சொக்கி போனது மனசு
"என்ன தான் கரப்பான் காலை சுத்தி வந்தாலும், கையிலே கிடைக்காத பட்டாம்பூச்சிக்கு தான் மனசு ஆசை படுமாம்... " என கிஷோர் அனுவை மறைமுகமாய் தாக்க,
அனு கோபத்துடன், "நீ தான்டா சரியான அரிப்பூச்சி..... என் சித்துவையா கரப்பான்பூச்சினு சொல்லுற ......தத்துவம்னு மனுஷனை கொல்லாத.... " என அனு கிஷோரிடம் சொல்லவும்,
கதவை திறந்து ஒரு நபர் உள்வரவும் சரியாய் இருந்தது....
அந்நபரை பார்த்த அனுவின் கண்களில் மகிழ்ச்சி மின்னியது...
பார்ப்பதற்கு சிறிது, அனு போன்றே இருந்தாள், அவள்.....கண்கள், புருவம் மட்டுமே மாறுப்பட்டன..... மற்றபடி, அனுவிற்கும், அவளுக்கும் சில வேற்றுமைகளே தென்பட்டன.....
"ஹே.... சுப்ரியா.... வா... வா.... " என அனு அழைக்க...
"அதெப்படி.... என்னை மட்டும் உனக்கு அடையாளம் தெரியல..... இவளை மட்டும் தெரியுது.....????? " என சிறிது கோபத்துடன் கிஷோர் அனுவிடம் கேட்க.....
"நான் ஒன்னும் உன்ன மாதிரி இல்லை..... டெய்லி அவ கூட சாட் பண்ணுவேன்.... இப்போவும் நாங்க டச் ல இருக்கோம்.... " என கிஷோரிடம் தன் இதழை சுளித்து சொல்லிய சுப்ரியா, அனுவை பக்கவாட்டில் கட்டிக்கொண்டாள்.....
"ஏன்டி???? பாத்து வண்டிய ஓட்டவேண்டியது தானே.... இப்போ பாரு... ரொம்ப வலிக்குதாடி????? " என சுப்ரியா அக்கறையுடன் கேட்க, அனு இல்லையென தலையசைத்து, "லைட்டா வலிக்குது "என்றாள்.....
"எப்படி இருக்க சுப்ரியா???? ஆஆமா..... உனக்கு எப்படி நான் இங்க இருக்கேனு தெரியும்??????????? " என சந்தேகமாய் கேட்க.....
"நான் நல்லா இருக்கேன்...... அது இந்தா இருக்கானே.... இந்த நல்லவன் தான் சொன்னான்.... " என சுப்ரியா கிஷோரை கை காட்ட.....
அனுவின் பார்வை கண்ணை சுருக்கியபடி, கிஷோரிடம் திரும்பியது.... "அப்படினா???? நீங்க ரெண்டு பேரும்????????? !!!!!!!!......." என அனு கிஷோர் மற்றும் சுப்ரியாவை பார்த்து கேட்க....
கிஷோர் இரு கண்ணையும் சேர்த்து சிமிட்டி, ஆம் என சிரித்தபடி, தலையை ஆட்டி பதில் சொல்ல....
அனு, தன் படுக்கையில் இருந்த தலையணையை கிஷோரை நோக்கி வீச, கிஷோர் அதை சரியாக பிடித்தான்....
"இவ்ளோ நேரம் உன் லவ் ஸ்டோரி..... சொல்லு.... உன் லவ் ஸ்டோரி சொல்லுன்னு என்கிட்டே கேட்டுட்டு..... நீ உன் லவ்வை மறச்சுட்ட..... " என அனு பொய்யாய் கோபிக்க,
"அதான்... இப்போ தெரிஞ்சுருச்சுல... எதுக்கு இந்த வெட்டி சீன்???? " என சுப்ரியா அனுவின் காலை வார....
"சரி... சரி... எப்படியோ போங்க...நல்லா இருந்தா சரி தான்..... " என அனு பொதுவாய் சமாளிக்க.....
"சரி உடம்ப பாத்துகோ....உங்க வீட்ல இன்பார்ம் பண்ணியாச்சு.... வந்துட்டே இருக்காங்க.... எனக்கு ஆபிஸ்க்கு லேட் ஆச்சு.... ஈவினிங் வரேன்..... பாய் அனு... பாய் கிஷோர் " என சொல்லிய சுப்ரியா கிஷோர், அனுவிடம் விடைபெற்றுக்கொண்டாள்...
சுப்ரியா செல்லவும், கிஷோர் மீண்டும் அனுவிடம் திரும்பினான்.....
'சரி... அப்புறம் என்னாச்சு.. வேற யாரையும் கரெக்ட் பண்ணிட்டியா??? " என கிஷோர் கேட்க...
"ம்ம்ம்கூம்... இங்க ஒன்னையே எப்படி வழிக்கு கொண்டுவரதுனு தெரியல..... இதுல நீ வேற.... வெந்த புண்ணுல வேல பாச்சுற... " என அனு புலம்ப....
"சரி... புலம்பாம சொல்லு " என கிஷோர் ஊக்குவிக்க...
"அப்புறம்.... கொஞ்சநாள் எதுலயும் பிடிப்பே இல்லாம போச்சு....மண்ணு மாதிரி வெறுமையா போச்சு.... அடுத்தவளோட பொருளுக்கு ஆசை படக்கூடாதுனு தெரிஞ்சாலும், யுவியை மறக்க என்னால முடியல....
யுவி.... மை பர்ஸ்ட் லவ்..... நினைக்குற அளவு, மறக்குறது அவ்ளோ ஈசி இல்லை....
எங்க போனாலும், யாரைப்பார்த்தாலும் அவங்க ஆக்ட்டிவிட்டிஸ் மூலமாவோ, இல்லை இன்டேரக்டவோ.... எப்படியோ..., யாராவது ஒருத்தராச்சும், எனக்கு யுவிய நியாபகம் படுத்த.....
மனசு ஓரமா கொஞ்சம் கொஞ்சமா சோகம் சேர ஆரம்பிச்சது...... நாள் ஆக ஆக சோகம் பாரமாச்சு....
பாரம் தாங்காம, தினமும் அவன் ப்ரொபைல் பார்த்து அழுதுட்டு இருந்தேன்.....
முளைக்குறது முன்னாடியே என் காதல் காணாம போச்சு.... நானே அதை ஒளிச்சுவச்சு என்னை நானே ஏமாத்திக்கிட்டேன்.....
அவனை கண்டிப்பா மறந்துறணும் முடிவு எடுத்தேன்.... பாட்டு, டான்ஸ், ஸ்டடீஸ்னு என்னை நானே பிஸியா வச்சுக்கிட்டாலும், மூளைல ஒரு ஓரத்துல அவனோட நியாபகம் இருந்துட்டே தான் இருந்துச்சு.... அதை என்னால தடுக்கவும் முடியல....மறக்கவும் முடியல....
மொத்தத்துல ஒரே மாதிரி மனசளவுல கொலாப்ஸ் ஆகிட்டேன்.... இப்படியே ஒரு குழப்பத்தோடு ஒன் இயர் ஓடிப்போச்சு......
அந்த ஒன் இயர்ல லைட்டா ஸ்ட்ரெஸ் ஆகிருச்சு..... மறக்க ட்ரை பண்ணேன்... ட்ரை பண்ணேன்..... ட்ரை பண்ணிகிட்டே இருந்தேன்..... கடைசிவரை ட்ரை மட்டும் தான் என்னால பண்ண முடிஞ்சதே தவிர, மறக்க முடியவேயில்லை.....
நானே இப்படி ஒரு சிச்சுவேஷன்ல மாட்டிக்கிட்டேனா.... அந்த நேரம் பார்த்து, வீட்ல யாராச்சும் என் நம்பர் கண்டுபிடிச்சு கால் பண்ணுவாங்க.... என்ன பண்றதுனு தெரியாம பிரஸ்டரேஷன்ல , கால் பண்றவங்கள கத்தியே காய்ச்சி எடுத்துருவேன்.....
கிருஷ்ணாகிட்ட மட்டும் எப்பவாச்சும் போன்ல பேசுவேன்..... அவனுக்கும், வாணிக்கும் கல்யாணம்னு சொன்னான்... ரொம்ப ஹாப்பியா இருந்துச்சு.... எக்ஸாம் முடிஞ்சதும் ஊருக்கு போனும்னு டிசைட் பண்ணிட்டேன்....
எப்படியோ ஒரு வழியா என் படிப்பை முடிச்சுட்டு, ஊருக்கு வந்தேன்.... எல்லாருக்கும் சர்ப்ரைஸ் தரலாம்னு பிலைட் டைம் லேட்டா சொன்னேன்....
பிளைட்ல இருந்து கீழ இறங்கி பார்த்தா, எனக்கு ஒரு சர்ப்ரைஸ்..... யார மறக்கணும்னு நினைக்குறேனோ, அவனே வந்து நிக்குறான்.... யுவி என்னை பார்க்கல.... நான் அவனை பர்ஸ்டே கவனிச்சுட்டேன்.....
"கைல ரோஸ் பொக்கே வச்சுட்டு.... வைட் ஷர்ட், ப்ளூ ஜீன்ஸ் போட்டுருந்தான்.... அவன் ஹேர்லாம் காத்துல பறக்க..... என் மனசு தரைல இருந்து பறக்க ஆரம்பிச்சுருச்சு..
யுவி அவ்ளோ அழகு அப்படிலாம் பொய் சொல்லமாட்டேன்..... ஏனோ எனக்குள்ள இருக்குற லவ் அவனை மட்டும் தான் என் கண்ணுக்கு அழகா காட்டுதுனு சொல்லலாம்.....
லூசு மாதிரி தனியா சிரிச்சுட்டு இருந்தான்.... சிரிப்புல கொஞ்சம் விழுந்துட்டேன்..... அவனை மறக்கணும்னு எடுத்த முடிவெல்லாம், அவனை நேர்ல பார்த்த ஒரு நொடி, இருந்த இடம் தெரியாம காணாம போச்சு.....
அவனை ஓடிப்போய் கட்டிபிடிச்சுக்கணும் போல இருந்துச்சு..... அவன் காதை கடிச்சு , ஐ லவ் யூ சோ மச்ச்னு சொல்லணும் போல இருந்துச்சு.....
அப்போதான் யுவியோட லவ்வர் நியாபகம் வந்துச்சு....பால் மாதிரி பொங்குன என் காதலை, யுவியோட லவ்வர்ன்ற தண்ணி தணிச்சுவிட்ருச்சு .......
கோபமா வந்துச்சு.... அவன் கிடைக்கலையேனு ஒரு ஆத்திரம்.....
அவனை பார்த்தா, மனசு தடுமாறிடுமோனு ஒரு பயம் வேற.... யுவியை முறைச்சுட்டே போய்ட்டேன்.....
யுவியும் என் பின்னாடி வரல..... எனக்கு ஒரே டிசாப்பாயின்மெண்ட்டா போச்சு....
எனக்கு தெரியும்... அவன் எனக்காக வரலன்னு..... அவன் ஆருயிர் காதலிக்காக வந்துருப்பானு தோணுச்சு......
எனக்கு கண்ணு கலங்கிருச்சு...... வேகமா ஒரு கேப் புக் பண்ணி வீட்டுக்கு போய்ட்டேன்"என சொல்லும் போதே, அனுவின் கண்களில் நீர் தேங்கியது.......
"ஹே... போதும் விடு.... அழாத....இதுக்கு மேல எதுவும் நீ சொல்ல வேணாம்.... " என கிஷோர் சொல்ல....
"இல்லை... நான் இன்னைக்கு எல்லாத்தையும் வெளிய கொட்டணும்..... மனசுக்குள்ளவே வச்சுட்டு என்னால முடியல...... " என சொல்லிய அனு தன் கலங்கிய கண்களை ஒரு கையால் துடைத்து, மீண்டும் தொடர்ந்தாள்....
"கூலிங் கிளாஸ், மேக் அப் போட்டு, அழுத முகத்தை சரி செஞ்சுகிட்டு, வீட்டுக்கு போய்ட்டேன்.... அங்க போனா, அங்கேயும் அந்த யுவி எனக்கு முன்னாடி இருக்கான்...." இவன் எப்படி இவ்ளோ சீக்கிரம் வந்தான்???? நமக்கு முன்னாடி!!!" அப்படினு நினச்சுகிட்டே என் பேமிலிகிட்ட போனேன்.....
எல்லாரும் அங்க இருந்தாலும், அம்மா தான் என் கண்ணுக்கு பர்ஸ்ட் தெரிஞ்சாங்க...
ஓடியே போய், அம்மாவை ஹக் பண்ணவும், தானா கண்ணு கலங்கிருச்சு.... அம்மா என்னை நெத்தில கிஸ் பண்ணவும், ஏதோ உள்ள செஞ்சுச்சு....அப்போ தான் மனசு கொஞ்சம் அமைதி ஆச்சு.....
அப்புறம் எல்லார்கிட்டேயும் பார்மல பேசிட்டு, அப்பாவையும், சித்துவையும் அவாய்ட் பண்ணிட்டேன்.....
யுவினு ஒருத்தன் அங்க இல்லாத மாதிரி, எனக்கு நானே சொல்லிட்டு மேல என் ரூமுக்கு போய்ட்டேன்....
அப்புறம் சித்து வந்து தானா பேசவும், என் ஈகோவை விட்டுட்டு நானும் பேசிட்டேன்.... எல்லாம் நார்மலா ஆகிடுச்சு...
நைட்.. சாப்பிடும் போது, சித்து நெக்ஸ்ட் என்ன பண்ண போறேன்னு கேட்டான்... நான் எங்கவாச்சும் இன்டெர்ன்ஷிப் பண்ணபோறேன்னு சொன்னேன்....
ஆனா, ராம் மாமா, சித்து-யுவி கம்பெனில வேலை பார்க்க சொன்னவுடனே, எனக்கு யுவி நியாபகம் வந்துருச்சு....வேணாம் மாமா, அது சரி வராதுன்னு சொல்லிட்டேன்....
ஆனா, எங்கப்பா ஹிட்லர் இருக்காரே, எங்க அடிச்சா, நான் விழுவேனோ, அங்கேயே அடிச்சுட்டாரு.... என்னால சமாளிக்க முடியாதுனு சொல்லிட்டாரு.....
ஆனா, நான் என்னால முடியும்னு ப்ரூப் பண்ண, சித்து- யுவி ஆபீஸ்க்கு போக ஒத்துக்கிட்டேன்.....
ஆபிஸ் போன உடனே நான் யுவியை கண்டுக்கவே இல்லை..... அவனை வேற யாருக்கோ சொந்தமா என்னால பார்க்கவே முடியல....
யுவியை பார்குறப்போலாம் , கண்ணு முன்னாடி என்னோட காதல்க்கு கைகால் முளைச்சு சுத்திட்டு இருக்கு... ஆனா அது எனக்கு இல்லையேன்னு பீலிங்கா இருக்கும்...... கண்ணு கலங்கும்.... சமாளிச்சு ஆபிஸ்ல சுத்திட்டு இருந்தேன்.....
யாரு யுவியோட லவ்வர்....??? இது தான் அப்போ என் மண்டைக்குள்ள ஓடிட்டிட்டே இருந்துச்சு...! யார்கிட்ட கேக்குறது?????... இந்த கேள்வி மனசை உறுத்துனாலும், நான் யுவி பார்க்காதப்போ , அவனை சைட் அடிக்குறதை மிஸ் பண்ணவே இல்லை......
சரி, யுவி தான் நமக்கு கொடுத்து வைக்கல..... காசா, பணமா?? அட்லீஸ்ட் சைட் அடிச்சாச்சும் என் மனசை தேத்திக்கிட்டேன்.....
நான் பாக்குறப்போலாம் அவன் லூசு மாதிரி தனியா சிரிச்சுட்டு இருப்பான்..... அவன் இப்படி தனியா சிரிக்கிறானே.... ஆனா யாரோ ஒருதிக்குனு நினைக்கும் போதே, என் உடம்பே பத்தி எரியும்..... பட் இருந்தாலும், எனக்கு ஒரு டவுட் வந்துருச்சு.... " என அனு நிறுத்த.....
"என்ன டவுட்??? " என கிஷோர் கேட்க.....
"அவன் லவ் பண்ற பொண்ணு ஏன் நானா இருக்க கூடாதுனுன்ற டவுட் தான்.... " என அனு சொல்ல..
"அதெப்படி சொல்லுற???? யுவி ப்ரொபோஸ் பண்ணனான????? " என, கிஷோர் ஆர்வமாய் கேட்க...
ம்ம்ம்கூம்.... அவன் அப்படியே பண்ணிட்டாலும்..... சொல்லுறேன்... இரு... அவன் பாக்குறது... சிரிக்குறது... எல்லாமே எனக்குன்னு தோணுச்சு.....
நான் எங்க போனாலும், என்பின்னாடியே சுத்திட்டு இருந்தான்.... யுவியே வந்து என்கிட்ட பேசுனான்.... இல்லை பேசுற சான்ஸ உருவாக்கிக்கிட்டான்...
"அவன் பார்ப்பது
எனக்கு தெரியும்........
அவன் ரசிக்க
நான் காத்து
நிற்பேன்.......,,,, !!!!"
இதெல்லாம் பார்க்கும் போது, ஒன்னு தெளிவா புரிஞ்சது.. அவன் லவ் பண்ணுற பொண்ணு நான்தான்னு....
யுவியோட ஆக்ட்டிவிட்டிஸ்லாம் எனக்கு ஹாப்பியா இருந்தாலும், நான் கண்டுக்கவே இல்லை.....
எவ்ளோ முடியுமோ, அவ்ளோ யுவியை இக்னோர் பண்ணேன்.... சித்துகூட சுத்திட்டு இருந்தேன்... நானும், சித்துவும் எப்பவும் போற இடதுக்குலாம் போய் நல்லா என்ஜாய் பண்ணோம்.....
"யுவியா வந்து வாய் திறந்து சொல்லட்டும்.... அப்புறம் இருக்கு அந்த ராஸ்கல்க்கு.... எத்தனை நாள் அவன் எனக்கு இல்லைனு அழுத்துருப்பேன்... எல்லாத்துக்கும் சேர்த்து, இன்ட்ரஸ்ட்டோட இருக்கு அந்த லூசுக்கு " அப்படி நினச்சு, கிருஷ்ணா - வாணி எங்கேஜ்மெண்ட்ல கொஞ்சம் பங்க்ஷன் மூட்க்கு போய்ட்டேன்.....
அன்னைக்கு ஒரு நாள்... கிருஷ்ணா எங்கேஜ்மெண்ட்க்கு ரெண்டு நாள் முன்னாடி.... ஆபிஸ்ல, நிறையா ஒர்க்.... சித்து சீக்கிரம் கிளம்பிட்டான் ...
நான், யுவி, அப்புறம் கொஞ்ச ஸ்டாப் மட்டும் தான் ஒர்க் பண்ணிட்டு இருந்தோம்....
நான் என் ஒர்க்கை முடிச்சுட்டு,டயர்ட் இருந்துச்சா,அதுனால, என் டெஸ்க்ல சாஞ்சு, என் லெப்ட் ஹாண்ட்ல என் பேசை சப்போர்ட் பண்ணிட்டு யுவியை , கிளாஸ் வால் வழியா பார்த்தேன்.....
யுவி, சீரியசா லேப்ல ஒர்க் பண்ணிட்டு இருந்தான்.... நான் அவன் முகத்தை அளவெடுக்க ஆரம்பிச்சுட்டேன்.....
அவன் முடிலாம் காத்துல பறந்துச்சு.... அந்த காத்து, என்னை தாக்குற மாதிரி இருக்க, என் முடியும் காத்துல பறந்துச்சு...
என் லிப்ஸ் தானாவே சிரிச்சு, என் பல்லையெல்லாம் காட்டுன மாதிரி, ரொம்பவே அப்பட்டமா அவன் முகத்தை பார்த்துட்டு இருந்தேன்..... டக்குனு அவன் பார்வை, என் மேல விழுந்துருச்சு... எனக்கு கொஞ்சம் பயமாகிடுச்சு....
என் சிரிப்பு மறைஞ்சு போச்சு.... ஆனா யுவி க்ளோஸ் அப் விளம்பரத்துல வர மாதிரி, என்னை பார்த்து இஇ னு சிரிச்சான் பாரு......
அது தான்.... அந்த சிரிப்பு தான்.... , ஒரு செகண்ட், அப்படியே என் மனசு சொக்கி போச்சு......
ஏதோ ஒரு பரவசம் உள்ளுக்குள்ள பரவுச்சு..... எவ்ளோ கண்ட்ரோல் பண்ணியும் முடியாம சிரிப்பு தானா வர , நானும் அப்படியே சின்னதா சிரிச்சுட்டேன்....
அப்புறம் யுவி, அவன் வேலைய பார்க்க, நான் அவனை பார்க்குற வேலைய பார்த்துகிட்டு, உக்கார்ந்தும், மனசளவுல பறந்துட்டு இருந்தேன்.....
"என் சோர்வை
எல்லாம்
உறிஞ்சி விடுகிறது
அவனது விழிகள்.....!!!"
........
Hi makkale..
Short ud than....Ivlo than ennala ippo mudinjathu.... adjust panikongo....work iruku...Night varen makkale.....
Tata..👋👋👋👋👋
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro