Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

சீண்டல்

மாலை மறைந்த இரவு நேரம்......
.
.
.
வானுயர்ந்த கட்டிடங்கள்,  மின் விளக்குகளால் ஒளிர்ந்த படி,  இரவு நேர தங்க உலகாய்  ஜொலித்தது பாரீஸ் நகரம்.....

ஈபிள் டவரில் இருந்து பாரீஸ்  நகரத்தின்   எல்லையில்லா அழகு  அவள் கண்களை  நிறைக்க, 

தேன்தென்றல் அவளை  வஞ்சமின்றி வருடி விட, மென்காற்றில் அவள் கூந்தல்  மிதமாய் அசைந்தாட , இதமாய் உணர்ந்தாள் அவள்....

அவனோ, "இன்னைக்கு எப்படியாச்சும் என் காதல சொல்லிறனும்...... கஜினி முகமது கூட என்கிட்ட தோத்துருவான்...  அத்தனை தடவை முயற்சி செஞ்சும்.... எல்லாமே வெற்றிகரமான தோல்வியா தான் முடியுது....." என உள்ளூர புலம்பி கொண்டவன்......

தன் காதலை வெளிப்படுத்த தகுந்த நேரத்தை நோக்கி காத்திருக்க  துவங்கினான்......

பாரிஸின் அழகை அனன்யா  ரசிக்க,  அவளின் எழிலை அவன் ரசித்தான்......

தன் திட்டத்தை செயல்படுத்த  நினைத்த அவன்,  அனன்யா கவனிக்கா வண்ணம் தன் கட்டைவிரலை தூக்கி அவன் ஏற்பாடு செய்திருந்த நபர்களிடம் சைகை  செய்ய.....

ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட, மெல்லிய "பியூரியசோ" பியானோ இசை  இசைக்கப்பட்டது......

இசையை கேட்டு  அனன்யா திரும்ப எத்தனிக்கும் போது,  அவன் வந்த சுவடே தெரியாமல், அனன்யா அறியாதவாறு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் அவன்.......

அனன்யா இசையிலயித்து  புன்முறுவலுடன் இசை வந்த திசையயை நோக்க, அங்கே ஐந்து வயதே மதிக்கதக்க  அழகிய பாரீஸ் நகரத்து பெண்குழந்தைகள்,  வரிசையாய் ஒரே மாதிரி வெள்ளை கவுனில் வரிசையாய் நின்றனர்.... அவர்களின் சிகையில்  உள்ள வெள்ளைநிற ரோஜாவின் மலர்வளையம்,  அவர்களின் கள்ளமில்லா கொள்ளை  அழகிற்கு மேலும் அழகு சேர்த்தது....

அவர்கள் அனைவரும் சிவப்பு நிற ரோஜா, மற்றும் ஒரு பரிசினை கையில் ஏந்தியவாறு நிற்க.....

அனன்யா தன்னையறியாமலே  அந்த பிஞ்சுகூட்டத்தை நெருங்கினாள்.....

வரிசையில் நின்ற முதல் சிறுமி அனன்யாவிடம் ரோஜாவை நீட்ட, அதனை மகிழ்வுடன் பெற்றுக்கொண்ட அனன்யா, அக்குழந்தையின் சின்ன கன்னத்தில் நீண்ட  மென்அழுத்தமுள்ள முத்தம்  ஒன்றை பதிலுக்கு வழங்கினாள், அனன்யா.....

அவள் முத்தத்தில் நெளிந்து சிரித்த அச்சிறுமி, அவளிடம் பரிசினை நீட்ட அனன்யா குழப்பமடைந்தாள்.....

அனன்யா வாங்காமலே தயங்கி நிற்க, அச்சிறுமி அனன்யாவின் கையை நோக்கி மீண்டும் பரிசை நீட்ட, அதை பெற்றுக்கொண்ட  அனன்யா மேலும் குழப்பமுற்றாள்...

குழப்பத்துடன் அவள் பரிசினை பிரிக்க அதில்  ,

" இ " என்ற தமிழ் எழுத்து இருந்தது..... "என்ன இ???? "  அவள் தனக்குள்ளே கேட்டு புலம்ப.....

இவ்வாறு ஒவ்வொரு சிறுமியும் ரோஜா மற்றும் பரிசினை தர, அனன்யாவின் குழப்பம் தீவிரமடைந்தது....  குழப்பம் நிறைந்த புன்முறுவலுடன் அவள் ஒவ்வொரு பரிசாய்,  வரிசையாய்  அச்சின்னச்சிறு மொட்டுகளிடம் இருந்து பெற்றுக்கொண்டாள்...

யார் இதை கொடுக்க சொல்லிருப்பாங்க என யோசித்த வண்ணமே அவள் பரிசினை பிரிக்க,  அதில் ஒவ்வொன்றிலும் தமிழ் எழுத்துக்களே இருந்தன.....  அவள் வரிசையாய் எழுத்துக்களை நினைவுகூற,

"இ"

"தை"

"அ "

"ழு "

"த் "

"த"

"வு "

"ம் "

"இதை அழுத்தவும் " என அவள் உதடுகள் உச்சரித்து ஒலிவடிவமிட.....

மீண்டும் ஒரு சிறுமி பரிசினை தர, அதை அனன்யா பிரிக்க, அதில் ஒரு சிறிய அளவிலான  ரிமோட் ஒன்று இருந்தது.....

அதை கையில் எடுத்து யோசித்தவள் அதனை அழுத்த,  அவ்விடத்தில் சிறிது இருள் சூழ்ந்தது... மின் விளக்குகள் அணைந்தன....

அவள் குழப்பமாய் கண்களை அங்கும் மிங்கும் அலையவிட......

தீடிரென தோன்றிய ஒளி, அவள் கண்களை கூச செய்தது.....

அவள் கையின் பின் புறத்தை வைத்து  முகத்தை மறைத்த அனன்யா, மீண்டும் ஒளி வந்த திசையினை நோக்க....

அங்கே ஒரே பெரிய அளவிலான எல்.இ.டி திரையில்  "அழுத்தவும் " என  தெரிந்தது.....

அனன்யா மீண்டும் ரிமோட்டை அழுத்த....  எண்ணிக்கை ஆரம்பமானது......

10...

9...

8...

7....

6...

5...

4...

3...

2...

1.....

எண்ணிக்கை தொடங்கியது முதல் முடியும் வரையிலும் அனன்யாவின்  குழப்பம் நிறைந்த ஆர்வம் விண்ணை தொட்டு மண்ணை முட்டியது.....

இருளில் ஒளிர்ந்த திரையை அவள் பார்க்க அதில் சிறுவயது அனன்யாவின் புகைப்படம், அவள் சித்துவுடன் பேசுவது, யுவியிடம் சண்டையிடுவது,  யுவியும் அனன்யாவும் நடனமாடுவது போன்ற காட்சிகள்,   அவர்கள் மூவரின் சிறுவயது சண்டை காட்சிகள், அவளின் கோபம், அழுகை, சிரிப்பு, 
பின் யுவி அனன்யாவை ரசிப்பதுபோன்றும், காதலை சொல்ல காத்திருந்தது, அலுவலகத்தில் அவளை யுவி ரசித்தது, சித்துவுக்கும், அனன்யாவிற்கும் நிச்சயம் ஆனபோது, யுவி கலங்கியது, அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை அறிந்தபோது யுவராஜ்  உடைந்தழுதது..... என தற்போதுள்ள நிலை வரையிலான ஓவியங்கள் திரையில் வரிசையாய் ஒளிர்ந்தன..... 

இதிலே யுவியின் வேலைதான் என்பதை தெரிந்துகொண்டாள், அனன்யா....

அவ்வோவியங்கள் நின்றபின் மீண்டும் எண்ணிக்கை ஆரம்பமானது....

10..

9..

8..

7..

6..

5..

4..

3..

2..

1..

திரையொளி மறைந்து மீண்டும் மின் விளக்கு வெளிச்சம் வந்தது....

அங்கே சிரித்த முகமாய் யுவராஜ் நின்றுகொண்டிருந்தான்....

அனன்யா ஒரு வித நிலையில் உணர்வற்று நிற்க....

அவள் முன் மண்டியிட்டவன்......

" எனக்கு ரொமான்டிக்காலாம் பேசவராது.... அனன்யா..... இந்த நிமிசத்துக்காக நான் பல நாளா காத்துட்டுஇருக்கேன்..... இப்போ கூட இது சக்ஸஸ் ஆகுமானு தெரில.... உன்ன பாத்தாலே,  ஹார்ட்பீட்  இன்கீரிஸ் ஆகுது.... பிபி இன்கீரிஸ் ஆகி டெம்போரரி ஹைப்பர்டென்ஷன் வந்துருது..... நின்னும் காத்துல பறந்து மிதக்குற மாதிரி இருக்கு.... வேற யார்கிட்டயும் நான் இப்படி பீல் பண்ணது இல்ல......  ஆறு வருஷம் அனன்யா.... ஆறு வருஷம்... ஆறு வருசமா யாருக்கும் தெரியாம உன்ன இங்க வச்சு பாத்துக்கிட்டேன்.... " என அவனின் வலதுகையால் அவனின் இதயத்தை சுட்டிக்காட்டியவன்......

இப்போ மட்டுமில்ல.... எப்பவும் நீ தான் அங்க இருப்ப.... இவ்ளோ நாள் அங்க வச்சு தாங்குன உன்ன என் கண்ணுக்குள்ள வச்சு தாங்கணும்னு நினைக்குறேன்.... " என்றவன் சிறு மூச்சை இழுத்துவிட்டு சிறு பதட்டத்துடன்,

"வில் யூ பி மை பெட்டெர்ஹாப்.....???  " என கேட்டவாறு, அவன் கையில் இருந்த சிறிய மோதிரம் வைக்கப்படும் பெட்டியை திறக்க....

அதில் ஒளிமிகுந்த பொன் திருமாங்கல்யம் ஒளிர்ந்தது.....

அனன்யா, சிரித்தபடி சம்மதமாய் ஆம் என தலையசைக்க,  யுவியின் களிப்பு எல்லையில்லா வான்வெளியை போல நீண்டது...

மகிழ்ச்சி மிகுதியில் அனன்யாவின் கைகளை பற்றிய யுவி, முத்தமிட முனைந்த  நேரம்.........

#
#
#

"என்ன செஞ்சுட்டு இருக்க யுவி ??? " என்ற அனன்யாவின் குரலில் கண்களை திறந்தான் யுவி......

அனன்யாவை பார்த்து  பேய்முழி விழித்தான் யுவி....

" ஏதோ கீழ குனிஞ்சு  பண்ணிட்டு இருந்தியே.... என்ன பண்ணிட்டு இருந்த???.... " அனன்யா வாய் மூடி சிரித்தபடி வினவ,

அப்போதே அவன் அறிவு சொன்னது.... கண்ட காட்சியனைத்தும்  விழிமுன் தோன்றிய கற்பனை பிம்பங்கள்  என ......

"ச்ச்ச....  எல்லாமே கனவா???  எனக்கு மட்டும் என் இப்படி நடக்குது "என  தன்னை நொந்தவன்......

"அது ஒன்னும் இல்ல அனன்யா.... ஏதோ கால கடிச்ச மாதிரி இருந்துச்சு.... அதான் என்னனு பாத்தேன்... " என சமாளித்து சிரித்தான் யுவி....

"நம்பிட்டேன்.... " என அனன்யா சொல்லவும்.....

மீண்டும் வழிந்து சிரித்து தன் 32  பற்களையும் பளிச்சென காட்டினான், யுவி....

அவனை விநோதமாய்  ஒரு நொடி நோக்கிய அனன்யா..... பாரீஸின்  அழகை கண்களால் பருக.....  யுவியோ அனன்யாவின் உணர்ச்சி வெளிப்பாட்டை கண்ணிலான காமிராவினால் மனதின் மெமரியில்  பொக்கிஷமாய் சேமித்தான்....

"ரொம்ப அழகா இருக்குல்ல யுவி.... " என அனன்யா கேட்க....

"ஆமா... ரொம்ப அழகா இருக்க.. " என யுவியின் உதடுகள்  தானாய் சொல்ல....

"என்ன சொன்ன ??? " என அனன்யா  அழுத்தி கேட்க.....

"ரொம்ப அழகா இருக்குல்ல பாரீஸ் " என மீண்டும் சமாளித்து சிரித்தான் யுவி....

"ரொம்ப கஷ்டம்டா யுவி....  எப்போ தான் லவ்வ  சொல்றது....??  காம்ப்ளிமென்ட்  கொடுத்தா கூட  காளி ஆகிடுறா... இவள வச்சுகுட்டு  என்பாடு  ரொம்ப திண்டாட்டம் தான்.... பேசமா பில்டப் கொடுக்காம இப்போ அவ நல்ல மூட்ல இருக்குறப்பயே நம்ம லவ்வ  சொல்லிருவோம்..... இதுக்கு மேல தாங்காது " என எண்ணிய யுவி...

"அனன்யா.... நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்..... " என சொல்ல...

"சொல்லு... கேட்டுக்குறேன்.... " என அனன்யா சொல்ல......

"இப்போல்லாம் என் ஹார்ட்பீட் ரொம்ப பாஸ்டா துடிக்குது..... " என யுவி சொல்ல....

" டாக்கிகார்டியாவா  உனக்கு????  டிரீட்மென்ட் எடுத்துக்கோ.. "  என அனன்யா சொல்ல.....

"டாக்கிகார்டியாவா????? அப்படினா என்ன???? " என யுவி கேட்க...

"ஹார்ட்பீட்  இன்கிரீஸ் ஆகுதுன்னு சொன்னீல.... அதைத்தான் சொன்னேன் " என அனன்யா சொல்ல.....

யுவி போலியாய் முறைக்க..... அனன்யா அவள் முத்துப்பற்களை காட்டி மென்மையாய்  சிரிக்க,  அவனும்  அவளுடன் இணைந்து சிரித்தான்......

"பிபி ஹைரேஞ்சுல போது..... " என மீண்டும் யுவி காதை சுற்றி மூக்கை தொடும் படி சொல்ல....

"பிபி... வந்தா  சுகரும் வந்துருமே...... யுவி அதுக்குள்ள உனக்கு வயசு ஆயிடுச்சா????? " என அனன்யா கேலிஇழைந்தோட   சிரித்தபடி கேட்க....

யுவி முறைக்க அமைதியானாள் அனன்யா.....

"அது..... அது.... " என யுவி ராகம் பாடிட....

அனன்யாவின் பொறுமை காற்றில் பறந்தது.....

"என்ன அது.... இதுனு....  வேகமா சொல்லு " என சிடுசிடுத்தாள் அனன்யா.....

"அது வந்து.... அனன்யா... நான்..... " என அவன் வார்த்தைகள் வஞ்சித்து  தயங்கி தயங்கி வெளிவர....  பழக்கப்பட்ட படபடப்பு அவனை பாடாய்படுத்தியது......

அனன்யாவின் கண்ணை யுவி நோக்க அதில் பெரும் தடுமாற்றம் கொண்டான்..... அவன் இதயத்தின் துடிப்பு உடலெங்கும் எதிரொலிப்பதை போன்று அவனுக்கு தோன்ற.....  வியர்வை அழையா விருந்தாளியாய் அவன் உள்ளங்கையை நிறைத்தது.....

அவளை பார்த்து சொல்ல தயங்கியவன் அவளுக்கு முதுகு காட்டி நின்று,  

"ஆமா.... அனன்யா.... எனக்கு டாக்கிகார்டியா, பிபி, சுகர் எல்லாமே இருக்கு.... அது வரதுக்கு காரணம் யாரு தெரியுமா???? நீ தான்..... நீ  மட்டும் தான்.... உன்ன பாக்குறப்போ.... உன்கிட்ட நான் வரும்போது தான்... எனக்கு  அட்ரீனலின் அதிகமா சுரக்குது.... அதான் டாக்கிகார்டியா,  ஹைபிபி, சுகர்.... இன்னும் என்ன என்னமோ வருது..... எல்லாத்துக்கும் ஒரே மருந்து நீ தான் அனன்யா..... எனக்கு இப்படிலாம் நடந்ததே இல்ல.... உன்ன பாக்குறப்போ தான் எல்லாமே மாறுது......  உனக்கு தெரியாது அனன்யா உன்னால என் மனசுக்குள்ள என்ன என்ன மாற்றம், போராட்டம் நடுக்குதுனு ....  முடியல அனன்யா..... ஆறு வருசமா என் காதல யார்கிட்டயும் சொல்லவும் முடியாம, மறக்கவும் முடியாம..... விடவும் முடியாம... தொடவும் முடியாம..... ரொம்ப வலிக்குது... அனன்யா..... " என சொல்லும்போதே யுவியின் கண்களில் நீர் சுரந்தது....

அதை துடைத்து, தன்னை நிதானித்தவன்..... "ஆனா... இன்னைக்கு எல்லாத்துக்கும் ஒரு முடிவு தெரிஞ்சு ஆகணும் அனன்யா...... நீ தான்... நீ தான்...... நீ மட்டும் தான்.... என் மனசுகுள்ள  கேப்பே  இல்லாம  நிறைஞ்சு இருக்க..... இப்போகூட  இது எனக்கு  கிடைக்குமான்னு தெரில...  உன்னோட நிலைமை எனக்கு நல்லா புரியுது...... ஆனா என்னால இதுக்கு மேல இந்த பாரத்தை தாங்கமுடியாது.... அதான் உன்கிட்ட எல்லாத்தையும் கொட்டிட்டேன்.... " என்றவன்,

தான் கையில் இருந்த சிறிய மோதிரம் வைக்கும் பெட்டியை திறந்தவன்,

"வில் யூ பி மைன் ஃபார்எவர்?????? " என்ற சொல்லிவிட்டு,  திருமாங்கல்யத்தை அனுவின் முன் நீட்டியபடி, திரும்பிய யுவியின் கண்கள் அகல விரிந்தது..... 

ஏனெனில் அனன்யா அங்கில்லை.....

ரத்தமென  கண்கள் சிவக்க, ரவுத்திரத்தை கண்களில் தேக்கி வெடிக்கவிருக்கும்  எரிமலையாய் யுவியை பார்வையால் பொசுக்கியபடி,  நின்றிருந்தான், சித்தார்த்.....

யுவியையும், அவன் கையில் இருந்த திருமாங்கல்யத்தையும் கண்ட  சித்தார்த்தின் கண்கள்  நெருப்பில்லாமலே பற்றி, தீக்கனலை கக்கியது.....

சித்தார்த்தின் உடல்மொழி மூலமே அவன் அனைத்தையும் கேட்டுவிட்டான் என்று அறிந்த யுவராஜ் சங்கடமாய் நிற்க.....

சித்தார்த் யுவராஜை எந்நேரமும் தாக்குவதற்கு தயாராய் நிற்க......

சித்தார்த் மற்றும் யுவராஜிற்கு இடையில் நடந்து வரும் பனிப்போர்,  மூன்றாம் உலகப்போராய் மாறுவதற்கான அறிகுறிகள், தெள்ளதெளிவாய் புலப்பட்டன......
.
.
.
.

**********************



Hi friends....

Very  very Sorry for the delay.......

Ithu 3rd teaser of the story friends... Update illapa...

Next update is on the way.....

Catch u later on next update makkale 👋👋👋👋👋

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro