எதிரெதிர் துருவங்கள்
" என்னோட யுவிக்கு எதும் ஆகிட கூடாது..... என்னோட யுவராஜுக்கு எதுவும் ஆகிட கூடாது.... " என வாய்விட்டு சொல்லியபடி, இறைவனிடம் தன் காதலனுக்காய், மன்றாடினாள்.....
கடவுளிடம் அவள் வேண்டி அவர் எதையுமே மறுத்ததில்லை.....
அதனால் சிறு நம்பிக்கை அவளிடம் துளிர் விட்டாலும், கண்ணீர் வருவது மட்டும் நிற்கவில்லை......
யுவியை நினைத்து மிகவும் அவளுக்கு வருத்தமாய் இருந்தது....
தன் காதலின் ஆயுட்காலம் என்னவென்பது அவள் அறியா ஒன்று....
தன் காதலின் காரணமும், அவள் அறியா மற்றொன்று....
நேசம் காரணம், காரியம் பார்த்து வருவதில்லை போல.... என எண்ணி காதலுக்கு தனியொரு இலக்கணம் வகுத்துக்கொண்டாள்...
மனம் எதைஎதையோ நினைக்க, அவள் மனது, இறுதியில் யுவியை முதல்முறை கண்ட நேரத்திற்கு சென்றது.......
அவள் மனது, பழைய எண்ணங்களை ஓட்டி பார்த்தது......
அனன்யாவின் மனவோட்டம் :
நான் சிறு வயதில் மிகவும் கூச்ச சுபாவமாய் இருப்பேன்..... அடுத்தவரிடம் பழகும் போது, அவர்கள் செல்லம், அம்மு, கண்ணு என ஆளுக்கு ஒரு பெயரிட்டு அழைப்பார்கள்....
எனக்கு செல்ல பெயரே, அந்த வயதில் சுத்தமாக பிடிக்காது... என் பெயர் அனன்யா.... அனு என்றோ, இல்லை அனன்யா என்றோ அழைப்பதை தவிர்த்து, அம்மு, புஜ்ஜுகுட்டி, என்று கூப்பிடுவது எனக்கு எரிச்சலாய் வரும்.....
என்வயதை ஒத்த நண்பர்களுடன் நான் பழக முயற்சித்தாலும், அவர்கள் என் கன்னத்தை கிள்ளுவது, முடியை பிடித்து இழுப்பது, என ஏதாவது ஒரு வகையில் என்னை வம்பிற்கு இழுப்பார்கள்...... அது எனக்கு சுத்தமாக பிடிக்காது....
அதனாலே நான் யாரிடமும் எளிதில் பழகுவதில்லை....
யாரிடமும் பேசமாட்டேன்.... உம்மணாமூஞ்சி என பலர் என்காதுப்படவே பேசுவார்கள்.... ஏற்கனவே எரிச்சலில் இருக்கும் எனக்கு அது மேலும் எரிச்சலை தரும்.....
என் குடும்பத்தினரிடமும், சித்துவின் குடும்பத்திடமும் மட்டுமே நான், சகஜமாய் பழகுவேன்.....
சித்து மட்டுமே எனது ஒரே துணை.... சித்துவை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.... என்னுடைய ஒரே சிறுவயது நட்பு என்றால் அது சித்தார்த் மட்டுமே.....
சித்துவை ஒரு தோழனாக, அம்மாவாக, அப்பாவாக என்னால் நினைக்க முடியும்.... ஆனால், கணவனாகவோ, இல்லை காதலனாகவோ கற்பனைக்கு கூட என்னால் நினைக்கவியலாது.....
ஆனால், சித்து ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறான் என்பது மட்டும் எனக்கு விளங்கவே இல்லை...
சித்துவை என்னால், என் மனசிம்மாசனத்தின், ராஜாவாக அமரவைக்க ஒரு காலமும் இயலாது.....
ஏனெனில், அவ்விடம் ஏற்கனவே என்னுடைய யுவிக்கு வழங்கப்பட்ட ஒன்று....
சித்து சின்ன வயதில் என்னுடனே இருக்கும் படி, நான் பார்த்து கொண்டேன்.... அவனும் வேறு யாரோடாவது, நண்பனாகிவிட்டால், நான் எங்கு செல்வது.... என்னுடைய ஒரே நண்பனை நான் எவ்வாறு இழப்பது....
அதனாலே, அவனை யாருடனும் நான் அதிகம் பழகவிடுவதில்லை.... அவனும் எனக்கு பயந்து, யாரிடமும் பேசுவதும் இல்லை.... உண்மையில் நான் யாருடனும் பழக விருப்பமில்லாமல் இல்லை....
ஏதோ ஒரு தயக்கமே என்னை அந்த வயதில் தடுத்து நிறுத்தியது.... அது என்னவென்பது, இன்று வரை தெரியவில்லை....
இப்படியே நாட்களும் சென்றது.....
எனக்கு படிப்பு என்றாலே, அலர்ஜி..... பள்ளிக்கு செல்வதே எனக்கு பிடிக்காத ஒன்று... அதிலும் கணிதம் என்னுடைய பரமஎதிரி.....
ஐந்தாம் வகுப்பின் இரண்டாம் நாள், நான் சித்துவின் அருகில் எப்போதும் போல அமர்ந்திருந்தேன்.....
என்னுடைய எதிரி பாடமான கணிதத்தை நான், அந்த நீளஜடை, அனிதா மிஸ் நடத்திகொண்டிருந்தார்.....
நான், "ஏன்டா இப்படி என்னைய கொல்லுறீங்க..... " என்ற அளவில் கடமைக்கே கரும்பலகையை பார்த்துக்கொண்டு, சித்துவை ஓரக்கண்ணால் பார்க்க, அவன் தான் கணிதப்புலி ஆயிற்றே.... கணிதத்திற்குள் மூழ்கிபோயிருந்தான்.....
சித்துவை பார்த்து சலித்த நான், மனதில் ஹீமேன், ஸ்பைடர்மேன், போக்கிமேன் படங்களை பற்றி எண்ணி கொண்டிருந்தேன்... உடல் மட்டும் வகுப்பறையில் இருக்க, மனமோ, ஒரு மினி அனிமேஷன் வேர்ல்ட்டை சுற்றி வந்தது.....
பாடம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பள்ளி தலைமையாசிரியர் எங்களின் வகுப்பில் நுழைந்தார்.... அவரை பின்தொடர்ந்து, ஒரு சிறுவனும் நுழைந்தான்...அவன் தலை தரையை பார்த்த வண்ணம் இருந்தது ...
கீழ எதையும் போட்டுட்டானோ, என நானும் கீழே பார்க்க, அங்கே தரையை தவிர ஒன்றும் இல்லை.....
அப்போது தலைமையாசிரியர் இவன் "இனிமே உங்களோட தான் படிக்க போறான்..... இவன் பெயர் யுவராஜ் " என்றுவிட்டு அந்த நீளஜடை அனிதா மிஸ்ஸிடம், ஏதோ சொல்லிவிட்டு சென்றார்....
"ஒஹோஒ.... அந்த பையன் பேர் யுவராஜா??? " என நான் எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்....
நீளஜடை அனிதா மிஸ், அவனை எல்லோர் முன்னிலையிலும் அறிமுகம் செய்ய சொன்னார்... அப்பொழுதும் அவன் தலை தரையை நோக்கி இருக்க "சரி நீ போய் உக்காரு "என்றார்.....
அவன் நானும், சித்துவும் அமர்ந்திருக்கும் பெஞ்சில், சித்துவின் அருகில் அமர்ந்தான்....
"யார்டா இவன்....???? நமக்கு மேல இருப்பான் போலயே..... டெர்ரர் அனிதா மிஸ்ஸையே மதிக்கமா, சைலன்ட்டா இருக்கான்..... " என எண்ணிக்கொண்டேன்.....
பொதுவாக நம்மை போல குணாதியசிங்களை மற்றவரிடம் கண்டால், அவரிடம் நட்பு பாராட்ட நம் மனம் விழைவது, இயல்பான ஒன்று......
நானும் அவனை பார்த்த உடன் அவனிடம் நட்பு பாராட்ட நினைத்தேன்....... சித்துவோடு சேர்த்து, அவனையும் என் நட்பு வட்டத்தில் இணைத்திட முடிவு எடுத்தேன்....
ஆனால், அவனோ தரையை தவிர எவரையும் பார்த்ததாய், எனக்கு தெரியவில்லை.....
அவன் அமர்ந்த பின்பும், தரையவே பார்க்க, சித்துவோ பாடத்தை கவனித்தான்..... எனக்கு அந்த யுவராஜிடம் பேசவேண்டும் என தோன்றியது.....
நான் சித்துவை தொந்தரவு செய்யா வண்ணம், அந்த யுவராஜிற்கு "ஹாய் " என்று உணர்த்தும் வகையில் கையசைத்தேன்.... அவனோ, தரையை பார்த்தபடி, கண்களை அங்குமிங்கும் உருட்டிகொண்டிருந்தான்....
"என்னடா இவன் பாக்கமாட்டேங்குறான்.....??? என்ன பண்றது???? " என சிந்தித்த நான், சித்துவின் முதுகுப்புறம் வந்து, எனது இரு கைகைளயும், வாயருகே குவித்து, யுவியிடம் ரகசியம் பேசுவது போல், மிக அமைதியாக காற்றுடன் சேர்த்து, "ஹாய் " என சொன்னேன்.....
அப்பொழுதும், அவன் தரையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தான்.....நான் அழைத்தது, யுவியின் காதில் விழுந்ததோ, இல்லையோ, அந்த பாம்பு காது, அனிதா மிஸ் காதில் விழுந்துவிட்டது, போல.....
"அனன்யா..... கெட் அவுட் ஆப் தி கிளாஸ் !!!!" என தொண்டை கிலிய, கத்திவிட்டது.....
நானோ, ஒன்றும் அறியா அப்பாவி போல, முகத்தை வைத்துக்கொண்டு, எழுந்து நிற்க, சித்துவோ மெலிதாய் சிரித்தான், நான் சித்துவை முறைக்கவும், அவன் சிரிப்பு வந்த சுவடே இல்லாமல் மறைந்துவிட்டது.....
இதற்கு காரணமான, யுவியோ, தனக்கும், இதற்கும் சம்மந்தமில்லை என்றவாறு தரையை பார்ப்பதையே வேலையாய் கொண்டிருந்தான்.....
"இவனிடம் பேச போய் நான் திட்டுவாங்கி கொண்டிருக்கிறேன், இவன் எப்படி உக்காந்துருக்கான் பாரு.... !!" என யுவியை என் மனதினில் திட்டியபடி, அவனை முறைக்க.....
அதை பார்த்த அந்த, நீளஜடை அனிதா மிஸ்ஸோ, "அனன்யா..... கெட் அவுட்... " என மீண்டும் கத்திவிட்டது.....
"வந்த அன்னைக்கே என்னை வெளிய அனுப்பிட்டானே... உன்னை சும்மா விடமாட்டேன்டா யுவராஜ் " என மனத்தினுள்ளே அவனை பற்றிய வெறுப்பை வளர்த்துக்கொண்ட நான், வகுப்பைவிட்டு வெளியேறினேன்...
அக்கணமே, என் மூளையில் வெறுப்பை, ஆணிவேராய் கொண்டு உள்நுழைத்தவன், தான் யுவி.....
அன்று என் மூளையில் நுழைந்தவன், தான், என்று என் மனதில் நிறைந்தான், என்பது மட்டும், எனக்கு விளங்கா ஒன்று.....
வெறுப்பிற்கும், காதலிற்கும் ஒரு நூலளவு இடைவெளி என்பது சரியே.....
வெறுப்பில் ஆரம்பித்த அவனை பற்றிய எண்ணங்கள், மனதை நிரப்பும் நேசமாய் எப்படி மாறியது என இன்றுவரை தெரியவில்லை....
ஷேக்ஸ்பியரின் பிரபல வசனம் ஒன்று உண்டு.....
"Love me or hate me, both are in my favor.
If you love me, I'll always be in your heart.
If you hate me, I'll always be in your mind."
"நீ என்னை காதல் செய்.... இல்லை வெறுத்திடு..... இரண்டுமே எனக்கு லாபம் தான்.... நீ என்னை காதலித்தால், நான் உன் மனதில் இருப்பேன்.... நீ என்னை வெறுத்தால், நான் உன் மூளையில் இருப்பேன்..... மொத்தத்தில் நான் உனக்குள்ளே இருப்பேன்... " என்ற அர்த்தத்தை கொண்ட வசனம் அது....
அது, அவரது கதைக்கு பொருந்தியதோ இல்லையோ, என் வாழ்க்கைக்கு, கச்சிதமாய் பொருந்தி அமைந்தது.....
அந்த வசனத்தை நான் படிக்க நேர்ந்த போதே, யுவியின் மீது இருக்கும் எண்ணம், காதல் என என் நெஞ்சம் உணர்ந்தது.....
ஆனால், எப்போது வந்தது.... என நான் ஆராய துவங்கினால், எனக்கு தலைவலியே மிஞ்சும்....
நான் வகுப்பறைக்கு வெளியே சென்று, அடுத்த பாடவேளையில்,அந்த டெரர் நீளஜடை அனிதா மிஸ் சென்றுவிட்டது... அதனால், நானும் உள்ளே சென்று சித்துவின் அருகில், யுவியை ஒரு நிமிடம் முறைத்துவிட்டு அமர்ந்துகொண்டேன்.....
உணவு இடைவேளை நேரம்....
என்கோபத்தை எப்படி வெளிப்படுத்துவது என தெரியாமல்,
"அவன் எதுக்கு இங்க வந்து உக்காந்தான்?? " வார்த்தையில் சினத்தை திணித்து சித்துவிடம் கேட்டேன்......
"ஹே அனு வேற இடம் இல்லை பாரு..... விடு உக்காந்துட்டு போட்டும் "என சித்து சொல்ல, "இவனை எப்படி சும்மா விட முடியும்????? " என என் மனக்குரலில் சிந்தித்துகொண்டேன்.....
"ஹாய் ஐ அம் சித்ததார்த் "என சித்து அவனிடம், அறிமுகமாகிகொண்டான்....
அவன் மௌனமாய் தரையை நோக்கியவாறே அமர்ந்திருந்தான்....
அது, என் கோபத்தை இரட்டிப்பாக்கியது..... "பாரு அவனுக்கு திமிர " என கத்தியவாரே அவனை நோக்கினேன்... ... சித்து என்னை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்...
அப்போது நிமிர்ந்த யுவராஜ் .. சித்துவை ஒரு முறை பார்த்துவிட்டு... என்னையும் ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் தரையை நோக்கினான்.....
அவனின் செய்கை என்னை உச்சகட்ட கோபத்தில் நிறுத்தியது.....
இப்படியே நாட்களும் செல்ல, யுவராஜின் நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை....
எனக்கும் யுவியை எதுவும் செய்ய வாய்ப்பு அமையாததால், முறைப்போடு நிறுத்திக்கொண்டேன்..... சித்துவிடம், யுவியை இடம்மாறி உட்கார சொல்லு என சொல்லிவிட்டேன்.....
ஆனால், சித்து சொன்னானோ என்னவோ, தெரியவில்லை..... சித்து, யுவியிடம் பேசக்கூடாது எனவும், சித்துவை கட்டாயப்படுத்தினேன்.... ஆனால், சித்து அதை அலட்சியம் செய்து அவனிடம் ஒரு முறை அவனிடம் பேசியதை நான் கண்டேன்.....
யுவியிடம் சித்து பேசியதை கண்ட நான் "நீ ஏன் அவன்கிட்ட பேசுற??? " என கோபமாய் கேட்டேன்...
"ஹே அவன் பாவம் அனு, அவனால பேசமுடியாது போல, அவனுக்கு கையில வேற அடி பற்றிற்க்கு " என சித்து சொல்ல,......"அவனால பேசமுடியாது " என்ற சித்துவின் வாக்கியம், யுவியின் மேல் நான் கொண்ட கோபத்தை நொடியில் கரைத்திட...
"பேசமுடியாதா?? .......!!!!"அவன் பாவம்..... நீ வா நம்ம போய் அவன பாப்போம் "என்றேன்...
நாங்கள் இருவரும் அவனை தேடினோம்.... யுவி ஒரு மரத்தின் கீழ் போடப்பட்டுள்ள பெஞ்சின் மீது தரையை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான்....
நாங்கள் இருவரும் அவனிடம் சென்றோம்.... யுவியின் கையில் காயத்தை பார்த்த நான் .. "ரொம்ப வலிக்குதா??? "என்றேன் .... அவன் இடவலமாக தலையை அசைத்து இல்லை என்று உணர்த்தினான்....
"நான் அனன்யா, இவன் சித்தார்த் உன் பேர் என்ன?? "என்றேன்...
யுவி மௌனமாகவே இருக்க, "அனு அவனால் பேசமுடியாது" என சித்து சொல்ல...
நான் சோகமாக சித்துவை நோக்க......
"யுவராஜ் " என்று கணீரென கேட்டது ஒரு குரல்...
நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாய் பார்த்துவிட்டு ஒருசேர யுவியை நோக்கினோம்.....
இப்போது யுவி தரையை பார்க்கவில்லை..... எங்களை பார்த்தவாறு அமர்ந்திருந்தான்....
அவன் தான் பேசினான்... யுவி தான் பேசினான்.....நான் அதிர்ச்சியில் வாயை பிளந்துவிட்டேன்.....
" நீ.... நீயா பேசுன??.... என மெல்லிய ஆச்சர்யத்தோடு ஆரம்பித்த என் குரல்...." சே.. இல்லை இவனால தான் பேசமுடியாதே " என முடிந்திட.
"எனக்கு உன்ன விட நல்லாவே பேச தெரியும் " என ஏளன பார்வையோடு யுவராஜ் பேசிட...
என் கோபம் மீண்டும், சரசவென உச்சத்தை அடைந்து, "அப்போ உனக்கு பேச தெரியும்....இந்த ஒரு வாரமா பேசத்தெரியாத மாதிரி நடிச்சுருக்க.. .. எல்லாரையும் நம்ப வச்சு ஏமாத்திருக்க ....சரியான பிராடு.... இதுக்குதான் யாரையும் நம்ப கூடாது... " என உயர்ந்த குரலில் கோபமாய் நான் கத்திட
மரபெஞ்சில் இருந்து இறங்கிய யுவராஜ்....
"ஏய் யார பாத்து நடிக்கிறேன்,, பிராடுனு சொல்லுற.... நான் உன்கிட்ட சொன்னேனா என்னால பேச முடியாதுனு..... நீயா நினச்சா நா ஒன்னும் பண்ண முடியாது " என யுவராஜும் கோபத்தில் எகிறிட......
சித்து இருவருக்கும் இடையில், காட்சிப்பொருளாய் நடப்பதை வேடிக்கை பார்த்தான்....
யுவியின் கோபப்பேச்சு மேலும் என் கோபத்தை தூண்ட "ஆமான்டா நீ பிராடு.... உங்க அம்மா பிராடு.... உங்க குடும்பமே ஒரு பிராடு குடும்பம்..... என நான் ஓவராய் பேசியபடி, மேலும் எகிறிட....
"என் குடும்பத்தை பத்தி பேசுன நா சும்மா இருக்கமாட்டேன் "என ஆவேசமாய் யுவராஜ் பேசிட...
"அப்டிதான்டா பேசுவேன்... என்னடா பண்ணுவ??? " என நான் அவனை தாக்க தயாராகி, மேலும் யுவராஜின் கோபத்தை தூண்டிட...
"இதுக்கு மேல பேசிதான் பாரேன் " என ஆவேசமாய் யுவராஜ் என்னை நெருங்க..
உடனே சித்து ஓடிச்சென்று, யுவராஜின் முன் நின்று "தப்பு என்மேல தான்டா..... சாரி நான்தான் அனன்யா கிட்ட உன்னால பேசமுடியாதுனு சொன்னேன்... அவ ஏதோ தெரியாம பேசுறா விட்டுடு " என சொல்லிட யுவியின் ஆவேசம் சிறிது குறைந்தது.... ஆனால் எனக்கு கோபம் மூளைவழியே பயணித்து, மூக்கை தொட்டுநின்றது.....
"நீ எதுக்கு அவனுக்கு சாரி சொல்லுற..., எல்லாரையும் நடிச்சு ஏமாத்துனதுக்கு அவன் தான் சாரி சொல்லனும் "என நான் சித்துவின் மீது என் பாதி கோபசாரலை வீச,
யுவராஜின் கனல் பார்வை மீண்டும் என்னை தொட , பதிலுக்கு நானும் யுவராஜை எரித்திடும்படி பார்க்க, சித்து என்னை தரதரவென இழுத்துக்கொண்டு வகுப்பறைக்கு சென்றுவிட்டான்.....
"இப்போ எதுக்குடா என்னை இழுத்துட்டு வந்த....???..... " என எரிச்சலுடன் சித்துவின் கையை உதறியவண்ணம் நான் கேட்க...
"இன்னும் கொஞ்சம் நேரம் நீ அங்க இருந்தா பிரளயமே வந்துருக்கும் அதான் " என சித்து பதில் கூற....
"பாத்தியா அவன உன்ன நல்லா நடிச்சு ஏமாத்திருக்கான்.... சரியான பிராடு " என நான் சினத்தில் திரும்ப திரும்ப சொன்னதையே சொல்ல....
"அம்மா தாயே மறுபடியுமா.... முடியல... விட்டுடு " என சித்து தலைமேல் கைகூப்பினான்...
நான் கோபம் தளர்ந்து கலகலவென சிரித்துவிட்டேன் .....
தொலைதூரத்தில் இருந்த யுவராஜ் மீண்டும் என் கண்ணில் விழ, என் சிரிப்பு மறைந்து, கோபம் என் கண்களை தழுவிக்கொண்டது.....
"இனிமே நீ அவன் கூட பேச கூடாது... எனக்கு அவன சுத்தமா பிடிக்கல "என நான் சித்துவிடம் யுவியை பார்த்து முறைத்தவாரே சொல்லிட....
"சரி பேசல " என்றவாறு சித்துவும் தலையை அசைத்தான் .....
இடைவேளைக்கு பிறகான வகுப்பில்.... நான் சித்துவுக்கும், யுவராஜ்க்கும் இடையில் அமர்ந்துகொண்டேன் .....
அதைக்கண்ட யுவி என்னை முறைக்க, நானோ "ம்ம்க்கும் " என இடவலமாக என் இதழை சுளித்து, என் கழுத்தை வெடுக்கென திருப்பிகொண்டேன்.....
நாட்கள் செல்ல, செல்ல எங்களின் சண்டை வலுத்துக்கொண்டே சென்றது தவிர, நானும், யுவியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தபாடில்லை.....
எல்லாமே சரியாயாக சென்றாலும், சித்து என்னை விட்டு கொஞ்சம் விலகி போனதாய் நான் உணர்ந்தேன்.....
சித்து, யுவியிடம் நான் அறியாமல் பேசுவதும், சிரிப்பதும், என்னை கண்டதும் நடிப்பதையும் நான் கவனித்தேன்....
சித்துவின் மாற்றம் எனக்கு வருத்தமளித்தது.... சித்துவிற்கு யுவியை பிடித்திருக்கிறது என்றால், நானும் யுவியிடம் நட்பு பாராட்ட வேண்டும், அப்பொழுதே என் ஒரே நண்பன் சித்துவை நான் இழக்காமல் இருக்க முடியும் என எனக்கு தோன்றிட, என் கோபம், ஈகோ அனைத்தையும் விடுத்து, யுவியிடம் பேச சென்றேன், ஆனால் அதுவும் வாய்சண்டையில் தொடங்கி, முடிபிடி சண்டையில் முடிந்தது....
அதனால், யுவியின் மேல் உள்ள வெறுப்பு கூடி போனது..... இனி இவனுடன் நட்புகொள்வதெல்லாம் நடக்காத காரியம் என முடிவுக்கு வந்தேன்.....
நானும், சித்துவும் ஒரே துருவமாகவும், யுவியை எதிர் துருவமாகவும் எண்ணிக்கொண்டேன்.....
ஆனால், எனக்கு அன்றே தெரியவில்லை, "ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும்.... எதிரெதிர் துருவங்களே ஒன்றை ஒன்று ஈர்க்கும் " என்று...
"மீண்டும் ஒரு நாள் " என அழுகையிலும், மெலிதாய் சிரித்தபடி இருந்த அனன்யாவின் சிந்தை ஓட்டத்தை, தடை செய்தது, அவள் கைபேசியின் அழைப்பொலி.......
.
.
.
.
.
ஒரு கையால் காரின் ஸ்டியரிங்கை பற்றியபடி காரை இயக்கியும், மறுகையால் அனன்யா அலைபேசியை பார்க்க, அதில் சித்துவின் பெயர் ஒளிர்ந்தது.....
சித்துவின் பெயரை பார்க்கவும், அனன்யாவிற்கு பயம் தொற்றிக்கொண்டது..... கண்கள் தானாய் கலங்கின.....
நடுங்கும் கைகளுடன், "ஹ... ஹலோ... " என அனு சொல்ல.....
மறுமுனையில், "ஹலோ.. அனன்யா.... நான் யுவி பேசுறேன்..... " என்ற யுவியின் குரல் கேட்க....
அனன்யாவின் இதழ் மிகமெலிதாய் விரிய, அவளின் கண்ணீர் விழியோரம் வழிந்தது..... "ஹலோ..... யுவி.... நான்... நான்... உன்கிட்ட ஒன்னும் சொல்லணும் " என சொல்லிய அனு, எதிரில் வந்த காரை கவனிக்க தவறினாள்......
"சொல்லு அனன்யா..... " என யுவி மறுமுனையில் கேட்க....
எதிரே தாறுமாறாய் வந்த கார், அனு வந்த காரில் மோதிட, அவளின் கார் கண்ணாடி டமால் என உடைந்து, காரின் நிலை தடுமாறி அங்கு இருந்த, மின்கம்பத்தின் மீது, பயங்கரமாய் மோதி , உருக்குலைந்து நின்றது.....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro