சின்ட்ரெல்லா
அனன்யாவிடம் என் காதலை சொல்ல நான் காத்திருக்க, அவளை தொடர்ந்து தேனு ஆன்ட்டியும் வர, உடனே அவ்விடத்தில் இருந்து என் பைக்கை எடுத்து கொண்டு சென்றுவிட்டேன்.....
"ச்சை.... என்ன நான் ஒன்னு பிளான் பண்ணா அது ஒன்னு நடக்குது.... கடைசிவரை லவ்வ சொல்ல முடியலையே " என எனக்குள்ளே புலம்பிய படி, பைக்கை வீடு நோக்கி செலுத்திக்கொண்டிருந்தேன்.....
வீட்டிற்கு சென்றால் அங்கே சித்து பல்லை காட்டியபடி நின்று கடுப்பேற்றினான்...
ஏற்கனவே எரிச்சலில் இருந்த நான், "எதுக்குடா இப்போ டூத்பேஸ்ட் விளம்பரத்துல வர மாடல் மாதிரி பல்ல காட்டுற?? " என நான் கோபத்தை மறைத்து, அவனை வினவ....
"நீ தான மச்சி.... தேனு அத்தைகிட்ட சொன்ன மேட்ச் இருக்குனு....வா.... கிரௌண்ட்க்கு போலாம்... " என என்னை பேசவிடாமல் அழைத்து சென்றுவிட்டான்.....
கிரிக்கெட் விளையாட சென்றவுடன் அனைத்தையும் மறந்து விளையாடுவதில் என் முழுகவனமும் சென்றது....
விளையாடிக்கொண்டிருக்கையில் சித்துவின் அலைபேசி ஒலிக்க, அவன் தனியே பேச சென்றுவிட்டான்...
அவன் போவதை பார்த்த நான், மீண்டும் விளையாட்டில் கவனத்தை செலுத்த, என் அலைபேசி ஒலித்தது...
அப்பா தான் அழைத்திருந்தார்.... அழைப்பை ஏற்ற நான், "சொல்லுங்கப்பா.... " என்றேன்....
மறுமுனையில் அப்பா, " யுவி.... சித்தார்த்தோட அத்தை தேன்மொழி கால் பண்ணிருந்தாங்கடா......அவங்க பொண்ணுக்கு இன்னைக்கு பர்த்டேவாம்...... ஈவினிங் பார்ட்டி இருக்குனு. உன்னையும், என்னையும் வர சொன்னாங்கடா... யுவி வருவான், நான் பாரின்ல இருக்கறதுனால வரமுடியாதுனு சொல்லிட்டேன்... போய்ட்டு வந்துரு..... நான் வரதுக்கு கொஞ்சம் நாள் ஆகும்.... ஒழுங்கா சாப்டு... " என சொல்லி முடிக்க...
என் காதலை சொல்ல மீண்டும் வாய்ப்பாய் கருதிக்கொண்டேன்.... மனதிலே தேனு ஆன்ட்டிக்கு நன்றி தெரிவித்த நான், " சரிப்பா போறேன்.... அதெல்லாம் நான் ஒழுங்கா தான் சாப்பிடுறேன்.... நீங்க சீக்கிரம் இந்தியா வாங்க.... பாய்ப்பா " என்று அழைப்பை துண்டித்த நான், அதிக உற்சாகத்துடன் விளையாட , நானும், சித்துவும் மாறிமாறி அடித்த பால்ஸ் எல்லாம் சிக்ஸராய் அமைய எங்களின் அணி வெற்றிபெற்றது.....
நான் சித்துவுடன் பைக்கில் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தேன்.....
சித்து என்னிடம் "சீக்கிரம் போ....இல்லை அந்த அனு லூசு பேயாட ஆரம்பிச்சிருவா " என புலம்ப.....
அனு என்றவுடனேயே, என் இதழ்கள் விரிய, வண்டியின் வேகத்தை கூட்டினேன்..... ஏனென்றால் நானும் சீக்கிரம் கிளம்பி டோராவை காண வேண்டுமல்லவா......
ஒரு வளைவில் நாங்கள் திரும்பும்போது.... எதிரில் வேகமாக வந்த கார் எங்களை கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது......
நாங்கள் இருவருமே தூக்கி எறியப்பட்டோம்..... என் கண்கள் முழுவதும் மங்கலான இருள் படர்ந்தது..... தலையில் தாங்கமுடியா வலியை உணர்ந்தேன்..... என்னை சுற்றிலும் கூட்டமிருந்தது.... அவர்கள் யாரும் தெளிவாக என் கண்களுக்கு தெரியவில்லை..... அசைய கூட தெம்பில்லாமல் , அப்படியே கிடந்தேன்......
சிறிது நேரத்தில் யாரோ என்னை மடியில் ஏந்தினார்கள்.....
"யுவி... யுவி.... என்ன பாருடா" என அழுகையுடன் சித்து தான் என் கன்னத்தை தட்டினான்....
இதற்கு மேல் நான் பிழைக்கமாட்டேனோ என தோன்ற, சித்துவிடம், அனுவின் மீதான என் காதலை தெரிவிக்க எண்ணி, "நா... நான்..... "என தொடங்கியது மட்டுமே இறுதியாய் என் நினைவில் நின்றது......
அதன்பிறகு, நான் கண்விழிக்கையில் என் தலை, கை, கால்களில் கட்டுபோடப்பட்டிருந்தது.... உடல் முழுதும் வலியை உணர்ந்தேன்... உயிர்பிழைத்து வந்தது, நிம்மதி அளித்த போதிலும், மீண்டும் டோராவிடம் காதலை சொல்லும் வாய்ப்பை இழந்தது, சிறிது வருத்தமளித்தது.......
உள்ளே வந்த சித்து , "சாரி டா.... என்னால தான் உனக்கு இப்படி ஆச்சு.... நான் தான் உன்னைய வேகமா போக சொன்னேன்" என சோகமாய் சொல்லிட....
அவன் மீது எந்த தவறும் இல்லாத போதும் வருந்துவது எனக்கு பிடிக்கவில்லை.... அதனால் நான் பொய்யாய் முறைத்தபடி "உத விழும் "என்றேன்....
"கொஞ்ச நேரத்தில பயப்படவச்சிட்டியே " சித்து சொல்லிட..
நான் சிரித்துவிட்டு "நீ அனன்யா பர்த்டே பார்ட்டிக்கு போல?? " என வினவிட...
சித்துவின் தீப்பார்வையில் அமைதியானேன்....
இரு தினங்களாய் சித்து என் தாயை போல என்னை கவனித்துக்கொண்டான்..... அவன் அன்பில் நான் கரைந்துருகினேன்..... இவன் எதிர்பார்ப்பில்லா அன்பிற்கு எது வேண்டுமானாலும் செய்யலாம் என தோன்றியது, எனக்கு...
ஒரு நாள் சித்துவின் கைபேசி ஒலிக்க, அழைப்பை ஏற்று அவன் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தான்..... தீடிரென " அனுவ காணோமா ?????????!!!!" என பதற்றமானான்...
அவ்வார்த்தைகளை கேட்ட எனக்கு பதற்றம் பன்மடங்காய் பெருகியது......
நான் என்னவென்று சித்துவிடம் வினவ... அவன் அனன்யாவிடம் அலைபேசியில் பேசியதை சொல்ல, அனன்யா "சித்துவிடம் ஐ...... " என ஆரம்பித்த பேச்சு எனக்கு நெருடலை ஏற்படுத்த, நான் உள்ளூர நொறுங்கினேன்...... (பகுதி விரிசலில் உரையாடல் உள்ளது )
"அப்படியென்றால் அனன்யா சித்துவ தான் விரும்புறாளா????..... " என நினைத்து பார்க்கையிலே உலகம் இருண்டது போல் தோன்றியது......
எவ்வித உணர்ச்சியையும் நான் வெளிப்படுத்தாமல், "முதல போய் அனன்யாவை தேடு சித்து" என சொல்லிட
"ஆனா நீ.... "என சித்து முடிக்கும் முன்னரே
"என்னைய பாத்துக்க குக்கிங் அங்கிள் வந்துருவாங்க.... நீ போ" என அவனை கிளப்பினேன்...
கிளம்பும் முன் என்னிடம் "யுவி அனு கிடைச்சுருவாளா???" என சித்து வினவ...
"கண்டிப்பா கிடைச்சுருவா " என அவனுக்கு சொல்லுவது போல் எனக்கும் நான் நம்பிக்கையூட்டிக்கொண்டேன் ...
அவன் சென்றவுடன், மெத்தையில் சாய்ந்து கண்களை மூடி கண்ணீர் சிந்தினேன்......
"அனன்யாவுக்கு உன்ன பிடிக்கல.... சித்துவ தான் பிடிச்சிருக்கு..... அவங்க ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னா இருக்காங்க..... அவங்க தான் பொருத்தமான ஜோடி..... நீ பாதியில வந்தவன்..... " என என் மூளை என் மனதை வார்த்தைகளால் வதைத்தது......
மனம் வார்த்தைகளின்றி வலியால் துடித்தது..... கண்களில் கண்ணீர் நதி வெள்ளம் போல் பாய்ந்தது......
இந்த காதல்
எத்தனை விசித்திரமானது
என்னையும்
அழவைத்துவிட்டதே......
"சித்தார்த் என்னய விட நல்ல பையன்..... அவன் தான் டோராவுக்கு..... இல்ல... இல்ல..... அனுவுக்கு பொருத்தமான ஜோடி.... அனன்யா சந்தோசம் தான் என்னோட சந்தோசம் தான்..... " என என் ஒரு மனது யோசித்திட......
"இது உனக்கு நிஜமாவே சந்தோசம் தானா???? " என என் மறுமனம் கேட்க...... அதற்கு என் விழிநீரே பதிலாய் அமைந்தது.......
"அனன்யா கிடைச்சுட்டாளானு.... தெரியலையே....." என தவித்த நான், சித்துவிற்கு அழைக்க நினைத்த நொடி, அவனே அழைத்து அனன்யா கிடைத்துவிட்டதாக சொன்னான்..... அதன் பின்பு வலி நிறைந்த நெஞ்சில் சிறிது நிம்மதி பரவியது....
இனிமேல் அனன்யாவை மறக்க வேண்டுமென நினைக்கும் போதே நெஞ்சம் வலித்தது.....
"மறந்துதான் ஆகணும்..... அது தான் எல்லாருக்கும் நல்லது..... " என நான் நினைத்தேன்...........
உயிரில் முளைத்த என் முதல் காதல் தளிரை வெட்டிவிட துணிந்தேன்...... அதன் வேர் என் உயிர்முழுவதும் படர்ந்திருப்பதை அறியாமல்.....
அது எளிதான காரியம் அல்ல.... என எனக்கு அப்போது விளங்கவில்லை....
பின் சித்து என் வீட்டிற்கு வந்தான்.....
"வாடா நல்லவனே.... புயலை எப்படி சமாளிச்ச??? " என என் சோகத்தை மறைத்து, கேலியுடன் சித்துவை வினவினேன்....
அவன் வாடிய முகத்தை கண்ட நான், "என்னடா எதுவும் பிரச்சனையா?? " என வினவ...
அவன், அனன்யா வீட்டில் செய்த பிரச்சனை.... முருகன் அங்கிள் அடித்தது... அனன்யா டெல்லிக்கு தனியே படிக்க செல்வது என அனைத்தையும் தெரிவித்தான்...... அது எனக்கு சரி என்றே தோன்றியது.... அவளை மறக்க ஒரு வாய்ப்பாய் அமையும் என தோன்றியது....
ஆனால் பிரிவே காதலை வலுப்படுத்தும் என்பதை மறந்துவிட்டேன்.....
அனைத்தையும் பொறுமையாக கேட்ட நான் சித்துவிடம் " அவ செஞ்சது தப்பு தான்... என்ன தான் இருந்தாலும் அனன்யாவை அங்கிள் அடிச்சிருக்க கூடாது.... இப்படி ஒரு முடிவையும் அங்கிள் எடுத்துருக்க கூடாது.... அனன்யா பாவம் தான்.... " என்றதோடு நிறுத்திட...
"அதே தான் நானும் நினைக்குறேன் யுவி ;ஏதாச்சும் சொல்லி அவளை என்கூடவே இருக்க வைக்கணும் "என சித்து சபதமிட்டு....
"ஆமா என்ன திடீர்னு உன்னோட கரிசன சரால் அனன்யா மேல தூவுது??? " என குழப்பத்துடன் சித்து என்னை வினவ....
"ஐயோ.... கண்டுபிடிச்சுருவானோ.... சரி சமாளிப்போம்..... " என எண்ணிய நான்,
"ஏன்னா, அனன்யாவோட சந்தோசம் தானே என் சித்துவோட சந்தோசம் அதுக்குதான்" என அவன் நம்பும்படி அழுத்தமாய் பொய் கூறினேன்.....
மறுநாளே அனன்யா டெல்லி சென்றது சித்து மூலமாக தெரிந்துகொண்டேன்....
அவள் டெல்லி சென்றது, என்னைவிட்டு தூரமாய் சென்றுவிட்டது போல் தோன்றியது....
நானும், சித்துவும் ஒரே பொறியியல் கல்லூரியில் சேர்ந்தோம்.......
அனன்யா, அவள் குடும்பத்தோடு எவ்விதத்திலும் தொடர்புகொள்ளவில்லை.....
காதல் கொண்ட என் மனது, அவளை காணாமல், அவள் குரல் கேளாமல் தவித்துப்போனது.....
மறக்கமுயற்சித்து, மீண்டும் தோற்றேன், என் டோராவிடம்.........
நான் இங்கு தவிப்பது போலவே, டோராவும் சித்துவை விரும்பியிருந்தால், அவனை காண வந்திருக்க வேண்டுமே.... என என் மூளை யோசிக்க, என் மனதில் தெளிவு பிரிந்தது....
அனன்யா சித்தார்த்தை விரும்பவில்லை என ஒரு குருட்டு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டேன்....
ஆனாலும், ஒரு சிறு உறுத்தல் மனதை அரித்தது.... பெண்ணின் மனதை சரியாய் கணிக்க நான் ஒன்றும் கடவுள் இல்லையே......
டோராவின் நினைவு என்னை வாட்டும் நேரம், ஓவியங்களும், என் பியானோவும் தான் என்னுடைய பெரும் ஆறுதல்....
என்னுடைய டைரி அழும் அளவிற்கு, என் வலிமிக்க எழுத்துக்களால் அதை நிரப்பிவிடுவேன், டோராவின் நினைவுசுனாமி என்னை தாக்கும் போது.....
நாட்கள் ஒவ்வொன்றும் நரக யுகங்களாய் சென்றது என் டோராவை காணாமல் .... யாரும் அறியாமல் என் காதல் என் உயிரில் கலந்தது.....
இதற்கு மேல் முடியாதென யாருமறியாமல் ஒரு இரவில் பிளைட்டை பிடித்து டெல்லிக்கு கிளம்பினேன்....
ஆனாலும் இரவு நேரம் என்பதால், அந்த வாட்ச்மேன் என்னை, காலையில் வருமாறு அனுப்பினார்......
அப்போது நான் சோர்ந்து போய் திரும்பினேன்.... மீண்டும் அறிவு மணி அடிக்க, லேடீஸ் ஹாஸ்டல் சுவற்றில் ஏற பலமுறை குதித்து முயற்சித்தும், சுவற்றின் கைப்பிடி கூட என் கையை எட்டவில்லை....
இறுதியாக நான் குதிக்க, சுவற்றின் கைப்பிடியை பிடித்துகொண்டேன்.... தொங்கிய நிலையில் நான் சுவற்றில் ஏறுவதற்கு முயற்சி செய்துகொண்டு இருக்க, ஒரு தெருநாய் எனக்கு கீழே " லொள்.... லொள்.... " என குறைத்துக்கொண்டிருந்தது....
அதை கண்டும் காணாமல் நான் மீண்டும் முயற்சிக்க, கீழே " லொள்... லொள்...." சத்தம் பன்மையில் கேட்டது.....
நான் கீழே குனிந்து பார்க்க, பல தெருநாய்கள் "லொள்.... லொள்... " என குறைத்து கொண்டிருந்தது.......
"நாய் கூட என் லவ்க்கு வில்லனா வருதே.. " என விதியை நான் நொந்துகொள்ள, சுவற்றை நான் பற்றியிருந்த பிடி தளர்ந்து, கீழே விழுந்தேன்.....
சுற்றிலும் நாய்கள், அதன் கூறிய பற்களும், லொள்.... லொள்.... சத்தமும் உள்ளுக்குள் கிலியை உண்டு பண்ண , ஓட ஆரம்பித்தேன்.......
அந்த நாய்களும் என்னை விடாமல் துரத்த.... "டேய்.... யுவி.... ஊர்ல உள்ள எல்லா கொடிய மிருங்கங்களும் உன்ன நோக்கி தான் வருது...... ஒஒஒஒஒஓடு....... " என எனக்கு நானே சொல்லிக்கொண்டு ஓட்டமெடுத்தேன்...... அதிலும் ஒரு நாய் என்னை கடித்துவிட்டது.....
அந்த நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்தது....
தப்பித்த நான், நாய்கடிக்காக, சிகிச்சை எடுத்துக்கொண்டேன்..
அதிலிருந்து டெல்லி என்றாலே சிறிது கலக்கம் உண்டானது.....
டோராவிடம் பேச மாற்று வழிகள், சமூக வலைத்தளங்கள், என அனைத்தும் முயற்சி செய்தும், ஏமாற்றமே மிஞ்சியது....
எல்லாம் கடந்து போகும் என்பது போல..... என் காத்திருப்பு விடைபெறும் நாளும் வந்தது.....
அன்று அதிகாலையே அதிகமான உற்சாகத்துடன் எழுந்த நான், குளித்து முடித்து ஆங்காங்கே என் உடலில் படிந்த நீர்துளிகளை, துண்டினால் துடைத்தபடி..... என் முன்னால் உள்ள கண்ணாடியில், முகத்தை பார்த்தேன்.....
என் மலர்ந்த முகம், என் இதயராணியின் முகத்தை நினைவு கூற, என்னையறியாமல் அனிச்சையாக முகமானது, பிரகாசமாக, களிப்பில் மிளிர்ந்தது.....
அதே பிரகாசம் மாறா முகத்துடனே.... தலையை ஆட்டியபடி, துண்டினால் தன் தலையின் ஈரத்தை உணர்த்தினேன்.....
நெடுநாட்களுக்கு பிறகு, என்னில் பாதியான டோராவை காணப்போகிற நினைப்பு.....எல்லையில்லா களிப்பில் என்னை ஆழ்த்த, துவட்டிய துண்டினை என் கழுத்தில் மாலை என அணிந்து, என் அறையில் உள்ள மெத்தைமீதேறி துண்டினை அசைத்து ராகமே இல்லாமல்.... நடனமாட துவங்கினேன்....
ஆடி களைத்த நான், தன் அலமாரியை திறந்து.... ஒவ்வொரு சட்டையாய் எனக்கு போடுவதும், கழற்றுவதுமாய் என்னையே குழப்பிய வண்ணம், சட்டையை ஆராய்ந்து கொண்டிருந்தேன்....
இறுதியில் ஒரு சட்டை எனக்கு திருப்தியை தர மீண்டும் மகிழ்ச்சி என்னை ஆட்கொள்ள, சிரித்தவாறு அந்த சட்டையின் பொத்தான்களை மாட்டியபடி, சட்டையை முழங்கைக்கு மேலே மடித்துவிட்டேன்...
சிரித்தபடியே என் கையில் கைக்கடிகாரம் அணிந்த, நான் தலையை சீப்பினால் வாருவதுமாய், பின் கையினால் கலைப்பதுமாய்.... இப்படியே சில நிமிடங்களை கடத்திய நான், இறுதியில் எனக்கு திருப்தி அளிக்கும் வகையில் என் தலையை வாரிமுடித்ததேன்...
கண்ணாடியில் என் முகம் பார்த்தவன், அதில் என் தேவதை டோராவின் முகம் வெளிப்பட..... அவளின் நினைவலைகளில் விழுந்தேன்....
"ஐந்து வருசமாச்சு.... அவளை பாத்து.... இப்போ எப்படி இருப்பா.....இந்த ஐந்து வருசமா நான் நானாவே இல்ல.... அவளை பத்தி நினைக்காத நாளும், நேரமும் இல்லவே இல்ல..... எல்லாம் இருந்தும் அவள் இல்லாம எனக்கு, எதுவுமே பிடிக்கல....
"ஏன்னா.... அவள் தான் நான்.... அவள் இல்லாம நான் இல்லவே இல்ல.... இருக்கவும் மாட்டேன்... என் மனம் முழுசும் அவ மட்டும்தான் இருக்கா " என தனியே பேசியபடி சிறிது புன்னைகைத்தேன்......
"ஆனா, இன்னைக்கு அவ வரா....அவளை பாக்க தான் இப்போ கிளம்பிட்டு இருக்கேன்.... "
"என்னோட அனு.... என் தேவதை.... என்னோட அழகி.... என்னோட செல்ல கோபக்காரி..... இன்னைக்கு வரா, நான் அவளை பாக்க போரேன்..." என டோராவின் நினைவுகளில் மூழ்கிய என் கவனத்தை நிகழ் உலகிற்கு அழைத்து வந்தது.... என் கைபேசியின் குறுஞ்செய்தி ஒலி......
சித்து தான் அனுப்பியிருந்தான்...... "என்னால் இன்று ஆபீஸ் வர முடியாது..... அனுவை பாக்க போறேன்" என...
அக்குறுஞ்செய்தியினை பார்த்த என் கண்கள் & இதழ்களில் மென்னைகை பூக்க, என் கார் சாவியினை ஆள்காட்டிவிரலில் மாட்டி சுழற்றியபடியே...
ஒளிமிகுந்த முகத்துடன், விசிலடித்தவாறு வெளியில் புறப்பட்டேன் .... என் உயிரானவளைத் தேடி.....
ஏர்போட் நோக்கி நான் காரில் சென்று கொண்டிருக்கும் போது,
"டோராவ பாக்க போறேன்..... என்ன பேசுறது.... அவகிட்ட..... ஹாய் அனன்யா., எப்படி இருக்க.... இல்ல.... ஹாய் அனு.... எப்படி இருக்க.... படிப்பெல்லாம் எப்படி போச்சு..... " என பலவாறு எனக்குள்ளே ஒத்திகை பார்த்துக்கொண்டேன்.....
அவளை வரவேற்க நான் காத்திருக்க.....
டோரவாய் சென்றவள், மாடர்ன் உடையில், கண்களில் கூலிங் கிளாசுடன் மாடர்ன் சின்ட்ரெல்லாவாய் என் கண்களுக்கு தெரிந்தாள்.....
அவள் என்னை நோக்கி வர, என் இதயத்தின் துடிப்பு மாரத்தான் வேகத்தில் பன்மடங்காய் பெருகியது.....
டோரா என்னருகில் வந்து நிற்க..... என் வாயை திறந்தால் காற்று மட்டுமே வந்தது...
விடைபெறாத என் வார்த்தைகளால்
விடுபட்டு நிற்கிறது, என் காதல்
உந்தன் முன்பு...................
❤️❤️❤️❤️❤️❤️
Hai friends.....
Story epdi poguthu....
Enaku irukura tight schedule la thungura neratha thiyagam panni dan update type panni poduren......
Konjam enna encourage paneengana enakum elutha konjam interest varum......
Negative comments are most welcome......
Happy valentine's day❤️❤️❤️❤️❤️❤️❤️..
Catch u later on next update makkale 👋👋👋👋👋👋👋👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro