சொல்லாமலே
வீட்டை விட்டு செல்வதாய் , அனு இறுதியில் முடிவெடுத்தாலும், அம்முடிவு சரியா???? இல்லை தவறா??? என்ற அவள் ஆழ்மனதின் கேள்விக்கு அனன்யாவிடம் பதிலில்லை....
அனன்யாவின் அறை, தேனு அனுப்பிய வேலையாள் மூலம் சுத்தம் செய்யப்பட்டது....வேலையாள் வருவதற்கு முன்பே, தனக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த அப்புகைப்படத்தை பத்திர படுத்திக்கொண்டாள், அனன்யா......
யுவி அளித்த நம்பிக்கையில், நேரமே உண்டுவிட்டு, தன் துணிகளை ஒரு சிறிய பையில் திணித்து, யுவியின் கைபேசி அழைப்பிற்காக காத்திருக்க துவங்கினாள்....
பெற்றோரை எதிர்த்து, இவ்வாறு திருமணம் செய்பவர்களை, இவளே பலமுறை திட்டித்தீர்த்துள்ளாள்....
ஆனால், தனக்கே இவ்வாறு ஒரு நிலை வருமென அவள் நினைத்ததில்லை......
தான் அவர்களை எதிர்த்து திருமணம் செய்யபோவதில்லை தான்.. என்றாலும் வீட்டை விட்டுசெல்வதும் தவறு தான் என சொல்லியது, அனுவின் மனம்...
எதுவுமே அடுத்தவர்க்கு நடைபெறும் போது, வெறும் செய்தியே..... தனக்கென நிகழும் போதே, அதன் ஏக்கமும், தாக்கமும் புரியும் என்பதை, அனுபவபூர்வமாய் உணர்ந்தாள்...
வீட்டைவிட்டு வெளியே செல்வது, தவறென உணர்ந்தாலும், வேறு வழியில்லாமலே , தான் இவ்வாறு செய்வதாய் தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டாள், அனன்யா....
.
.
.
யுவி அவன் வீட்டிற்கு சென்ற உடன் அவன் மனதில் ஆயிரம் யோசனைகள்.....
தான் அனன்யாவிடம் சொன்ன யோசனை, அவனுக்கு கோழைத்தனமாய் தோன்றியது.....
சித்துவிடம் திமிராய் பேசி, அலப்பறை செய்துவிட்டு வந்தாலும், தன்னால் அனன்யாவின் குடும்பம் தலைகுனிய நேருமே என்ற கவலை அவனை வாட்டியது.....
முக்கியமாய் தனக்கு இன்னொரு தாயாய் விளங்கும் தேனுவின் முகமே அவன் மனக்கண்ணில் அடிக்கடி தோன்றி மறைய, அவன் குற்றஉணர்ச்சி இருமடங்கு பெருகி நெஞ்சை உறுத்தியது......
மனஉணர்ச்சிகள் அவன் முகத்திலும் தெள்ளதெளிவாய் தெரிய, சோகமான முகத்துடன், தனதறையில் அமர்ந்திருந்தான், யுவி......
அப்போது, அங்கு வந்த யுவியின் அப்பா, மகனின் முகவாட்டத்தை கண்டுகொண்டார்.....
யுவியின் அருகில் வந்தமர்ந்து அவனின் தோளை வாசன் பற்ற, யுவி அப்பொழுதே தன் அப்பாவின் வருகையை உணர்ந்தான்....
"என்னாச்சுடா.. ஏன் ஒரு மாதிரியா இருக்க... " என யுவியின் தலையை வருடியபடி வாசன் கேட்க....
"ஒன்னுமில்ல அப்பா... சும்மா தான் " என யுவி தன் அப்பாவிடம் மெலிதாய் சிரித்தான்....
"எதுவா இருந்தாலும் அப்பாகிட்ட சொல்லுப்பா... அப்பா உனக்கு எது நல்லதோ, அதை யோசிச்சு பண்ணுவேன் " என வாசன் சொல்ல......
"ஐயோ.... அதெல்லாம் ஒன்னுமில்லப்பா... " என சமாளித்தவன், "ஏன்பா... எல்லா அப்பாவும் தங்களோட குழந்தைங்களை பத்தியும், அவங்க நல்லதை பத்தி தான் யோசிப்பாங்களா??? " என யுவி சிறுபிள்ளை போல், தன் அப்பாவிடம் கேட்க...
"எல்லா அப்பாவும், தன் குழந்தைகளோட நல்லதை பத்தி மட்டும் தான் யோசிப்பாங்க..... அவங்களுக்கு எது நல்லதோ, அதை ஒன்னுக்கு பத்துத்தடவை யோசித்து தான் பண்ணுவாங்க... " என வாசன் சிரித்தபடி சொல்ல..... யுவிக்கு கவலை அதிகமானது....
"எதை பத்தியும் யோசிக்காம வந்து சாப்பிடு " என வாசன் அழைக்க.... அவருடன் சென்று சாப்பிட்டவன், மீண்டும் தன் அறைக்கு திரும்பினான்....
"நம்மளோட அப்பா யோசிக்குற மாதிரி தானே, அனன்யாவோட அப்பாவும் யோசிச்சுருப்பாங்க..... அனுவுக்கு எது நல்லதுன்னு அவங்க அப்பாவுக்கு தெரியும்..... என்னோட சுயநலத்துக்காக, அவங்க பேமிலிய கஷ்டப்படுத்துறது.... ரொம்ப தப்பு..... " என சிந்தித்த யுவி.....
அனன்யா தன்னை நேசித்ததாய் ஒரு செயலிலும் வெளிப்படுத்தவில்லை.... ஒருதலை காதலுக்கு என்றுமே மதிப்பில்லை என அவன் மனம் சொன்னாலும், தன் காதல் முளைக்காமலே, சிதைய போகின்றதே... என அவனுள்ளம் கதறியது.......
"அனன்யா சித்துவை கல்யாணம் செய்வதே சரி....அதுவே அனைவர்க்கும் நிம்மதியை தரும்..... நான் வேறு, ஏதோதோ சொல்லி, அனன்யாவை தவறான முடிவை எடுக்க தூண்டிவிட்டேன்.....நான் செய்தது முற்றிலும் தவறு... என் சுயநலத்தால், பிறர்நலம் பாதிக்கப்படுவது மிகவும் தவறு..... அதிலும் தேனு ஆன்ட்டி.... மிகவும் பாவம்..... நான் அனன்யாவிற்கு உதவ போவதில்லை...... அனு சித்துவையே திருமணம் செய்துகொள்ளட்டும்...... " என நினைக்கையிலே அவன் கண்களில் நீர், வெள்ளமெடுத்து ஓடிக்கொண்டே, கன்னத்தை துடைக்க, துடைக்க வழிந்துகொண்டிருந்தது......
அப்பொழுது அவன் கைபேசியில் டோரா என்ற பெயருடன் அழைப்பு வர, அவளை எதிர்கொள்ள தைரியம் இல்லாததால், அதை சைலன்ட் மோடில் போட்டான்
தன் காதலை தியாகம் செய்ய துணிந்தாலும், ஆறு வருடமாய் யாருமறியாமல், பாதுகாப்பாய் வளர்த்த தனது நேசம், முற்றிலும் சிதைய போகிறது என்பதை யுவியால் ஏற்க முடியவில்லை.....
தன் ட்ராயிங் ரூமில் தஞ்சம் புகுந்தவன், அங்கு எங்கும் அவன் டோராவின் முகமே தெரிய, அவள் நினைவுகளை எப்படி அழிக்க???? என்ற அவன் மனதின் கேள்விக்கு பதில்லாமல் தவித்தான்.....
கண்களில் நீர் பெருக, பெருங்குரலெடுத்து மண்டியிட்டு அழத்துவங்கினான்..... அது எத்தனை மணி நேரம் நீண்டது, என்பதை அவனறியான்.....
அழுதபடியே, மெலன்கலி இசையை தன் பியானோவில் இசைக்க துவங்கினான்....
அழுதுக்களைத்தவன்.... தன் மெத்தையில் விழுந்தபடி, வாழ்கை வெறுத்து போய் , மேலே சுற்றும் மின்விசிறியை பார்க்க, அவன் விழியோரம் நீர் வழிய, நெடுநேரம் மனவுளைச்சலில் சிக்கி தவித்தவன், ஒருவாறு உறங்கிப்போனான்.....
.
.
.
.
.
பச்சைப்பசேலென புல்வெளி... அப்புல்வெளியில் நடுவில் புதிதாய் அரும்பிய எழில்வழியும் வண்ணமலர்கள்..... எங்கும் காற்றில் வளைந்தாடும் மரங்கள்.... எங்கும் இயற்கை கண்களுக்கு இளமைதோற்றம் கொண்டு விருந்து படைக்க, அவன் மனம் அமைதி கண்டது....
பறக்கும் வகைவகையான வண்ணபட்டாம்பூச்சிகளை கண்டதும் ஏனோ, அவன் மனம் சிறுபிள்ளையை மாறி அதை பிடித்திட ஏங்கியது....
புல்வெளியில் வெறும்காலுடன் நடந்தபடி, பட்டாம்பூச்சி ஒன்றினை அவன் எட்டி பிடித்திட முயன்றிட, அது அவனுக்கு போக்கு காட்டி பறந்த நொடி , ஆறடி உடலைக்கொண்ட ஆண்மகனின் நெஞ்சம், ஆறு வயது சிறுவனாய் மாறி போனது....
விடாமல் அப்பட்டாம்பூச்சியினை எட்டிப்பிடித்தவன், அதன் சிறுசிறகு படபடவென அவன் கைகளில் அடித்துக்கொண்டு, தன்னை விடுவிக்க முயல, ஒரு நொடி அதன் அவஸ்தையை ரசித்தவன், மறு நொடி அதை தன் கைசிறையிலிருந்து விடுவித்தான்....
அவன் விட்டவுடன் உயரே பறந்து சென்ற பட்டாம்பூச்சியை, மென்னைகையுடன் கண்டுரசித்தவன்.... அது சென்ற திசையை பார்க்கையில், ஒரு நொடி அசந்துபோனான்....
அவன் தேவதையே அவன் பரிசளித்த, உடையில் , தென்றலுடன் சேர்ந்து அவனை நோக்கி புன்சிரிப்புடன் நடந்துவர, வார்த்தை எதுவும் அவன் குரல்வளையில் இருந்து வெளிப்படவில்லை....
ஏற்கனவே, பட்டாம்பூச்சியால் மில்லிமீட்டர் அளவில் மெலிதாய் புன்னகையில் விரிந்த அவனிதழ், அவன் ஆருயிரின் வருகையினால் களிப்பில் சென்டிமீட்டர் அளவு விரிந்து, நேர்த்தியான வரிசையில் அமைந்துள்ள அவன் வெண்பற்களை பளிச்சென காட்டியது....
அவன் அருகில் அவள் வந்து நிற்க, இவன் மனமோ சந்தோஷத்தில் வானை தொட்டு, பூமியில் நின்றது.....
அவளே இவன் கையை பற்றிக்கொள்ள, ஒரு நொடி திகைத்த இவன், அவள் விரல்களுடன் தன் விரல்களை பிணைத்து, அவள் கையை தன் கைக்குள் பூட்டிக்கொண்டான்.... அவன் மனமெங்கும் அமைதி கலந்த இன்பம்
சூழ்ந்துகொண்டது....
அவன் அவள் கண்களை பார்க்க, அதில் காதல் மட்டுமே தெரிய, அவன் அவளை பார்த்து காதலாய் சிரித்தான், அவளும் பதிலுக்கு காதலை அவனுக்கு பரிமாறி சிரிக்க, அவனுக்கு ஆனந்தத்தில் துள்ளிகுதிக்க வேண்டுமென தோன்றியது....
பற்றியிருந்த அவள் கையை தன் வாயருகே, கொண்டு சென்று அவள் கையில் முத்தமிட்ட மறுநொடி, அவன் முகத்திலே ஒரு அடி விழுந்தது....
யாரென அடையாளமறியா நால்வர், வந்து நிற்க இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.... யார் இவர்கள் என யோசிக்கும் முன்பு அதில் இருவர், இவனை தாக்க துவங்கினர்....
அந்நால்வரை தவிர்த்து, ஐந்தாவதாய் ஒருவன், அனன்யாவை கைப்பற்றி இழுத்து செல்ல, அவனின் பிடியிலிருந்த அவளின் கை பிரிந்தது.......
அந்த ஐந்தாம் நபரின் முகம் அவனுக்கு தெரியவில்லை.....
அனுவின் கை தன் கையை பிரிந்தநொடி, தன் மனதில் வலியை உணர்ந்தான்.....
அனுவின் கையை பற்றியபோது களிப்பில் நொடியில் விண்ணைத்தொட்ட அவன் நேச உள்ளம், புதிதாய் பூத்த பூவொன்று, மறுகணமே கருகினால் எவ்வாறு இருக்குமோ, அவ்வாறு ஆனது ......
நொடியில் நிகழ்ந்த மாற்றத்தை ஏற்க மறுத்தது, அவன் மனது....
அவன், அவ்விருவரின் அடியையும் பெற்றுக்கொண்டு, அனன்யாவை பற்றியிருந்த கையை நீட்டியபடி, ஏங்கிய பார்வை அவளை பார்க்க....
அவள் கண்களில் நீர் தேங்கியிருந்தது...... அவன் தாக்கப்படுவதை விரும்பாத அனுவோ, அவனை நோக்கி செல்ல முயற்சிக்க , அந்த ஐந்தாம் நபர் அனுவின் முழங்கையை பற்றி, அவளை தடுத்தான் ....
இப்போது, யுவராஜிற்கு அந்த ஐந்தாம் நபரின் முகம், தெளிவாய் தெரிந்தது..... அது வேறு யாருமல்ல.... அவன் ஆருயிர் நண்பன் சித்தார்த்தே தான்....
யுவியை தாக்கி கொண்டிருந்த இருவரும் அசுரவேகமெடுத்து அவனை தாக்க, தாக்குதலை பொறுக்காத அவன், தரையில் வீழ்ந்தான்..... தரையில் வீழ்ந்தாலும்,யுவியின் கண்பார்வை தன் தேவதையின் கண்மணியை விட்டு அகலவில்லை.... அவன் தரையில் வீழ்ந்தும், வெறியடங்கா அவ்விருவரும் அவனை பேயடி அடிக்க,யுவியின் உடலெங்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டன..... அவன் வாயில் இருந்து உதிரம் வெளிவந்தது.....
அனுவின் கண்ணீரோ, நதிவெள்ளம் போல் உருவெடுத்து அவள் கன்னத்தையும் தாண்டி, கழுத்தை நிறைக்க, " ப்ளீஸ்..... அவனை விட்ருங்க.... அவனை அடிக்காதீங்க... என்னோட யுவியை விட்ருங்க..... சித்து ப்ளீஸ் யுவியை விட்டுற சொல்லு.... அவன் பாவம் " என அழுது கதறிய படி, அடிப்பவர்களிடமும், சித்துவிடமும் அனு மாறிமாறி கெஞ்ச.....
சித்துவோ விஷமசிரிப்பு ஒன்றை மட்டும் அனன்யாவிடம் உதிர்த்தான்....
யுவியை விடாது அவ்விருவரும் தாக்க, அனன்யாவின் கதறல் அதிகமானது.....
அனுவை, அவ்விடத்தைவிட்டு அவளின் முழங்கையை பற்றி இழுத்துக்கொண்டு சென்றான், சித்தார்த்.... யுவியை பார்த்து கதறிய வண்ணம் சித்து இழுத்த இழுப்பிற்கு சென்றாள், அனன்யா....
அடியை பெற்றுக்கொண்டுருந்த யுவிக்கோ , அவளின் இந்த பிரிவு நிரந்தரமானதாக தோன்றியது....
இனி என் டோரா இல்லா வாழ்வை தான் வாழவேண்டுமா என நினைக்கையிலே அவன் உள்ளம் கசந்தது....
அடியினால் ஏற்பட்ட வலியும், அவள் பிரிவினால் ஏற்பட்ட வலியும் அவன் நெஞ்சை பிளப்பதாய் தோன்றியது.......
.
.
.
"டோரா.... என்னைவிட்டு போகாத.... ப்ளீஸ் போகாதே... " என தூக்கத்தில் கத்தியவனை, "ட்ரிங்.... ட்ரிங்ங்ங் ... " என்ற அவனின் அலாரக்கடிகாரம் அவனை தூக்கத்திலிருந்து எழுப்பியது.....
கண்ணை திறந்தவன் சுவற்றை பார்க்க, காலை 5:30 மணியென அவன் அலாரக்கடிகாரம் காட்ட, தோன்றிய அனைத்தும் அதிகாலை கனவு என புரிந்துகொண்டான்....
படக்கென படுக்கையில் இருந்து, அலாரத்தை துண்டித்தான்....
ஏசி அறையிலும், யுவியின் முகத்தில் முத்துமுத்தாய் வியர்வை அரும்பியிருந்தது.....
நேற்றுமுழுதும் ஏதோதோ சொல்லி தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாலும், யுவியின் மனதோ அவன் முடிவை ஏற்கமறுத்து, பெரும்கவலையை சுமந்துகொண்டது.....
கனவே ஆகினும் அனன்யாவை பிரியவேண்டுமென நினைக்கையில், உள்ளத்தில் முள் ஒன்று குத்தி நின்று வலியை ஏற்படுத்துவதாய் உணர்ந்தான்....
அதற்கு தன் உயிர்த்தோழன் சித்துவே காரணம் என நினைக்கையில் யுவிக்கு பற்றிக்கொண்டு வந்தது.....
மரம்விட்டு மரம் தாவுவது குரங்கின் இயல்பு.... மனிதனின் மனமும் குரங்கை போன்றதே..... எப்பொழுது எப்படி மாறும் என்பதை எவராலும் கணிக்கவியலாது....
யுவியின் மனமும் நொடியில் மாறிப்போனது.....
ஏற்கனவே பாரத்தில் சிக்கி தவித்தவன், அதிகாலை கனவும் யுவியின் மனப்பாரத்தை மேலும் அதிகரிக்க, அவன் மனம,் வேதாளம் போன்று, மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டது....
"இல்ல.... நான் என் டோராவை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது.... அதைஎன்னால தாங்கிக்க முடியல.... கனவையே என்னால தாங்கிக்க முடியலை.... இதுல எங்க இருந்து நிஜத்துல விட்டு தரது..... தப்பு செய்ய பாத்தேன்..... எப்படி நான் இதை செய்ய நினச்சேன்.... நான் என் டோரா கூட தான் சேருவேன்... அவளை தான் கல்யாணம் செய்வேன்..... இதுக்கு எதிரா சித்து வந்தாலும், அவனையும் சும்மா விடமாட்டேன் " என கனவின் தாக்கத்தில் புலம்பியவன்,
அதிகாலை கனவு பலிக்குமென அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.... ஆனாலும் அதை அவன் நம்பியதே இல்லை.....
இருந்தாலும் ஏதோ ஒன்று சரியில்லை என யுவியின் உள்மனது அவனை எச்சரித்தது.அது என்னவென்பது மட்டும் அவனுக்கு விளங்கவில்லை.....
அவன் முகப்புத்தகத்தில், ஒரு ஆய்வு வெளியிட்டுள்ள பதிவு ஒன்று அவனுக்கு நியாபகம் வந்தது....
ஒருவர் தன் கனவில் வந்தால், அந்த நபர் தன்னை சந்திக்க விரும்புவதாய், அந்த ஆய்வு கூறுகிறது....
கனவு, ஆய்வு எதையும் அவன் நம்புவதில்லை தான் என்றாலும், அவன் மனம் இப்போதே தன் டோராவை பார்க்க வேண்டுமென சொல்லியது...
அனன்யாவிற்கு கைபேசியில் அழைக்க, யுவி தன் கைபேசியை பார்க்க அதில் 55 குறுஞ்செய்திகளும், 112 தவறிய அழைப்புகளும் அனன்யாவிடம் இருந்து வந்திருந்தன.....
"ச்ச.... பாவம் டோரா..... என்னால தான் எல்லாம்...... " என்றவன், தன் கைபேசியால் தன் நெற்றியை அடித்துக்கொண்டான்......
யுவி, அனன்யாவிற்கு கைபேசியில் முயல ... அழைப்பு ஏற்கப்படாமல் போகவே.... "பீ ரெடி.... ஐ ம் ஆன் தி வே " என்ற குறுஞ்செய்தியை அனுவிற்கு அனுப்பிவைத்தான்...
அவசரஅவசரமாக குளித்து கிளம்பியவன், தன் டோராவின் வீட்டை நோக்கி பயணமானான்.....
அதிகாலை என்பதால், வேலையாள் வந்து, யுவிக்கு கதவு திறந்துவிட,
அனன்யாவின் அறையை வேகமாக நெருங்கினான் யுவி .....
அனு தூங்காமல், சுவற்றில் சாய்ந்துஅமர்ந்தபடி, தன் தலையை முழங்காலில் சாய்த்தபடி, காலை கைகளால் கட்டிக்கொண்ட வண்ணம் அமர்ந்திருந்தாள்.....
அதை பார்த்த யுவிக்கு, மனதின் பாரம் மேலும் அதிகமானது.....
"அனு..... " என யுவி மெலிதாய், அவளருகில் சென்று யுவி அழைக்க, அனன்யா நிமிர்ந்தாள்..... அவள் கண்களும், கன்னங்களும் சிவந்திருந்தது, இரவு முழுதும் அவள் அழுதிருப்பதை யுவிக்கு, உணர்த்தியது....
அவளின் கோலத்தை கண்டதும், யுவிக்கு தன் மேலே கோபம் வந்தது..... தானே அவளின் நிலைக்கு காரணம் என யுவியின் மனம் தன்னையே குற்றம் சாட்டியது....
யுவியை கண்டதும் எழுந்த அனன்யா, "ஏன் யுவி.... போன நீ எடுக்கல... நான் எவ்ளோ பயந்து போய்ட்டேன்... தெரியுமா???..... " என கண்களில் கண்ணீரோடு விசும்ப.....
"சாரி... அனன்யா.... என் சிச்சுவேஷன் அப்படி... ப்ளீஸ்....அழாதே..... " என்ற யுவி, அவள் கன்னங்களில் வழிந்த கண்ணீரை தன் கையால் துடைத்துவிட்டு, அவளிடம் தன் கைக்குட்டையை நீட்ட.... அதை வாங்கிய அனன்யா, தன் கண்களை துடைத்து கொண்டாள்.....
அவள் கொஞ்சம் ஆசுவாசம் ஆனதும், "சரி கிளம்பலாம் அனு.... டைம் இல்ல.... பெங்களூர்ல என் கசின் வீடு இருக்கு... நீ அங்க போயிரு.... உனக்கு என் கசின் அட்ரஸ் மெசேஜ் பண்ணியிருக்கேன்.... நானே உன்னை ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணிறேன்..... வா போலாம் " என யுவி சொல்ல, அனு மறுபேச்சின்றி தன் துணிப்பையை எடுத்துக்கொண்டு, யுவியுடன் புறப்பட்டாள்....
யுவியும், அனுவும் வேகமாய் படிகளில் இறங்கி கீழ் வர, சரியாய் அங்கே வந்தான், சித்தார்த்....
"தெரியும்டா... நீ இந்த மாதிரி ஏதாச்சும் வேலை செய்வனு....." என சித்து நிதானத்துடன் கூடிய கோபத்துடன் யுவியை கேட்க....
யுவியோ, "வா அனு போலாம்.... " என்க...
சித்தார்த் அவர்களை இடைமறித்தான்.... "இங்க நான் ஒருத்தன் பேசிட்டு இருக்கேன் ...... நீங்க எனக்கென்னனு போய்ட்டு இருக்கீங்க??? " என யுவியையும், அனுவையும் முறைத்த சித்து, "அனு.... வா... நீ எங்கயும் போக கூடாது..... " என சித்து நிதானமாய் அனுவை அழைக்க, அனுவோ சித்துவின் பேச்சை காதில் வாங்காதவள் போல் நின்றுகொண்டிருந்தாள்.....
அனுவின் செய்கை சித்துவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்த,"வா... அனு.... " என கோபமாய் சொன்ன சித்து, அனுவின் கையை பற்ற முயற்சிக்க, அனுவோ சித்துவின் கையை உதறிவிட்டு, யுவியின் முழங்கையை தன் இரு உள்ளங்கைகளாலும் பற்றியபடி, யுவியின் பின்னால் பாதி மறைந்துகொண்டாள்....
அனுவின் செய்கை மேலும் சித்துவின் கோபத்தை தூண்ட, "அதெப்பெடிடா... இதுநாள் வரைக்கும் வில்லனா தெரிஞ்ச நீ... இன்னைக்கு தீடீர்னு ஹீரோ ஆகிட்ட.....நேத்துவரைக்கும் ஹீரோவா இருந்த நான் இன்னைக்கு வில்லனா??????? " என சிரித்தபடி சித்து யுவியை பார்த்து பேசினாலும், அவன் முகத்தில் கோபம் அப்பட்டமாய் தெரிந்தது.....
"அனு... நீ.... எங்கயும் போககூடாது... இங்க தான் இருக்கனும்.... புரிஞ்சுதா??? " என சித்து அனுவிடம் சினத்தில் கத்த....
அனுவின் பிடி, யுவராஜின் கையை மேலும் அழுத்தியது......
அனுவின் அழுத்தமே யுவிக்கு அனுவின் பயத்தை விளக்கியது....."சித்து நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல.... அனுவுக்கு கொஞ்சம் டைம் கொடு.... தீடீர் கல்யாணம்... அவளை போர்ஸ் பண்ற மாதிரி இருக்கு..... அதுமட்டுமில்ல அவ மனசுலயும் நீ இல்ல... அவ மனசுல வேற யாரோ இருக்காங்க..... சோ... டீசென்ட்டா விலகிடு... இப்போ அனுவ போகவி்டு....." என யுவி நிதானமாகவே சித்துவிடம் சொல்ல...
"ஒஹோஒ..... நான் அவ மனசுல இல்ல.. அப்டினு உனக்கு எப்படி தெரியும்.... நீ என்ன அவ மனசுக்கு வாயா???? நான் அவ மனசுல இல்லனு சொல்லிட்டு நீ அவ மனசுக்குள்ள போகபாக்குறியா?????....... " என கோபத்துடன் யுவியிடம் கத்திய சித்து,
அனுவிடம் திரும்பி.... "சொல்லு அனு..... நீ யாரையாச்சும் விரும்புரியா????? " என சித்து அமைதியாகவே கேட்க.....
அனு பதில் பேசாமல் தரையை பார்த்தபடி நின்றாள்....
"உன்கிட்ட தான் கேக்குறேன்..... சொல்லு... யாரையாச்சும் லவ் பண்ணுறியா???? " என சித்து, அனுவின் தோளை உலுக்கியபடி கேட்க,
அனு அதை ஆமோதிப்பதாய் தலையசைத்து, "ஆமா லவ் பண்றேன் " என நடுங்கிய குரலில் சொல்ல, யுவியின் மனதோ தூள்தூளாய் நொறுங்கியது..... சித்துவிற்கோ, கோபம் பன்மடங்கு பெருகியது.......
"யாரு... அது.... சொல்லு... அவன் பேர் என்ன???? " என அதே மாற கோபத்துடன்,அனுவின் தோளை மேலும் அழுத்தியபடி, சித்து கத்த..... அனுவின் உடல் நடுக்கம் கொண்டது.....
யுவிக்கு, தன் பெயரை அனு சொல்லிவிடமாட்டாளா... என்ற நப்பாசை ஏற்பட்டது...
அனு, ஏதோ சொல்ல வாயெடுக்கும் சமயம், சரியாக சித்துவின் கைபேசி ஒலிக்க, சித்து அவ்வழைப்பை பார்த்து, அமைதியாகி, அவ்விருவரையும் விட்டு, சிறிது தூரம் சென்று, அழைப்பை ஏற்று பேசிவிட்டு, அவர்களிடம் வந்தான்......
"இங்க பாரு அனு........ நீ யாரையும் லவ் பண்ணு.... பட்... என்னைத்தான் நீ மேரேஜ் பண்ணிக்கணும்..... நீ என்கூட இருக்குற நிம்மதியே எனக்கு போதும்..... வேற எதுவும் எனக்கு வேணாம் " என அனுவிடம் அமைதியாய் சொன்ன சித்து, அவளின் கைகளை பற்றியபடி, மாடிப்படிகளில் எற முயற்சிக்க,
" சித்து..... அனுவை விடு..... ஆன்ட்டி... இந்த சித்துவை பாருங்க.... என்ன பண்றான்னு.... " என சொல்லி, தேனுவை தேட.... அப்பொழுதே வீட்டில் யாரும் இல்லாததை கவனித்தான், யுவி "எல்லாரும் எங்க போனாங்க??? " என யோசிக்கலானான்...... யுவி...
"கையவிடு சித்து " என்ற அனுவின் குரல் யுவியின் யோசனையை கலைக்க.....
யுவி, சித்துவின் முகத்தில் அறைந்தான்.... சித்துவின் முகம் சிவக்க, சித்து யுவியை தாக்க துவங்கினான்.... அனுவோ யாரை தடுப்பது என தெரியாமல், "ப்ளீஸ்.... அடிச்சுக்காதீங்க " என சொல்லியபடி, இருவருக்கும் இடையில் சென்றாள்... ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி கொள்ள, யுவிக்கு தலையில் ரத்தம் வழிந்தது.... சித்துவிற்கும் சிராய்ப்புகள் ஏற்பட்டது.....
யுவி, தன் கார் சாவியை அனுவை நோக்கி எறிந்து, "அனு.... நீ இங்க இருந்து போ... என் காரை எடுத்துட்டு போ... " என கத்த, சித்து அவன் வாயிலே குத்தினான்.....
அனு அழுதபடியே அங்கேயே நிற்க,"போனு சொல்றேன்ல.... " என யுவி அடிவாங்கியபடியே அதட்டி கத்த, அனு கார் சாவியை எடுத்துக்கொண்டு ஓட துவங்கினாள்......
அனு ஓடுவதை பார்த்த சித்து, அனுவை தடுக்க முயல, சித்துவை யுவி தாக்க துவங்கினான்.....
"யுவி.... அனு.... போக கூடாது.... அனு... இங்க இருந்து போக கூடாது..... உனக்கு புரியலையா???? விடு என்னை..... " என சொன்னதையே திரும்ப சொல்லியபடி சித்து யுவியை தாக்க......
சித்துவும், யுவியும் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கி கொண்டனர்.....
.
.
.
அனுவின் கண்களில் இருந்து, கண்ணீர் வற்றாமல் வழிந்து, அவள் கன்னத்தை நனைத்தது....
அவள் ஒரு கையால், காரின் ஸ்டியரிங்கை பிடித்து, காரை இயக்கியும், மறுகையால் தன் கண்ணீரை துடைத்தபடியும் பயணமாகிக்கொண்டிருந்தாள்.....
அவள் கன்னங்களை துடைக்க, துடைக்க மீண்டும், மீண்டும் விழிநீர் வழிந்துகொண்டே இருந்தது.....
அழுது, அழுது அவள் முகம் உப்பி போய், கண்கள் சிவந்து இருந்தன.....
ஆம்... அனு..... தன் காதலை விட்டு தூரமாய் செல்கிறாள்..... சேர்ந்திடும் வாய்ப்பு இருந்தும், காதலை பிரியும் கட்டாயத்தில் உள்ளாள்.....யாரிடமும் சொல்லாமலே, வளர்த்து வந்த காதலது, தன் கனாளனை இன்றுவரை சேராமல் இருக்கிறதே..... என அவள் மனது வாடியது.....
எனக்காக என் காதலன் அங்கே, அடிவாங்கி கொண்டிருக்கையில், சுயநலமாய், அவனை தனியே விட்டுவந்ததை நினைத்து கண்ணீர் வடித்தாள்...
யுவி சித்துவை தாக்குவதும், சித்து யுவியவை தாக்குவதும் போன்ற காட்சிகள் அவள் மனக்கண்ணில் தோன்றி மறைந்தது.....
அன்று பிரான்சில், சித்து தன்னை தானே காயப்படுத்திக்கொண்ட காட்சி, அவள் நினைவில் வந்து அவளை மேலும் அச்சுறுத்தியது....
சித்து எதுவும் பைத்திகராதனமா பண்ணிட கூடாது... என அவளுள்ளம் பதைபதைத்தது....
கடவுளிடம் தன் காதலனுக்காய், பிராத்தனை செய்ய துவங்கினாள்.....
"கடவுளே..... அவனுக்கு ஒன்னும் ஆகிட கூடாது ..... என்னோட யுவிக்கு எதும் ஆகிட கூடாது..... என்னோட யுவராஜுக்கு எதுவும் ஆகிட கூடாது.... " என வாய்விட்டு சொல்லியபடி, இறைவனிடம் தன் காதலனுக்காய், மன்றாடினாள், அனன்யா.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro