Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

எட்டாக் கனி

தனிமையிலே என் காதல் பயிரை உயிரில் வளர்க்க,  அதை யாவரும் அறிந்திடும் படி, அறுவடை செய்யும் நாளுக்காய் காத்திருந்தது.... என் மையல் கொண்ட மனது....

என் செல்போனின் வால்பேப்பராக அனுவின் சிறுவயது படத்தை வைத்தேன்...

அனன்யா அந்த ப்ராஜெக்ட்டை நன்முறையில் முடித்து சித்துவிடம் நற்பெயரை பெற்றுக்கொண்டாள்.....

அனன்யாவும், சித்துவும் ஒன்றாகவே நேரத்தை கழிக்க நான் ஒருவன் இருப்பதையே சித்து மறந்துபோனான்....

காதல் இல்லாமல் தவிக்கும் மனதிற்கு நட்பே ஆறுதலாய் அமைந்தது....

நட்பும் என்னை கண்டுகொள்ளாமல் போகவே, வெறுப்பு கலந்த கோபம் என்னை சூழவே சித்துவிடம் பேசும் முடிவோடு, அவன் அறைக்கு சென்றேன்....

அவன் வேறு ஏதோ யோசனையில் மூழ்கியிருக்க "எந்த கோட்டையை புடிக்க இப்படி பலமா யோசிக்குற மச்சான்....??? " என நான் அவனை வினவிட...

"எல்லாம் என்னோட அனு பத்தி தான் மச்சான் ".....என சொல்லிய சித்து  மீண்டும் யோசனையில் மூழ்க....

"என்னது இவனோட அனுவா??  இவன் என்ன புது கதை சொல்லுறான்....??? " என என்மனத்துக்குள் கலங்கிய நான்,

"என்னது உன்னோட அனுவாஆஆ......??????? "... இது எப்போதிருந்துடா.......???.... " என நான்  கண்கள் விரித்து ஆச்சரியமாக வினவ

" மச்சான் எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்டா.... இந்த ஒரு வாரமாவே நீ சரியே இல்லடா.... இப்போதான் தெரியுது என்ன காரணம்னு.....ம்ம்ம் நீ நடத்து...... அனுகிட்ட சொல்லிட்டியா?????" என ஆர்வத்துடன்  அவனிடம் இருந்து விஷயத்தை கறக்க நான் போட்டு வாங்கிட.. .....

"அனுகிட்ட என்ன சொல்லனும்???? " என  சித்து யோசித்து பின்

"டேய்....நீ நினைக்குற மாதிரி இல்ல மச்சான் " என சித்து சாதாரணமாக  பதிலளிக்க......

" எல்லாம் ஓகே தான்.... ஆனாலும் இவன் எப்படி என்னோட டோராவை இவன் அனுன்னு சொல்லலாம்???" என உள்ளூர கோபத்தில் பொங்கிய நான், அவன் சொன்ன பதிலில்   ஒரு புறம் நிம்மதியை உணர்ந்தாலும், மறுபுறம் சந்தேகம் எழவே,

  "நம்பலாமா???? " என நான்  இழுத்தபடி சித்துவை வினவ ..

"200% நம்பலாம்..... " என  சித்து  உறுதியளிக்க....

  குழப்பம் தீராததால் "இல்ல.... "...., என நான்  மீண்டும் ஆரம்பிக்க......

"மச்சான் இன்னைக்கு மீட்டிங் இருக்கு..... " என சித்து  பேச்சை மாற்ற.....

"என்ன பேச்சை மாத்த பாக்குறியா????" என நான் அவனிடம் மல்லுக்கு நிற்க... 

"மச்சான் நீ முதல்ல கிளம்பு"... என சித்து என் தோளின் பின்புறத்தை கதவை நோக்கி தள்ளி, என்னை வெளியேற்றினான்....

அவன் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட நான், எது எப்படியிருந்தாலும் சரி என்னோட டோரா  எனக்கு தான்.... யாருக்காகவும் நான் விட்டுத்தரமாட்டேன் என நினைத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்துவிட்டேன்....

மீண்டும் சித்து என்னை கண்டுகொள்ளாமலே சுற்றினான்... நான் டோராவை மட்டுமே சுற்றி வந்தேன்....

மறுநாள் சித்துவின் அக்கா வேணியின் நிச்சயத்திற்கு சென்றிருந்தேன்....

அப்பொழுது அனு ஊதா நிற லெஹங்காவில் மிதமான ஒப்பனையுடன்,  காற்றில் பறந்தாடும் கூந்தலோடு,   ஒரு தாம்பூல தட்டுடன் திகட்டாத அழகுடன் வர..... ஒரு நொடி  மயங்கிதான் போனேன்...

அவளை பார்த்து பின் சித்துவை பார்க்க, அவனும் டோராவை ரசித்தது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது....

"சித்து.... டேய் சித்து... " என நான் அழைத்தும் அவன் திரும்பாமல் போகவே,

நான் அவன் தோளை அழுத்தவும் சித்து  நிகழ்உலகத்திற்கு திரும்பி சிறு சிரிப்புடன்  என்னுடன் வந்தான் ....

அவனை நான் என் மனத்தினுள்ளே பல நல்ல வார்த்தைகளால் ஏசினேன்.....

என் அப்பாவும் அங்கு வந்து சேர,
"சரி வாங்க.... ஸ்டேஜ்க்கு போவோம்....பங்க்ஷன் ஸ்டார்ட் ஆக போது.... வாங்க போவோம் "என சித்து  என்னையும்,  அப்பாவையும் அழைத்து கொண்டு தோட்டத்தில் அலங்கங்கரிக்கபட்டுள்ள மேடையருகே அழைத்து சென்றான்....

தீடிரென மின்தடை ஏற்பட்டது....அனைத்து மின்விளக்குகளும் அணைக்கப்பட்டது...

அடுத்தநொடி அனைத்து விளக்குகளும் மீண்டும் எரிந்தது.... மேடையில் இருக்கும் விளக்குகளை தவிர.....

மேடையில் வட்டவடிவிலான வெண்ணிற விளக்கு முதுகு காட்டி நின்ற ஒரு பெண்ணின் மீது ஒளிர்ந்தது.......

இசையானது இசைக்கப்பட அப்பெண் திரும்பி நடனமாட கரகோஷம் எழுந்தது....

நான் எதிர்பார்த்தது போலவே டோராதான் நடனமாடினாள்...

மீண்டும் மேடை விளக்குகள் ஒளிர அவளின்  தோழியரும் அவளுடன் சேர்ந்து நடனமாடினர்....

டோராவின் நடனம் மிக அருமையாக  அமைய நடனம் முடிந்தவுடன் கைதட்டலும், விசில் சத்தமும் காதை கிழித்தது....  நானும் ஒரு நொடி என்னை மறந்து கைதட்டி விசிலடித்தேன்....

அங்கு கிருஷ்ணா -வேணியின் நிச்சயம் முடிய,

'ஹாய் எவ்ரிஒன்.... உங்களுக்கே தெரியும்... இன்னைக்கு வாணி - கிருஷ்ணாவுக்கு எங்கேஜ்மெண்ட்....அதுமட்டுமில்ல, இன்னொரு குட் நியூஸ் உங்க எல்லாருக்கும் சொல்ல போரேன்.... இன்னைக்கு வேற ஒரு எங்கேஜ்மெண்ட் இந்த குடும்பத்துல நடக்கப் போகுது....... அதுக்கு முன்னாடி என் குடும்பத்துல  உள்ள எல்லாரும் மேடைக்கு வாங்க " என்று  சித்துவின் அப்பா சொல்ல....

"ஒருவேளை சித்துக்கும், அனன்யாவுக்கும் தான் எங்கேஜ்மெண்ட்டோ.... சித்து வேற ஒரு டைப்பா சுத்துறான் " என நான் யோசித்தபடி இருக்க....

சித்துவின் அப்பா "இப்போ என் குளோஸ் பிரண்ட் முருகன் பொண்ணு, அனன்யா - என்னோட பிசினஸ் பார்ட்னர் வாசன் பையன் , யுவராஜ்க்கு எங்கேஜ்மெண்ட் நடக்க போகுது " என சொல்லும் போது,

என் காதில் தான் தவறாக விழுந்துள்ளதா????  என நான் நினைக்கும் போதே..... என் கையிலும், அனன்யா கையிலும் மோதிரம் தரப்பட்டது.....

டோராவுடன் எனக்கு நிச்சயம் என்பது எனக்கு சந்தோசமாய் அமைந்த போதிலும், அவள் கண்ணில் நான் எதிர்பார்க்கும் சந்தோசம் தெரியவில்லை.....

அவள் முகத்தில் குழப்பம் அப்பட்டமாய் தெரிய, அவளுக்கும்  என்னை போலவே எதுவும்  தெரிவிக்கப்படவில்லை என தெளிவாய் தெரிந்தது....

அவள் முகத்தில் சிறு புன்சிரிப்பு தோன்றியிருந்தாலும் நான் மோதிரத்தை அணிவித்துருப்பேன்......

மாறாக அவள் குழப்பத்துடனே என்னை பார்க்க, அவளின் உணர்வுக்கு மதிப்பளிக்க விரும்பினேன்.... என் காதலை உணர அவளுக்கு நேரம் கொடுக்க எண்ணிய படி, நான் சித்துவை பார்க்க அவன் எதையோ இழந்தவன் போல காட்சியளித்தான்....

"மோதிரத்தை போடுப்பா " என  அப்பா  சொல்ல...

"இல்லப்பா... என்னால இந்த எங்கேஜ்மெண்ட்ட பண்ணிக்க முடியாது " என சொல்லிட்டு, அப்பாவின் கையில் மோதிரத்தை திணித்துவிட்டு, வேகமாக மேடையில் இருந்து கீழிறங்கி சென்றுவிட்டேன்..

நான் சென்ற மறுகணமே சித்து இது ஒரு பிராங்க் என சொல்லி டோராவை நிச்சயம் செய்வான் என நான் நினைத்து பார்க்கவில்லை....

அது முன்பே தெரிந்திருந்தால் நானே மோதிரம் போட்டுருப்பேன்.... சித்து டோராவுக்கு மோதிரம் அணுவிக்க,  அப்போதும் நான் டோராவையே தான் பார்த்தேன்..... அவளும் சித்துவுக்கு மோதிரம் அணுவிக்க என் உள்ளம் நொறுங்கியது....

"அப்போ டோரா... இல்லை அனன்யாவுக்கு நிஜமாவே இந்த யுவிய பிடிக்காத??? " என  எண்ணும் போதே என் கண்களின் ஓரத்தில் நீர் வழிந்தது...  யாருமறியாமல் அதை துடைத்துக்கொண்டேன்.....

கரகோஷம் எழும்ப, அனன்யாவின் சந்தோசமே என் சந்தோசம் என கருதிய நான், உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும் என்பது போல, பொய்யாய் சிரித்த படி, நானும் கைதட்டினேன்.....

போட்டோ எடுக்கும் போது அவர்களின் நெருக்கம் என் உடலை பற்றி எரிய செய்தது....

அனைவரும் சென்றவுடன் சித்து வானத்திற்கும், பூமிக்கும் குதித்து ஆர்ப்பாட்டம் செய்து கோபத்தை அவன் குடும்பத்திடம் வெளிப்படுத்தினான்.....

ஆத்திரத்துடன் என்னிடம் வந்த சித்து,
"அனு அப்பவே சொன்னா..... நான் தான் கேக்கல......உன்னை எவ்ளோ நம்புனேன்..... கடைசில அனு சொன்ன மாதிரியே ஆயிடுச்சு..... நீ சரியான பிராடு..... துரோகி.... கூடவே இருந்து நம்பவச்சு ஏமாத்திட்ட...." என  கோபத்தில் கொந்தளிக்க....

நான் மறுப்பாய் தலையசைத்து "சித்து....."   என நான் என்னிலை விளக்கம் தரும்  முன்,

"போதும் நிறுத்து...... இனிமேல் என்னைய அப்படி கூப்பிடாத..... மனசுல இப்படி ஒரு எண்ணத்தை வச்சுக்கிட்டு, நடிச்சு என்னை ஏமாத்திருக்க......."

"அனுவுக்கு உன்ன சுத்தமா பிடிக்காதுன்னு தெரிஞ்சும், அவளோட விருப்பம் இல்லாம நிச்சயம் பண்ண ஏற்பாடு பண்ணி, அது உனக்கு தெரியாத மாதிரியே என்ன ஒரு நடிப்பு....."

'ப்ப்ப்ப்பா... ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் போலயே...... என சித்து  கோபமாக  சத்திமிட்டபடி,

வேகமாக என் சட்டையை அவன்  இரு கைகளாலும் பற்றி,  " உனக்கு மோதிரம் போடுனு சொன்னப்போ, அனுவோட முகத்தை பாத்தியா........

அதுல, உன் மேல கோபமும், வெறுப்பும் அப்பட்டமா தெரிஞ்சது.... அனுவுக்கு என்னைக்குமே உன்னைய பிடிக்காது.... புரிஞ்சுதா உனக்கு???.....

இப்போ அனு எனக்கு சொந்தமானவ.... இனிமேலும் ஏதாச்சும் ஏடாகூடமா பண்ண, நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்..... " என  சித்து கோபத்தில் வார்த்தைகளால் என்னை  வதைத்தபடி, என் சட்டையை நான் மேலும் இறுக்கிப்பிடிக்க,

"ஆமா.... அவன் சொல்றதெல்லாம் உண்மைதான்....  என் டோராவுக்கு.... இல்ல... இல்ல... அனன்யாவுக்கு எப்பவும் என்னை பிடிக்காது.... அவளுக்கு என் மேல வெறுப்பு மட்டும் தான் இருக்கு....  இப்போ அனன்யா சித்துவுக்கு சொந்தமானவ.. "என நினைக்கும் போதே என் கண்கள் தானாய் கலங்கியது...

என் அப்பா வேகமாக வந்து, சித்துவின்  பிடியிலிருந்து,  என்னை விடுவித்தார்...

" என்ன நடந்துச்சுனு தெரியாம பேசாத, சித்து " என  என் அப்பா ஆதங்கமாய் கேட்க.....

"எது வேணும்னாலும் நடந்துருக்கட்டும்பா..... இவன் எப்படி என்னோட அனு மேல ஆசைப்படலாம்???......." என சித்து  யாரையும் பேசவிடாது,

"எப்பிடிடா எனக்கு துரோகம் பண்ண உனக்கு மனசு வந்துச்சு????.... அனு சொன்னப்போ கூட நான் நம்பலை......

ஆனா, இப்போ தோணுதுடா எங்க ரெண்டு பேருக்கும் இடையில நீ வந்திட்டியோன்னு..... " என சித்து உடைந்து பேச ...

எல்லாம் என்னோட தவறு தான்..... நான் சித்துவிடம் ஆரம்பத்திலே என் காதலை பற்றி சொல்லியிருக்க வேண்டும்.... குறைந்தபட்சம் டோராமிடமாவது  சொல்லியிருக்க வேண்டும்.... சொல்லா காதலுக்கு என்றுமே மதிப்பில்லை என தெரிந்துகொண்டேன்..... அவன் சொல்வது சரி தான்.... நான் தான் அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் தொந்தரவாக இருக்கிறேன்....

கண்களில் வலியுடன்," சரிடா இனிமே நான் உங்க ரெண்டு பேர்க்கு இடையில வரமாட்டேன் "என நான் சித்துவின் அருகில் சென்று சொல்ல, சித்து  முகத்தை திருப்பிகொண்டான்.....

வேகமாக  அப்பா " வாடா போலாம் " என என் கையை பிடித்து இழுக்க, நான்  சித்துவை  பார்த்தவாரே, அப்பா இழுத்த இழுப்பிற்கு சென்றேன்.....

" டேய்... வாசு... நில்லுடா... நான் சொல்றதை கொஞ்சம் கேளுடா.... " சித்துவின் அப்பா என் அப்பாவிடம்  சொல்ல...

"போதும்டா பட்டதே போதும்.... " என சொன்ன  அப்பா,  என்னை  இழுத்து கொண்டு வீடு நோக்கி புறப்பட்டார்...

வீடு சென்றவுடன் "யுவி... "என அப்பா அழைக்க..

"ப்ளீஸ்பா... என்னை கொஞ்ச நேரம் ... தனியா இருக்கவிடுங்க.... "  என சொல்லியபடி எனதறையை அடைந்தேன்....

அங்கே ட்ராயிங் அறையை அடைந்தேன்....  அறையெங்கும் டோராவின் ஓவியங்களும், பெரியளவிலான அவளும் புகைப்படங்களுமே இருக்க.... அவள் நினைவு என் உயிரை வதைத்தது......    

கண்ணீர் தானாய் என் கண்களை நனைத்தது.....

"உன் நினைவின் பாரம்
தாங்காமல்
வெளியே சென்று
கொண்டிருக்கும்
கண்ணீரின் தேடல்
நீ மட்டுமே......... "

அவள் இனி எனக்கு சொந்தமில்லை என்ற நினைப்பு என்னை கொள்ளாமல் கொன்றது......  

உயிர்க்காதலையும் இழந்து, உறுதுணையான நட்பையும் நான் இழந்து நிற்க, சிறு வயதில் என்னை சூழ்ந்த தனிமை கலந்த வெறுமை அப்போது உருவாகி   என்னை மேலும்  அழுத்தியது.....

வருத்தமிகுதியால், தாய்மடியை என் உள்ளம் தேடியது... என் அம்மாவின் புகைப்படத்தை கையிலெடுத்த நான்,
 
"ஏன்மா... எனக்கு மட்டும் இப்படி நடக்குது???  சித்து கூட என்னை புரிஞ்சுக்கலையேமா.... அம்மா... நீங்க இல்லனு நான் ஏங்காத நாளே இல்லமா.... ஆனா சித்துவும், டோராவும்   என் வாழ்க்கைல வந்ததுக்கப்புறம் எல்லாம் மாறிடுச்சும்மா... என் வாழ்க்கையிலும் சந்தோசம் எட்டி பாத்துச்சும்மா... அப்படி என்னமா நான் கேட்டுட்டேன்... எல்லாமே அன்பும், பாசமும் தானே..... எனக்கு அதுக்கு தகுதி இல்லையா???... சொல்லுங்கம்மா....இப்போ அவங்க ரெண்டு பேருமே என் வாழ்க்கைல இல்லாம போய்ட்டாங்க.... மறுபடியும் நான் அரவணைக்க ஆள் இல்லாம ஆகிட்டேன்மா.... " என கதறி அழுதபடி என் அம்மாவின் புகைப்படத்தை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன்.....  அழுதபடியே உறங்கியும் போனேன்.....

அதிகாலையில் எழுந்த நான், மீண்டும் இரவு நினைவுகள் நெஞ்சில் ஓட நெஞ்சமெங்கும் வலியை உணர்ந்தேன்....

அமைதியாக யோசித்த நான், அனன்யாவுக்கு சித்துவைத்தான் பிடித்துள்ளது  என்றால், நான் விலகிக்கொள்வதே  நாகரீகம்....

இனிமேல் நான் அவர்களின் வாழ்க்கையில் நுழையவே கூடாதென முடிவெடுத்துக்கொண்டேன்....

கைபேசியில் சித்துவிடமிருந்து தவறிய அழைப்புகள் இருந்தன....

சித்து மிக நல்லவன்... என்னைவிட அனன்யாவை மிக நன்றாக பார்த்துக்கொள்வான்...  என நான் நினைத்தாலும் என் மனம் வலிப்பதை என்னால் தவிர்க்கமுடியவில்லை.....

வலியுடனே என் பியானோவில் "மெலன்களி " என்னும் சோகம் கலந்த இசையை இசைக்க துவங்கினேன்....

இசைக்கையிலே கண்களில் நீர் நிரம்பி வழிந்தது....

காலை நான் அலுவலகம் கிளம்பி நான், கீழே செல்லும் போது, அப்பா "சாரி யுவி... அப்பாவை மன்னிச்சுருப்பா... " என்க....

"ஏன்பா... இப்படி பண்ணீங்க...? " என நான் கேட்க....

"ரொம்ப நல்ல பொண்ணா தெரிஞ்சா... உனக்கு பொருத்தமா இருப்பாளேனு... உன்ன  சர்பிரைஸ் பண்ண ஏற்பாடு பண்ணேன்... ஆனா இப்படி ஆகும்னு நான் நினைக்கலப்பா... " என அப்பா வருத்தப்பட.....

"சரிவிடுங்கப்பா.... இனிமே எதுனாலும் என்கிட்ட சொல்லிட்டு செய்ங்க " என சொல்லிவிட்டு நான் அலுவலகம் சென்றுவிட்டேன்.....

அடுத்து வந்த நாட்களெல்லாம் நான் சித்துவையும், அனன்யாவையும் முற்றிலுமாக தவிர்த்தேன்....

என் பெயரில் உள்ள கம்பெனி ஷேர்களை விற்றுவிட்டு, பெங்களூர் செல்ல முடிவெடுத்தேன்.....

ஒரு நாள் அலுவலகம் முடிந்து நான் பார்க்கிங் செல்ல,  சித்து - அனன்யாவின் உரையாடலை நான் கேக்க நேர்ந்தது.... (சித்து -அனுவின் உரையாடல் பகுதி அயலவனில் உள்ளது )

அவள் சித்துவை விரும்பாதது எனக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியபோதும்,

"ஏன்னா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு.... " என்ற   அனன்யாவின் வார்த்தைகள் என்னில் கோபசுனாமியை உருவாக்கியது......

"இப்படி ஏற்கனவே கல்யாணமானவளுக்காக தான் என்னை அவ்ளோ தூரம் அசிங்கப்படுத்தின....?? " என நான் என் கோபத்தை சித்துவிடம் வெளிப்படுத்தினேன்....

சித்துவின் மௌனம் மட்டுமே என் கேள்விக்கு பதிலாய் அமைந்தது....

"ச்சா.... என்னமா நடிச்சுருக்கா...... எப்பவும் என்னய பிராடுனு சொல்லுவா.....! இப்போ அவள் பண்ண வேலைக்கு பேரு என்னவாம்??? " என நான் மீண்டும் குத்தலாய் சித்துவிடம் கேட்க.....,

சித்து தலையை குனிந்தபடி, பதிலளிக்க திராணியற்று நின்றான்..

"என்னோட சித்து.... என்னோட சித்து..... நடிச்சு... உன்னையும் ஏமாத்தி..... நல்ல பொண்ணு மாதிரியே நடிச்சு.... எங்க அப்பாவையும் ஏமாத்தி..... ச்ச.... என்ன ஒரு கேவலமான பிறவி..... உன்ன நடிச்சு ஏமாத்தின மாதிரி..... டெல்லில இன்னும் எத்தனை பேர ஏமாத்தியிருக்காளோ?????...... " என அவளின் மேல் உள்ள மொத்த ஆத்திரத்தையும் என் வார்த்தைகளால்  நான் குத்திக்காட்ட.....

சித்து கோபமாக என் கன்னத்தில் ஒரு அறைவிட்டான்.....

" என் அனுவ பத்தி இன்னொரு வார்த்தை தப்பா பேசுன பல்ல உடைச்சுடுவேன் ராஸ்கல்.... "என என் சட்டையை பற்றி, சித்து  எச்சரிக்க அனன்யா அங்கிருந்து வேகமாய் நடக்க தொடங்கினாள்...

நான் என் உதட்டோரம் வழிந்த உதிரத்தை துடைத்துக்கொண்டு,ஏளனத்துடன் சிரித்தவாறே,  "  எவ்வளவு பட்டாலும் திருந்தமாற்றானே  "  என எண்ணிய நான்

"என்னது உன்னோட அனுவா????"
ஆமான்டா.... அவ நேத்துவரைக்கும் உன்னோட அனு.....; இன்னைக்கு வேற ஒருத்தனோட அனு.....; நாளைக்கு யாரோட அனுவோ???? " என நான்  கோபத்தில் வார்த்தைகளை கண்டபடி ஏசிவீசிட....  

என் முகத்தில் ஒரு குத்து சித்துவால் தரப்பட்டது......

நானும்  சித்துவை தாக்க, சண்டை மேலும் வலுத்து, இருவர்க்கும் இரத்த காயங்களை பரிசாய் வழங்கியது......

இருவரும் சண்டையிட்டு சோர்ந்த நேரம்......

" போடா.... .....போ..... என் அனு.... என் அனுனு....... அவ பின்னாடியே பைத்தியம் போல சுத்து...... அவ உனக்கு நல்லா அல்வா கொடுத்துட்டு, வேற ஒருத்தன் கூட போ போறா...

அப்புறம் காதல் பரத் மாதிரி "ஞஞஞ..."னு பைத்தியமா அலையப்போற ... நீயெல்லாம் பட்டா தான் திருந்துவ... " என சினத்தில் சிவந்து சித்துவிடம் சொன்ன நான்  வேகமாக  காரில் ஏறி இங்கு  வந்துவிட்டேன்...

அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை ஏற்க மறுத்தது என் மனது....

சித்துவிற்காக விட்டுக்கொடுக்க துணிந்த என் மனது, யாரோ ஒருவனுக்காக என் டோராவை விட்டுத்தர  விரும்பவில்லை....

அவள் இனிமே என்றுமே எனதில்லை என அறிந்ததும் என்னால் தாங்கிக்கொள்ள இயலாமலே இப்படி பலவாறு அழுதுகொண்டுருக்கிறேன்......

நீ என்றுமே எனதில்லை
என அறிந்தும்
நீங்க மறுக்கிறாய் என்
நெஞ்சிலிருந்து.........

எட்டிவிடும் தூரமிருந்தும் எட்டாக் கனியாகிப்போனது என் காதல்....
 

என்ற யுவியின் நினைவலைகளை கலைத்து, அவனை நிகழ்காலத்திற்கு அழைத்துவந்தது,  அவன் திரைஉடைந்த கைபேசியின் அழைப்பொலி.....

அதில் அவன் அப்பாவின் பெயர் ஒளிர்ந்தது.......

*****************************

ஹாய் பிரண்ட்ஸ்....

யுவியோட பிளாஷ்பேக் முடிஞ்சுடுச்சு.....

Ellarum confusion nu solrenga....

Ellarum enkitta sonathula,  perumbalum kekapadurathu

1.Anuvoda husband yaru....?- ithuku rendu moonu part la ungaluke answer therinjudum...Kochakatheengo 🙏....

2, hero yaru???? - athu than intha kathayoda highlight point..... poga poga ungaluke therinjudum yar hero nu...

3, sila per kathaiya guess panna mudiyala..Athunala confusion aguthunu solreenga...- twist iruntha thane kathai interest a pogum...

Paathi per sidduku support panrenga, pathi per yuviku support panrenga...

Rendum perume pavam than avanga avanga situation la irunthu paatha....

இன்பத்தில் உடன் இருப்பவரை விட துன்பத்தில் பக்கபலமாய் இருப்பவரை என் உள்ளம் என்றும் மறவாது....
இக்கதையை தொடர முடியாமல் நான் சோர்ந்த போது, எனக்கு ஊக்கமளித்து உற்சாகமூட்டிய  அன்பு உள்ளங்களுக்கு என் எண்ணற்ற நன்றிகள் சமர்ப்பணம்.... 🙏🙏🙏.

Niraya per comments, private chat la enna continue panna solli encourage paneenga...Romba happy a irunthuchu... nandrikal pala makkale...

உங்களின் ஆதரவே தொடர்ந்து  கதையை எழுதுவதற்கு தூண்டுகோலாய் அமைந்தது....  🙏🙏🙏💐🌷....  எண்ணற்ற நன்றிகள் மக்களே 🙏🙏🙏🙏

Negative & positive comments are  most welcome...

If u like this part, leave ur votes & comments 😊

Catch u later on next update makkale👋👋👋👋








Bạn đang đọc truyện trên: Truyen247.Pro