தித்திக்குதே
அவர்கள் யாவரும் அறியா உண்மை என்னவென்றால், " ரோமியோவாகிய என் உள்ளம் ரோஸலினாகிய அனன்யாவிடம் உருகி கிடப்பது.... "
காதல் செய்யும் மாயம் என பலர் சொல்ல கேட்டுருக்கிறேன்.....
அதில் பெரிய நம்பிக்கை எனக்கில்லை..... எதுவுமே தனக்கு நடக்கும் வரைக்கும் தான்.....
நடந்த பின்னே மற்றவர்களின் கூற்றும் உண்மையென தெரிந்துகொண்டேன்....
என்னிலும் என் காதல் எண்ணற்ற மாயங்கள் புரிந்தது......
டோராவின் தினசரி நடவடிக்கைளை கவனிப்பது, அவளுக்கு பிடித்தது, பிடிக்காதது என சித்துவின் மூலம் கண்டறிவது.....
தானே சிரிப்பது, சாதத்தில் கோலமிடுவது என நான் பண்ணும் அலப்பறைகள் எனக்கே தாங்காவண்ணம் வளர்ந்தன.....
என் நடவடிக்கைகளில் சிறிது வித்யாசத்தை உணர்ந்த, சித்து......
" மச்சி..... உனக்கு பச்ச டிரஸ் போடுறதுக்கான பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு... " என்றான்.....
அவன் சொல்வது எதுவும் விளங்காததால், " ஏன்டா.... அப்படி சொல்ற???? என்ன பச்ச டிரஸ்???? " என நான் சித்துவிடம் கேட்க......
"நான் அப்போவே சொன்னேன்டா......நடுராத்திரில மெலோடியச பியானோ வாசிக்காதான்னு..... இப்போ பாத்தியா.....
உன் பியானோ வாசிப்புல மயங்கி எந்த மோகினியோ உனக்குள்ள வந்து, உன்னோட நட்ட கழட்டி, பச்ச டிரஸ் போடவைக்க பிளான் போடவைக்க பிளான் பண்ணிருச்சு..... சீக்கிரமே உன்னைய கீழ்பாக்கத்துல போய் சேத்துரணும்டா....... " என சித்து சொல்லிமுடித்த சித்து அங்கிருந்து நகல...
"டேய்...... யாருக்கு பைத்தியம் பிடிச்சுருக்கு.... " என சொல்லிய நான்
அவனை துரத்த ஆரம்பிக்க.....
ஓடியபடியே சித்து " உனக்கு தான்டா பைத்தியம் பிடிச்சுருக்கு..... அதுவும் சாதா பைத்தியம் இல்ல... மோகினி பைத்தியம் " என சொல்ல.....
"ஆமான்டா... எனக்கு பைத்தியம் தான்..... மோகினி பைத்தியம் இல்ல..... டோரா பைத்தியம் " என எனக்குள்ளே சொல்லிக்கொண்ட நான், முகமெல்லாம் பல்லாய் சிரித்தபடி, அவனை துரத்த ஆரம்பித்தேன்......
#
#
#
இரவு, பகல் என வழக்கம் போல் நாட்கள் சென்று கொண்டிருந்தது....
அனன்யாவிடம் என் காதலை சொல்ல தயங்கி, மிரண்டு நாட்களை தள்ளிவிட்டேன்....
சொன்ன காதலை விட, சொல்லா காதலே வலிகள் நிறைந்து, ஆழமாய் இருப்பதாய் அனுபவத்தின் வழியே தெரிந்துகொண்டேன்....
பனிரெண்டாம் வகுப்பு.....
படிக்கும் காலம் என்பதால், அனன்யாவிடம் என் காதலை வெளிப்படுத்துவதை தவிர்த்துவந்தேன்......
சித்துவிடம் என் காதலை வெளிப்படுத்துவதால், எங்கே எனக்கும், சித்துவுக்குமான நட்பில் விரிசல் விழுந்துவிடுமோ என்றெண்ணிய நான், பக்குவமாக சித்துவிடம் என் காதலை வெளிப்படுத்த தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன்......
தனிமையில், டோராவின் நினைவு என்னை வாட்டும் நேரம், "நம்மளுக்கே மந்திரம் போட்டுட்டாளே, அந்த சூனியக்காரி " என டோராவை நான் செல்லமாக கடிந்துகொண்ட நொடிகளும் உண்டு....
சில நேரங்களில் ஒரு படி மேலே சென்று, கவிதை என்ற பெயரில், டோராவை நினைத்து ஏதேதோ கிறுக்கிவைப்பேன்......
"பயணங்களின்
தொலைவைப் போல்
என் காதலின் நீளமும்
உன்னிடம் சொல்லாமல்
நீள்கிறது..... "
என்ற கவிதையே என் நிலைக்கு பொருத்தமாய் அமைந்தது...
டோராவின் மீதான என் காதல் நதி, வெள்ளமெடுத்து பெருகும் நேரம், என் பியானோவில் " பியூரியசோ " இசைத்து, வெள்ளத்திற்கு தற்காலிக அணையிடுவேன்.....
அவ்விசை டோராவின் மீதான என் உணர்வுகளுக்கு உரமிடுவது போல் அமைந்தது.....
ஒரு நாள், நான் ஸ்டோர் ரூமிற்கு சென்று எதையோ தேட, சிறுவயதில் நான் மறைத்து வைத்த, டோராவின் படம் என் கண்ணில், பட்டது....
அதை, என் கண்களால் நிறைத்தபடி, எடுத்து ரசித்த நான் எனதறைக்கு கொண்டுவந்து, என் ட்ராயிங் ரூமில் வைத்தேன்.....
கனவிலும், தினமும் தவறாமல் வந்து, தரிசனம் தந்துவிடுவாள்...
அனன்யாவை பற்றிய என் எண்ணங்கள், உணர்வுகள் அனைத்தும் தெரிந்த ஒரே ஜீவன் என் டைரி மட்டுமே....
அனன்யாவின் நினைவு என்னை வாட்டும் நேரமெல்லாம், அவளுடன் நான் இருப்பதாய் கற்பனை செய்துகொள்வேன்..... அந்த கற்பனைகளை ஓவியங்களாய் வடித்துவிடுவேன்.......
அந்த ஓவியங்கள் அனைத்தையும், என் அறையினுள் இருக்கும், ட்ராயிங் ரூமில் மறைத்து வைத்தேன்....
" என் அப்பாவின் பூனைகண்களில் இருந்து, இந்த ஓவியங்களை காக்க வேண்டுமே.... " என்றெண்ணிய நான், என் யோசனையை தூண்டிவிட.... உதித்தது, ஒரு வழி....
"அப்பாவ இந்த ரூம்குள்ள வரவிடக்கூடாது " என்ற மொக்கை யோசனையே, என் களிமண் மூளை பரிசளித்தது....
அப்பா, என்னுடன் தூங்கவேண்டாம் என தர்ணா, செய்தேன்..... பின்னே, என் வண்டவாளம் எல்லாம் தண்டவாளத்தில் அப்பா ஏற்றிவிட்டால் என்ன செய்வது???
"எதுக்குடா... நான் உன் ரூம்ல படுக்க கூடாது.... ஒழுங்கான காரணம் சொல்லு..., "
என அப்பா, குடைந்து, குடைந்து என்னை கேள்வியால், துளைக்க,
"அய்யோ.... இவர் வேற இப்படி படுத்துறாரே.... " என உள்ளூர எண்ணிய நான்,
"என்னப்பா நீங்க??? ஒரு வளந்த பையனுக்கு ஒரு பிரைவசி கூட இல்லையா??? இதுவே அம்மா இருந்திருந்தா அவங்களே எனக்கு பாத்து பாத்து செஞ்சுருப்பாங்க.... "என அவருக்கு முதுகுகாட்டி, பொய்யாய் கண்ணை கசக்கியபடி, வராத கண்ணீரை.... துடைத்தபடி, அவரை நடித்து ஏமாற்ற....
"சரிடா.... இங்க நான் தூங்கல... இப்போ எதுக்கு என்னைக்கும் இல்லாத திருநாளா எதுக்குடா உங்க அம்மாவை இழுக்குற...". என கேட்டவர்.....
ஒரு கணம் என்னை மீண்டும் ஆராய்ந்து, "அந்நியனைவிட மோசமா நடிக்குற, மை டியர் சன் " என சொன்னதிலே என் நடிப்பை தெரிந்துகொண்டார்... என அப்பட்டமாய் தெரிந்தது.....
அதற்குமேல் அவர் எதுவும் கேட்காமல் சென்றதே எனக்கு நிம்மதியை தந்தது.....
அவளின் மீதான, மறைக்கப்பட்டு வளர்க்கப்படும் என் உணர்வுகளை யாரிடம் சொல்வதென ஒன்றுமே புரியவில்லை....,
"சித்துவிடம் சொல்லலாமா,???? வேணாமா???" என சிந்தைகுழப்பம் தோன்ற,
"முதல்ல.... சூனியக்காரி..... இல்ல... இல்ல.... என் செல்லக்குட்டி டோராகிட்ட சொல்லுவோம்.... அப்புறம், அவளோட பதில் தெரிஞ்சுகுவோம்...... அப்புறம் சித்துகிட்ட சொல்லுவோம்..... "
"ஆமா, டோரா ஒதுக்குவாளா???.....பாத்தாலே முறைச்சே கொன்றுவாளே...... என்னய டோராவுக்கு பிடிக்குமா???? ......"என என் மூளையை எண்ணங்களை ஆராய...
"இந்த ரோமியோவை, யாருக்காச்சும் பிடிக்காம போகுமா???? இந்த ரோமியோவோட , ரோஸலின் எப்பவுமே அனன்யா தான்..... " என என் மனம் காதல் மயக்கத்தில் சுயபெருமை பாட...
"டேய்.... ஓவரா ஆடாத...... ரோஸலின் வேணும்ம்னா ரோமியோவோட முதல் காதலா இருக்கலாம்..... ஆனா, ரோஸலினோட காதல் அகராதியில ரோமியோவிற்கு, பெயரளவும் இடமில்லை தம்பி..... மறந்துராத....." என என் மூளை எச்சரிக்கை மணி அடிக்க,
இதை நான் யோசிக்கவே இல்லையே.. எனக்கு தெரிஞ்சு அனன்யாவுக்கு ரகசிய காதல் இருக்க வாய்ப்பே இல்லை....
இந்த ரோமியோவோட காதலுக்கு யார் வில்லன்????..... யாரென என் மனம் யோசிக்க...... சித்தார்த்தின் முகம் என் மனக்கண்ணில் தோன்றி மறைய.....
ஒரு கணம் மனதில் கோபம் கலந்த வலி தோன்றி மறைய.....
"ச்சச..... நம்ம சித்து அப்டிலாம் செய்யமாட்டான்..... எனக்கு சித்து பத்தி தெரியாதா என்ன??.... அவனுக்கு அனன்யா மேல அப்படி ஒரு எண்ணமே இல்ல... அவங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் .... அவ்ளோதான்...... " என என் மனம் மீண்டும் நன்முறையானா கண்ணோட்டத்தில் காண,
என் மூளையோ.." சரி சித்து அப்படி பண்ண மாட்டான்..... ஆனா, அனன்யா??? அவ சித்து பின்னாடி தான் சுத்திட்டு இருக்கா???.. அது உண்மைதானே?????.... இல்லனு சொல்லு பாப்போம்..... " என என்னை மடக்க....
என் மூளையின் கேள்வியில் சிறிது கலங்கிய என் மனம்,
"இல்ல என் டோரா, அப்டிலாம் பண்ணமாட்டா.... அவ சித்து மேல உள்ள ப்ரண்ட்ஷிப்னால தான், அப்படி நடந்துக்குறா..... என் அனன்யா எனக்கு மட்டும் தான்... என் அனன்யா அப்படி செய்யமாட்டா.... செய்யவேமாட்டா.... " என எனக்கு நானே ஆறுதலளித்து பேசிவிட்டு....
" என் அனன்யா அப்படி செய்யமாட்டாதானே.....????? !!!" என கலங்கிய என் மனம், மூளையிடம் கேள்விக்கணை தொடுக்க,
மூளை மௌனித்ததது.....
மூளையின் மௌனம் மனதை கொல்ல, வலியால் கண்களின் ஓரத்தில் நீர்த்துளி வழிந்தது....
கண்கள் மூடி, "தயவுபண்ணி அப்படி செஞ்சுறாத டோரா..... என்னால தாங்க முடியாது.... " என மனதிலே என் டோராவுடன் பேசிக்கொண்டேன்......
.
.
.
நல்லதே நடக்கும் என்ற நல்லெண்ணமே என் நாட்களை நகர்த்தி சென்றது...
பன்னிரெண்டாம் வகுப்பில், மூவருமே நல்ல மதிப்பெண்கள் எடுக்க, நான் டோரா, சித்து என மூவரும் ஒரே கல்லூரியில் சேர்வதாக முடிவுசெய்யப்பட்டது......
அது எனக்கு பெரும் களிப்பை ஏற்படுத்தியது...
காதலை சொல்ல, என் மனம் ஏங்கி தவிக்க, அனன்யாவின் பிறந்தநாள் அன்று என் காதலை சொல்ல காத்திருந்தேன்......
அன்று இரவு 11:30 மணி.........
இன்னும் அரைமணி நேரமே உள்ளது.... அனன்யாவின் பிறந்தநாளுக்கு.......
நான் அனன்யாவிற்கென இளநீல நிறத்தில் கற்கள் பதிக்கப்பட்ட, கைவேலைப்பாடுகள் நிறைந்த, அவளுக்கு சற்றே பெரிதான அழகிய மேக்சி ஒன்றை வாங்கிவைத்தேன்.....
அதை வண்ண காகிதங்களால் சுற்றி...... "ஹாப்பி பர்த்டே மை லவ் " என அதன் மேல் எழுதி, டோராவின் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டிவைத்தேன்.......
என் கையினால் நானே வரைந்த சிறிய புத்தகம் ஒன்றை தயார் செய்திருந்தேன்......
அதை வேகமா திருப்புகையில், முதலில் நானும் அனன்யாவும் சண்டையிட்ட காட்சிகள் அனைத்தும் இருக்கும்,
நடுவில் நானும் அனன்யாவும் நாடகத்தின் ஒத்திகையில் நடனமாடிய காட்சிகள் இருக்கும்...
பின், நான் அனன்யாவை ரசித்த நொடிகள் அதற்க்கான அனன்யாவின் முகபாவனைகள், நான் காதலில் தன்னந்தனியே தவித்த தருணங்கள்.....
சித்தும், அனன்யாவும் சிரித்து பேசுகையில் என்னில் எழும் பொறாமை தீப்பிழம்புகள், அவளை நினைத்து கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது, பியானோ வாசிப்பது , இறுதியில் அவளிடம் என் காதலை வெளிப்படுத்த.....
டோராவின் முன் மண்டியிட்டு, கையில் ரோஜா கொத்தினை ஏந்திய ஓவியத்துடன் அப்புத்தகம் நிறைவடையும்.......
அப்புத்தகம் ஒன்றே என் ஒட்டுமொத்த காதலின் தொல்லையை அனன்யாவிடம் பறைச்சாற்றும் விதம் வடிவமைத்துவிட்டேன்....
பின் ஒரு சிவப்புநிற ரோஜா பூங்கொத்தினை வாங்கி வைத்துவிட்டேன்.....
எல்லாமே சரியாய் செய்துவிட்டு, அனைத்தையும் எடுத்துக்கொண்டு அனன்யாவின் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தேன்......
சுவற்றில் ஏறிக்குதித்து அனன்யாவின் வீட்டு தோட்டத்தில் நின்றுகொண்டிருந்தேன்....... மணி வேறு 11:50 ஆனது....
எவ்வாறு வீட்டின் உள்ளே நுழைவது???? என குறுக்கும், நெடுக்குமாக அங்குமிங்கும் அலைந்தபடி யோசித்தேன்......
பைப்பில் வழியே ஏறமுயன்று தோற்றுப்போனேன்...... சோகமாக நான் அங்கேயே நின்றுகொண்டிருந்தேன்.....
அப்போது அனன்யாவின் வீட்டுக்கதவு திறக்கப்பட்டது, நான் அங்கிருக்கும் புதரில் மறைந்தபடி பார்க்க, சித்தார்த் வெளியே வந்து, அவன் வீட்டிற்குள் நுழைந்தான்.....
அவன் கதவை திறந்து பூட்டாமல் சென்றது எனக்கு வசதியாய் அமைய, நான் அனன்யாவின் வீட்டுக்குள் சென்று பூனைநடையுடன், அனன்யாவின் அறையை அடைந்தேன்....
அவள் தூங்கும் வேளையிலும், எனக்கு ஒளிமிகுந்த வெண்சிற்பமாய் தோன்றினாள், டோரா...
அமைதியாக, டோராவை ரசித்தபடி, மெத்தையில் ஓரத்தில் சென்று அமர்ந்தேன்.....
அமர்ந்தநொடி, " டப்டப்ப் " என அவள் அறையின் கதவுகள் தட்டப்பட, எனக்கு படபடப்பு அதிகமானது....
நான் கொண்டுவந்த பொருட்களுடன் டோராவின் அறையில் உள்ள ரெஸ்ட்ரூமில் தஞ்சமடைந்து மறைத்துக்கொண்டேன்......
மறைத்திருந்தபடி நான் வெளியில் எட்டிப்பார்க்க, சித்தார்த்தின் கையில் பெரிய அளவிலான கேக் ஒன்று இருந்தது..... ஒட்டுமொத்த குடும்பமே அங்கு கூடியிருந்தது.....
அனன்யாவிற்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துச்சொல்லி பரிசுகள் வழங்க, அவள் கேக்கை வெட்டி அனைவருக்கும் ஊட்டிவிட்டாள்....
சித்தார்த் அனன்யாவின் மீது கேக்கை பூச, அவளும் அவன் மீது பூச, அதைபார்த்த, எனக்கு வயிறுபற்றிக்கொண்டு எரிந்தது......
கதவை சாற்றிவிட்டு.... அங்கேயே இருந்தேன்..... சிலமணி நேரத்திற்குபின் சத்தங்களெல்லாம் மறைந்து அமைதிநிலவ, வெளியே சென்றேன்.....
அனன்யா துயிலின் வசமிருந்தாள்..... அவளை எழுப்ப மனமில்லாததால், அவளுக்கு போர்வையை போற்றிவிட்டு கலைந்த அவள் கூந்தலை நான் சரி செய்ய.....
தூக்கத்தில் சிணுங்கியவள் என்கையை அவள்பக்கம் இழுத்துகொண்டாள்......
அவள் கன்னத்தை தாங்கிவண்ணம் என் கை இருக்க.... அன்று நடனமாடியபோது தோன்றிய அதே படபடப்பு தோன்ற ஆரம்பித்தது.....
ஏசி அறையிலும் எனக்கு வியர்த்து கொட்டியது.... உள்ளங்ககைகள் வியர்வையினால் ஈரமாகின.....
என் இதயத்தின் "லப் -டப் " ஒலிகள் அன்று போலே, நான் உணரும் வண்ணம் மாரத்தான் ஓட்டமெடுத்தன......
உயரழுத்தத்தில் உடலெங்கும் குருதிநதி பாய்ந்தோடியது......
இதுவரை கண்டிரா புதுவித உணர்வுகள் என்னை ஆக்கிரமித்தன.....
என்னில் பல மாற்றங்கள் நிகழ காரணமானவளோ, எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியை தூங்கிக்கொண்டிருந்தாள்.....
கண்களை மூடி சிறிது ஆசுவாசித்த நான், அந்த அழகான அவஸ்தையை ஏற்க....
டோரா என்கையை மேலும் இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.....
அது எனக்கு பெரும் அமைதியான நிம்மதியை தர, எப்போது உறங்கினேன் என நான் அறியவில்லை..... டோராவின் அலாரத்தின் சத்தத்திலே எழுந்தேன்.......
அதை நிறுத்திவிட்டு, டோராவை பார்க்க இன்னும் என் கையை விடாமல் தூங்குகொண்டிருந்தாள்.....
அவளையே நான் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க, என் மூளை " தூங்குற டோரா..... எந்திருச்சு உன்ன இங்க பாத்த சூனியக்காரியா மாறிடுவா.... உனக்கு ஆப்பு தான்.... " என எச்சரிக்க......
மெதுவாக அனன்யாவின் தூக்கம் கலையாதபடி, என் கையை பிரித்தெடுத்தேன்.....
நான் வாங்கி வந்த பரிசை மட்டும் அங்கு மேஜை மீது வைத்துவிட்டு, மற்றதை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்......
அதிகாலை ஐந்து மணி என்பதால், யாரும் வீட்டில் நடமாடவில்லை.....
கதவு திறந்திருக்க, மெதுவாக நான் வெளியே செல்ல வாயிலை நெருங்க.....
என் தோளை யாரோ பற்ற...... " போச்சு..... மாட்டிகிட்டோம்..... " என பயந்தபடி திரும்ப.....
அங்கு தேனு ஆன்ட்டி நின்றுகொண்டிருந்தார்......
" யுவராஜ்... இவ்ளோ காலைல எதுக்கு இங்க வந்த?? " என ஆன்ட்டி கேட்க....
அவர் கேட்டதிலிருந்தே நான் மாட்டிக்கொள்ளவில்லை என்றுணர்ந்த நான், "அது வந்து..... ஆன்ட்டி....." என என்ன சொல்வதென்று தெரியாமல் என் வாய் டைப்ரைட்டிங் மிஷின் போல தயங்கி தயங்கி டைப் அடிக்க....
"சித்துவ பாக்க வந்தியா?? " என அவரே எடுத்துக்கொடுக்க.....
" ஆமா ஆன்ட்டி சித்துவ தான் பாக்க வந்தேன்.... சித்து வீட்டுக்கு போனேன்.... அங்கு சித்துவோட பைக் இல்ல.... இங்க வெளிய இருந்துச்சா..... அதான் அவன் இங்க இருப்பானோனு இங்க வந்தேன்..... இங்கையும் அவன் இல்ல.... அவன் வந்தா 10:00 மணிக்கு கிரௌண்ட்க்கு வர சொல்லுங்க ஆன்ட்டி.... கிரிக்கெட் மேட்ச் இருக்கு... பாய் ஆன்ட்டி " என அவருக்கு பேச வாய்பளிக்காமல், வாய்க்கு வந்ததை உளறிவிட்டு, தப்பித்தால் போதுமென வேகமாய் அங்கிருந்து வந்துவிட்டேன்....
வேகமாக எனதறைக்கு சென்ற நான் குளித்துகிளம்பி, கோவிலின் வாசலில் நின்றேன்..... என் காதலை தெரிவித்து, டோராவின் கரம்பிடிக்க ......
டோரா, பிறந்தநாளன்று கோவிலுக்கு தனியே செல்வாள் என சித்துவின் மூலம் தெரிந்துகொண்டேன்.....
டோராவுக்காக காத்திருக்கையில், அவளுடன் சேர்ந்து கழித்த அழகான தருணங்கள் தேனாய் தித்தித்தது......
அந்த தேனிலும் தித்திப்பாய் உணர்ந்தேன்... சாதாரண சுடியில் பூலோக ஏஞ்சலாய் கோவிலுக்கு டோரா வருகையில்......
அவள் வருகையில், என் உடலில் அட்ரீனலின் அதிகமாய் சுரக்க, படபடப்பு பன்மடங்காய் அதிகரித்தது......
படபடப்பை குறைக்க என் கையில் உள்ள பூங்கொத்தினையும், என் ஓவிய புத்தகத்தையும் அழுத்திப்பற்றிக்கொண்டேன்....
"உன்னில் நான் தொலைந்த
காரணம் தெரியாமல், என்னை மீட்க, காதலை துணைக்கு அழைத்துவந்தேன் உன்னிடம்.. "
.......
Author note :
Hai friends.....
Very Sorry for the late update.....
Busy with lot of personal stuffs..... & studies, work....Etc....
Pls do votes & comments if u like this part....
As usual the negative & positive comments are most welcome....
Happy reading....💐
Catch u later on next update makkale...👋👋👋👋👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro