Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சரியா? தவறா??

அழுதுஓய்ந்த அனன்யா, தன் கையிலிருந்த புகைப்படத்தை அணைத்து பற்றியபடி, அழுதுகொண்டே கண்ணயர்ந்துவிட்டாள்...

அவளின் முகம் தொடர்ந்து அழுததால், வீங்கியும், அவள் கண்கள் குருதி நிறத்தில் சிவந்து இருந்தது...

அனன்யாவின் நீண்ட இரவு, அவளறியாமலே அவளிடம் விடை பெற்று, அவளை உறக்கத்தில் ஆழ்த்தியது.....

.
.
.
.

கரியஇரவும் தன் கடமை முடிந்ததும், அகல, வெண்ணிலவை மறைத்து செங்கதிரவன் வெளிப்பட துவங்கிய நேரம், இருள் மறைந்து வண்ணமயமான காலை இனிதே துவங்க, பறவைகள் தங்களின் இரையை தேடி கூட்டம் கூட்டமாய் பறந்து சென்றன....

பால்காரன், பேப்பர்காரன் என அனைவரும் தங்களின் பணியை சிரத்தையாய் செய்ய துவங்கினர்....

பறவைகள், விலங்குகள் தொடங்கி மனிதர்கள் வரை அனைவருக்கும் அது வழக்கமான காலையாகவே அமைந்தது....

ஆனால் , அவனுக்கு அந்த காலை ஏனோ வழக்கமாய் தோன்றவில்லை....

அதிகாலை அலாரம் அவனை 5:00 மணிக்கெல்லாம் எழுப்பியிருக்க அவன் நினைவெல்லாம் அனன்யாவையே சுற்றி வந்தது....

நேற்று அவளை காணாமல் வீட்டில் இருந்ததற்கு, தன்னையே மானசீகமாக மனதில் புகழ்ந்தவன்... அனன்யாவின் கைபேசிக்கு முயன்றான்.... அழைப்பு ஏற்கப்படாமல் போக, அவள் தூங்கிக்கொண்டிருப்பாள் என எண்ணியவன், மனதில் ஏதோ ஒன்று இடித்தது....

என்னவென அறியா ஒன்று, அவன் மனதை ஆக்கிரமித்து , அவனை வாட்ட, எதுவோ இன்று சரியில்லை என அவன் மனம் அடித்துக்கொண்டது.....

யுவிக்கு, உடனே, தன் டோராவை பார்க்கவேண்டும் என தோன்றிற்று.....

அனன்யாவின் வீட்டை நெருங்கிய யுவி, வாசலில் செய்திருக்கும் மலர்அலங்காரத்தையும், வாழைமரதையும் பார்த்து, "நமக்கு தெரியாம இங்க என்ன நடக்குது " என எண்ணியபடி, குழம்பி போனான், யுவி...

அனைவரும் அதிகாலையிலும் பரபரப்பாய் வேலை செய்துகொண்டிருக்க, அதை கடந்து வந்தவனின் கண்ணில்பட்டது, தோட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய அளவிலான பேனர்......

அதில் சித்தார்த் மற்றும் அனன்யாவின் போட்டோஷூட் புகைப்படத்தில் ஒன்று பெரிய அளவில் போடப்பட்டு, "சித்தார்த் வெட்ஸ் அனன்யா " என்று இருந்தது....

அதை பார்த்தவுடன் பிய்த்து எறியவேண்டுமென தோன்றியது, யுவிக்கு..... ஆத்திரம் அவன் அறிவின் மூலைமுடுக்கெல்லாம் முட்டி, இறுதியில் அவன் கண்களில், ரத்தகளறியென தேங்கி நின்றது......

காரில் அமர்ந்த படி, யுவி பேனரில் உள்ள மணநாளை பார்க்க, அதில் இன்னும் இரண்டு நாளில் திருமணம் என்றிருக்க, காரின் ஸ்டியரிங் கோபத்தில் அழுத்தி பிடித்தான், இது சித்துவின் வேலை தான் என தெரிந்துகொண்டான், யுவராஜ்...

"சித்து, ஏன் இப்படி பண்ணுறான்.. இவனோட சுயநலத்துக்காக அனன்யா லைப் கேள்வி குறியாகிடும்..... நானும் அனன்யாவை விரும்புறேன்..... தெரிஞ்சும் இப்படி பண்ணுறான்.. இருந்தாலும் அவளோட விருப்பத்தையும் அவன் கேட்டானா என்னனு தெரியலையே... ஒரு வேளை அனன்யாவுக்கு விருப்பம் இருக்குமோ..... அப்படி அவளுக்கு விருப்பம் இருந்தா நான் என்ன பண்ணுறது???? நான் எப்படி என் டோரா இல்லாம வாழுவேன்....???? " என குரங்கு போல் அவன் மனம் மாறிமாறி யோசிக்க..... இதற்கெல்லாம் சித்து தான் காரணம் என நினைக்கையிலே அவனுக்கு கோபம் கோபமாய் வந்தது.....

இது, ஆத்திரம் படும் நேரமன்று என்று உணர்ந்தவன், தான் அடுத்து செய்யபோகும் காரியங்களை நிதானமாய் மனதில் தொகுத்தவன், ஒரு முடிவுடன் அனன்யாவின் வீட்டில் நுழைந்தான்....

அதிகாலை நேரம் என்பதால், அனைவரும் துயிலில் மூழ்கியிருக்க, தேனுவும், சீதாவும் மட்டுமே அங்கு நடமாடி கொண்டிருந்தனர்......

உள்ளே யுவி நுழைய, தேன்மொழி மலர்ந்த முகத்துடன்  "வா யுவி.... என்ன இவ்ளோ காலைல இந்த பக்கம்???? " என  வினவ......

"அது ஒன்னுமில்ல ஆன்ட்டி.... ஜாகிங் போகப்போனேன்... அப்படியே இப்படி கிராஸ் பண்ணும் போது, வீட்டுக்கு வெளிய நிறைய பேர் வேலை செஞ்சுட்டு இருந்தாங்களா..... அப்படியே உள்ள வரப்போ தான் தெரிஞ்சது.... எதுக்கு அந்த அலங்காரம்னு...... " என யுவி சற்றும் பிசிறு இல்லாமல் நீட்டி, சுருக்கி அழுத்தத்துடன், வாய்க்கு வந்ததை தேன்மொழியிடம் கூறினான்....

"அதை ஏன் கேக்குற யுவி???? " என தேனு அலுத்துக்கொள்ள....

"ஏன் ஆன்ட்டி யாருக்கும் சொல்லாம இப்படி கல்யாணம் பண்ணுற அளவு என்ன வந்துச்சு....???? .. அதுவும் என்கிட்டே கூட சொல்லாம.... " என யுவி கண்கள் சிவக்க, அமைதியாய் கேட்க....

"எல்லாம் சித்துவும், முருகன் அண்ணாவும் பண்ணுற வேலை " என சீதா யுவிடம் சொல்ல.....

"ஆமாம்பா... நான் கூட எவ்ளோ சொல்லிப்பாத்தேன்... அனுவோட அப்பாவும், சித்துவும் ரொம்ப பிடிவாதமா இருக்காங்க.... சித்து  காரணமே சொல்லமாட்டேங்குறான்..... நானும் எவ்ளோ சொல்லிப்பாத்தேன்.... அனுவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனு... " என தேன்மொழி பேசிகொண்டே போக.....

அவர் சொன்ன கடைசிவரியை காதில் வாங்கிய யுவி, "என்ன.... என்ன சொல்லுறீங்க ஆன்ட்டி.... அனன்யாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா....?????? " என யுவி  அவன் வதனத்தில் மகிழ்ச்சியை தவிர்த்து, கண்ணில் ஓரத்தில் ஆனந்தத்தை தேக்கி, தேன்மொழியிடம் கேட்டான்......

"ஆமாம்பா............  " என துவங்கிய தேனு, நிச்சயம் முதல் நேற்று இரவு  அனன்யா கோபித்து கொண்டு சென்றதுவரை சொல்லிமுடிக்க, யுவியின் மனவோரத்தில் நிம்மதி குடிகொண்டது, அடுத்து தான் செய்யவேண்டியதை நினைத்தவன்,

"ஆன்ட்டி...... " என யுவி  தேனுவை அழைக்க....

"சொல்லுப்பா.... " என தேனு சொல்ல...

"ஆன்ட்டி.... சொல்லுறேன்னு தப்பா எடுத்துக்கமாட்டீங்களே...???? " என யுவி தயங்கிட....

"என்னனு.... தயங்காம சொல்லுப்பா...." என தேனு சொல்ல.....

மூச்சைவேகமாக இழுத்துவிட்டவன், "அது ஒன்னுமில்ல ஆன்ட்டி..... இந்த கல்யாணம் நடக்க கூடாது..... " என யுவி சொல்ல, தேனுவும், சீதாவும் அதிர்ச்சி நிறைந்த முகத்துடன் யுவியை நோக்கினர்......

அவர்களின் அதிர்ச்சியை கண்ட யுவி, அவர்கள் பேச இடம் கொடுக்காமல் மேலும் தொடர்ந்தான்.....

"ஆன்ட்டி.. கல்யாணம்ன்றது சாதாரண விஷயம் இல்ல...  ரெண்டு மனசு விருப்பட்டு இணையனும்...  ஒருத்தருக்கு விருப்பம் இல்லனாலும், ரெண்டு பேர் வாழ்க்கையிலும் சந்தோசமா இருக்காது......  நீங்க சொல்றதை பார்த்த அனன்யாவுக்கு  இந்த கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்ல போல.......நான் இதை அனன்யாவோட நல்லதுக்கு மட்டும் சொல்லல..... சித்துவுக்காகவும் தான் சொல்லுறேன்.... ஆன்ட்டி.... "  என யுவி பீடிகை போட்டு பேச.....

தேனுவும், சீதாவும் யுவியின் பேச்சில் சற்று குழம்பினார்.....

அவர்களின் முகத்தில் குழப்ப ரேகையை கண்ட யுவி, குழம்பிய குட்டையில் கல்லெறிய தயாரானான்.....

"என்னப்பா சொல்லுற.... இதுல சித்துவுக்கு என்ன நல்லது இருக்கு " என  சீதா யுவிடம் கேட்க...

"ஆமாம்மா..... அனன்யா வேற யாரையோ விரும்புறா.... அதுனால தான் கல்யாணத்துக்கு ஒதுக்கமாட்டேங்குறா.... வேற ஒருத்தன மனசுல வச்சுட்டு எப்படி அவளால சித்து கூட சந்தோசமா வாழ முடியும்... இதுனால சித்துவுக்கும் சந்தோசம் இல்லாம போய்டும்..... " என யுவி சீதாவிடம் சொல்ல,

தேனு யோசனையில் ஆழ்ந்தார்.....

"அதெப்படி நீ இவ்ளோ உறுதியா சொல்லுற..... ஆனா அனு வேற காரணம் சொல்லி தான் கல்யாணம் வேணாம்னு சொன்னா... " என சீதா சந்தேக பார்வையுடன் யுவியை  கேட்க,

"அம்மா.... . சில விஷயங்களை அம்மா, அப்பாகிட்ட சொல்ல முடியாது..... பசங்க நாங்களே எங்க லவ்வ அம்மா, அப்பாகிட்ட சொல்லுறது இல்லை..... அப்படி இருக்குறப்போ அனன்யா ஒரு பொண்ணு..... உங்களுக்கு நான் சொல்லி தான் தெரியணும்னு இல்லை.... ஒரு பொண்ணு தானா மனசு திறந்து பேசுற வரைக்கும், அவ மனசுக்குள்ள என்ன இருக்குனு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது.....  அவ நடந்துக்குறதுலாம் பாத்த அவ யாரையோ லவ் பண்ணுறா.... அது மட்டும் என்னால தெளிவா சொல்ல முடியும்.... " என அவன் சொல்ல....

தேனு மற்றும் சீதா ஏதும் பேசாமல் அவன் சொல்வதையே, சிரத்தையுடன் கவனித்து கொண்டிருந்தனர்.....

இன்னும் அவர்கள்  ஏதும் சொல்லாமல் இருப்பதை கண்ட யுவி, "ஆன்ட்டி.... அனுவுக்கு பிடிக்காததை, நீங்க அன்னைக்கு செஞ்சதுனால தான்.... அனு அஞ்சு வருசமா உங்க யார்கூடவும் காண்டாக்ட்ல இல்லாம போயிட்டா.... நீங்க அனு இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டீங்கனும் எனக்கு தெரியும்.... இப்பவும் நீங்க அதே மாதிரி தான் செய்யுறீங்க.... பாத்துக்கோங்க ஆன்ட்டி " என யுவி சொல்லி முடிக்க,

யுவியின் பேச்சை கேட்ட  தேனுவின் மனது அடித்துக்கொண்டது..... இதனால் மீண்டும் தன் மகளை பிரிய நேருமோ என நினைக்கையிலே அவருக்கு கவலை வந்தது..... இந்த ஐந்து வருடங்களாய், தன் ஒரே மகளின் பிரிவும், அதனால் ஏற்பட்ட வலியும், ஏக்கமும் அவர் மட்டுமே அறிவார்.... இம்முறை, மீண்டும் மகளை பிரிய நேர்ந்தால், அதை தாங்கும் சக்தி தனக்கில்லை என தெளிவாய் தெரிந்தது..... அனைத்திற்கும் மேல் மகளின் சந்தோசமே முக்கியம் எனவும் தேனுவின் மனதில் தோன்றிட,

"நீ சொல்றதும் சரி தான் யுவி..... எனக்கு என் பொண்ணு சந்தோசம் தான் முக்கியம்... நான் அனு அப்பாகிட்ட பேசி, எப்படியாச்சும் இந்த கல்யாணத்தை நிறுத்தறேன்.... " என தேனு சொல்ல....

சீதாவுக்கு தேனு சொல்வது சரியென பட்டாலும், குழப்பமாய் உணர்ந்தார்.....
"ஆமா அனு யாரை விரும்புறானு உனக்கு தெரியுமா யுவி????? " என சீதா கேட்க....

சிறுஅமைதியை கடைபிடித்த யுவி, "இல்லம்மா எனக்கு தெரியாது " என சொல்ல.....

"ஒரு வேளை அனு மனசுல சித்துவே இருந்துட்டா என்ன பண்றது???? " என சீதா தன் சந்தேகத்தை கேட்க....

"சித்துவ தான் அனுவுக்கு பிடிச்சிருந்தா, அவங்க ரெண்டு பேரும் சேருறது தான்மா சரியா வரும் " என சொல்கையிலே யுவியின் கண்கள் அனிச்சையாய் கலங்கின....

கலங்கிய கண்களை மறைக்க முயன்றவன், "நான் போய் அனன்யாவை பாத்துட்டு வரேன்மா " என வேகமா சொல்லிவிட்டு மாடிப்படிகளில் ஏறி அனன்யாவின் அறையை அடைந்தான் யுவி ....

அனன்யாவின் அறையினுள் நுழைய, அங்குமிங்கும் பொருட்கள் சிதறிய வண்ணம் கிடந்தன.....

அங்கு, அனன்யா ஒரு மூலையில் சுவற்றை ஒட்டியபடி படுத்திருந்தாள்.....அவள் கையிலிருந்த  காயத்தை கண்டவன், அவள் கைக்கு சற்று அருகில், கவிழ்ந்து கிடந்த புகைப்படத்தை பார்க்க, தவறிவிட்டான்....

அனன்யாவின் கையை யுவி தொட, அவன் தொடுகையில் விழித்தவள், பட்டென எழுந்துகொண்டாள்....

அவள் திருதிருவென விழிக்க, " பஸ்ட் எயிட் பாக்ஸ் எங்க இருக்கு???? " என அவன் கேட்க, அனு அலமாரியை நோக்கி கைகாட்டிவிட்டு, மீண்டும் முழிக்க.... "  போய் பிரெஷ் ஆகிட்டு வா.... " என அவளை அனுப்பி வைத்த யுவி,

"முழிக்குறதை பாரு..... திருதிருனு..... " என மனதினுள் எண்ணி சிரித்துக்கொண்டான்....

அவள் திரும்பி வரவும்,அனுவின் கையை பற்றி, அவள்  காயத்திற்கு மருந்திட்டவன், "என்ன சொல்லாம  கொள்ளாம  ரகசியமா கல்யாணம் பண்ணிக்க போற போல..... "  என யுவி அனுவை ஆழம் பார்க்க.....

"இதையெல்லாம் பார்த்த உனக்கு நான் கல்யாணம் பண்ணிக்குற மாதிரி தோணுதா???? " என அனு முறைப்புடன் யுவியை கேட்க....

"சரி.... கூல்.... கூல்.... ஆன்ட்டி எல்லாத்தையும் சொன்னாங்க...... " என யுவி சொல்ல.....

"யுவி... இந்த மெஸ்ல இருந்து மிஸ் ஆகுறதுக்கு ஏதாச்சும் வழி சொல்லேன் " என அனு கேட்க....

"அதுக்கு நீ எஸ் தான் ஆகணும் " என யுவி சொல்ல...

"நீ சொல்றது புரியலை.... " என அனு சொல்ல....

"உனக்கு எது தான் புரிஞ்சுருக்கு " என மனதில் நொந்த யுவி..... "நீ இங்க இருந்து ஓடி போனா தான் இந்த கல்யாணம் நிக்கும்னு சொல்லுறேன் " என யுவி சொல்ல....

"என்ன????? ஓடிபோணுமா???????? !!!!!! " என அனன்யா அதிர்ச்சியடைந்த படி, தன் நகத்தை கடிக்க துவங்கினாள்.....

"நீயே நல்லா யோசி.... உங்கப்பாவோட பிடிவாதம்தான் உனக்கு தெரியுமே.... வேற ஏதாச்சும் வழி இருந்தா சொல்லு"  என யுவி சொல்ல....

தீவிரமாக நகத்தை கடித்துமுடித்த அனன்யா, "பட்.... வீட்ட சுத்தி ஆளுங்க இருக்காங்களே.... எப்படி போறது....??? யார் ஹெல்ப் பண்ணுவா.... எங்க போறது????? " என கேட்க....

"நான் எதுக்கு இருக்கேன்.... நான் உனக்கு ஹெல்ப்  பண்றேன்.... உனக்கு நான் அரெஞ்மென்ட்ஸ்லாம் பண்ணிட்டு உனக்கு கால் பண்றேன்.... அதுவரைக்கும் கைய கால வச்சுட்டு ஒழுங்கா இரு... இப்படி உன்னை நீயே காயபடுத்திக்காத...ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு.....  இப்போ நான் கிளம்புறேன் " என சொல்லியவன்  அனுவின்  அறையிலிருந்து  வெளிவர, சித்து அப்போது ஜாகிங் செல்ல வெளியே வந்தான்......

வந்தவன், யுவியை பார்த்து அதிர்ச்சியடைந்து, "யுவி நீ  எப்படி இங்க... அதுவும் இப்போ...  எப்போ " என அவன் பேசி முடிப்பதற்குள் .....

"எப்போ வந்தேன்னு கேக்குறியா?  இல்ல  எதுக்கு வந்தேன்னு கேக்குறியா .... " என யுவி வில்லச்சிரிப்புடன் கேட்க.... 

சித்து ஏதோ சொல்லவருவதற்குள், அங்கு வந்த தேனு, யுவியிடம் காபியை தர.... யுவி சிரிப்புடன் அதை வாங்கிக்கொண்டான்......

"அத்தை.... யுவி எப்போ வந்தான்.... " என சித்து, யுவியை பார்த்துக்கொண்டே கேட்க....

"அப்படியே இந்த பக்கம் வந்தான்.... அதான் வந்துட்டான்.... இப்போ தான் கொஞ்சம் முன்னாடி தான் வந்தான்... " என தேனு சொல்ல......

சித்துவுக்கோ வயிற்றில் புளியை கரைப்பது போல் இருந்தது.....

எது யுவிக்கு தெரிய கூடாது என நினைத்தானோ, அது நடந்துவிட்டது.....

விஷயம் தெரிந்த பின்பும், யுவி கோபத்தை தவிர்த்து, கூல்லாக காபியை குடிப்பதை பார்த்தால், ஏதோ சரியில்லை என்பது மட்டும் சித்துவிற்கு தெரிந்தது...... ஆனால் யுவியின் திட்டம் என்ன என்பது மட்டும் சித்துவின் அறிவிற்கு எட்டவில்லை......

சித்துவின் முகத்தில் குழப்பத்தை பார்த்தவாறே காபியை குடித்துவிட்டு, தேனு, சீதாவிடம் விடைபெற்றுக்கொண்டு, சித்துவிடம் "வரட்டாஆஆஆ " என சொல்லியவன், தனது  கூலிங்கிளாஸை மாட்டிக்கொண்டு புறப்பட்டான்......

அவன் போகும் தோரணையை பார்த்துக்கொண்ட சித்துவிற்கு, குழப்பம்  மனதை நிறைக்க, "ஐயோ.... இவன் என்ன பண்ண காத்திருக்கானோ???? " என புலம்பிக்கொண்டிருந்தான்....
.
.
.
.
.
.

அனுவிற்கோ, இருமனதாய் இருந்தது....

ஒரு மனது, "இதை தவிர வேறு வழியே இல்லையா..... வீட்டை விட்டு வெளியேறுவது அவசியம் தானா????.... அவ்வாறு தான் செய்தால், தன் குடும்பத்திற்கு பெரும் இழுக்கு  நேருமே..... அப்பாவின் மானம்  காத்தாடி போல் காற்றில் பறக்குமே..... அம்மா வருந்துவாரே...... " என யோசிக்க 

மறுமனதோ, "இதை தவிர வேற வழியே இல்லை.... அப்பா நினைச்சதை சாதிக்காம விடமாட்டாரு..... அவரோட வரட்டு பிடிவாதத்துனால  என்னோட சந்தோசத்தை இழக்க முடியாது.... யுவி சொல்றது தான் சரி..... " என சொன்னாலும், மனமது, அதை முழுமையாய் ஏற்க மறுத்தது.....

வீட்டை விட்டு செல்வதாய் , அனு இறுதியில் முடிவெடுத்தாலும், அம்முடிவு சரியா???? இல்லை தவறா??? என்ற அவள் ஆழ்மனதின் கேள்விக்கு அனன்யாவிடம் பதிலில்லை....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro