அந்த அறையை பராமரித்து கொண்டேன்....

இந்த ஐந்து வருடங்களாய் நான் கற்பனை செய்த காட்சியெல்லாம் ஓவியமாய் வடித்த நான், இன்று கண்ட டோராவின் உருவத்தையும், அதனால் எனக்கு உண்டான உணர்வுகளையும் ஓவியமாய் வரைய தொடங்கினேன்....

சிறிய கம்பளிப்புழு, சில காலத்திற்கு பின் எழில் கொஞ்சும் பட்டாம்பூச்சியாய் உருமாறுவது போல....

அழகிய சிறுமங்கையாய் இருந்த என் டோரா... இந்த யுவராஜின் கனவுநாயகியான சின்ட்ரெல்லா போன்ற அழகுடன் திரும்பியிருக்கிறாள்.....

அவள் என் "டோராவா???...., இல்லை என் "சின்ட்ரெல்லாவா?? "...... இல்லை அவள் காதல் மந்திரங்களால் என்னில் மாயங்கள் நிகழ்த்தும் என் "செல்ல சூனியக்காரியா?? " என என் மனது அலைபாய்ந்தபடி, அலசிஆராய, அனைத்தும் அவளே தான் என்றானது எனக்கு.....

வெகுநாட்களுக்கு பிறகு, டோராவை கண்ட என் உள்ளம், இன்பக்கடலில் மூழ்கி மிதக்க,

என் பியானோவில் "பியூரியசோ " இசையை இசைக்க தொடங்கினேன்.......

என் அலைபேசி ஒலித்தது.... அதை பார்க்க பல தவறிய அழைப்புகள் இருந்தன.. ... 

அப்பொழுது மணியை பார்க்க 10:00 மணியென காட்டியது..... அலுவலகம் செல்லாதது எனக்கு அப்பொழுதே நியாபகம் வந்தது..... உணவுகூட உண்ணவில்லை... அறையை விட்டு வெளியேறவில்லை.... அனைத்தையும் மறந்துபோனேன்.... என் செல்ல சூனியக்காரியால்......

"சொல்லு சித்து..... " என நான் அழைப்பை ஏற்க....

"யுவி... அனன்யா நம்ம கம்பெனில இன்டெர்ஷிப் பண்ணா உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே " என சித்து தயக்கமாய் கேட்க.....

"கண்ணா... லட்டு தின்ன ஆசையா???" என ஆர்ப்பரித்தது, என் மனம்.... அதை சித்துவிடம் மறைத்து,

"எனக்கு... ஒன்னும் பிரச்சனையில்லாடா..... அதுக்கு அனன்யா ஒதுக்கமாட்டா....அப்புறம் எதுக்கு இப்படி கேக்குற???? " என நான் சலிப்பாய் சொல்ல....

"அனு ஒத்துக்கிட்டா... கம்பெனி வரதுக்கு "என சித்து வேகமாய் சொல்லிட....

"கண்ணா... ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா????? " என என் மனம் மீண்டும் ஆர்ப்பரிக்க....

நான் பதிலேதும் பேசவில்லை.....

"ஹலோ.... யுவி.... லைன்ல இருக்கியா???? " என சித்து கேட்க.....

"ஹான்.... லைன்ல தான் இருக்கேன்..... வரச்சொல்லுடா.....பாத்துக்கலாம் " என்றதோடு அழைப்பை துண்டித்துவிட்டேன்......

அவள் இனி தினமும் பார்ப்பேன் என நினைக்கையிலே இன்பவெள்ளம் நெஞ்சமெங்கும் கரைபுரண்டோடியது...... மனமானது ஆனந்த கூத்தாடியது.....

விட்ட "பியூரியசோ "இசையை மீண்டும் பியானோவில் வாசிக்க துவங்கிய படி, டோராவின் நினைப்பில் மூழ்கினேன்.....

மறுநாள் காலை வழக்கத்தை விட சீக்கிரம் அலாரம் வைத்து, அனைவரும் வரவேற்பதற்காக.....

அவளை வரவேற்க நான்,  நின்றிருக்க வழக்கம் போல் என்னை கண்டுகொள்ளாமல் முறைத்து கொண்டே சித்துவுடன்  சென்றுவிட்டாள்...

அது எனக்கு சிரிப்பையே வரவழைத்தது.....

அவள் அலுவலகம் வந்த  முதல் நாளே, டோராவை கவனிப்பதே  எனக்கு அலுவலக வேலையை காட்டிலும் முதன்மையாகி போனது....

அவளை என் அறையில் உள்ள கண்ணாடி திரையின் வழியே ரசிப்பது....,  அவளின் கடைவிழி பார்வைக்காக ஏங்கி தவிப்பது.....  கேன்டீனிற்கு அவள் செல்லும் நேரமே நானும் செல்வது.... அவளிடம் நானாகவே சென்று பேசுவது  என சிறுசிறு செயல்கள் மூலம் என் காதலை அவளிடம் வெளிப்படுத்த தொடங்கினேன்....

என் செயல்களால், என் காதல் அவளுக்கு புரிந்ததா??? இல்லை அவள் மனதை தொடாமல் கரைந்ததா???  என்பது கடவுளுக்கே வெளிச்சம்.....

நான் டோராவுடனே பெரும்பாலான நேரத்தை  செலவிட எண்ணினேன்....

ஆனால் நான் நினைத்தது போல் அமையவில்லை....

சித்துவும், டோராவும்  சேர்ந்தே அலுவலகம் வருவது, வீட்டிற்கு செல்வது, வெளியிடங்களுக்கு செல்வது என எல்லா இடத்திலும்  ஒன்றாகவே சுற்றினார்கள்....

அது என் வயிற்றில் ஹைட்ரொகுளோரிக் அமிலம் அதிகமாய் சுரப்பது போன்ற நிலையை தோற்றுவித்து தீமூட்டாமல் என் வயிறை பற்றி எரிய வைத்தது.....

மூன்று நாட்கள் சென்ற நிலையிலும் அவள் என்னோடு பேசவே இல்லை..

ஒரு நாள் சித்து மிக கடினமான ப்ராஜெக்ட் ஒன்றை டோராவிடம் ஒப்படைக்க.... அவளுக்கு துணையாய் இருந்து பார்த்துக்கொள் என என்னிடம் சொல்லிவிட்டு வேலை நிமித்தமாக வெளியூர்  சென்றுவிட்டான்....

இன்று எப்படியாவது டோராவை என்னுடன் பேசவைக்க வேண்டுமென உள்ளத்தில் சபதமெடுத்துக்கொண்டேன்.....

அனன்யா அவள் வேலையை செய்து, ஒரு பைலை  என்னிடம் காட்டினாள்..... 

அவள் நெருக்கம் வழக்கம் போல என் இதயத்தின்  வேகம் மற்றும் உடம்பின் வியர்வையை  அதிகரிக்க செய்தது....

இப்போது கொஞ்சம் அதற்கு பழகிக்கொண்டேன்...

அப்போதும்  அவள்  அவள் ஒரு வார்த்தையும் பேசாதது,  உள்ளதை வதைக்க.....

" ஒஹோஒ... மேடம் பேசமாட்டாங்களோ.... இரு... உன்ன பேசவைக்குறேன்.... " என நினைத்த நான்

"இது கொஞ்சம் மாத்திரு.... " என்றேன்... அது சரியாக இருந்த போதிலும்....

அதை சரி செய்து டோரா மீண்டும் என்னிடம்  பைலை காட்ட.....

"உனக்கு இது கூட தெரியாதா?????..  இதை தான் டெல்லில போய் படிச்சுட்டுவந்தியா???  " என  பேசியபடி பைலை மேஜை மீது எறிந்து,  அவள் கோபத்தை  நான் தூண்ட...

சண்டையிட்டாவது என்னிடம் பேசமாட்டாளா என  எண்ணினேன்...

அதற்க்கு அவள் முறைப்பை பரிசளித்துவிட்டு, வேலையில் மூழ்கினாள்....

மீண்டும் என்னிடம் பேசாமலே  சரி செய்த பைலை நீட்ட.....

"இது ஓகே... மிச்சத்தை நாளைக்கு பாத்துக்கலாம்.... " என  நான் சொல்ல,  அவள் மௌனத்தையே பரிசளித்தாள்....

"பேசுனா... வாயில இருக்குற முத்து உதிந்திடுமோ???...சரியான பிடிவாத சூனியக்காரி  " என மனதில் எண்ணிய நான், வீடுநோக்கி புறப்பட்டேன்....

செல்லும் வழியில் காதலர் இருவர்... பைக்கில் சென்ற படி, சிரித்து பேச அதைப்பார்த்த  நான் ஏக்க பெருமூச்சுவிட்டேன்.....

நான் என்று இவ்வாறு காதலில் திளைப்பது???? அவள் என்னை பார்த்தாலே விரோதியை பார்ப்பது போல் நோக்குகிறாள் ; என்னிடம் பேசவே தயங்குகிறாள்.......

இந்த நிலையில் எவ்வாறு என் காதலை வெளிப்படுத்துவது????.... எப்போது என் காதல் என் கை சேர்வது????? 

ஆறு வருடமாக தனிமையில்  தான் என் காதல் வாழ்கிறது ....  தனிமையை போக்க என் காதல் ஏற்பாயா டோரா???

"ஏமாற்றிவிடாதே.......
உன்னில் சேரவே  காத்திருக்கிறது
என் காதல்.......... "

*******

Intha update konjam kutty dan... romba personal pressure😔 ... Konjam adjust panikonga... Evening ithoda continuation poduren...

If u like this part, Pls do votes & comments too 😊😊..

Catch u later makkale 👋👋👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro